கேள்வி-பதில் -1

கேள்வி : ஆனந்த விகடன் குழு பத்திரிகைகள் புதிய இடத்திற்க்கு மாறியுள்ளனவே ?

பதில்: நானும் கவனித்தேன். இப்போது வெளிவருகிற பத்திரிகைகளில் ஆசிரியர் குழு என்ற ஒன்றிற்கு தேவை இருக்கிறதா. ஆனந்த விகடனைப் பொறுத்த வரை பேட்டி எடுக்க ஒருவர்அதுவும் பகுதி நேரமாகப் போதும். நடிகர், நடிகைகளைப் பற்றி அவர்களது மக்கள் தொடர்பாளர்கள்தருவதை போட்டுவிடலாம், பத்தி எழுதுபவர்கள் அனுப்பியதை அப்படியே போடுவதால் அதற்கென்றுதனி ஆள் தேவையில்லை. ஒரு உருப்படாத வழவழ கொளகொள தலையங்கம் எழுத பகுதி நேரநிருபரே அதிக பட்சம், ஆசிரியர் தேவையில்லை. ஆக இப்போதிருக்கும் ஆனந்த விகடனை வெளியிட பத்தி எழுதுபவர்கள், பிறர் தருவதை சேகரிக்க, சேர்ப்பிக்க ஏற்பாடு செய்ய ஒருவரும், ஒரு பகுதி நேர நிருபரும் போதும். இதற்கு தனி அலுவலகம் தேவையில்லை, அச்சகத்தில் ஒரு மூலையில் ஒரு மேஜை இரண்டு நாற்காலிகள் போதும். குமுதமும் இது போல்தான். பேசாமல் பத்திரிகை நடத்துவதை அவுட் சோர்ஸ் செய்து விடலாம்.தரம் ஒரளவாவது உயரக்கூடும்.

கேள்வி : 2010 குறித்து சுஜாதா ஆருடம் கூறியிருக்கிறாரே, பத்திரிகைகள் குறித்தும் கூறியிருக்கிறாரே ?

பதில்: மறைமுகமாவேனும் கற்றதும், பெற்றதும் 2010 வரை தொடராது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 2010ல் பெண்கள் புகைப்படங்களுக்குக் கீழ் வெறும் குறிப்பெழுதுகிற வேலையை அவர் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்று நம்புவோம். இப்போதிருக்கும் ஆனந்த விகடனுக்கு அசினும், ஷ்ரேயாவும்,விஜயும், சூர்யாவும்,நமீதாவும் போதும், சுஜாதா ரொம்பவே அதிகம். அதைத் தெரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் தொடர்கதை யுகம் முடிந்தது, பத்திகளின் யுகமும் விரைவில் முடிவடைந்து விடும், பத்திரிகைகளில் நம் எழுத்திற்கு தேவை இருக்காது என்ற அச்சம் அவருக்கு எழுந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.கணேஷ்-வசந்த் வேண்டாம், விஜய்-சூர்யா வைத்து தொடர்கதை எழுதுங்கள் என்று அவரிடம் எந்தப் பத்திரிகையும் சொல்லாத வரை நல்லதுதான். இப்போதுள்ள நிலையில் சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

கேள்வி : சாரு நிவேதிதாவின் பேட்டி படித்தீர்களா ?

பதில் : சிறிய அளவில் குற்றம் செய்பவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைவாங்கித் தருவதும், சிறையில் அவர்களை பராமரிப்பதும் செலவு பிடிக்கும் விஷயங்களாக இருப்பதால் அத்தகைய குற்றங்களைச் செய்வோர் குற்றங்களில் ஈடுபடாமல் இருந்தால் அவர்களுக்கு மாதாமாதம் ஒரு தொகை கொடுத்துவிடலாம் என்று ஒரு யோசனை கூறப்பட்டுள்ளது. இதைக் கூறியதது எட்வர்ட் டி போனோ என்று நினைக்கிறேன். சாரு தமிழில் எழுத மாட்டேன், பேட்டிக் கொடுக்க மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்து, அதன்படி நடந்தால் அவருக்கு மாதாமாதம் ஒரு உதவித் தொகை கொடுத்துவிடலாம். என்னைக் கேட்டால் அவர் பிரெஞ்ச் கற்றுக் கொண்டு பிரெஞ்சில் இலக்கியம் படைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க முயலலாம். தாய்லாந்து அல்லது பிரான்சில் குடியேறப் போகிறேன், தமிழில் எழுத மாட்டேன் அல்லது பேட்டி தரமாட்டேன் என்று உறுதி அளித்தால் சாகித்ய அகாதமி விருது ஒன்று கொடுத்து போய்விடுங்கள், திரும்பி வர வேண்டாம் என்று வழியனுப்பி விழா ஏற்பாடு செய்து அனுப்பிவிடலாம். இப்ப்டியெல்லாம் செய்வது அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது, தமிழுக்கும் நல்லது

தொடரும்

பிற்குறிப்பு : இது 175வது பதிவு என்கிறது பிளாக்கர். உங்கள் ஆதரவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

9 மறுமொழிகள்:

Anonymous அல்ஸரானந்தா மொழிந்தது...

கேள்வி : அல்ஸர் என்றாலும் அது உருவாகும் விதம் குறித்தும் தெரியுமா?
பதில் : விரிவாக சொல்ல இப்போது இயலாது. மேற்படி பதிவை படிக்கவும்.

10:50 AM  
Blogger மயிலாடுதுறை சிவா மொழிந்தது...

ரவி வணக்கம்.
சாருவின் பேட்டி நானும் படித்தேன்.
அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமாய் இருந்தாலும் அவர்
பேட்டி நன்றாகவே இருந்தாக பட்டது. அவருடைய பல எழுத்துகளில்
பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டாலும் வேண்டவே வேண்டாம் என
ஒதுக்கி தள்ள முடியவில்லை என்பது என் கருத்து.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

11:34 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

கேள்வி : பத்திரிகை நடத்துவதை அவுட் சோர்ஸ் செய்து விடலாம் என்கிறார்களே?

ப்ளாக் எனப்படும் வலைப்பதிவுதான் யுகப்புரட்சியாக சிலர் கருதுகிறார்கள். இந்தியாவை விட ஆப்பிரிக்காதான் வாங்குகிற காசுக்கு கை நிறைய பலன் கொடுக்கிறது. 2010இல் ஆப்பிரிக்காவில் இருந்து விகடன் வெளிவரும்.


கேள்வி : விஜய்-சூர்யா வைத்து தொடர்கதை எழுதுங்கள் என்று உங்களிடம் எடிட்டர் வேண்டுகோள் வைக்கவில்லையா?

நமீதாவும் நயன்தாராவும் நெப்ட்யூனுக்கு செல்வதை புகைப்படக் கதையாக எழுதும் எண்ணம் இருக்கிறது.


கேள்வி : இது 175வது பதிவா?

இப்ப்டியெல்லாம் செய்வது அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது, தமிழுக்கும் நல்லது.

11:53 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

நமீதாவும் நயன்தாராவும் நெப்ட்யூனுக்கு செல்வதை புகைப்படக் கதையாக எழுதும் எண்ணம் இருக்கிறது.

:)

12:17 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

2010இல் ஆப்பிரிக்காவில் இருந்து விகடன் வெளிவரும்.


2010இல் bostonல் இருந்து விகடன் வெளிவரும்.

4:06 PM  
Blogger ராம்கி மொழிந்தது...

O... Karunanidhi style interviewwa..? :)

12:00 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இப்ப்டியெல்லாம் செய்வது அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது, தமிழுக்கும் நல்லது


ippadi ezuthuvathu unkaluku nallathalla :-)

1:45 PM  
Anonymous hameed abdullah மொழிந்தது...

Sabbaash! sariyaana vimarsanam.......

3:06 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

உங்கள் பகிடி நல்லா இருக்கு. அதுபோலவே சாருவின் பேட்டியும்.
அவரது பாணியைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தப் பேட்டி நன்றாக இருப்பது போல் தான் பட்டது.

3:45 PM  

Post a Comment

<< முகப்பு