ஒரு குறிப்பு

ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரை குறித்த வலைப்பதிவினை எடுத்துவிட்டேன். ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பதிவினை ஒரிரு தினங்களில் இட உள்ளேன். நீக்கப்பட்ட பதிவில்இருந்த கருத்துக்கள் அதில் இடம் பெறுவதாலும், அது ஒரு விரிவான பதிவு என்பதாலும் நீக்கப்பட்டபதிவு தேவையில்லை என்று கருதுகிறேன்

3 மறுமொழிகள்:

Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரை நீதிபரிபாலனத்தைப் பற்றிய பொதுவான விமர்சனம். அதில் இட ஒதுக்கீட்டைக் குறித்த தீர்ப்பை மட்டும் கணக்கிலெடுத்து எழுதப்பட்டிருந்தது உங்களுடைய நீக்கப்பட்ட பதிவு. தீட்சண்யாவின் ஆதங்கங்களைப் போலவே எனக்கும் பலமுறை தோன்றியுள்ளது. உங்களின் விளக்கமான பதிவைப் படித்தபிறகு கருத்திருந்தால் எழுதுகிறேன்.

இரண்டு நாட்களாக இங்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜான் ராபர்ட்ஸைப் போட்டு செனட் நீதிபரிபாலனக் குழு வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. பத்திரிகைகளிலும் பாராட்டுகளும், விமர்சனங்களும் கலந்தே வந்துகொண்டிருக்கின்றன. நம் ஊரில் நீதிபதிகளைப் பற்றி பேசுவதே தெய்வ நிந்தனையாக கருதப்படுகிறது.

11:54 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

தீர்ப்புகளை விமர்சிக்கலாம், அதில் உள்ள கருத்துக்களை,வியாக்கியானங்களை சர்சிக்கலாம். ஆனால் தனிப்ட்ட முறையில் நீதிபதிகள் செயலுக்கு உள்ளர்த்தம் கற்பித்து எழுதக்கூடாது. இதுதான் இந்தியாவில் உள்ள நிலை. உச்ச நீதி மன்றத்தின் பல தீர்ப்புகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. விமர்சிக்கப்படுகின்றன,.அமெரிக்காவிலும் நீதிபதிகளை சகட்டுமேனிக்கு விமர்சிக்க முடியாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் நியமனத்தின் போது கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இந்தியாவில் நியமனத்தினை பாராளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை. குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார்.ஆனால் இவை அரசியல் ரீதியான நியமனங்கள் அல்ல, அவருடைய சொந்த விருப்பு வெறுப்பிற்கு அதில் இடமில்லை.

இந்தியாவில் அமெரிக்காவில் உள்ளது போல் காலி இடங்களை நிரப்புவது பிரதமரின் அதிகாரம் என்று இருந்தால் என்ன ஆகியிருக்கும். அதுவும் வேறு பல நியமனங்களைப் போல் ஆளுவோருக்கு ஆதரவாக உள்ளவர்கள் அல்லது வேண்டியவர்களுக்குப் போயிருக்கும். எனவே அமெரிக்க முறையை இந்தியாவில் பின்பற்றாமல் இருப்பதே நல்லது.இல்லாவிட்டால் நாடு தாங்காது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை பாராளுமன்றத்தில் கண்டனத்தீர்மானம் கொண்டு வ்ருவதன் மூலம் நீக்க முடியும். கடந்த முறை அப்படி முயற்சி செய்த போது அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர் என்று அவருக்கு ஆதரவாக தி.க, தி.மு.க குரல் கொடுத்தன. இடதுசாரிகள்தான் கண்டனத்தீர்மானத்தினை ஆதரிக்க முன் வந்தனர். அவர் செய்தது சரியா, தவறா என்ற கேள்வியை ஜாதி என்பதன் மூலம் எதிர்கொள்ளப்படும் விசித்திரம் இங்கு நடந்தது.

1:50 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரையுடன் எனக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவர் நீதிபதிகளுக்கு எத்தகைய நம்பிக்கைகள் இருக்க வேண்டும், கருத்தியல் இருக்க வேண்டும் என்பது குறித்து சில அனுமானங்களை வைக்கிறார். நேற்றைய தீர்ப்பு இன்று நிராகரிக்கப்படுகிறது என்றால் அதன் பொருள் அந்தத் தீர்ப்பினைக் கூறியவர்கள் தவறிழைத்துவிட்டார்கள் என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. அரசு தனியார் மயத்தினை ஊக்குவிக்கும் போது உச்சநீதி மன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ அதில் தலையிட்டு இது கூடாது என்று பொதுவான ஒரு கொள்கை முடிவினைத் திணிக்க முடியாது. மேலும் சட்டரீதியான கேள்விகளை எழுப்பினாலும் அரசியல் சட்டம் என்ற ஒன்றின் அடிப்படை அம்சங்களை மாற்ற நினைப்பது, அது எத்தகைய முற்போக்கு நடவடிக்கையாக இருந்தாலும் சரி அதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. தாழ்த்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தர சட்டப்படி முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அதை ஏற்காமல் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. இதை விமர்சித்து ராஜிவ் தாவன் இந்துவில் ஒரு கட்டுரை எழுதினார்.
அவர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தவர்தான். ஆனால் இந்த தீர்ப்பில் நியாயம்
இருக்கிறது என்பதே அவர் கருத்து, என் கருத்தும் கூட. இப்படிப்பட்ட கருத்துக்களை தலித்
விரோதக் கருத்துக்களாக சித்தரிப்பது எளிது. ஏன் இந்த நிலைப்பாட்டினை அவர் முன் வைக்கிறார் எனபதினைப் புரிந்து கொண்டால் இட ஒதுக்கீட்டினை ஏற்பவர்கள் அதனை எல்லா இடங்களில் அமுல் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புவதில் உள்ள நியாயங்களைக் புரிந்து கொள்ள
முடியும். தீட்சண்யா போன்றவர்களால் அது முடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.

2:11 AM  

Post a Comment

<< முகப்பு