கேட்டது - கேட்பது

இப்போது மூன்று குறுந்தகடுகளை மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒன்றுஎஸ்.பி.பாலசுப்பிரமண்யன், கே.ஜே.யேசுதாஸ் பாடிய சோகப்பாடல்கள். இரண்டாவது வாணி ஜெயராம் பாடிய ஜோடிப்பாடல்கள், மூன்றாவது சிவாஜியின் தத்துவப் பாடல்கள்.எம்பி3 வடிவில் பாடல்கள் இருக்கின்றன. ஒரு குறுந்தகடில் 84 பாடல்கள். வாணி ஜெயராமபாடிய எனக்குப் பிடித்தமான பாடல்கள் இதில் இல்லை. பாடல் எந்தப் படத்தில் இடம் பெற்றது, உடன் பாடுபவர் யார் போன்ற விபரங்கள் இக்குறுந்தகடுகளில் இல்லை. வாணி ஜெயராம் 74 முதல்84 வரை மிக பிரபலமாக தமிழ்த்திரையுலகில் இருந்தார். பின்னர் அதிக எண்ணிக்கையில் அவர்பாடவில்லை. அவர் பாடியவற்றை ஏனோ லெஜென்ட்ஸ் வரிசையில் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்கள். அந்தப் பத்தாண்டுகளில் அவர் நல்ல பாடல்கள் என்று சொன்னால் நூறாவது பாடியிருப்பார். அவற்றை கால வரிசையாகவோ அல்லது வேறு விதமாகவோ வரிசைப்படுத்தி வெளியிடலாம்.

வேதா இசையமைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடிய பாடல்களிலிருந்து பிரபலமானவற்றை ஒரு குறுந்தகட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அதே போல் டி.எம்.எஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களின் ஒரு தெரிவும்குறுந்தகட்டில் கிடைக்கிறது. இரண்டையும் இந்தியா சென்றிருந்த போது வாங்கினேன். ஒரிரு முறைகேட்டும் விட்டேன். சமீபத்தில் வெங்கட்டின் வலைப்பதிவில் அவர் பாடிய மூன்று பாடல்களைக் கேட்டேன்.ஈஸ்வரியின் குரல் ஈஸ்வரியின் குரல்தான், அதற்கு தமிழ்த் திரையுலகில் ஈடு இல்லை. அவர் குரலை விஸ்வநாதன் - ராமமூர்த்தி, விஸ்வநாதன் போல் தமிழில் யாரும் பயன்படுத்தவில்லை.

கடந்த சில மாதங்களாக தூள்.காமில் உள்ள இன்றைய பாடல்களை கேட்டு வருகிறேன். பல பாடல்களை பல ஆண்டுகள் கழித்துக் கேட்கும் போது மகிழ்ச்சி உண்டாகிறது. பாடல் வரிகள், இசை மனதில் இன்னும் இருப்பதுடன் சில பாடல்களை முன்பே கேட்டிருந்தாலும் இப்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. அதில் சரவணன் என்ற நிபுணர் எழுதியிருக்கும் குறிப்புகள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் குறித்த விரிவான தகவல்கள், அலசல்களைப் படிக்கும் போது ஆகா இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம் என்று சொல்லத் தோன்றுகிறது. அவர் இன்னும் விரிவாகநூல் வடிவில் இவற்றைத் தொகுக்க வேண்டும்.

பசிபிக் கடல் வாழ் திமிங்கலங்கள் எழுப்பும் ஒலியுடன் வாத்திய இசையும் சேர்ந்த ஒரு குறுந்தகட்டினைக் கேட்டேன்.அவற்றின் ஒலிகளை மட்டும் தனியேக் கேட்கவேண்டும் என்றுதோன்றியது.இது போன்ற ஒலிகளுக்கு என் காதுகளை பழக்கப்படுத்தப் போகிறேன்.

வாங்கி, கிடைத்து இன்னும் கேட்காதவை என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் இளையராஜாவின் திருவாசகம், கண்டசாலாவின் பாட்ல்கள் அடங்கிய ஒலி நாடாவும் அடங்கும்.

1 மறுமொழிகள்:

Blogger Ram.K மொழிந்தது...

தங்களுக்கு தற்போது வரவிருக்கும்
"கண்ட நாள் முதல்" படப் பாடல் ஒன்று "கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" என்னும் பாடலைச் கேட்டு மகிழ சிபாரிசு செய்கிறேன்.

ஏற்கனவே சுதா ரகுநாதன் பாடிய பாடல், யுவன் சங்கர் ராஜாவால் அருமையாக ரீமிக்ஸ் செய்யப்பட்டு, புதிய பாடகியரால் (சுபிக்ஷா & பூஜா)பாட வைக்கப்பட்டுள்ளது.

12:53 PM  

Post a Comment

<< முகப்பு