சில கேள்விகள்

மாற்றுக் குரல்கள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தினை ஒரு வலைப்பதிவாளர் தன் பதிவில் இட்டுள்ளார்.குஷ்பு சொன்ன கருத்துக்கள் குறித்த சர்ச்சையில் பெரியார் கூறியசில கருத்துக்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

குஷ்புவுக்கு ஆதரவாக பெரியார் கூறியவற்றைமுன் மொழியும் மேதாவிகளுக்கு குஷ்பு கூறியிருப்பவை எந்த அளவு பெரியார் சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகக்கூடியவை என்பது கூடப் புரியவில்லை. பெரியார் அப்படிகருத்துக்களை முன் வைத்ததும், தீர்மானங்கள் போட்டதும் உண்மைதான். ஆனால் பின்னர்அவரே அவற்றை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவில்லை, அவர் மறைவிற்குப் பின்திராவிட கழகமும் இதை முன்னிறுத்தி சட்டத்திருத்தம் உட்பட மாற்றங்களைக் கோரவில்லை. வாசுகி சார்ந்திருக்கும் அகில இந்தியஜனநாயக மாதர் சங்கமும் இது போன்ற கோரிக்கையை முன் வைத்ததில்லை.பெரியார் தாம்கூறிய எல்லாக் கருத்துக்களையும் ஒரே முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதில்லை.நான் கூறியதில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுக.குஷ்பு விவகாரத்தில் இதை கையில் எடுத்திருக்கும் இவர்களுக்கு இக்கருத்துக்கள் இருப்பது இப்போதுதான் தெரியுமா. இதற்கு முன் இக்கருத்துக்களுக்கு ஆதரவாக இவர்கள் எத்தனை முறை எழுதியிருக்கிறார்கள்.

அன்று பெரியார் செய்யத தவறியதை இவர்கள் இன்று செய்ய முயற்சிக்கலாமே. இன்று பெரியார் அன்று கூறியதைப் பிடித்து தொங்கிக் கொண்டு குஷ்புவிற்கு ஆதரவாகக்குரல் கொடுக்கும் அறிவு ஜீவிகள் இக்கருத்துக்களை முன்னிறுத்தி சட்ட மாற்றம் உட்படமாற்றங்களுக்குப் போராடத் தயாரா. இக்கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இயக்கம் நடத்தத் தயாரா.

இன்னும் வெளிப்படையாகவே கேட்கிறேன்: பெரியாரின் கருத்துக்களை நீங்கள் ஏற்று, பாலியல் சுதந்திரம் என்பதில் கட்டுப்பாடுகள் கூடாது என்ற நிலைப்பாட்டினை எடுத்தால் முதலில் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் உள்ள adultery குறித்த பிரிவினை நீக்கி,அது குற்றமல்ல, தனிப்பட்ட நபர்களுக்கிடையே உள்ள ஒரு தனிப் பிரச்சினை என்று ஆக்க வேண்டும்.அப்போது அதில் காவல் துறை, அரசு, நீதிமன்றங்கள் தலையிட்டு அதை ஒரு கிரிமினல் குற்றமாக அணுக முடியாது, தண்டிக்க முடியாது.

இந்த மாற்றத்தினைக் கோர இவர்களும், இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் வலைப்பதிவாளர்களும் தயாரா.

16 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

நீங்கள் நீங்களாகவே பேசுகிறீர்கள். ஆனால் சில பேர் வளைக்கு வந்தவுடன் ஏதோ பெரிய அறிவாளி போலவும் தத்துவஞானி போலவும் தான் பேசுகிறார்கள். அப்போ தான எழுத்து புரட்சிகரமாக இருக்கும்.அதே போல நாலு தத்துவ ஞானிகளும் பின்னோட்டம் இடுவார்கள். இவர்கள் பேசும் சுதந்திரம் இவர்கள் மனைவிக்கோ, மகளுக்கோ கொடுத்துவிட்டு இங்கே வந்து இதோ பாருங்கள் என் ஆக்கத்தை என்று சொல்லிவிட்டு கருத்தை சொல்லலாம். ஊருக்கு உபதேசம் பண்ணியே பழகிபோச்சு.

அட! போங்கப்பா. இந்த கருத்து கந்தசாமிகளை பார்த்து பார்த்து புளித்து போய்விட்டது. உருப்படியா எதாவது சந்தோசமா பதிங்கப்பா..

2:52 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

விடுங்கப்பா இதை, உலகத்தில வேறே எதுவுமே இல்லையா. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் குச்பு புராணம் பாடுவீங்க

3:18 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

adultery is very different from free sex Ravi. Even if you think adultery is a punishable crime, how many politicians, film actors,producers who openly do it are punished. Where is your law then?

3:25 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

பாசிகளின் தாக்குதல்

பீட்சா பசந்துக்கு தனிமனித தாக்குதல் நடத்தலன்னா தூக்கம் வராதே.. இது என்ன புதுசா ?

3:55 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

my question is simple : will those who support kushboo's views and agree with periyar's views be prepared to argue that to implement them laws need to be
changed and other changes are
necessary. Are they prepared to
advocate this in public and take
efforts to bring in changes in laws etc. I gave adultery as
an example. It is not a question of me thinking whether it is a crime or so, the law says so.

8:45 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

mEthAvi ravi, I will definitely write my views on this, and the views of A. Marx and others on this is well known in Tamil circle. You are asking about it after 15 years. Also it is known to you
how many times they have talkd about this. Also I do NOT think you are stupid enough, not to understand that some people who are close to you are *living examples* for all the stupid questions you have posed.

In any case why don't you spell out your views on this, rather than posing stupid questions to others.(For your information. I informed atlast 10 persons known both to you and me, the contents of your previous posts. All of them agree with me that nut is loose with you(if it is not a more serious problem). Now you may have to write atleast 10 posts.)

1:12 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

2:15 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Mr.Rosa Vasanth

I did not care about what you have written about me. So I am least bothered about what 10 people or 100 people say on that. Perhaps that is your mode of having a debate.

I do know that Nirapirgai in the initial years had a debate on feminism, sexuality etc but my specific comments here were directed to those who cite Periyar now. I have indicated that as far as I know neither AIDWA nor any
left oriented feminist organisation has argued for changes in laws based on Periyars
views as discussed in this issue.
I have also pointed out that Periyar himself did not press for
them. If what i have written is
wrong please provide facts.

About your other comments the less said the better it is. I may write my views as soon as possible. Due to many committments including travel it may take a couple of weeks for me to do so.

2:42 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Mr.Rosa Vasanth

I did not care about what you have written about me. So I am least bothered about what 10 people or 100 people say on that. Perhaps that is your mode of having a debate.

I do know that Nirapirgai in the initial years had a debate on feminism, sexuality etc but my specific comments here were directed to those who cite Periyar now. I have indicated that as far as I know neither AIDWA nor any
left oriented feminist organisation has argued for changes in laws based on Periyars
views as discussed in this issue.
I have also pointed out that Periyar himself did not press for
them. If what i have written is
wrong please provide facts.

About your other comments the less said the better it is. I may write my views as soon as possible. Due to many committments including travel it may take a couple of weeks for me to do so.

2:43 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Also I do NOT think you are stupid enough, not to understand that some people who are close to you are *living examples* for all the stupid questions you have posed.

உங்க சொந்தப் பிரச்சினைகளை இமெயிலில் பேசிக்கொள்ளுங்கள். இது பொது இடம்.

5:50 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//உங்க சொந்தப் பிரச்சினைகளை இமெயிலில் பேசிக்கொள்ளுங்கள். இது பொது இடம்//

த பார்றா...இவரைத்தான் கூப்டாங்களா? போய் வெலையைப் பார்யா. உனக்கு படிக்க புடிக்கலைன்னா ஏன் இங்க வர்ற?வெத்தலை பாக்கு வெச்சி கூப்டாங்களா உன்னை? வந்துட்டாரு மணியாட்டிகிட்டு.

8:30 PM  
Blogger நாட்டாமை மொழிந்தது...

//பெரியார் அப்படிகருத்துக்களை முன் வைத்ததும், தீர்மானங்கள் போட்டதும் உண்மைதான். ஆனால் பின்னர்அவரே அவற்றை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவில்லை, அவர் மறைவிற்குப் பின்திராவிட கழகமும் இதை முன்னிறுத்தி சட்டத்திருத்தம் உட்பட மாற்றங்களைக் கோரவில்லை//

அவர் கட்சி தலைவர்கள் எல்லாம் அதை நடைமுறைபடுத்தி பெரியார் சொன்னதுக்கு முன்னுதாரணமா வாழ்ந்தே காட்டிட்டாஙக .முன் வைக்கவில்லை அப்படின்னு கதை அடிக்கறீஙக.

///இதற்கு முன் இக்கருத்துக்களுக்கு ஆதரவாக இவர்கள் எத்தனை முறை எழுதியிருக்கிறார்கள்///

மற்றவர்கள் எத்தனை முறை ஆதரவாக எழுதியிருக்கிறார்கள்?பிரச்ச்னைனு வந்தா தான் ஆதரவோ,எதிர்ப்போ வரும்

///இன்று பெரியார் அன்று கூறியதைப் பிடித்து தொங்கிக் கொண்டு குஷ்புவிற்கு ஆதரவாகக்குரல் கொடுக்கும் அறிவு ஜீவிகள் இக்கருத்துக்களை முன்னிறுத்தி சட்ட மாற்றம் உட்படமாற்றங்களுக்குப் போராடத் தயாரா. இக்கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இயக்கம் நடத்தத் தயாரா///

இந்த மாதிரி அடுத்தவன் படுக்கை அறையில் என்ன பன்றான்னு மூக்கை peeping tom மாதிரி நுழைச்சா போராட்டம் தான் நடத்தனும்.

///பெரியாரின் கருத்துக்களை நீங்கள் ஏற்று, பாலியல் சுதந்திரம் என்பதில் கட்டுப்பாடுகள் கூடாது என்ற நிலைப்பாட்டினை எடுத்தால் முதலில் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் உள்ள adultery குறித்த பிரிவினை நீக்கி,அது குற்றமல்ல, தனிப்பட்ட நபர்களுக்கிடையே உள்ள ஒரு தனிப் பிரச்சினை என்று ஆக்க வேண்டும்.///

அந்த சட்டம் என்ன சொல்லுதுன்னு பாருங்க.

Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, WITHOUT THE CONSENT or connivance of that man.......

அடுத்தவன் பொன்டாட்டி கூட அவன் சம்மதம் இல்லாமல் பண்னகூடாதுனு சொல்லுது சட்டம்.
கல்யாணம் ஆகாத பொண்ணுகூடவோ,பையன் கூடவோ ஜாலியா ஜல்சா பன்றதை இது தடுக்கலை.புருஷன் கிட்ட ஒரு "அனுமதிக் கடிதம்" வாங்கிட்டு ஜல்சா பன்றதயும் இது தடுக்கலை.
கண்ணாலம் அப்படிஙரது ரெண்டு பெர் சேந்து ஒரு போட்டுகற ஒப்பந்தம்.அதுல இந்த ஷரத்து இருந்தா அடல்ட்டரி தப்புங்கலாம்.எப்படின்னா அது breach of contract அப்படிங்கற ரீதில போகும்.மத்தபடி புருஷன் பொன்டாட்டி ரெண்டு பேரும் மனமொத்து மத்தவங கூட குஜாலா இருந்தா அதெல்லாம் அடல்ட்டரி கிடயாது.கண்ணாலம் கட்டாம என்ன பண்ணாலும் அது அடல்ட்டரி கிடையாது.அதனால சட்டத்தை மாத்த வேன்டிய அவசியம் இல்லை ரவி சார்.

12:23 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ரவி குஷ்பு எழுதியதையே படிக்காமல் அல்லது புரிந்துகொள்லாமல் 'கடுமையான விமரசனம்' வைத்தவர். சட்டத்தை அவர் படித்திருக்கவோ, அபபடித்தாலும் புரிந்துகொள்ளவோ தேவையிருப்பதாக தோன்றவில்லை.

2:55 AM  
Blogger Voice on Wings மொழிந்தது...

இரவி சுட்டிய சட்டப் பிரிவு வியப்பை அளிக்கிறது. அதன்படி adultery என்பது ஒரு மணமான பெண்ணுடன், அவளது கணவனின் அனுமதியின்றி பாலியல் உறவு வைத்துக் கொள்வது என்று தெரிய வருகிறது. அப்படியென்றால் ஒரு மணமான ஆணுடன், அவனது மனைவியின் அனுமதியின்றி பாலுறவு கொள்வது adultery ஆகாதா? ஒருதலைப் பட்சமாக இருக்கிறதே இந்தச் சட்டம்? மணமான ஆண் ஏமாற்றுவதற்குச் சாதகமாகவும், மணமானப் பெண் ஏமாற்றுவதற்குப் பாதகமாகவுமல்லவா உள்ளது இச்சட்டம்?

என் கருத்து - adulteryஐ (whether by cheating husband or cheating wife) ஓரு தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகக் கருத முடியாது. ஏமாற்றப் பட்ட நபர் உடனடி விவாகரத்தும், நஷ்ட ஈடும் பெற சட்டம் ஆவன செய்யலாம் / செய்ய வேண்டும். சிறை தண்டனையெல்லாம் அதிகப் பட்சமே.

4:29 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

voice of wings nalla sonnenga.
namma sattam evlo ottai. ya irukku?

ulagam ennikavadhu aangalai marathil katti kallal adichirukka?
adhe madhiri kuppai dhan.

9:57 AM  
Blogger PKS மொழிந்தது...

My views are at
http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post.html

Thanks and regards, PK Sivakumar

12:16 PM  

Post a Comment

<< முகப்பு