உங்கள் நலனுக்காக என் வாத்துறுதிகள்

உலக நலனை முன்னிட்டும், வலைப்பதிவாளர்கள், வாசகர்கள், வாத்துகள் மற்றும் இதர உயிரினங்கள் நலம் கருதியும் கீழ்க்கண்ட வாத்துறுதிகள் தரப்படுகின்றன.

இவ்வலைப்பதிவில்

1,உள் நாட்டு,வெளி நாட்டு வாத்துகள் படங்கள் இடப்படாது

2 , கத்தரிக்காய்,பூசணி,தர்பூசணி போன்ற காய்கள், கனிகள் படங்கள் இடப்படாது

3, அருங்காட்சியகத்திலுள்ள கலைப் பொருட்களின் படங்களைப் போட்டு அச்சுறுத்த மாட்டேன்

4, விளம்பரங்களை மறு வெளியீடு செய்ய மாட்டேன்

5, என்னுடைய முகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரியும் வண்ணம் இருக்கும்புகைப்படங்கள் இடப்படாது

6, சாப்பாடு குறித்த படங்கள் இடப்படாது

7, இயன்ற வரை இப்பதிவில் எழுதுவதை , பிற பதிவுகளில் பின்னூட்டமிடுவதை தவிர்ப்பேன்.முடிந்தால் நீண்ட விடுப்பில் செல்ல முயல்வேன்

8, தேவை ஏற்பட்டால் மட்டுமே இவ்வாத்துறுதிகள் நீரிலிருந்து துரத்தப்படும் :)

10 மறுமொழிகள்:

Blogger icarus prakash மொழிந்தது...

9. இவற்றுடன் கூடவே, வாத்து படங்காட்டுவோர் கமெரா உடனடியாக பழுதுபட்டுப் போகவேண்டும் என்றும், படம் ஏற்றப்பட்ட ரிங்கோ, ·பிலிக்கர், போட்டோபக்கட் செர்வர்கள் டமால் என்று வெடித்துச் சிதறவேண்டும் என்றும் கர்த்தரிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

6:17 AM  
Anonymous Thangamani மொழிந்தது...

குறைந்தது 10 வாத்துறுதிகளாவது இருக்கவேண்டாமா?

9. இந்த வாத்துறுதிகளை நான் பிறருக்கு வலியுறுத்த மாட்டேன்

10. வாத்துக்களிடம் இந்த வாத்துறுதிகள் அங்கீகாரம் பெற்றவை அல்ல!

6:18 AM  
Anonymous Thangamani மொழிந்தது...

பிரகாஷ், வாத்துகள் தான் உங்களை கவனித்துக்கொல்ல வேண்டும்.

6:19 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

prakash why only jesus :)

that's true should there not be atleast 10 promises and more the promises easier to break :)

6:27 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Let us call them "Ten commandments" :)

6:30 AM  
Blogger icarus prakash மொழிந்தது...

//ravi srinivas said...
prakash why only jesus :)//

சாவக்காட்டு பிராமணாள் வரலாறு ('அரசூர் வம்சம்' ) படித்ததில் ஏற்பட்ட hang-over இன்னும் போகலை..கிட்ட வாங்க 'குரிசு' வரைகிறேன்.

6:35 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

சாவக்காட்டு பிராமணாள் வரலாறு ('அரசூர் வம்சம்' ) படித்ததில் ஏற்பட்ட hang-over இன்னும் போகலை..கிட்ட வாங்க 'குரிசு' வரைகிறேன்.

Oh Jesus :-)

7:02 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

இப்படி வாத்துக்களின் உரிமையை மறுக்கும் ரவியை நான், நீர்மையாக கண்டிக்கிறேன். க்வாக்..குவாக்கு.

9:30 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

வா......... தூ!

9:58 AM  
Anonymous தமிழ்வாத்து மொழிந்தது...

இந்த வாத்து எதிர்ப்பு அரசியலை வண்மையாக கண்டிக்கிறேன். ஒடுக்கப்பட்ட வாத்துகள் சார்பாக குரல் கொடுங்க உடன் பிறப்புகளே, ரதத்தின் ரத்தங்களே அலைகடலென திரளுவீர்.

10:07 AM  

Post a Comment

<< முகப்பு