சானியா மிர்ஸாவை முன்வைத்து

சானியா மிர்ஸா விளையாடும் போது அணியும் ஆடை குறித்து ஒரு தேவையற்ற சர்ச்சை உருவாகியிருக்கிறது. இஸ்லாம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைஎடுத்து வரும் சிலர் இங்கும் மதத்தினை நுழைத்து ஒரு சர்ச்சையினை உண்டாக்கியின்றனர்.அவர்களின் போக்கும், செயல்களும் கண்டிக்கப்பட வேண்டியவை. ஆனால் இதைக் காரணம்காட்டி தாங்கள் ஏதோ தாராளவாதிகள் போல் சிலர் வேடம் போடுகின்றனர். இவர்கள் சார்ந்து இருக்கும்அமைப்பும், இந்த்துவ அமைப்புகளும் கருத்து சுதந்திரம், தனி மனித சுதந்திரம் குறித்து பெரிதும்மரியாதை கொண்டவை அல்ல.

மாலி என்பவரை நாடகம் போடாதே என்று மிரட்டிய ஜெயேந்திரரை இவர்கள் கண்டித்ததில்லை.

காஷ்மீர் சென்ற பத்திரிகையாளர் ஞாநி அங்குள்ள சிலரினைப் பேட்டிக் கண்டு எழுதிய போது அவருக்கும், ஆனந்த விகடனுக்கும் கொலை மிரட்டல் உட்பட பலவகையில் இடையூறு ஏற்படுத்தினஇந்த்துவ் அமைப்புகள்.

தீபா மேத்தா படப்பிடிப்பிறகு இந்த்துவ அமைப்புகள் ஏற்படுத்திய இடைஞசல்களை நாடறியும்.

மல்லிகா சாராபாய் உயிருக்கு அஞ்சி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது மோடி ஆட்சிசெய்யும் குஜராத்தில். இது ஏன் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

வாலன்டைஸ் டே என்கிற காதலர் தினத்தினை ஆண்டுதோறும் எதிர்க்கும் அமைப்புகள் எவை,அவை அதை தடுக்க செய்யும் முயற்சிகளும் நாமறிந்தவையே.

பால்ய விவாகத்தினை ஆதரித்தவர் மறைந்த சங்கராச்சாரியார். அவர் விதவை மறுமணம் உட்படபலவற்றை ஏற்க ம்றுத்தவர். பெண்கள் வேலைக்குப் போவது குறித்து வருந்தியவர். அவரைக் கண்டித்து இந்த்துவ அமைப்புகள் என்றைக்காவது குரல் கொடுத்திருக்கின்றவா.

பெண்கள், குடும்பம, உடை குறித்து குருமூர்த்தி எழுதியதைக் குறித்த சர்ச்சையை திண்ணையில்காணலாம், இப்போது சானியாவிற்காக பரிந்து பேசும் நபர் அப்போது எங்கே போயிருந்தார்.இவர் குமூர்த்தியின் கருத்துக்களை நிராகரிக்கிறேன் என்று திண்ணையில் வெளிப்படையாக எழுதுவாரா

பா.ஜ.கவின் ஆதரவாளர் சோ பெண்ணுரிமை விஷயத்தில் எத்தகைய பிற்போக்குவாதி என்பதை நான் விளக்கத்தேவையில்லை. பெண்களுக்கு சொத்தில் சம் உரிமை குறித்து சமீபத்தில் துக்ளக்கில் வந்த கட்டுரை அதற்கு உதாரணம். அதை எழுதியது சோ அல்ல. ஆனால் அது போன்ற கட்டுரைகளைப்பிரசுரிப்பதில் அவருக்கு தயக்கம் இராது. இவர் சோவை விமர்சித்து எழுதத்தயாரா

பெண்கள் வேலைக்குச் செல்வது, குடும்பம குறித்து ஆர்.எஸ்.எஸ் ஸிம் முக்கிய தலைவர் கூறியபிற்போக்கான கருத்துக்கள் குறித்து வாயே திறக்காதவர்கள் இன்று சானியா விஷயத்தில் மட்டும் தங்களை தாராளவாதிகளாகக் காட்டிக் கொள்வது நாடகமன்றி வேறென்ன.

சிவாஜி குறித்து அவதூறாக உள்ளது என்று ஒரு நூல் தடை செய்யப்பட்ட போது அதை ஆதரித்தவர் வாஜ்பேயி. ஆர்.எஸ்.எஸ் அப்போது என்ன கருத்துரிமைக்கு ஆதரவாகவா இயக்கம் நடத்தியது.

சமூகசீர்த்திருத்த இயக்கங்கள், பெரியார், நாராயண குரு போன்றவர்களின் இயக்கங்களினால்,வேறு பல காரணங்களால் இந்து சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இது பழமைவாதிகளைமீறி நடந்தது. அவர்கள் கையில் ஆட்சி இல்லை. இந்த இந்துப்பழமைவாதிகள் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு பிற்போக்கான நிலைப்பாடுகளை எடுத்தார்கள் என்பதற்கு பால்ய விவாகம்,பெண்களின் உரிமைகள் குறித்து போன நூற்றாண்டில் எழுந்த சர்ச்சைகள், வழக்குகளைப் பற்றிபடித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்து அடிப்ப்டைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இந்து அடிப்படைவாதிகள் சில சமயங்களில் இஸ்லாத்தினை எதிர்க்க தாராளவாதிகள் போல் வேடம் பூணுவர். இது கபட நாடகம் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இந்த போலிக்கண்ணீர்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.

27 மறுமொழிகள்:

Blogger inomeno மொழிந்தது...

உங்கள் கருத்துப்படி, சானியா மிர்ஸா இந்துவாக இருந்து ,மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என சங்கராச்சாரியார் சொல்லியிருந்தால்,
இப்பொழுது பதிவுபோட்டிருப்பவர்கள் அப்பொழுது அமைதியாக இருந்திருப்பார்கள் என்று சொல்கிறீர்களா ?

9:48 AM  
Blogger தாணு மொழிந்தது...

சரியாகச் சொன்னீர்கள். இவர்களது விவாதம் உண்மையாகவே சானியாவின் உடை குறித்தது அல்ல. ஒரு மதம் சார்ந்த சண்டைக்கு காரணம் தேடி அலைபவர்களுக்கு, சானியா இப்போதைய அவல் அவ்வளவுதான். இந்த சர்ச்சைகளின் விளைவாக மனதில் தோன்றியதுதான் என் முந்தைய பதிவு.
இவர்களெல்லாம் சுனாமி தாக்கிய இடங்களில் உயிருக்காகவும் உணவுக்காகவும் தவிக்க நேர்ந்தால் ,ஒருவேளை உண்மை பேசுவார்களோ?

10:18 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ரவி அண்ணாச்சி,
அதெப்படி நீங்க 'இஸ்லாம் என்கிற பெயரில் சிலர்...' அப்படினு சரியா பாயிண்டை பிடிக்கிறீங்கோ. அப்புறம் மேக்கு வங்காளத்துல 'சிட்டி ஆஃப் ஜாய்' படப்பிடிப்பு நடந்த அளக விளக்கிறீயளா சாமி! ஒருத்தன போட்டு வேற தள்ளுனான்களாம்லா கம்யூனிஸ்ட் தொட்டிப்பயலுவ! கம்யூனிஸ்ட் காரன் எதுத்தாம்னுப்புட்டு ஹாலிவுட்லயே செட் போட்டு எடுத்தானுங்களாமே! கருத்து சுதந்திரம் அப்ப என்னாச்சு அண்ணாச்சி! பெவிக்கால் போட்டு உக்காந்துருச்சாக்கும்! அப்புறம் டாரஸ் படத்துல லெனின் பாலியல் தொழிலாளிகள் கிட்ட நடத்துன புரட்சி பத்தியெல்லாம் இருந்துச்சுதுன்னு கம்யூனிஸ்ட் 'மட'அதிபதி ஜோதி பாசு படத்தயே பொட்டியோட அனுப்பிட்டானாமே அதுக்கு பேருந்தான் கருத்து சுதந்திரமோ. அது இன்னாவோ ஒரு பொண்ணு இருக்குதே 'தஸ்லீமா நஸ்ரீன் அந்தம்மா எழுதுன புத்தகத்த தடை பண்ணினானே பொழந்த தேவ் பட்டாச்சாரி அவனுக்கெதிரா ஐயா திண்ணயில பொழந்து கட்டின கட்டுரை உரலை காட்டுறியளா சாமி! தெரசாளுக்க வண்டவாளத்த பொட்டி பிளந்த டாக்குமன்ட்ரிய போடவிடாம தடுத்த இடதுசாரிகள் பத்தி பெரியவரு நீங்க கட்டாயம் கட்டுர எழுதியிருப்பிய அத ஜெனீவா போற வழியில தொலச்சிருப்பீய அதயும் ஒண்ணு எடுத்து விடறதுதான முற்போக்கு அண்ணாச்சி. அத விட்டுட்டு இப்படி முதுகு சொறியிறீயளே. வழியுது தொடச்சிக்கும் ஓய்!

11:26 AM  
Blogger வெங்காயம் மொழிந்தது...

சரியான கருத்துக்கள். உங்கள் பதிவைப் படித்ததின் பின்விளைவு இங்கே...

12:45 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,

I endorse thanu's and your views in this regard.

BTW, I had sent my contact no. to you by mail and was expecting to talk to you while you were in chennai !!!

2:49 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பாலா
உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது, நான் திங்கள்,செவ்வாய் இருதினங்கள் இருந்தேன். திங்களன்று
தொலைபேசி இணைப்புகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பலரை, நீங்கள் உட்பட
தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை. செவ்வாய்னறு பல வேலைகள். அன்று இரவிலேயே
கிளம்ப வேண்டி இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்த முறை வரும் போது நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்


Anonymous
நான் எங்காவது மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு செய்வது எல்லாம் சரியே என்றோ அல்லது அன்னைத் தெரசாவைப் புகழ்ந்து எழுதியிருந்தால் நீங்கள் அதைச் சுட்டிக்காட்டலாம். உங்களால நான் எழுப்பிய கேள்விகளுக்கு அல்லது காட்டிய உதாரணங்களுக்கு பதில் சொல்ல முடிந்தால் சொல்லியிருக்கலாமே. நான் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை எதிர்த்து இந்து அடிப்படைவாதத்தினை ஆதரிப்பவனும் அல்ல. அது போல் இந்து அடிப்படைவாதத்தினை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாத்தினை ஆதரிப்பவனும் அல்ல. யார் எதை ஆதரித்து எழுதுவது என்று இங்கு எல்லோருக்கும் தெரியும், யார் சோவைப் புகழ்ந்து திண்ணையில் எழுதியது என்பதும் தெரியும்.
நான் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல. அவர்கள் செய்வதையெல்லாம் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கில்லை. அப்படி நான் ஆதரவும் தெரிவித்ததில்லை. நான் விமர்சித்தும் எழுதியிருக்கிறேன்.

3:28 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

உங்கள் கருத்துப்படி, சானியா மிர்ஸா இந்துவாக இருந்து ,மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என சங்கராச்சாரியார் சொல்லியிருந்தால்,
இப்பொழுது பதிவுபோட்டிருப்பவர்கள் அப்பொழுது அமைதியாக இருந்திருப்பார்கள் என்று சொல்கிறீர்களா ?

ஆதரவே தெரிவித்திருக்கக் கூடும்

3:29 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//நான் எங்காவது மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு செய்வது எல்லாம் சரியே என்றோ அல்லது அன்னைத் தெரசாவைப் புகழ்ந்து எழுதியிருந்தால் நீங்கள் அதைச் சுட்டிக்காட்டலாம். //

ரவி அண்ணாச்சி இதையே மாத்திப்போட்டு குத்தலாமா? நீங்க சொல்ற நபர் குருமூர்த்தி எழுதுறதெல்லாம் சரின்னோ அல்லது சோ சொன்னதெல்லாம் -குறிப்பா பெண்ணுங்க உரிமை விசயத்தில- சரின்னோ சொல்லிருக்காரா என்ன? நீங்க கூட இடதுசாரிகள ஏதாவது ஒரு இடத்துல ஆதரிச்சிருந்தா அத வச்சுட்டு அவுக செஞ்சதெல்லாம் கரீட்ன்னு சொல்லுறீயன்னு சொல்லிடமுடியுமா...ஏன் சாமி உங்களுக்கு ஒரு நாயம் அடுத்தவனுக்கு மத்தொரு நாயமா? இது மனு இஸுடைலா அல்லது மதச்சார்பற்ற இஸுடைலா? இந்து அடிப்படைவாதம் அப்படீன்னுறீயளே அது இன்னாதுன்னு எடுத்து விடுறீயளா? இப்ப...ஸியோனிஸம் அப்படீன்னு ஒன்னு இருக்கு அத ஆதரிக்குறவனெல்லாம் யூத அடிப்படைவாதியாக மாட்டான். அப்படித்தான் இந்துத்வமும் அத ஆதரிக்கிறவனெல்லாம் இந்து-அடிப்படைவாதி ஆகமாட்டான். இப்ப நீங்க திட்டுற ஆசாமி 'இராமர் பாலம் கட்டுனத நாசா கண்டுபிடிச்சதுன்னு' சொன்ன ஆசாமிங்கள திட்டி எழுதின கட்டுரையும் அதே திண்ணையில கீதே அத பார்த்திகின்னியா சாமி? நீங்க எந்த அடிப்படையில அந்த ஆசாமிய அடிபடவாதிங்கிறீய? சரி அதெல்லாம் வுடு சாமி உன் லாஜிக் படியே வருவோம். சானியா வெள்ளாடப்படாதுன்னு சொல்ற பேமானிங்கள விமர்சிக்கிறவனுக்கு தீபா மேத்தா படத்த பிரச்சனை உண்டுபண்ற பேமானிங்கள எதுக்குற தில்லு வேணுங்கற. அப்போ அத சொல்ற உனக்கு மேக்கு வங்கத்துல வெள்ளையும் சொள்ளையுமா போட்டுட்டு திரைப்படங்கள தடுக்கிற பட்டாச்சாரி மாதிரி பேமானிங்களயும் தட்டிக்கேக்குற தில்லு வேணுமா இல்லியா...அந்த படத்த இன்னா டாக்கீஸில எடுத்து விட்டு ஓடுதுன்னு ஒன்னு சொன்னா தாவலை. அப்புறம் அண்ணாச்சி, என்னாமோ சிவாசி பத்துன புக்காமே! அத தட பண்ணுனது நம்ம சோனியா அம்மாவுக்க காங்கிரசு கட்சி ஆட்சி பண்ணுற மகாராட்ரா அரசாங்கமாம்ல. ஏன் மாப்பு இத நீ சொல்லாம வுட்டுட்டு வாஜ்பாயிய ஒரு பிடி பிடுச்சுவிட்ட பாரு....அசந்துட்டேன் இன்னா நேர்மை சாமி உனக்கு...கொக்கமக்கா

7:46 PM  
Blogger inomeno மொழிந்தது...

//உங்கள் கருத்துப்படி, சானியா மிர்ஸா இந்துவாக இருந்து ,மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என சங்கராச்சாரியார் சொல்லியிருந்தால்,
இப்பொழுது பதிவுபோட்டிருப்பவர்கள் அப்பொழுது அமைதியாக இருந்திருப்பார்கள் என்று சொல்கிறீர்களா ? /

ஆதரவே தெரிவித்திருக்கக் கூடும்/

கெஞ்சம் தெளிவாக சொல்லிவிடுங்கள்.யாருக்கு ஆதரவே தெரிவித்திருக்கக் கூடும், சானியா மிர்ஸாவுக்கா ? இல்லை சங்கராச்சாரியார்க்கா?

1:55 AM  
Blogger Ayub மொழிந்தது...

//சானியா மிர்ஸா இந்துவாக இருந்து ,மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என சங்கராச்சாரியார் சொல்லியிருந்தால்,
இப்பொழுது பதிவுபோட்டிருப்பவர்கள் அப்பொழுது அமைதியாக இருந்திருப்பார்கள் என்று சொல்கிறீர்களா ?

ஆதரவே தெரிவித்திருக்கக் கூடும் //

இன்னாபா ரவி & இனோமினோ கொயம்பி போயீடீங்களா?

சங்கராச்சாரியார் மாரியெல்லாம் அந்த மதகுரு கமண்டலமும் குச்சியும் வச்சிகினு கூத்தடிக்கல சாமி.

சங்கரச்சாரியார் ஏன் எதுக்கனுங்கீறே? சொர்னமால்யாவோடவும், ஸ்ரீரங்கம் உஷாவோடவும் கிள்ளி ஆடுனவருதானே மாமு உங்க சங்கராச்சாரி?

இசுலாமிய பொண்ணு தொடையக்காட்டக் கூடாதுன்னு அந்த பெரிசு சொன்னது அவரும் இசுலாமிய மதங்கரதாலதான். ஏன் இதுக்கு மின்னாடி ரம்பா தொடைய நாம கலைக்கண்ணொட பார்க்கலயா?
சில்கு சுமிதா, அனுராதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி இவங்கெல்லாம் என்ன முசுலிமாபா?

சுஷ்மா சுவராஜ் மொதல்ல மொட்டப் பாப்பாத்தி முறைய ஒழிக்கட்டும். அப்புறம் சானியோவோட சேர்ந்து சாமியாடட்டும் ஆரு வாணாங்கப்போறாங்க?

இன்னாபா இனோமினோ சர்தானப்பா?

2:39 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

தி.மு.க.வில் கலைஞரை விமர்சித்துப் பேச முடியுமா, அ.தி.மு.க.வில் ஜெயை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியுமா, அது போல்தான் ஆர்.எஸ்.எஸ்சிலும் சோவை,குருமூர்த்தியை,காஞ்சி சங்கராச்சாரியை திட்டி ஒரு வார்த்தை பேச முடியாது. அவருக்கு ஆர்.எஸ்.எஸ் மூலம் சில காரியங்கள் ஆகணும், பெரிய அறிவாளின்னு மரியாதை வேணும். சொந்தக்காரியங்கள் முக்கியமா, ஜாதி எதிர்ப்பு, பெண் உரிமை முக்கியமா. இதைப் புரிஞ்ச்சுக்காம என்னென்னமோ எழுதிறீங்களே, இதெல்லாம் வெட்டி.

6:29 AM  
Anonymous ஒரு தலித் மொழிந்தது...

சங்கராச்சாரி கைது ஏதோ இந்து மதத்திற்கே அவமானம் என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ் என்றைக்காவது சங்கராச்சாரி மடத்தின் வேத பாடசாலைகளில் பார்ப்பப்னர் தவிர பிற இந்துக்களுக்கு ஏன் இடமில்லை என்று கேட்டதுண்டா. இப்படி இன்றைக்கும் வேதம் படிக்க ஒரு ஜாதிக்குத்தான் உரிமை என்று சொல்வது சரியா. இதை எதிர்த்து ஒரு தீர்மானம் கூட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க நிறைவேற்றியதுண்டா. அவர் காலில் போய் விழும் வெட்கங்கெட்ட இந்த ஜென்மங்கள்
சங்கராச்சரியைக் ஆதரிப்போம், சாதியமைப்பை எதிர்ப்போம் என்று சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது. ஒரு தலித் பிஷப் ஆக முடியும், சங்கராச்சாரி தலித்தை அர்சசகராக அனுமதிக்க மாட்டார் எல்லா சாதிக்காரனும் அர்ச்சகன் ஆகமுடியும்ன்னு சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து வழக்குப் போடத் தூண்டியது இந்த சங்கராச்சாரிதானே.

மாலி என்கிற பாப்பான் போட்ட நாடகத்தில் குழந்தைகள் இடம் மாறி வளர்ந்து, தலித் குழந்தை பின்னாளில் சங்கராச்சாரியாகி விடுவது போல் கதை இருந்தது.அதைப் பொறுக்காமல் தானே சங்கராச்சாரி அவரைக் கூப்பிட்டு மிரட்டினான். அப்போது ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது.

கண்டதேவியில் தலித்கள் தேர் இழுக்க உரிமையில்லை என்ற பிரச்சினையின் போது ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது. அங்கு எட்டியே பார்க்கவில்லை. ஏன் பயம், தேவர்களையும், நாடார்களையும்
பகைத்துக் கொண்டால் காசு வராது என்கிற பயம். போடா நீயுமாச்சு உன் கொள்கையுமாச்சு எனக்கு
என் ஜாதிதான்டா முக்கியம்ன்னு தேவரும், நாடாரும் சொன்னால் ஆர்.எஸ்.எஸ் தமிழ் நாட்டில் அம்பேல்.

7:46 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Ravi Srinivas,

What convoluted comparison is this! Who are you trying to please?

Has any Hindu monk ever issued any such decree against any Hindu girls, role models (there are 100s of them) in Arts & Sports? Even if some mad monk passes such a diktat (let me say hypothetically), would it be considered as a *security threat* as you see in this Sanya case?

Just see the recent example of our Madurai Adeenam. How he is torn apart, (for a simple request to come in our traditional attire to the temples) by the Hindu lady brigade of Thamizmanam. That is the mark of our truly emancipated culture. Don’t try to blame the poor Hindus as usual to prove your secooolaristic ideals here.

Pity you start another round of Hindu bashing.

Vetrivel

11:28 AM  
Anonymous Thangamani மொழிந்தது...

ரவி,

நல்ல பதிவு. ஆனால் பதிவின் நோக்கம் வழக்கம் போல திருப்பப்படுகிறது. சானியாவின் உடைவிசயத்தில் அப்பெண்ணுக்கு ஆதரவாக, முஸ்லீம் மத மடத்தனத்தை தோலுரித்துக்காட்ட புறப்பட்டவர்கள் அதை பெண்களின் வழியில் அணுகியிருந்தால் காஞ்சி பரிவாரத்த்தின் பெண்ணடிமைத்தனத்தையும், மதுரை ஆதினத்தின் சமீபத்திய உடைபற்றிய அறிவுறுத்தல்களையும் சேர்த்தே அணுகியிருப்பார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது முஸ்லீம் அடிப்படைவாதத்தை மட்டுமே. இப்படியே முஸ்ஸ்லீம்களும் அவர்களது சொத்தைகளை, ஆணாதிக்க, மத அடிப்படைவாதத்தைப் பாதுகாத்துக்கொள்ள இந்து மதத்தில் உள்ள ஓட்டைகளை தேடித்திரிகிறார்கள். இரண்டுபேரும் காப்பாற்ற நினைப்பது அவர்களது அடிப்படைவாதங்களை மட்டுமே அல்லாது வேறதையுமல்ல.

எல்லா மதங்களும் சுதந்திரத்துக்கும், இயற்கையான வாழ்க்கை முறைக்கும் எதிரானவை என்பது சற்றே கண்ணைத்திறந்து பார்த்தால் தெரியும்.

பதிவுக்கு நன்றி!

1:54 PM  
Blogger ஜும்பலக்கா மொழிந்தது...

தங்கமணி,

இயற்கையான வாழ்கை முறை என்பது ஆடு,மாடு,நாய், பன்னி வாழ்கின்றனவே,அதைத்தானே சொல்கிறீர்கள்?

மதங்களை எதிர்ப்பது உங்களின் சிந்தனையின் குறைபாடு என்று நான் சொல்கிறேன்.கடவுள் இல்லை என்பவர்களெல்லாம் அறிவாளிகள் என்ற மாயையை உங்கள் போன்றவர்களின் எழுத்துக்கள் காட்டுகின்றன.

10:35 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

//ஆனால் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது முஸ்லீம் அடிப்படைவாதத்தை மட்டுமே.//
இது போலத்தான் படுகிறது.

11:01 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

who gave religious leaders the right to decide the length of sania's skirt?In a democracy every woman has the freedom to decide what she wears.Religion has nothing to do with this.

People who issue orders against women's dress are fundamentalists.In 21st century India its shame to see such fatwas.

Every human being has the right to condemn this.Ravi,you havent said what you think about this fatwa.Is it right?Do you support this?First let us talk about it.Do you support this ban or do you condemn it?

2:23 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

In 21st century India isnt it a shame to see a sportswoman being prohibited from wearing the dress of her choice?Its even horrible to see people supporting this ban.What reason do they give for supporting this ban?Nothing.If questioned they evade this question and say 'sankaracharya did this and that'.

Whoever prohibits human rights,individual freedom is a fascist.Have no doubts on that.Whether its hindu saints or other religious leaders.She will wear any dress she wants.Who the hell are these people to oppose her?

Every human being who loves democracy should oppose this male chauvinistic mindset.

2:31 PM  
Anonymous Kanmani மொழிந்தது...

If THEY really loves sports, they should have raised their voice while Hindu Extremsit group spoiled the cricket pitch.

If THEY really wants to give freedom to women, WHY still compulsing தாலி & மெட்டி.

If THEY honour feminism, they should not allow her to be burnt in FIRE.

I do not think that moulvi ban to play, he gave simple advice as a father. Even it suppose to be by her parents.

My question is if sania wish to play in modest uniform, would she allowed?

11:42 PM  
Blogger inomeno மொழிந்தது...

/My question is if sania wish to play in modest uniform, would she allowed?/

why not ?
is there any rules to play only in skirt ?

12:27 AM  
Blogger inomeno மொழிந்தது...

/If THEY really loves sports, they should have raised their voice while Hindu Extremsit group spoiled the cricket pitch.

If THEY really wants to give freedom to women, WHY still compulsing தாலி & மெட்டி.

If THEY honour feminism, they should not allow her to be burnt in FIRE.

I do not think that moulvi ban to play, he gave simple advice as a father. Even it suppose to be by her parents.
/

can't u find any opposition from hindus to the above things ?

can u show any opposition(in support of Sania) from muslim side ?

12:31 AM  
Anonymous Kanmani மொழிந்தது...

//1) why not? is there any rules to play only in skirt?

2) can't u find any opposition from hindus to the above things ?

3) can u show any opposition(in support of Sania) from muslim side ? //

So far you argued in ananymous mode. Thanks inomino to disclosing your identity also it is difficult to discuss with unknown!:0

Let me come to your points.

1) Absolutely not. Since there is no rules for wearing skirt in Tennis, it is not wrong to suggest to wear a modest dress. Do you agree?

2) There are few raising voice. but useless while it is widely practiced.

3)Didn't find Shia Imam is favour to Sania?

1:00 AM  
Blogger inomeno மொழிந்தது...

/So far you argued in ananymous mode. Thanks inomino to disclosing your identity also it is difficult to discuss with unknown!:0
/
don't have such a silly attitude.
iam commenting only as inomeno not as ananimous and not in duplicate id .

/1) Absolutely not. Since there is no rules for wearing skirt in Tennis, it is not wrong to suggest to wear a modest dress. Do you agree?/

மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் is a suggestion ?

/2) There are few raising voice. but useless while it is widely practiced./

at leaset u agree there are few raising voice.while there is no raising voice for sania.

/useless while it is widely practiced./

so as per ur view, spoiling the cricket pitch, allowing women to be burnt in FIRE,
compulsing தாலி & மெட்டி is widely practiced ?
(this is the time u jump to other topic)

/Didn't find Shia Imam is favour to Sania? /

who is Shia Imam ?
Hope he not the one who issued 'suggestion' .

4:04 AM  
Anonymous Kanmani மொழிந்தது...

1) மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் is a suggestion ?

Did that Moulvi say, he will not allow her to play?

2) at leaset u agree there are few raising voice.while there is no raising voice for sania.

FEW and NONE are same in most of the cases. Are you sure all muslim against Sania?

3) who is Shia Imam ? Hope he not the one who issued 'suggestion'.

So,you are unaware what happening around. isn't?

5:36 AM  
Blogger inomeno மொழிந்தது...

//1) மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் is a suggestion ?

Did that Moulvi say, he will not allow her to play?//

pls decide by urself
http://timesofindia.indiatimes.com/articleshow/1233291.cms

//2) at leaset u agree there are few raising voice.while there is no raising voice for sania.

FEW and NONE are same in most of the cases. Are you sure all muslim against Sania?//

/FEW and NONE are same in most of the cases./
super logic.

/Are you sure all muslim against Sania?///

i will be gratful if u could show some .

//3) who is Shia Imam ? Hope he not the one who issued 'suggestion'.

So,you are unaware what happening around. isn't?//

yes...I am unaware of Shia Imam .

7:45 AM  
Anonymous neo மொழிந்தது...

அருமையான பதிவு ரவி அவர்களே!

வழக்கம் போல காவிக் கோவணங்கள் சிலது இங்கேயும் வந்து 'சாமியாட்டம்' ஆடிக் காமிக்குதுங்க! :))

தங்கமணி அவர்களின் கருத்து இன்று உலகளாவிய உண்மையைச் சொல்லுவதாக இருக்கிறது. எல்லா மதவாதிகளும் மனித உரிமைகளை தங்கள் 'கடவுள்'களின் முன் 'கிடா' வெட்டிப் படைப்பவர்களாகவே உள்ளனர்.

"The Hindu"-வில் நாள்தோறும் வருகிற லெட்டர்ஸ் டு தெ எடிட்டர்-ல் இசுலாமியர் பலர் சானியாவிற்கு(உண்மைக்கு) ஆதரவாகக் குரல் கொடுப்பதைக் காண முடிகிறது.

இந்தக் காவிப் பண்டாரக் கும்பல் 'ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதுச்சாம்' என்கிற கணக்கில் பேசுவதைப் பார்க்கச் சிரிப்புத்தான் வருது.

"பெண் என்பவள் சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும் கீழானவள்" என்று "அற்புத" நீதி எழுதிய பயல்களுக்கு பேச்சு ஒரு கேடா?

4:09 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

People seem to be more interested in 'who says something' rather than 'what is being said'.This is equal to shooting the messenger attitude.
I have nothing to do with sangh parivar,BJP,VHP etc.So I dont know why I have to answer for their acts like hindering the filimg of water,valentine day etc.I condemn those acts strongly.Now let me come back to Sania issue because that is the topic of this thread.If you guys want to debate sang parivar's atrocities start a new thread on that and I will be more than willing to post there.

Now coming back to Sania

1.She has the freedom to decide which dress she wants to wear.Indian constitution has granted that right to her.Religion,caste,parents,relatives..nothing can stop a woman above 18 from wearing the dress of her choice.

2.Similiarly people who advise her to wear proper dress, have all rights to make a non-coercive request.That is also not wrong.

3.But some organizations have announced that they will not allow her to play with skirts.This is illegal and male chauvinistic.This has to be condemned by all Indians.

Now from a feminist perpsective

Even requesting a woman not to wear a dress of her choice is wrong according to feminist perspective.It shows a male chauvinistic mindset which doesnt want women to be independent.Religion has been used in the past to suppress women and such attitude of men shows that they havent changed.Women should ignore such requests for the sake of feminism.

From a sports perspective

It's very difficult to play tennis with full sleeved shirts and long skirts.Women in past did so but they found that short skirt is more suitable to play tennis than long skirts.

If a woman tennis player wants to make money in advertising,she should not dress orthodoxly.Sania has'nt acted in ads yet,but if she wants to act in ads or films that again should be her choice.Nobody else should decide on behalf of her.Not even parents.This is from a feminist view point and not a legal view point.

I know many muslims support sania and are happy for her achievements.Only some people make such demands.My condemnations are only against such people and not any particular community.

Dont ask me about BJP,VHP doing this and that in past.I have nothing to do with their acts.If you start a thread about what they did,I will post my condemnations there.I am posting about sania only because this thread discusses her.Now instead of shooting the messenger, let us debate about this incident.

7:45 PM  

Post a Comment

<< முகப்பு