வலைப்பதிவுகள்-புதிய பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் - 1

தினசரி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் மின்னஞ்சல்களில் சில வலைப்பதிவுகளிலிருந்துசெய்திகள் தருபவை. அவற்றிலிருந்து அந்த வலைப்பதிவுகளில் புதிதாக இடப்பட்டுள்ளவற்றைஅறிந்து கொள்கிறேன். இதுதவிர அவ்வவ்போது நண்பர்கள், விவாதக்குழுக்களிலிருந்து வரும்மின்னஞ்சல்களிலும் வலைப்பதிவுகளின் சுட்டிகள், தகவல்கள் இடம் பெறுவதுண்டு. இன்று வலைப்பதிவுகளை வெறும் தனிப்பட்ட நபர்களின் பதிவுகளாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக அவை ஒரு மாற்று செய்தி அமைப்புகளாக உருவெடுத்துள்ளன. இன்னொருபுறம் வணிக நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வலைப்பதிவுகளுக்கு இடம் தருகின்றன. உலக வங்கியின் இணைய தளத்தில் ஒரு வலைப்பதிவிற்கு சுட்டி இருக்கிறது. அதில் எழுதுபவர்கள் தனிப்பட்ட முறையில் எழுதினாலும், அவர்களின் பதிவுகளுக்கான தேவையை அந்த நிறுவனம் அங்கீகரித்திருக்கிறது.


கட்ரீனாவின் பாதிப்புகளா, சுனாமியின் பாதிப்புகளா, ஈராக்கின் மீதான படையெடுப்பா, இல்லைநேபாளத்தில் ஜனநாயக உரிமைகள் பறிப்பா - இது போல் எந்த ஒரு முக்கியமான நிகழ்வைப்பற்றியும் இன்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி அமைப்புகள் வெளிக்கொணராதவிஷயங்களை விவாதிக்க, உலகிற்கு எடுத்துச்சொல்ல வலைப்பதிவுகள் பயன்படுகின்றன. ஈராக்கின்மீது போர் தொடுக்கப்பட்டபோது பாக்தாத்திலிருந்து எத்தனையோ இடையூறுகளைத் தாண்டிஉண்மைகளை எடுத்துரைத்த அந்த வலைப்பதிவாளரை நாம் மறக்க முடியுமா. அண்மையில் கட்ரீனாவின் விளைவுகளையும், அமெரிக்க அரசின் மீதான விமர்சனங்களையும் அறிய எனக்குவலைப்பதிவுகள் உதவின. ஐரோப்பாவில் இருந்து கொண்டு என்னால் பல அமெரிக்க தொலைகாட்சிநிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாது. ஆனால் உலகெங்கும் இணைய வசதி இருந்தால் வலைப்பதிவுகள்மூலம் ஊடகங்கள் சொல்லாதவற்றை அறிந்து கொள்ள முடியும்.

பெரும்பாலான வலைப்பதிவுகளில் வெறும் செய்தி மட்டும் இருப்பதில்லை, அலசல்கள் இருக்கின்றன.பிற செய்திகளுக்கு சுட்டிகள், தகவல்களுக்கு சுட்டிகள் அல்லது சான்றுகள், இவை தவிர வலைப்பதிவாளர்களின் கருத்துக்கள், பின்னூட்டங்கள் இருக்கின்றன. இதன் மூலம் நான் National Public Radioல் ஒலிபரப்பான செவ்விகள் முதல், அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரை பலவற்றை அறிய முடிகிறது. படிக்க அதிக நேரம் இல்லாத போது அலசலகளிலிருந்து ஒரு பூர்வாங்க புரிதலைப் பெற முடிகிறது. பின்னர் இடப்படும் பதிவுகளிலிருந்து நிகழ்வுகளின் தொடர்ச்சியை, அவற்றிற்கான எதிர்வினைகளை அறிய முடிகிறது. எனவே என் புரிதல் வளப்படுவதுடன், நான் ஒரு சில ஊடகங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதில்லை என்பதும் தெளிவாகிறது.

சில மாதங்கள் முன்பு அமெரிக்க உச்சநீதிமன்றம் சகபரிமாற்றம் குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் வலைப்பதிவுகளில் அது குறித்து பதிவுகளும், விவாதங்களும் இருந்தன. அது மட்டுமின்றி தீர்ப்பிற்கு சுட்டிகள், வழக்கு குறித்த பின்ணனித் தகவல்கள் அல்லது அதற்கான சுட்டிகள் இருந்தன. ஒரு ஆய்வாளன் என்ற முறையில் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் ஒரு முக்கியமான தீர்ப்பினை விவாதிக்க பிற ஊடகங்களைப் பயன்படுத்துவதை நான் அறிவேன், அதே சமயம் அவர்கள் தத்தம் அல்லது பிறரது வலைப்பதிவுகளில் எழுதும்போது நமக்கு பல்வேறு கருத்துக்களை உடனே அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஒரு வசதி என்னவெனில் பின்னர் அவர்கள் இது குறித்து எழுதும் போது ஏற்கனவே எழுதியதற்கு சுட்டிகள், இப்பதிவு(கள்) வேறு எந்தெந்தப் பதிவுகளால்சுட்டப்படுகின்றன என்பதையும் தருவதால் படிப்பவர் தனியே இவற்றை குறித்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இத்தீர்ப்பு குறித்து ஒரு பேராசிரியர் தான் ஸ்லேட்டில் (slate) எழுதியதை வலைப்பதிவிலும் இட்டிருந்தார். இத்தீர்ப்பு நிச்சயமாக சட்டத்துறை ஜர்லன்களில், லா ரிவ்யுக்களில் விவாதிக்கப்படும். வலைப்பதிவுகளில் நடைபெறும் விவாதங்கள், இடம் பெறும் கருத்துக்கள் இவற்றிலும் எடுத்துக்காட்டப்படும் அல்லது சுட்டப்படும் என்று ஒருவர் எதிர்பார்த்தால் அதில் தவறில்லை. ஏனெனில் இன்று பேராசிரியர்கள், நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் பலர்வலைப்பதிவுகளை தங்கள் கருத்துக்களைப் பதிய ஒரு முக்கியமான வெளியீடாகப் பயன்படுத்துகிறார்கள்.

தொடரும்

19 மறுமொழிகள்:

Blogger துளசி கோபால் மொழிந்தது...

இந்த வார நட்சத்திரமே,

வாழ்த்துக்கள்.

5:24 PM  
Anonymous Padma Arvind மொழிந்தது...

There was a panel discussion on blogs and their freedom. One thing that was brought up in that discussion is about the unlimitted space a blogger has to express his/her opinion and also state what he/she wants to say without the media's bias.

6:05 PM  
Blogger Venkat மொழிந்தது...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

இன்னா அண்ணாத்தே! நானு வலிப்பதிவெல்லாம் சும்மா ஈகோ ட்ரிப்புதான்னு (ஊத்திகினு ஒளற்றது) நெனிச்சுகிட்டு கீரேன். நீ இன்னாமோ புச்சா ஸொல்றே! :)

10:43 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

வருக ரவி

10:51 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

neengal solvathu sarithaan. but Rajinikanthukku mottai adithaal nalla irukkumaa.entha nadikaikku jettiyai kazattalaamnu ezuthuravangalai enna seyvathu

11:04 PM  
Blogger ராம்கி மொழிந்தது...

நட்சத்திர வாழ்த்துக்கள்

11:09 PM  
Anonymous சன்னாசி மொழிந்தது...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். புகைப்படத்திலேயே (நட்சத்திர) இவ்வளவு அழகாக இருக்கிறீர்களென்றால் நேரில்? ;-)

11:57 PM  
Anonymous Thangamani மொழிந்தது...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

4:08 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi srinivas,

வாழ்த்துக்கள்.

Hope to get a great week of reading !!!

5:43 AM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

நேச்சர் போன்ற அறிவியல் சஞ்சிகைகளும் வலைப்பதிவுகளுக்கும் பத்திகளுக்கும் தனியாக இடம் கொடுக்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது. ஆராய்ச்சியாளர்கள் வலைப்பதிவுகளின் மூலம் கருத்தாடிக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. இவை மிகவும் விரைவாகவும் பயனுள்ளவையாகவும் பன்முகத்தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. நாம், தமிழ் வலைப்பதிவுகள் செல்ல வேண்டிய தூரம் நிறைய!

6:14 AM  
Blogger தாணு மொழிந்தது...

வாழ்த்துக்கள்

8:34 AM  
Blogger Ramya Nageswaran மொழிந்தது...

வாழ்த்துக்கள், ரவி.

சன்னாசி, உங்கள் புண்ணியத்தில் சரியாகவே load ஆகாத லிங்குடன் பல முறைகள் போராடி ரவியின் போட்டோவை பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன்! :-)

9:45 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

அனைவருக்கும் நன்றிகள்.சன்னாசி என் படம் சமீபத்தில் நேச்சரில் கவர் ஸ்டோரியில் வந்திருந்ததே பார்க்கவில்லையா :). ரம்யா, தன்யாவிடம் காண்பித்து அவளை பயமுறுத்தாதீர்கள் :)

10:34 AM  
Blogger icarus prakash மொழிந்தது...

welcome to stardom :-)

your previous post was an excellent parody...thanks..

12:27 PM  
Blogger Boston Bala மொழிந்தது...

இந்தத் தொடரின் தொடரும் பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

புதிய வலைப்பதிவர்(வு?)களை எவ்வாறு அறிந்து கொள்ளுதல்; நீங்கள் தவறவிடாமல் படிப்பவை; எவ்வளவு ஆழமாக (அல்லது நுனிப்புல் மேய்வதாக) படிக்க முடிகிறது; போன்றவையும் எழுதுவீர்கள் அல்லவா?

ஒரே விஷயத்தை பத்து பேர் கிட்டத்தட்ட அதே ரீதியில் அலசும்போது போரடிக்குமா? அல்லது விடாமல் பதினொன்றாவது வலைப்பதிவுக்கும் சென்று படிப்பீர்களா? இல்லையென்றால் வலைப்பதிவுகளுக்கு கொஞ்சம் டைம்-அவுட் கொடுத்துவிட்டு, டைம்ஸ்/கார்டியன் என்று ஆப்-எட் பக்கம் எட்டிப்பார்க்க சென்று விடுவீர்களா?

எல்லா பிரச்சினைகளுக்கு கலகக் குரல் மட்டுமே எழுப்புபவர்கள் தங்களின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறார்களா? அல்லது இவர் இப்படித்தான் எழுதியிருக்கக் கூடும் என்று அனுமானிப்பது அயர்ச்சியைத் தருமா?

சத்தான வாரமாக அமையப் போகிறது. நன்றி :-)

12:41 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

பாலாஜி : உங்கள் கேள்விகள் அனைத்தும் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருக்கின்றன. ரவி பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

1:01 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

வாங்க நட்சத்திரம்.

10:46 AM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

வாழ்த்து இரவி (தாமதமாய் கூறுவதற்கு மன்னித்துக்கொள்ளவும்)

3:45 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

எல்லாரும் சொல்லியிட்டினம். சொல்லாதவை பற்றி ஏதாச்சும் நினைப்பீரெண்டு, நானும் நட்சத்திரயனே, நீ வாள் கவ்வென வாழ்த்துக்கிறேன்

10:57 PM  

Post a Comment

<< முகப்பு