விசுவாசி(கள்)

ஜெயகாந்தன் 1992 ல் எழுதிய கட்டுரை ஒன்றினை அண்மையில் படித்தேன்.

ஜெயகாந்தன் அன்றும்,இன்றும் விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சிலர் பாராட்டலாம்.ஆனால் அவர் எழுதிய கட்டுரையில் இந்திய அமைதிப்படையினர் நடந்து கொண்டது குறித்து ஒரு வாக்கியம் கூட இல்லை. ராஜீவ் காந்தி கொலையுண்ட போது தமிழ்நாடு ஆளுநர் ஆட்சியின் கீழ்இருந்தது.1991 ஜனவரியில் தி,மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.அப்போது அதற்கு அவர் ஆட்சேபம்தெரிவித்தாரா இல்லை வரவேற்றாரா என்பதை அவரது ரசிகர்கள் தெளிவுபடுத்தலாம். 1984ல்இந்திரா காந்தி கொலையுண்ட பின் தில்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும்,படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று மத்திய அமைச்சரவை ராஜினாமா செய்ததா. அது சட்ட ஒழுங்குகுலைவில்லை போலும். ராஜிவ் காந்தி அது குறித்து என்ன கூறினார் என்பதை உலகறியும்.

சீக்கிய தீவிரவாதத்தினை ஒடுக்குவது என்ற பெயரில் பஞ்சாபில் செய்யப்பட்ட மனித உரிமைமீறல்கள் குறித்து ஜெயகாந்தன் என்றாவது எதாவது எழுதியுள்ளாரா. ஒரு கலை இலக்கியவாதிஎல்லா விஷயங்கள் குறித்தும் கருத்து சொல்ல வேண்டாம்.ஆனால் ஜெயகாந்தன் கருத்துச் சொல்லும்போது அது ஏன் படு அயோக்கியத்தனாமாக இருக்கிறது. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை வரவேற்பார் ஆனால் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய அத்துமீற்ல்கள் குறித்தோ, சதாசிவா கமிஷன் குறித்தோ எதுவும் சொல்லமாட்டார். ஜெயேந்தரர் கைது ஆனால் அவருக்கு தனிக்கவலை வந்து விடும், நாவல எழுதி விடுவார். இப்படி பல சமயங்களில் அவர் நடந்து கொள்ளும் விதம் நேர்மையற்றதாக இருக்கிறது.

அவர் தேசாபிமானி அல்ல. நேரு குடும்பத்தின் விசுவாசி, இன்னும் சிலரின் மூடத்தனமான ஆதரவாளர். தேசாபிமானிக்கு மக்கள் மீதுதான் அக்கறை இருக்கும், தனிப்பட்ட குடும்பத்தின்மீது அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது கட்சி,ஆள்வோரின் சுய நலன்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்கும் அல்லது 356வது பிரிவினைப் பயன்படுத்தி மத்திய ஆட்சியை அமுல் செய்யும். அகாலி தளத்தினை வலுவிழக்கச் செய்ய பிந்தரன்வாலேயைஆதரிக்கும், அப்புறம் தீவிரவாதம் தலைதூக்குகிறது என்ற பெயரில் மனித உரிமை மீறல்களைஅரங்கேற்றும். இலங்கையில் இந்தியா காட்டிய ஈடுபாடு அதன் பிராந்திய மேலாண்மை குறித்தஒன்றேயன்றி ஈழத்தமிழர் மீதான முழு அக்கறை காரணமாக அல்ல.

எனவே ஜெயகாந்தன் பல சமயங்களில் எழுதியுள்ள கட்டுரைகள், நிலைப்பாடுகளின் பின்ணணியில்இருப்பது சத்திய ஆவேசமோ அல்லது அறநெறி சார்ந்த கண்ணோட்டமோ அல்ல. தேசபக்தி என்றபெயரில் வெளியாகும் விசுவாம்தான். அவர் நேரு குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஜெயேந்திரருக்கும் இன்ன பிறருக்கும் விசுவாகமாக இருப்பதை தேசபக்தி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எனவே அவற்றை வைத்து அவரை இடதுசாரி என்று கூறுவதும், மார்க்சியர் என்று கூறுவதும் உண்மையான இடதுசாரிகளையும், மார்க்சியரையும் கேலி செய்வது போலாகும்.

ஜெயகாந்தன் எழுதியுள்ள இத்தகைய ஒருபக்க சார்புடைய புரட்டல்வாத நேர்மையற்ற கட்டுரைகளை படிப்பதை விட மஜா,சிவகாசி போன்ற் படங்களைப் பார்ப்பது நல்லது. கோடம்பாக்கம் தரும் ஒரு மூன்றாம்தர மசாலாப் படம் கூட ஜெயகாந்தன் எழுதியிருக்கும்இது போன்ற கட்டுரைகளை விட அறிவுபூர்வமானது, நேர்மையானது என்ற முடிவிற்குயாரேனும் வந்தால் அதில் வியப்படையத் தேவையில்லை.

9 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

//அவர் தேசாபிமானி அல்ல. நேரு குடும்பத்தின் விசுவாசி, இன்னும் சிலரின் மூடத்தனமான ஆதரவாளர்.//

அவ்வளவே. அவரது இந்த நேரு குடும்ப விசுவாசத்துக்கும், மற்ற சார்புகளுக்கும், மக்களைவிட சில தலைவர்களைத் தாங்கும் போக்கும் ஒருவிதமான சாதிய உணர்வே அன்றி வேறில்லை.

7:46 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

திரு ரவி,

அருமையாக எழுதி உள்ளீர்கள். ஜெயகாந்தன் புகழ் பெறும்வரை மார்க்சிய முகமூடி தேவைப்பட்டது. அப்புறம் அதை கழட்டி கடாசி எறிந்துவிட்டு காஞ்சிபுரத்தில் உட்கார்ந்துட்டு இருக்கார். உங்கள் கட்டுரை சாட்டையடியாக இருந்தது.

8:24 AM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

//ஜெயகாந்தன் எழுதியுள்ள இத்தகைய ஒருபக்க சார்புடைய புரட்டல்வாத நேர்மையற்ற கட்டுரைகளை படிப்பதை விட மஜா,சிவகாசி போன்ற் படங்களைப் பார்ப்பது நல்லது.
//
:-))

8:36 AM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

இரவி, எப்போதோ ஒருகாலத்தில் ஜெயகாந்தன் எழுதிய விடயங்களைப் பார்த்துவிட்டு யாரோ 'சத்திய ஆவேசம்' என்று ஜெயகாந்தனைப் பார்த்துக் கூறியதை, இப்போது கர கர.....என்ற நாவலை எழுதியபின்னும் சத்திய ஆவேச நெருப்பு புயல் என்று சொல்லிக்கொண்டிருப்போரை என்னவென்று அழைப்பது :-)?

////அவரை இடதுசாரி என்று கூறுவதும், மார்க்சியர் என்று கூறுவதும் உண்மையான இடதுசாரிகளையும், மார்க்சியரையும் கேலி செய்வது போலாகும்.//
ஆனால் பாருங்கள், ஜெயகாந்தனுக்கு விருது கிடைத்தவுடன், விழுந்தடித்துக்கொண்டு போய பாராட்டியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு இடதுசாரிகள் அல்லவா? நவீன மார்க்க்சியராக ஜெயகாந்தன மாற வாய்ப்புண்டு என்று நினைத்து அவர் பாதம் பணிந்தனரோ தெரியவில்லை. சுந்தர ராமசாமி போன்றவர்களை அடி அடி என்று அடித்து அவரை ஆழமாய்ப் பார்க்காத தமிழ்நாட்டு இடதுசாரிகள் ஜெயகாந்தனை விரும்பியபோதெல்லம் அணைத்துக்கொளவதன் மர்மம் இன்னும் புரியவில்லை. இல்லாவிட்டால் இவர்களும் சாதி blind யாய் இருக்கின்றார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு இடதுசாரி கட்சியின் உறுப்பினராக இல்லாவிடாலும், மார்க்சிசத்தை ஜெயகாந்தன் அளவுக்கு கொச்சைப்படுத்தாமல், சங்கராச்சாரியாருக்கு வால் பிடிக்காமல் சு.ரா வாழ்ந்திருக்கின்றார் என்பதை தெளிவாக எவரும் பார்க்கலாம்.

9:14 AM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

//மஜா,சிவகாசி//
1992ல வந்ததாக ஏதாச்சும் சொல்லுங்க.

10:11 AM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரவி

பெயரிலி 1492இல் வந்த ஏதோ ஒரு கட்டுரை வைத்திருக்கிறாராம் பொறுங்கள் பார்ப்போம்.

11:59 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

நன்றிகள் இரண்டு

ஈழநாதனின் அடியாள்தான் ரமணிதரன் கந்தையா என்று பகிரங்க படுத்தியதற்கு

1492 லேயே இல்லாஜிக்குகளால் நிரம்பிய குழப்படி அரைகுறை கட்டுரைகளால் "ரத்தம் தெறிப்பை"யும், "துரோகி"களைக் கொல்வதையும் வன்முறையையும் நியாயப்படுத்தி ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிவித்ததற்காக

9:41 PM  
Blogger Garunyan மொழிந்தது...

பிரிய நண்பர்களே;

ஜெயகாந்தனுக்கு ஞானபீடப்பரிசு வழங்கப்பட்ட விஷயத்தில் நாம் ஒன்றை மறந்துவிடலாகாது.

சிறந்த இலக்கியங்களைப் படைத்தவர் என்பதற்காகத்தான் அவருக்குப் பரிசு வழங்கப்பட்டதே தவிர அவரது மனித நேயத்துக்கோ, அரசியல் கொள்கைகளுக்கோ நிலைப்பாட்டுக்கோ, சித்தாந்தங்களுக்காகவோ அல்ல.

ஒரு காலத்தில் மற்ற எந்த எழுத்தாளரைவிடவும் அதிக அளவில் வாசகர்களைத் தன்பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர்.
மனிதனின் அக்னிப்பிரவேசமும், ரிஷிமூலமும், ஒருபிடி சோறும், மூங்கிலும் தமிழ்ப்புனைவுலகில் நிச்சயம் மைல் கற்கள்தான்.

எத்தனைபேர் அவதானித்தீர்களோ தெரியவில்லை ஒரு முறை சென்னையில் தெலோவினர் ஒழுங்கு செய்தகூட்டமொன்றில் பேசும்போது "ஈழத்தமிழர்களின் தனியீழக்கோரிக்கை அர்த்தமில்லாதது. அவர்கள் இலங்கை அரசு எதைத்தருகிறதோ அதைப்பெற்றுக்கொண்டு அதன்பிற்பாடு இதர கோரிக்கைகளை முன் வைப்பதுதான் புத்திசாலித்தனமானதும், சாத்தியமானதுமாகும்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
எம் கைபிடித்து வளர்த்து ஆளாக்கிவிட்ட அப்பன் ஒரு நாளைக்கு குடித்துவிட்டு அம்மணமாக நின்றான் என்றால் எம் அப்பன் இல்லையென்றாகிவிடுமா? வீரப்பன், ஜெயேந்திரர், அமைதிப்படை, எமேர்ஜென்சி மற்றக் கருமாதி விவகாரங்களில் justice உணர்வு மனிதனுக்குச் செத்துப்போயிருக்குமென்றா நினைக்கிறீர்கள்? இருக்கவே இருக்காது. அதெல்லாம் சும்மா வீம்புக்காக. தான் வேறுகோணத்தில் சிந்திக்கிறேன் என்ற பம்மாத்து + அதிமேதாவித்தனம். Let's totally ignore him. சாருநிவேதிதா, ஜெயமோகனுக்கும் இது பொருந்தும்!

கருணாகரமூர்த்தி.பொ

7:25 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

with this comment karunagaramurti sir you will not get a chance to write in thisaigal in the future

9:09 AM  

Post a Comment

<< முகப்பு