உலக நாடுகளில் மத சுதந்திரம்

உலக நாடுகளில் மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் முஸ்லீம்கள் அல்லாதோரின் மத சுதந்திரம் எப்படி இருக்கிறதுஎன்பதைக் காட்டியிருக்கிறது. இதையும் பார்க்கவும்

சவுதி அரேபியாவில் சிறுபான்மையினரான ஷியாக்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதையும், சுன்னி இஸ்லாம் தவிர பிற இஸ்லாமியப் பிரிவினர் மீது பாரபட்சம் காட்டப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது.பாகிஸ்தான் குறித்து இவ்வறிக்கை குறிப்பிடுவதையும் நாம் கவனிக்க வேண்டும். பாகிஸ்தானில் மத சுதந்திரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும் இது குறிப்பிடுகிறது. இதற்காக முஷ்ரப் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்றெல்லாம்அமெரிக்க அரசு தடைவிதிக்காது. ஜியாவுல் கக் ஜனாதிபதியாக இருந்த போது இஸ்லாமியமயமாதல் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா அதை எதிர்க்கவில்லை. இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் வளர்ச்சி கம்யுனிசஸ்திற்கும், அன்றைய சோவியத் யுனியனுக்கும் எதிராக இருக்கும் போது இனித்தது. இன்று கசக்கிறது. இஸ்லாமிய அரசுகள் இஸ்லாமிய பிரிவுகளுக்கிடையே பாரபட்சம் காண்பிப்பது, அரசு அங்கீகாரம் பெற்ற இஸ்லாமியசித்தாந்தம் ஒன்றை கற்பிப்பது போன்றவை இஸ்லாமிய சமூகங்களில் பாகுபாடுகள் இல்லை, அனைத்து முஸ்லீம்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பது கட்டுக்கதை என்று காண்பிக்கிறது.ஆனால் அமெரிக்க அரசு உண்மையிலேயே மத சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டிருந்தால அது மத ரீதியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு, சீனாவிலிருந்து தப்பி ஒடிவந்தவருக்கு முறையான அடைக்கலம் கொடுத்திருக்க வேண்டும்.

இது போன்ற அறிக்கைகளினால் அரசுகளின் கொள்கைகள், கோட்பாடுகள் மாறிவிடும் என்றுஎதிர்பார்க்க முடியாது. அமெரிக்க அரசு, பிற அரசுகள், சர்வதேச அமைப்புகள் செய்யும்முயற்சிகளால் சிறிதளவாவது மாற்றங்கங்கள் ஏற்படுகின்றன. இவ்வறிக்கையை படிக்கும் போது இஸ்லாம் சகிப்புத்தன்மையினை வலியுறுத்தி, பிற மதங்களை ஏற்றுக்கொள்கிறது என்பதுஉண்மையானால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் பலவற்றிலும், இஸ்லாம்அதிகாரபூர்வ மதமாக உள்ள பல நாடுகளிலும் பிற மதத்தவர், இஸ்லாமின் சில பிரிவினர் மத உரிமைகள் ஏன் மதிக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது.அப்படி மதிக்காத நாடுகளைஇஸ்லாமிய கோட்பாட்டின் படி ஆட்சி செய்யும் நாடுகள் என்று கூற முடியுமா?.

5 மறுமொழிகள்:

Blogger நல்லடியார் மொழிந்தது...

//அனைத்து முஸ்லீம்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பது கட்டுக்கதை என்று காண்பிக்கிறது//

//இஸ்லாமின் சில பிரிவினர் மத உரிமைகள் ஏன் மதிக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது.//

ரவி ஸ்ரீனிவாஸ்,

அமெரிக்கவுக்கு தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவை எதிர்க்க பின்லாடன் புனிதபோராளி, அதே பின்லாடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவை எதிர்த்தால் தேடப்படும் தீவிரவாதி. அதேபோல்தான் இன்றைய சதாம் நிலையும்.

இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்கா முக்கை நுழைக்க விரும்பினால் அஸ்ஸாமிலும், பஞ்சாபிலும் இன்னும் சில மாநிலங்களிலும் போராடிக்கொண்டிருக்கும் பிரிவினைவாதிகளை இந்தியா அடக்குகிறது என்றும் சொல்லும். அமெரிக்காவின் நியாயத்தின் லட்சனம் இதுதான்.

சவூதியில் ஷியாக்கள் சிறுபான்மையாக தமாம் போன்ற பகுதிகளில் இருக்கிறார்கள் என்பதும், அவர்களை சவூதி அதிகாரவர்க்கம் தேசியளவில் கண்டு கொள்வதில்லை என்பதும் உண்மையே. இன்றும் அம்மக்கள் குடி இருக்கும் பகுதிகள் நம்மூர் சேரிகளை விட மோசமாக இருக்கின்றன.

சவூதியில் உண்மையில் இஸ்லாமிய ஷரீஅத் ஆட்சி நடந்து பிற சமூகங்களை கொடுமைப் படுத்துகிறது என்றால் உங்கள் கருத்தில் நியாயம் இருக்கலாம். அங்குள்ள சிறுபான்மை மக்கள் ஈரானுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற மனப்பிராந்தி (இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற சிலரின் மனப்பிராந்திபோல்) சவூதி மன்னர்களுக்கும் இருப்பதால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என நினைக்கிறேன்.

முஹம்மது நபி மக்காவை வெற்றி கொண்ட பிறகும், மரணிக்கும் முன்புவரை ஒரு யூதரிடம் கடன்படும் அளவுக்கு ஏழ்மையில் இருந்தார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பின் மூலம் எப்படி சக மதத்தவருடன் சுமூகமாக இருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது. இதுதான் இஸ்லாம் சொல்லும் மத சகிப்புத்தன்மை. இதைப்பேணாத இஸ்லாமிய அதிகாரவர்க்கத்திடம் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையை தேடாதீர்கள்.

சவூதியின் அமெரிக்க அடிவருடிகள் பெட்ரோ-டாலரை அமெரிக்காவில் கொட்டும் வரை சவூதியும் அமெரிக்காவும் பாரம்பரிய நேச நாடுகள். இன்று இராக் கைவசம் வந்த பிறகு சவூதியில் மத சுதந்திரம் இல்லையாம்.

இப்பவெல்லாம் அமெரிக்காவின் அறிக்கைகளை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை சார்.

2:49 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

அமெரிக்காவின் இரட்டை வேட அணுகுமுறை நாம் அறிந்ததுதான். ஆனால் இந்த இரு நாடுகளிலும்
உள்ள நிலை இதுதான் என்பதை அரசு சாரா அமைப்புகளும் கூறியிருக்கின்றன. வறுமை, வளமை அல்ல கேள்வி. கேள்வி இஸ்லாமிய கோட்பாட்டின்படி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் நாடுகளில் இப்படி இருப்பது அக்கோட்பாட்டிற்கு உட்பட்டுத்தானா என்பதுதான். இஸ்லாமிய ஆட்சி
கோட்பாட்டில் பிற மதத்தினரின் உரிமைகள், நிலை என்ன ?இப்படி பாரபட்சம் காட்டப்படுவதை இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளனவா?

2:18 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//அப்படி மதிக்காத நாடுகளைஇஸ்லாமிய கோட்பாட்டின் படி ஆட்சி செய்யும் நாடுகள் என்று கூற முடியுமா?.//

இஸ்லாம் தன்னைத்தவிர எந்த மதத்தையும் அனுமதிக்காத மதம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பி.ஜே இஸ்லாமை டீக்கடை என்றும் இந்துமதத்தை சாராயக்கடை என்றும் வர்ணனை செய்தார். (உண்மையில் எது டீக்கடை எது சாராயக்கடை அல்லது சாக்கடை என்பதை படித்தவர்களிடமே விட்டுவிடுகிறேன்) இஸ்லாமியர் சிறுபான்மையாக இருக்கும் தமிழ்நாட்டிலேயே இப்படிப்பட்ட பேச்சுக்கள். அவர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் நாடுகளில் எப்படியிருக்கும் என்று உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன்.
உண்மை, எந்த இஸ்லாமிய நாடும் அது ஷாரியாவை பின்பற்றினால், அது மற்ற மதத்தினரை நாய்களை விட கீழாகத்தான் மதிக்க முடியும். அதுதான் சட்டம்.


சமத்துவத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? - ஒரு இஸ்லாமிய இணையத்தளத்திலிருந்து மொழிபெயர்ப்பும் என்னுரையும்

arokiyam

5:11 PM  
Anonymous முஸ்லிம் மொழிந்தது...

இஸ்லாமிய கோட்பாட்டின்படி செயல்படும் அரசு என்று உலகில் தற்போது எந்த நாடும் இல்லை. சவூதியின் பெயர்கூட KINGDOM OF SAUDI ARABIA தான். அந்த நாட்டின் பெயரில்கூட இஸ்லாம் இல்லை. ஆனால் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் குற்றவியல் சட்டங்கள் மட்டும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளன. மன்னராட்சியை முறையை எதிர்த்துப்பேசிய ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய அறிஞர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் அமெரிக்காவின் குருட்டுக் கண்களுக்கு அவை தெரிவதில்லை.

2:52 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

யாஸ்மின் என்று பெண் பெயரில் எழுதும் முஸ்லீம் தன் பதிவில் வழக்கம்போல சானியாவின் உடை பற்றி எழுதியிருக்கிறார்.

ஆண்-பெண் சமத்துவத்தை பற்றி இஸ்லாமிய இணையதளம் என்ன சொல்கிறது என்பதை எடுத்து விவாதித்தால் நேர்மையாக இருக்கும். ஆனால், நேர்மைக்கும் அபுமுஹை போன்ற முல்லாக்களுக்கும் நிறைய தூரம்

ஆண்-பெண் சமத்துவத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? - ஒரு இஸ்லாமிய இணையத்தளத்திலிருந்து மொழிபெயர்ப்பும் என்னுரையும்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நினைத்து நான் கொடுத்த பின்னூட்டத்தை நீக்குகிறார்.. சிரிப்புத்தான்...

12:36 AM  

Post a Comment

<< முகப்பு