ராசி நல்ல ராசி

அதென்னவோ தெரியவில்லை, நான் ஒரு பத்து நாள் இணையத்தில் அதிகம் மேயாமல் இருந்தால். தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்காமல் இருந்தால் அல்லது ஊர் சுற்றப் போய்விட்டால் முக்கியமானநிகழ்வுகள், சர்ச்சைகள் ஏற்பட்டு பரபரப்பு ஏற்படுகிறது. என்னால் உடனுக்குடன் பதிவுகளை, செய்திகளை முழுமையாகப் படிக்க முடியாத போது அவை குறித்து வலைப்பதிவதில்லை என்பதால் என் கருத்துக்களை வெறொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தலாம் என்று ஒத்திவைத்து விடுகிறேன்.அதற்குள் வேறு சில பரபரப்பான நிகழ்வுகள், சர்ச்சைகள் என்று இன்னொரு அலை எழுகிறது. இது தொடர்ந்து நடைபெறுவதால் என் ராசி அப்படி என்று எடுத்துக் கொள்கிறேன்.

குஷ்பு கூறியது குறித்து நான் எழுதும் முன் அந்தப் பேட்டியை படிக்க வேண்டும். யாரேனும் அதைவலைப்பதிவுகளில் இட்டால் பயனுள்ளதாக இருக்கும். குஷ்புவின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி இல்லை, அவர் தாராளமாக கூறலாம். அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். ஏதோ குஷ்பு முற்போக்கானவர்கள், அவரை எதிர்ப்பவர்கள் பிற்போக்கனாவர்கள் என்று இதை குறுக்க முடியாது. அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பிறர் சொற்களை தங்களுடைய அரசியல் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். திரைப்படத்துறையும் கற்பு, தாலி சென்டிமென்ட் உட்பட பலவற்றை வைத்து வணிகம் செய்யும் ஒன்றுதான். இன்றைக்கு பக்தி படத்தில் இறை அடியாராக நடிப்பதும், நாளைக்கு நாத்திகராகப் நடிப்பதும் நடிப்புத் தொழிலில் சகஜம். குஷ்பு என்ன நான் நடிக்கும் படங்களில் முற்போக்கான கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்தி நடிப்பேன் என்று லட்சியம் கொண்ட நடிகையா, இல்லையே. இப்போது ஏதோ சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். இவை விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள்தானெ. இப்படி இருக்கும் போது குஷ்புவை விமர்சன பூர்வமாக அணுகுவதே சரியானதாக இருக்க முடியும், இதே அணுகு முறையைத்தான் திருமாவளவன், ராமதாஸ் கூறும் கருத்துக்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும். திருமாவளவன், ராமதாஸ் - இவர்களைப் பிடிக்காதவர்களுக்கு குஷ்பு கூறியது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதை வைத்து சில முறை அவர்களை திட்டலாம்.அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதற்கு மேல்...

குஷ்பு கூறிய கருத்து சில நம்பிக்கைகளை, விழுமியங்களை கேள்விக்குள்ளாகுவது போல் தோன்றினாலும் பலருக்கு அதிர்ச்சி தருபவை என்பதைத் தவிர அவற்றில் வேறு என்ன இருக்கிறது. குஷ்பு தனக்குத் தோன்றியதைக் கூறியிருக்கிறார். எதிர்ப்பு எழுந்த உடன் மன்னிப்புக் கேட்டுகொண்டார். இவை என் கருத்துக்கள், நம்பிக்கைகள் இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கருத்து மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறவில்லையே. சமூகத்தின் எத்தனையோ நம்பிக்கைகளை கேள்விகுட்படுத்திய பெரியாரும், அம்பேதகரும் தம் கருத்தில் உறுதியாக நின்றவர்கள். நீதிமன்ற அவமதிப்பு வருமானால் அதைச் சந்திக்க்த் தயார் என்று கூறி அதில் உறுதியாக நின்றவர் அருந்ததி ராய். ஆனால் சிறு எதிர்ப்பு எழுந்த உடன் மன்னிப்புக் கேட்ட குஷ்பு வேறொரு சந்தர்ப்பத்தில் கற்பு நெறியே தமிழ்ப் பண்பாட்டின் ஆதாரம் என்று கூறினால் வியப்படைய ஒன்றுமில்லை. இப்போதும் கூட அவர் தாலி, வகிட்டில் குங்குமம் போன்றவற்றை நிராகரிப்பவர் அல்லவே. அப்ப்டி இருக்கும் போது பாலியல் உறவுகள் குறித்த சில வாக்கியங்களை மட்டுமே முன்னிறுத்தி அவரை ஒரு பெண்ணிய புரட்சிவாதியாக சித்தரிக்க முடியுமா என்ன.
வலைப்ப்திவாளர்கள் இதையெல்லாம் யோசித்திருந்தால் இந்த சர்ச்சையை வேறு பல கோணங்களில் அணுகியிருக்க முடியும். என்னுடைய கருத்துக்களை சில வாரங்கள் கழிந்த பின்எழுதுகிறேன். இந்த சர்ச்சையில் குஷ்புவின் கருத்துக்கள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு.

10 மறுமொழிகள்:

Blogger goinchami-8A மொழிந்தது...

வாங்கய்யா வாங்க..... எங்க உங்களை இன்னும் காணுமேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..

6:06 AM  
Blogger ஜோ / Joe மொழிந்தது...

நேர்மையான கருத்துக்கள்..மேலதிக கருத்துக்களோடு வருக.

6:23 AM  
Blogger Vaa.Manikandan மொழிந்தது...

ada!one more!

6:39 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//குஷ்பு கூறியது குறித்து நான் எழுதும் முன் அந்தப் பேட்டியை படிக்க வேண்டும். யாரேனும் அதை வலைப்பதிவுகளில் இட்டால் பயனுள்ளதாக இருக்கும்.//

உங்களை யாரேனும் கட்டாயம் எழுதித்தான் ஆகணுமுன்னு மென்னியைப் புடிச்சுத் திருகினாங்களா? புடிச்சா எழுதுங்க. புடிக்காட்டி எழுதாதீங்க. நீங்க எழுதணுமுன்னு யாராச்சும் குஷ்பு சொன்னதை தேடி எடுத்துப் போடணுமுன்னு எதிர்பாக்கிறீங்க பாருங்க்க, அது கொஞ்சம் ஓவருங்க

;-)

9:13 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

உங்களை தத்துவாச்சாரின்னு குசும்பர் கரெக்டாத்தான் சொல்லிருக்கார்.

1:55 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

பல வலைப்பதிவாளர்கள் குஷ்புவை ஆதரிக்கும் போது ரவி சிரிநிவாஸ் ஏன் எதிர்க்கிறார். ஒரு பிற்போக்குவாதி இவர் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா

2:49 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://360.yahoo.com/maalan_narayanan

குஷ்பு சினிமாவில், ஊடகங்களில்பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்து கண்டனம் என்றைக்காவது தெரிவித்திருக்கிறாரா. சரியோ, தவறோ திரைப்படங்களில் ஆபாசம் குறித்து ராமதாசும், தமிழ் பாதுகாப்பு இயக்கமும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.இப்போது குஷ்புவை விமர்சனமின்றி ஆதரிப்பது ஒரு போக்காக மாறி வருகிறது. இந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல.

குஷ்புவிற்க்கு எய்ட்ஸ் குறித்தோ அல்லது பெண்கள் உரிமைகள் குறித்தோ அல்லது வேறு சமூக பிரச்சினைகள் குறித்தோ என்ன பெரிய அக்கறை இருந்திருக்கிறது என்பதை விளக்கினால் எங்களைப் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ளுவோம்.

பெரியாரின் அனைத்து கருத்துக்களையும் ராமதாஸோ, திருமாவளவனோ அல்லது வேறு யாராவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். திருமணம், பாலுறவு குறித்த அவர் கருத்துக்கள் புரட்சிகரமானவையாகத் தோன்றலாம். ஆனால் அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.நீங்கள் பெரியாரின் கருத்தினை ஏற்கிறீர்களா என்பதை முதலில் தெரிவியுங்கள்.

குஷ்பு பெரியாரின் கருத்துக்களை இதில் ஏற்பதாக கூறாத போது இங்கு பெரியாரை ஏன் குண்டாந்தடியாக பயன்படுத்துகிறீர்கள். பெரியார் அறிவியல் தொழில் நுட்பத்தின் மீது பெரும் நம்பிக்கையும், விமர்சனமற்ற கண்ணோட்டத்தினையும் கொண்டிருந்தார். பெண்ணியவாதிகள் பலர் அறிவியல் தொழில் நுட்பம் குறித்த ஒரு விமர்சனபூர்வமான கண்ணோட்டங்களை முன் வைத்திருக்கிறார்கள். பெரியார் இனப்பெருக்கத் தொழில் நுட்பங்கள் குறித்து சொன்ன கருத்துக்களை இன்றைக்கு பெண்ணியவாதின் கருத்துக்கள் கொண்டு விமர்சிக்க முடியும்.

கலாச்சார குண்டாந்தடிகள் என்று பொதுவாக எழுதியிருக்கிறீர்கள். வேறுபடுத்தி பார்க்காமல் அனைத்தையும் ஒரே முத்திரை குத்தும் முயற்சி இது. இப்படி மேலோட்டமாக எழுதுவதன் மூலம் ஒரு செறிவான விவாத்தினை தவிர்க்க செய்யப்படும் முயற்சியின் ஒரு பகுதிதான் உங்கள் பதிவு. இந்துவில் நிருபமா, அவுட்லுக்கில் ஆனந்த் என்று பிறரும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும் போது ஊடகங்களில் எழுதுபவர்கள் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தினை முன் வைக்க விஷயங்களை திசை திருப்ப முயல்வதும், தங்களை தாராளவாதிகள், கலாச்சார 'பாதுகாவலர்'களின் விமர்சகர்கள் என்று நிலைநாட்ட விரும்புவதும் தெளிவாகப் புலனாகிறது

ரவி சிரிநிவாஸ்

5:38 PM  
Blogger Voice on Wings மொழிந்தது...

இரவி (மாலனுக்குப் பின்னூட்டமாகக்) கூறியதில்் சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக உள்ளன. இவ்விவாதத்தில் என்னை உறுத்தும் ஒரு அம்சம், குஷ்புவின் கருத்திற்கு ஆதரவளிப்பவர்கள் பலரும் பெரியாரைத் துணைக்கழைப்பது. அதன் நீட்சியாக, 'பகுத்தறிவுக் கட்சிகள் பெரியாரின் போதனைகளைக் கைவிட்டுவிட்டன' என்றெல்லாம் விவாதம் திசை திரும்புவது. பாலியல் சுதந்திரம், தாராளம் ஆகியவை குறித்து இரவியுடன் நான் உடன்படாவிட்டாலும், பெரியாரை முன்வைத்து இவ்விவாதம் நடத்தப் படுவதை விமர்சிப்பதில் அவருடன் உடன்படுகிறேன். I think it's high time we talk about what we think is desirable, instead of focussing on what Periyar recommended as desirable.

2:39 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

"குஷ்பு சினிமாவில், ஊடகங்களில்பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்து கண்டனம் என்றைக்காவது தெரிவித்திருக்கிறாரா."

குஷ்பு சார்பாக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கண்டனம் தெரிவிப்பதை நீங்கள் அவருக்குக் கட்டாயமாக்கியிருப்பது அவருக்குத் தெரியாதில்லையா? அதனால்தான் அவர் அப்படி செய்துவிட்டார். தயவு செய்து பெரிய மனது பண்ணி அவரை மன்னித்துவிடுங்கள்.

மத்தவங்க ஒண்ணு சொல்லுறப்போ நாம அத ஒத்துக்கிடாம வேற எதயாச்சும் பெனாத்துனாதான நமக்கு மருவாத? நாப்பது வயசாயிட்டா இப்பிடி எல்லாத்துக்கும் அடி வவுத்துலயிருந்து எதிர்த்துக்கினு வரும், என்ன சொல்றிய? லாஜிக்கு யாருக்கு வேணும்? நீ வேணாங்கிறியா? நான் வேணும்னு சொல்லுவேன், இப்ப இன்னாங்கிறே? இதுவும் நல்ல லாஜிக்குதாண்ணா! ரவி சிரிநிவாஸ் அறிவுப் பொரச்சி வாள்க!

3:12 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Those who are targeting Khushboo have hardly protested against the portrayal of women in our films, television soaps, and in the rest of the media. They present woman as either the ‘weaker’ sex, sobbing all the time against the villainy of the mother-in-law/sister-in-laws; or as glamour queens gyrating their hips for a man’s nod.

http://360.yahoo.com/maalan_narayanan

5:38 PM  

Post a Comment

<< முகப்பு