பதினைந்து வருடங்களும், இரண்டரை லகரமும், ஒரு தற்கொலை முயற்சியும்

வளர்மதி எழுதியிருக்கும் இக்கட்டுரை மே 2004 கவிதாசரண் இதழில் வெளியாகியிருக்கிறது.அதை இன்றுதான் படித்தேன்.

வளர்மதியை நான் ஒரிரு முறைதான் சந்தித்து பேசியிருக்கிறேன்.அவர் தீவிர வாசகர் என்பதை அவர் எழுத்துக்கள் எனக்கு காட்டியுள்ளன.அவர் எழுதியுள்ளவை அனைத்தையும் நான் படித்ததில்லை. இக்கட்டுரை ஒரு தனி மனித அனுபவத்தின் அடிப்படையில்எழுதப்பட்டுள்ளது. சில கேள்விகளை நம்முன் வைக்கிறது.ஒரு விவாதத்தின் துவக்கப்புள்ளியாகக்இதைக் கொள்ளமுடியும்.இக்கட்டுரையைத் தொடர்ந்து இதில் எழுப்பபபட்டுள்ள கேள்விளை அவர்விரிவாக எங்காவது விவாதித்து எழுதியுள்ளாரா என்பதை நானறியேன். அறிந்தோர் அறியத் தரலாம்.

சமீபத்திய இதழ் உட்பட கவிதாசரண் இதழ்கள் பல கவிதாசரண் தளத்தில் கிடைக்கின்றன.

5 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

சுட்டிக்கு நன்றி ரவி!

8:29 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

அற்புதமான கட்டுரை. சுட்டிக்கு நன்றி. கட்டுரை தொட்டுக் காட்டும் விவாதப் புள்ளியைப் பற்றி சொல்ல எனக்கு எதுவும் இல்லை. அனேகமாக வேறு யாராவது சொல்வார்கள். ஆனால், இந்த விஷயத்தைச் சொல்லத் தேவையான சொற்கள் அத்தனையும் அவரிடம் இருந்திருக்கின்றன என்பது தான் என் ஆச்சர்யம்.

சமீபத்தில் யுவன் எழுதிய சு.ரா நினைவஞ்சலிக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த போது, ரவி ஸ்ரீனிவாஸ் என்பவரைப் பற்றிக் குறிப்பிட்டார் ( கல்லூரி ஜூனியர், சுராவுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தவர் என்று ). அவர் குறிப்பிட்டது உங்களையா?

9:35 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Prakash, let us have it this way-
if he has written something nice about that ravi srinivas then let that be me till somebody else claims that he is that ravi srinivas,if he has written something that is not so nice, then let that be not me, but some other ravi srinivas :)

11:20 AM  
Blogger icarus prakash மொழிந்தது...

அடயெங்கப்பா... விசுவுக்கு தூரத்துச் சொந்தக்காரர் போல இருக்கு.. :-)

நல்லதாவும் சொல்லலை.. பொல்லாததாவும் சொல்லலை.. இந்த மாதிரி இந்த மாதிரி, ரவிஸ்ரீனிவாஸ் மதுரே பேரிக்கா காலேசிலே என் ஜூனியர், இந்த மாதிரி இந்த மாதிரி, சுரா கூட கடிதத் தொடர்பு வெச்சிருக்கார்.., இந்த மாதிரி இந்த மாதிரி, அவரைப் போய் பாக்கச் சொன்னார்... இந்த ரேஞ்சுல.. அதுக்கப்பறம் நேரா நினைவஞ்சலி...

11:27 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பிரகாசரே இதையும் கொஞ்சம் பாரும்
http://ravisrinivas.blogspot.com/2005/10/blog-post_112983314796098959.html


நான் சு.ரா வை கல்லூரி நாட்களில் படித்திருந்தாலும் கடிதத் தொடர்பு பின்னர்தான் ஏற்பட்டது, அது குறுகிய காலமே இருந்தது. தமிழ் செய்த பெரும்பாக்கியம் நான் கதை, கவிதை, நாவல் எழுதாததும் :), யுவன் இலக்கிய ஆர்வம் கொண்டு எழுத்தாளராக பரிணமித்ததும்.

12:02 PM  

Post a Comment

<< முகப்பு