பார்பிக்கு மாற்று ?

பார்பிக்கு மாற்றாக மத்திய கிழக்கில் இப்போது பரபரப்பான விற்பனையில் உள்ள பொம்மையைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடுகிறது. பார்பியின் மீதான விமர்சனங்கள் பல, ஆனால் பார்பி ஒரு குறிப்பிட்ட மதத்தின் உடை குறித்த கட்டுப்பாடுகளுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியாது. ஆனால் மாற்றாக காட்டப்படும் பூலா அப்படியல்ல. அது மட்டுமல்ல பெண்கள் செய்யும் எல்லா வேலைகள் தொடர்புடைய பூலா பொம்மைகளைப் உருவாக்குவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இப்படி கட்டுப்பாடுகளை கட்டுப்பாடுகள் என்று இல்லாமல் இயற்கையானதாக பொம்மை மூலம் செய்வது எத்தகைய நுண்ணிய பிரச்சாரம். ? எனக்கு பார்பி மீது விமர்சனம் இருந்தாலும் பூலாவிற்கு பார்பி பரவாயில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில் பார்பியில் மேற்கின் அழகு குறித்த மதிப்பீடுகள் இருந்தாலும் மத ரீதியான கட்டுப்பாட்டினை அது முளையிலேயே புகுத்தி, நியாயப்படுத்துவதில்லை.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஏனுங்க, மத்திய கிழக்குல கிமோனோ போட்ட பார்பியா வெளியிடுவாங்க?
இல்லே ஜப்பான்ல பொடவை கட்டின் கீஷா வெளியிடுவாங்களா? அந்த மார்க்கெட்டுக்கு
ஏத்த மாதிரிதான் வியாபாரம் செய்வாங்கோ?
சரியான ஒன்ற கண்ணோட்டம்.

1:25 PM  

Post a Comment

<< முகப்பு