சின்னக் கருப்பன் கட்டுரை குறித்து - 1

சின்ன கருப்பன் கட்டுரை குறித்து நான் திண்ணைக்கு அனுப்பிய கடிதம் கீழே. திண்ணையில் வெளியானது இது.

திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,

சின்னக் கருப்பனின் கட்டுரை மிகப் பிரமாதம்.இத்தகைய கற்பனை வளத்தினை குஷ்பு சொன்ன சில வாக்கியங்களுக்காக அவர் ஏன் வீணாக்க வேண்டும். 600 பக்க அளவில் ஒரு புதினம் எழுதலாமே.

அதில் அரிஸ்டாட்டில், யாக்ஞவல்கியர், நியுட்டன், டார்வின், மெண்டல், வாலேஸ் துவங்கி இன்றைய டாகின்ஸ், லெவொண்டின், மறைந்த ஜே கோல்ட், எர்னஸ்ட் மேயர் உட்பட பலரை கதாபாத்திரங்களாக்கி, ஏசு, முகமது நபி, பெரியார். ஐன்ஸ்டீன், டி.எஸ்- எலியட், காந்தி (மோகன் தாஸ் கரம்சந்த), பாப்பர், காப்ரா, சூப்பர் ஸ்டாரின் குருவான பாபா போன்றோரும் தோன்றும் வண்ணம் கதையை எழுதிவிட்டால் ஒரு புதினம் தயார். ஈ.வெ.ராவின் பிராமணீய எதிர்ப்பு, லைசென்கோ விவகாரம் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜீன் சொல்றான் இந்த ஜீவன் செய்யறான் என்பதை பன்ச் டயலாக் ஆக நாவலில் பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் பெளத்தம், இந்தியத் தத்துவஞானம், சிற்பம், இசை, கட்டிடக் கலை குறித்த குறிப்புகளை ஆங்காங்கே தூவி கதாபாத்திரங்கள் மூலம் சம்வாதம் நடப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கலாம். இதில் முக்கியம் மறந்தும் சமணரைக் கழுவேற்றியது, ராமானுஜர் சோழநாட்டை விட்டு ஒடியது போன்றவை கதையில் எங்கும் வந்துவிடக்கூடாது.

ஒரு யுக முடிவில் டி.என்.ஏ தன் அமைப்பினை மாற்றிக் கொள்கிறது, ஜீன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, புதிய மானுடம் பிறக்கிறது, பெரியார் இருந்தார் என்பதற்கான தடயங்கள் அழிகின்றன,ஒரு மீம் அவர் குறித்த நினைவுகளை மனங்களிலிருந்து அழித்துவிடுகிறது, புதிய மனு தோன்றுகிறார், சம்ஸ்கிருதம் தழைக்கிறது, உலக மொழியாகிறது என்று எழுதி தளையசிங்கம், டெகல் டி கார்டின் போன்ற பெயர்களைப் போட்டு, கருத்தியல் குறைபாடுகளைக் களைய அன்பைச் சேர்த்து அறைக்கவும் அல்லது கருணையைச் சேர்த்து கலக்கவும் என்று அறிவுரை கொடுத்து, ஜீன்புரம் அல்லது மீம்களின் யுகம் என்று தலைப்பும் வைத்துவிடலாம்.

தமிழில் இது போன்ற நாவல் வந்ததில்லை என்று நிச்சயம் பாராட்டு கிடைக்கும். இதை அறிவியல் புதினம் என்றும் சொல்லிக் கொள்ளலாம் அதாவது அப்படியும் விற்கலாம். இப்போது அறிவியல் என்ற முத்திரையுடன்எதையும் விற்பது எளிது. புதினத்தில் அறிவியல் இருக்கிறதோ இல்லையோ அறிவியல் என்ற பெயரை குறிப்பிட்டதற்கே நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும் என்று மதிப்புரைகளில் எழுதப்படுவது உறுதி. டார்வினுக்கு அடுத்தபடி பரிணாம வாதத்தினை வளர்த்தெடுக்கும் அறிஞர் பெருமான், நம்முன் நடமாடும் 21ம் நூற்றாண்டின் டார்வின் அணிந்துரை தரக்கூடும். சம்ஸ்கிருதம் உட்பட பல மொழிகளில் அதை மொழிபெயர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அன்று இந்திய மெய்ஞானிகள் உருவகமாக கூறியதை, தங்கள் ஞான திருஷ்டி கொண்டு கணித்து அறிவித்ததை, இன்று இவர் அறிவியல் பூர்வமாக எழுதியிருக்கிறார், நிரூபித்துக் காட்டியுள்ளார் என்ற பாராட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இப்படி பொன்னான வாய்ப்புகள் பெற்றுத்தரக்கூடிய அரிய கருத்துக்களை வைத்துக் கொண்டு வெறும் கட்டுரை எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வருத்தமாயிருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட ஒரு புதினத்தினை எழுதி தமிழையும், உலக சிந்தனையையும், மானுடத்தையும் வளப்படுத்துங்கள் என்று அவரைக் கேட்டுகொள்கிறேன்.

சாமன்யர்களன நமக்கு ஒரு சுட்டியை பரிந்துரைக்கிறேன். http://www.nybooks.com/articles/18363
ஒரு மாதிரிக்காக கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறேன்

The ghosts in the meme machine-GUSTAV JAHODA-HISTORY OF THE HUMAN SCIENCES Vol. 15 No. 2-pp. 55–68- 2002

A response to Gustav Jahoda -SUSAN BLACKMORE-pp. 69–71

A reply to Susan Blackmore-GUSTAV JAHODA-pp. 73–74

Genetic Fundamentalism or the Cult of the Gene-DAVID LE BRETON Body & Society Vol. 10(4): 1–20 (2004)

தமிழ் வலைப்பதிவுகளில் சின்னக் கருப்பனின் கட்டுரை குறித்த விவாதங்களை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில்காணலாம்.
http://karthikraamas.net/pathivu/?p=95
http://arvindneela.blogspot.com/2005/10/blog-post.html

K. ரவி ஸ்ரீநிவாஸ்

8 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஜீன் சொல்றான் இந்த ஜீவன் செய்யறான் என்பதை பன்ச் டயலாக் ஆக நாவலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட அருணாச்சலா :)

6:57 AM  
Blogger Nambi மொழிந்தது...

ஜீன் சொல்றான் இந்த ஜீவன் செய்யறான்

:-))

8:02 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

இதே பொருளைப் பற்றி திண்ணைக்கு எழுதிய என் கடிதம் இங்கே. சின்னக்கருப்பனின் இன்னொரு அவியல் அறிவியல் கட்டுரை திண்ணையின் 'அறிவியல்' பகுதியிலேயே வெளியானது.

9:02 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ரவி, இந்தக் கடித்துக்கு நன்றி.

/ஜீன் சொல்றான் இந்த ஜீவன் செய்யறான் என்பதை பன்ச் டயலாக் ஆக நாவலில் பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் பெளத்தம், இந்தியத் தத்துவஞானம், சிற்பம், இசை, கட்டிடக் கலை குறித்த குறிப்புகளை ஆங்காங்கே தூவி கதாபாத்திரங்கள் மூலம் சம்வாதம் நடப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கலாம்./
;-)

9:35 AM  
Blogger மு. க. கஜனி காம்கி மொழிந்தது...

ஸ்ரீனிவாஸ் சார் உங்களுக்குப் பின்னூட்டம் தர்றதுக்கு அனாமதேயம், சுந்தரமூர்த்தி சார், கார்த்திக் ராமாசு தம்பி இந்த லைன்னிலேயே மத்த ப்ரோகளும் வருவாங்கன்னு அடிச்சுச் சொல்லிடலாம். உங்களோட கோஷ்டிகானத்துல சின்னகருப்பன் சொல்றதுல இருக்குற நியாயத்தை அப்படியே அமுக்கிடலாம். ஆனா கொஞ்சம் நிதானமா வாசிக்குறவங்களுக்கு அவர் சொல்றதுல இருக்கும் நியாயம் புரியும். இதுபத்தி விபரமா என்னோட ப்ளாக்குல விரைவிலே எழுதுவேன்

10:11 AM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

இது மாதிரி தொடர்ந்து எழுதி கொண்டிருக்கும் சின்ன கருப்பன்களுக்கும் விஸ்வாமுத்திரர்களுக்கும் இன்ன பிறருக்கும் எவ்வளவு சொன்னாலும் புரியாது, படிக்கும் போது ஆகா இதில் ஏதோ ஞானம் இருக்கு டோய்... என்று பிரமிக்க வைக்கும் பெயர்களையும் வார்த்தைகளையும் போட்டாலும் ஒரு எழவும் புரியாமல் அதை படித்தாலும் கடைசி வரிகளில் நடக்கின்ற சாணியடித்தலில் சரியாக புரிகின்றது அவர்களின் நோக்கம்....

10:50 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

டார்வினுக்கு அடுத்தபடி பரிணாம வாதத்தினை வளர்த்தெடுக்கும் அறிஞர் பெருமான், நம்முன் நடமாடும் 21ம் நூற்றாண்டின் டார்வின்

அது யாருங்க ?

3:14 PM  
Blogger மு. க. கஜனி காம்கி மொழிந்தது...

அநாமதேயம் அவரு யாருன்னு நீங்களே சொல்லிடுங்களேன். டாக்கின் சொன்னத சின்னகருப்பனும் நீலகண்டனும் புரிஞ்சுக்கிட்டதிலே தவறு இருக்கமுடியுமுன்னு நீங்க எப்படி சொல்ல முடியும்? உங்க புரிதல்தான் சரின்னு மூணுகால்முயல்மாதிரி புடிச்சுக்கிட்டா மட்டும் அது கரெக்ட்டுன்னு ஆகிடுமா?

3:24 AM  

Post a Comment

<< முகப்பு