தினம் தினம்

இன்று வலைப்பதிவுகளில் பாரதி பற்றியும், 2001ல் நியு யார்க்கில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது குறித்தும் எழுதிழிருக்கிறார்கள். 1973ல் சிலியில் ராணுவப் புரட்சி ஏற்படு அலெண்டே அரசு கவிழ்க்கப்பட்டதும் செப்டம்பர் 11ம் தேதிதான். இந்த தேதிகளை ஒட்டிஎழுதுவது எனக்கு அலுப்புட்டுகிறது. அமெரிக்காவில் இப்படி ஏராளமான தினங்கள் இருக்கின்றன. இதில் பல வணிக நோக்கத்திற்காக உள்வாங்கப்பட்டுவிட்டன என்று தோன்றுகிறது. இன்று என்ன தினம் இன்று விடுமுறையா இல்லையா என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது.

செப்டம்பர் 11 பாரதியுடன் தொடர்புடையது என்று தெரியும் ஆனால் அதைக் மறக்காது எழுதுமளவிற்கு நான் பாரதி பக்தன் இல்லை. பாரதி மீது மதிப்பும், மரியாதையும் உண்டு.அதற்காக பீடங்கள் கட்டுகிற ஆசாமி நானில்லை. பாரதி குறித்த எனது மதிப்பீடுகள் மாறியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாரதி குறித்து நடைபெறும் விவதாங்களுடன்எனக்கு அதிக பரிச்சயம் இல்லை. பாரதியிடமிருந்து கற்க வேண்டியவை பல.அவரின் ஆளுமை வியப்பளிப்பது அதற்காக அவரை ஒரு பீடத்தில் ஏற்றி வழிபாடு செய்யமுடியாது. அது பாரதிக்கே பிடிக்காத ஒன்றாக இருக்கும். இன்று பாரதிக்குச் செய்யக்கூடிய மரியாதை தமிழில் புதிய விஷயங்களைப் பற்றி எழுதுவதாக இருக்கலாம். பாரதியை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் தமிழில் புதிய கருத்துக்களை, துறைகளை அறிமுகம் செய்யும் நூல்கள், மொழிபெயர்ப்புகள் கொண்டுவருவதுமிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாரதி காலத்தில் அவன் எதிர்கொண்ட சவால்கள் வேறு, இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு. பாரதியிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு தமிழை வள்ப்படுத்துவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

உலகில் எத்தனையோ தினங்கள் இருக்கின்றன இப்படியும் ஒரு தினம் இருக்கட்டும் என்று நினைத்து என் பிறந்த தினத்தினை உலகச் சோம்பேறிகள் தினமாக அறிவிக்கக் கோரி ஐ.நா சபைக்கு வேண்டுகோள் விடுத்தேன். பதில் இல்லை. எனவே இணையம் மூலம் ஆதரவு திரட்டி ஒரு கோடி பேரின் ஆதரவினைப் பெற்று அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த உள்ளேன். இதற்கான கடிதம் தயாரிக்கிக் கொண்டிருக்கிறது.. விரைவில் அறிவிப்பு வரும். இதில் உங்கள் மேலான ஆதரவினைக் கோருகிறேன்.

இந்த வாரம் சில சிறுகதைகள், கவிதைகள், புத்தக அறிமுகம் செய்யலாம் என்று நினைத்தேன். நேரமின்மையால் செய்ய முடியவில்லை. வலைப்பதிவில் ஒரு நல்ல கட்டுரை அல்லது குறிப்பினை விட ஒரு சர்ச்சை அல்லது சர்ச்சையுடன் கூடிய பதிவே அதிக கவனம் பெறுகிறது. இதில் சர்ச்சை ஏதாவது ஒரு பிரபலம் குறித்தது என்றால் அதற்கு இன்னும் அதிக கவனம் கிடைக்கிறது. எனவே வலைப்பதிவினை எந்த அளவிற்கு கட்டுரைக்கான இடமாக பயன்படுத்த முடியும் என்ற கேள்விஎழுகிறது.

தமிழ் வலைப்பதிவுகளை ஒரளவேணும் கவனித்து வருபவன் என்ற முறையில் குறிப்பிட்ட பொருள் அல்லது துறைசார்ந்த வலைப்பதிவுகளின் தேவை இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக பெண்ணியம் குறித்து ஒரு வலைப்பதிவு இருந்தால் அதில் தொடர்ந்து கட்டுரைகள், குறிப்புகள், நூல் அறிமுகங்கள், செவ்விகள் இடம் பெற்றால் இன்றைய சூழலில் பெண்ணியம் குறித்த புரிதல் வளப்படும் என்று நினைக்கிறேன் அப்படி ஒன்றை ஆரம்பிக்க நினைத்தேன். ஆனால் என்னால தொடர்ந்து எழுத முடியாது என்பதால் அதைக் கைவிட்டு விட்டேன். இது போல் விளையாட்டு, இசை, உட்பட பலவற்றைக் குறித்த பிரத்தியேக வலைப்பதிவுகள் இருக்க வேண்டும்.

பார்க்க கூடாத படங்கள் என்று ஒரு கூட வலைப்பதிவு இருக்கலாம். துளசியைத் தவிர வேறுசிலரும் அதில் எழுதலாம். அது போல் பயணம், பயணக்குறிப்புகளுக்காக ஒரு வலைப்பதிவு இருக்கலாம்.இப்படி பலவற்றை யோசிக்க முடியும்.

அப்புறம் வலைப்பதிவு வம்புகள், கிசுகிசுக்கள், வலைப்பதிவாளர்களுடன் செவ்விகளுக்காக ஒரு வலைப்பதிவு இருக்கலாம். புதிதாக வலைப்பதியும் ஆறெழுத்து வலைப்பதிவாளர் ஏற்கனவே நாலெழுத்து புனைபெயரில் வலைப்பதிந்து வருபவர்தானாம் போன்ற மூளைக்கு வேலைக் கொடுக்கக் கூடிய பதிவுகள் அதில் இடம் பெறலாம். சிந்தனை என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு இருக்கிறது. அதை தூசி தட்டி வாரம் இரு முறையாவது பதியத் திட்டமிட்டுள்ளேன்.

இப்பதிவில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான குறிப்பான்களை இட்டுக்கொள்ளவும்.

10 மறுமொழிகள்:

Anonymous Thangamani மொழிந்தது...

//இப்பதிவில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான குறிப்பான்களை இட்டுக்கொள்ளவும்.//

;)
:)

2:31 PM  
Blogger துளசி கோபால் மொழிந்தது...

//பார்க்க கூடாத படங்கள் என்று ஒரு கூட வலைப்பதிவு இருக்கலாம். துளசியைத் தவிர வேறுசிலரும் அதில் எழுதலாம்.//

அதான் ரவி சொல்லிட்டாருல்லெ.
யார்யார் வர்றீங்க இந்த வெள்ளாட்டுக்கு?

3:59 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/இந்த தேதிகளை ஒட்டிஎழுதுவது எனக்கு அலுப்புட்டுகிறது/

பூனைக்கு மணியைக் கட்டியதற்கு ஆயிரங்கோடி நமஸ்காரங்கள்.

5:44 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

ரவி
பாரதியின் கருத்துக்களை அறிமுகப்படுத்துவதுடன், நினைவு கூர்வதுடன் பழகுவது இன்னும் மேலானது.

6:16 PM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

இரவி பல நல்ல விடயங்களைக் கூறியிருக்கின்றீர்கள்.
//பாரதியை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் தமிழில் புதிய கருத்துக்களை, துறைகளை அறிமுகம் செய்யும் நூல்கள், மொழிபெயர்ப்புகள் கொண்டுவருவதுமிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாரதி காலத்தில் அவன் எதிர்கொண்ட சவால்கள் வேறு, இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு. பாரதியிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு தமிழை வள்ப்படுத்துவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.//
உண்மை. பாரதியும் இதைத்தான் விரும்பியிருப்பான் என்று நினைக்கின்றேன்.

7:27 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி சொன்னது:
/இந்த தேதிகளை ஒட்டிஎழுதுவது எனக்கு அலுப்புட்டுகிறது/

பெயரிலி சொன்னது:
/பூனைக்கு மணியைக் கட்டியதற்கு ஆயிரங்கோடி நமஸ்காரங்கள்./

என்னிடமிருந்து இன்னொரு ஆயிரம் கோடி.

பாரதியின் மறைவு தின அஞ்சலி 2002 செப்டம்பர் 11 முதல் ஒரு வீம்புக்காக தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் இப்படி சகட்டுமேனிக்கு பாரதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதில்லை.

2002 இல் அமெரிக்கர்கள் 9/11 இன் முதலாண்டு நினைவு நாளை கடைபிடிக்கப்போக இந்த நாளில் இது மட்டும் நடக்கவில்லை. பாரதி இறந்தது உள்பட பல நிகழ்வுகள் நடந்துள்ளன என்று இதை ஆரம்பித்து வைத்தது 'திசைகள்' தான் என்று நினைக்கிறேன். இப்போது அதை எல்லோரும் பிடித்துக்கொண்டார்கள்.

2001 செப் 11 ஆம் தேதி காலை வேலைக்கு போகும்போது கேட்டுக்கொண்டிருந்த NPR இன் Morning Edition இல் Bob Edwards வழக்கம்போல சொல்லிக்கொண்டிருந்த செய்தியை நிறுத்தி முதல் விமானம் இடித்ததைச் சொன்னதிலிருந்து அன்றைய தினத்தின் ஒவ்வொரு நிமிடமும் நினைவிருக்கிறது. இந்திராகாந்தி சுடப்பட்ட தினம், கும்பகோணம் தீவிபத்து போன்ற பிற அதிர்ச்சியூட்டும் தினங்களைப் போல.

அரசியலை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட செப் 11, 2001 ல் நடந்த நிகழ்ச்சி நினைவுகூரப்படவேண்டும். அரசியல் காரணமாக அதற்கு பதிலியாக இன்னொரு வரலாற்று நிகழ்வையும் நினைவுகூர வேண்டுமென்றால் ரவி குறிப்பிட்டுள்ள சிலியில் பினொசெட் கொடுங்கோலாட்சிக்கு கால்கோள் நடத்தப்பட்டது வேண்டுமானால் வைக்கலாம்--ராணுவ புரட்சியில் கொல்லப்பட்டவர்களுக்காக, அதில் அமெரிக்காவின் பங்கிற்காக.

பாரதியின் மறைவை திடீரென்று தூக்கி முன்னிறுத்துவதில் துக்கம் எதுவும் தெரியவில்லை. செயற்கையான வறட்டுக்கூச்சல் மட்டுமே தெரிகிறது--'தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று மேற்கோள் காட்டிப் போடும் வறட்டு கோஷத்தைப்போல.

11:13 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

சுந்தரமூர்த்தி,

உங்கள் பின்னூட்டத்தின் பிண்ணனியில் ஏதும் அரசியல் உள்ளதா என்பது பற்றி எனக்கு தெரியாது...

அரசியல் இல்லாத அனுமானத்தில் ::

// அரசியலை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட செப் 11, 2001 ல் நடந்த நிகழ்ச்சி நினைவுகூரப்படவேண்டும். //

என்பதற்கு

// இதில் பல வணிக நோக்கத்திற்காக உள்வாங்கப்பட்டுவிட்டன என்று தோன்றுகிறது //

என்பது பொருந்தாதா??

செப் 11 அன்று உலக வர்த்தக மைய விஷயமோ, சிலியில் ராணுவப் புரட்சியோ அவரவர் வசதிக்கேற்ப ஞாபகப்படுத்திக்கொள்கிறார்கள்... அதை மட்டும்தான் நினைவு கூற வேண்டும் என்று கட்டாயமா..
விருப்பப்பட்ட சிலர் செப் 11 அன்று பாரதியை நினைவு கூறுவதில் உங்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கமுடியுமோ தெரியவில்லை.
அதுவும், பாரதியின் மறைவை திடீரென்று தூக்கி முன்னிறுத்துவதில் துக்கம் எதுவும் தெரியவில்லை, செயற்கையான வறட்டுக்கூச்சல் என்று உணர்ச்சிவசப்படுமளவு...

5:16 AM  
Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

வலைப்பதிவுகள் புதுவெள்ளமென பாய்கின்ற இந்த சூழ்நிலையில் மிக முக்கியமாக பதிவு இது. நம்மவர்கள் எப்போதுமே சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மெனக்கெட்டு பின்பற்றிவிட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களின் ஆதாரத்தை செளகரியமாக கோட்டை விடுவதில் சமர்த்தர்கள்.

6:08 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

முகமூடி,
என்னுடைய பின்னூட்டத்தில் என்ன அரசியலை, உணர்ச்சிவசப்படுதலைக் கண்டீர்கள் என்று புரியவில்லை. இப்பதிவில் இரண்டாவது பத்தியில் உள்ள ரவியின் கருத்துக்களே என்னுடையதும்.

நான் துவக்கத்திலேயே குறிப்பிட்டபடி 'செப்டம்பர் 11 இல் பாரதி அஞ்சலி' என்ற போக்கு 2002 தான் ஆரம்பித்தது. அதற்கு முன் இல்லை. அதற்கு பின்னுள்ள அரசியல் தான் இதன் போலித்தனத்தைக் காட்டுகிறது. மற்றபடி அதே நாளில் மறைந்த யாராவது உறவினருக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தினாலும் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை.

6:36 AM  
Blogger Ramya Nageswaran மொழிந்தது...

//இதற்கான கடிதம் தயாரிக்கிக் கொண்டிருக்கிறது.. விரைவில் அறிவிப்பு வரும். இதில் உங்கள் மேலான ஆதரவினைக் கோருகிறேன்//

நிச்சயம் ஆதரிக்கிறேன்..அன்று சோம்பலாக இல்லாமலிருந்தால்! :-)

7:00 AM  

Post a Comment

<< முகப்பு