ஆனந்த விகடன் ஆசிரியருக்கு,

வணக்கம்.
இந்த வார ஆனந்த விகடனில் (ஆ.வி) திரு சுஜாதா எக்ஸிஸ்டென்ஷியலிசம், சார்த் குறித்து எழுதியிருக்கிறார். இது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1, தமிழில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்து சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் திரு.எஸ்.வி.ராஜதுரை ஒரு நூல் எழுதியிருக்கிறார். அது க்ரியாவால் வெளியிடப்பட்டது. எக்ஸிஸ்டென்ஷியலிசம் இருத்தலியம் என்பதாக மொழியாக்கம் செய்யப்பட்டு, அச்சொல் சிறுபத்திரிகைகளில் கையாளப்பட்டுகிறது. 1980 களிலும் பின்னரும் எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்து சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளது. திரு.சுஜாதா இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதியிருக்கிறார். இருத்தலியம், இருத்தலியல் என்ற சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது அவர் கொடுத்துள்ள சொல் பொருத்தமானதாக இல்லை.

2, திரு.சுஜாதா எக்ஸிஸ்டென்ஷியலிசத்தின் அடிப்படையை விளக்குகிறேன் என்று எழுதியிருப்பவை நகைப்புக்குரியவை. ஏனெனில் அவர் இருப்பு, சாரம்சம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு புது விளக்கம் தந்துள்ளார். அந்த விளக்கம் அபத்தமாக இருக்கிறது. இருப்பு, இருத்தல் என்றவை தத்துவக் கண்ணோட்டத்தில் பேசப்படும் போது அவற்றை எந்தப் பொருளில் குறிப்பிடுகிறோம் என்ற தெளிவு வேண்டும். அவரிடம் அது இல்லை. மாறாக அவர் மனம் போன போக்கில் பொருள் கொண்டு விளக்க முயல்கிறார்.

3, கீகர்கார்ட் குறித்து அவர் எழுதியுள்ளதும் பொருத்தமற்றதாக உள்ளது. அவர் கீகர்கார்ட், நீட்ஷே முன் வைத்த தத்துவங்களை ஒரிரு வாக்கியங்களில் விளக்குவது கடினம். கீகர்கார்ட் எழுப்பிய கேள்விகள், அவரது வாழ்க்கைப் பிண்ணனி போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் கீகர்கார்ட் சொன்னது இதுதான் என்று ஒரிரு வாக்கியங்களை உதிர்ப்பதாலோ, நீட்ஷேயின் கடவுளின் மரணம் குறித்த புகழ் பெற்ற வாசகத்தினை குறிப்பிடுவதலோ தெளிவான புரிதல் கிடைத்துவிடாது. சுஜாதா செய்துள்ளது மகாபாரத்தினை மூன்று வாக்கியங்களில் (பாண்டவர்களும், கெளரவர்களும் பங்காளிகள், பாகப்பிரிவினையில் தகராறு ஏற்பட்டு போரிட்டனர், கெளரவர் தோற்றனர், பாண்டவர் வென்றனர்) கூறி இதுதான் மகாபாரதம் என்று சொல்வதற்கு ஒப்பாகும். பிரச்சினை என்னவென்றால் இருத்தலியல் கோட்பாடுகளை பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதல் பெற வேண்டுமானால் ஹெய்டெகர், ஹெகல் போன்றோர் சிந்தனைகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். தடலாடியாக பத்து வாக்கியங்களில் இவற்றை சுருக்கிவிட முடியாது. சுஜாதாவிற்கு அடிப்படைகளும் தெரியவில்லை, சார்த் குறித்தும் தெரியவில்லை. ஆனால் தெரிந்தது போல் எழுத்தில் நடிக்கத் தெரிந்திருக்கிறது.

4, இருத்தலியம் பொறுப்புகளையும், அறநெறிகளையும் குறித்துப் பேசிய, பேசும் த்ததுவம். இங்கு தனிமனித சுதந்திரம், தெரிவு, இருப்பு, மதிப்பீடுகள் போன்றவை முக்கியமானவை. இருத்தலியவாதிகளை மதசிந்தனைசார் இருத்தலியல்வாதிகளும், கடவுள் நம்பிக்கையற்ற, கடவுளின் இருப்பு குறித்து அவநம்பிக்கை கொண்ட, மானுடநேயமிக்க இருத்தலியல்வாதிகளும் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். சார்த் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்தவர். ஆனால் சுஜாதவோ இருத்தலியம் குறித்து முற்றிலும் தவறாக எழுதுகிறார். இருத்தலியவாதிகளைப் பொறுப்பற்றவர்கள் என்று சொல்வது முட்டாள்த்தனம். அது அவ்வாறு கூறுபவரின் பொறுப்பற்றதன்மையினை, அறியாமையினைக் காட்டுகிறது.

5, தனி மனித சுதந்திரம், பொறுப்பு, தெரிவு இவை குறித்தெல்லாம் விரிவாகப் பேசியவர் சார்த்.இன்னும் சொல்லப்போனால் தெரிவுகள், சுதந்திரம் குறித்து தொடர்ந்து அக்கறைக் காட்டியவர் சார்த். ஆனால் சுஜாதாவிற்கோ இதுக் கூடத் தெரியாது போலும். சார்த்தின் சிந்தனைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அவர் ஏன் சார்த் குறித்து இப்படி தப்பும் தவறுமாக எழுத வேண்டும். இந்த லட்சணத்தில் சார்த்தின் முக்கியமான நூல்களில் ஒன்றான Being and Nothingness குறித்து வேறு எழுதுகிறார்.

6, சார்த் காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு தந்தார், அமெரிக்கா வியட்நாம் மீது படையெடுத்ததை எதிர்த்தார், ரஸ்ஸலுடன் சேர்ந்து அமெரிக்காவின் போர் குற்றங்களை விசாரிக்க ஒரு நீதிக்குழு அமைத்தார். 1968 ல் மாணவர் கலகம் மூண்ட போது மாணவர்கள் பக்கம் நின்றார். பல இயக்கங்கள், போராட்டங்களை ஆதரித்தார். அவரது அரசியல் நிலைப்படுகள் சர்ச்சைக்குரியவையாக இருந்தன. ஒரு இடதுசாரி என்றே அவர் அறியப்பட்டார். Fannon எழுதிய 'The Wretched of the Earth' என்ற நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை மிகவும் புகழ்பெற்றது. 1964ல் நோபல் பரிசு, இலக்கியத்திற்காக, அவருக்கு வழங்கப்பட்டது. அதை ஏற்க மறுத்தார். சார்த் ஒரு தத்துவஞானி மட்டுமல்ல, ஒரு எழுத்தாளரும் கூட. ஆனால் சுஜாதா நமக்குக் காட்டும் சார்த் ஒரு பொறுப்பின்மையைப் போதித்த,கடைப்பிடித்த தத்துவஞானி. இதை விட மோசமாக சார்த் குறித்து யாரும் எழுத முடியாது.

7, சுஜாதா பல பெயர்களை உதிர்க்கிறார் - ஜி.நாகராஜன், காம்யு, ஹெமிங்வே என்று. பொறுப்பின்மையை சார்த் போத்திதார் என்றால் இவர்களின் எழுத்திற்கும், சார்த்தின் கருத்துக்களும் என்ன தொடர்பு என்பதை சுஜாதா விளக்குவாரா.இந்தப் பெயர் உதிர்த்தல்கள் எதற்காக. இலக்கியத்தில் இருத்தலியத்தின் தாக்கம் குறித்து பேசவேண்டுமென்றால் முதலில் இருத்தலியம் என்றால் என்ன என்பதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சுஜாதாவிடம் அந்தப் புரிதல் இல்லை என்பது அவர் எழுதியுள்ளதிலிருந்து புலனாகிறது. எந்த நூல்கள், கட்டுரைகளின் அடிப்படையில் இவ்வாறு எழுதினேன் என்று சுஜாதா விளக்குவாரா.

8, மொத்ததில் சுஜாதா எழுதியுள்ளது உளறல். தமிழில் அதிகம் விற்பனையாகும் வார இதழில் இப்படி ஒரு குறிப்பு வெளியாகியிருப்பது வெட்கக்கேடு.

நான் எழுதியுள்ளது குறித்து உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கலாம். தயவு செய்து கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் உள்ளவற்றைப் பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு சரி என்பது உங்களுக்குப் புலப்படும். ராஜதுரையின் நூலினையும் பாருங்கள். அதில் சார்த் குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. மேலும் இருத்தல்,சாரம்சம் குறித்தும் ராஜதுரை அதில் எழுதியிருக்கிறார்.கீகர்கார்ட் குறித்தும் அதில் எழுதப்பட்டுள்ளது.

1,http://philosophy.lander.edu/intro/sartre.html
Explain what "existence precedes essence" means.
Existence: the fact of being, the presence of something, the "thisness," "that it is."Essence: the kind of thing it is, the blueprint, plan, or description, the nature of the thing, "what it is."a. Sartre wants to maintain that man intrinsically has no nature. That is, he is thrown into this world, not of his own making, and is condemned to determine what he will be. In other words, our "existence precedes our essence." We exist first and determine our essence by means of choice.b. Contrast this view with mainstream Christianity. Man's nature comes first--man is a sinner. Consequently, here, essence precedes existence, since man is entirely subject to God's plan or blueprint.c. Contrast Sartre's view with the construction of a table. The carpenter has in mind the nature of the table and works from a plan. From sawing, sanding, nailing, and so on, the table comes into existence. Hence, in this case, "essence precedes existence."

2,http://en.wikipedia.org/wiki/Essence

3,http://www.iht.com/articles/2005/06/21/news/edaronson.php
Like no one else, he sought to understand exactly what it means to be responsible. This suggests another reason for Sartre's continued salience - his irritating and annoying claims themselves. Sartre teaches that we are constantly tempted to escape our responsibility for creating ourselves from what we have been made - there is something comforting, after all, in feeling that things are beyond our control. But, as he also teaches, to accept this is to enter into complicity with the powers that would dominate us. Sartre demands that we see ourselves as active agents, even when we might prefer the irresponsibility of seeing ourselves as victims

4,http://en.wikipedia.org/wiki/Jean-Paul_Sartre

5,http://www.sartre.org/

6, http://plato.stanford.edu/entries/sartre/

It is now common to distinguish three distinct ethical positions in Sartre's writings. The first and best known, existentialist ethics is one of disalienation and authenticity. It assumes that we live in a society of oppression and exploitation. The former is primary and personal, the latter structural and impersonal. While he enters into extended polemics in various essays and journal articles of the late 1940s and ‘50s concerning the systematic explanation of people in capitalist and colonialist institutions, Sartre always sought a way to bring the responsibility home to individuals who could in principle be named. As Merleau-Ponty observed, Sartre stressed oppression over exploitation, individual moral responsibility over structural causation but without denying the importance of the latter. In fact, as his concept of freedom thickened from the ontological to the social and historical in the mid ‘40s, his appreciation of the influence of factical conditions in the exercise of freedom grew apace.

சுஜாதா எழுதியுள்ளது அச்சாகி வாசகர் கையிலும், இணையத்தில் இருக்கும் நிலையில் அடுத்த இதழில் சுஜாதா எழுதியுள்ளதில் பிழைகள்,தவறுகள் இருப்பதால் அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், அத்தகைய குறிப்பு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்தும் ஆசிரியர் என்ற முறையில் நீங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இருத்தலியம், சார்த் குறித்து விகடனில் 5-6 பக்க அளவில் ஒரு கட்டுரை வெளியிடலாம். அதை இருத்தலியம் குறித்து அறிந்த, தமிழில் தெளிவாக எழுதக்கூடிய யாரேனும் (உ-ம். ராஜதுரை) எழுதலாம். அல்லது ஆங்கிலத்தில் வெளியான சார்த் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரையை வெளியிடலாம். இவையெல்லாம் வெளியாகவிட்டாலும் பரவாயில்லை சுஜாதவின் குறிப்பில் பிழைகள், தவறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதையாவது நீங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இக்கடிதம் என் தனிப்பட்ட முறையில் எழுதப்படுகிறது. இதற்கு எந்த ஒரு அமைப்பிற்கும், நிறுவனத்திருக்கும் தொடர்பில்லை.
இதைப் படித்தமைக்கு நன்றி
இவண்
K.ரவி ஸ்ரீநிவாஸ்

இக்கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்டது.
------------------------------------------------------------------------------------------
இது போன்று எழுதுவது மகிழ்ச்சியினைத் தரும் காரியமல்ல. தமிழ் வலைப்பதிவுகளில் யாரேனும் இது குறித்து எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.யாரும் எழுதவில்லை.ஆனந்த விகடன் வெளியாகி மூன்று நாட்கள் கழித்தே இதை எழுதி அனுப்பினேன். நேற்று வலைப்பதிவாளர் ஒருவர் தினமணிக் கதிரில் ராமன் ராஜா என்பவர் எழுதியிருந்தகட்டுரையினை இட்டிருந்தார். அதிலும் இது போல் பல தகவல், கருத்துப் பிழைகள். அக்கட்டுரை ஒபன் சோர்ஸ் குறித்தும், மென்பொருள் குறித்தும் தவறான தகவல்களைத்தருகிறது. இப்படிப்பட்ட கட்டுரைகள் தமிழில் வெளிவருவது வாசகர்கள் மனதில் தவறானஎண்ணங்களை ஏற்படுத்தும். எளிமையாக எழுதுகிறேன், படிக்க சுவாரசியமாக எழுதுகிறேன் என்று எழுதும் போதுபொறுப்புடன் தகவல்,கருத்துப் பிழைகள் இன்றி எழுத வேண்டும். நாம் எழுதுவது சரிதானாஎன்பதை குறைந்தது இரு முறையாவது சரிபார்க்க வேண்டும்.யுனிக்ஸ் இயங்குதளம் இன்றும்புழக்கத்தில் இருக்கிறது.ஆனால் அது குறித்து ராமன்ராஜா என்ன எழுதியிருக்கிறார் என்றுபடித்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட கட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதேஒருவிதத்தில் மேல்.தவறான புரிதலை விட அறியாமையே பரவாயில்லை என்று கருதக்கூடியவகையில் கட்டுரைகள், பத்திகள்தமிழில் எழுதப்படுவதும், அவை வெளியாவதும் கேலிக்கூத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
----------------------------------------------------------------------------------------------
http://www.vikatan.com/av/2005/jul/31072005/av0803.asp

சுஜாதா- கற்றதும் பெற்றதும்

பிரெஞ்சு எழுத்தாளரும், தத்துவஞானியுமான யிமீணீஸீ ஜீணீuறீ sணீக்ஷீtக்ஷீமீ&யின் பிறந்த தினம் ஜூன் 21, 1905. ழான் பால் ஸார்ட்
ழான் பால் ஸார்ட், (பி.பி.சி. இப்படித்தான் உச்சரிக்கிறது) 1980 ஏப்ரல் 13 வரை வாழ்ந்தவர். நவீன இலக்கிய கர்த்தாக்களின் சிந்தனையை மிகவும் பாதித்த, ஏன்... ஆக்கிரமித்த எக்சிஸ்டென்ஷியலிசம் என்னும் தத்துவத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார் ஸார்ட்.

எக்சிஸ்டென்ஷியலிசத்துக்கு Ôஇருத்தல் கொள்கைÕ என்று சொல்வது, ஒரு சோகையான மொழிபெயர்ப்புதான். Ôஉயிர் வாழ்தல்Õ என்பதும் ஏப்பை சாப்பைதான்! இந்தத் தத்துவம் என்ன என்று சரியாக அறிந்துகொண்டால்தான், சரியான வார்த்தை அமையும். ஒரு மனிதனின் இருத்தல் அவனது சாரத்தைவிட முக்கியம். றிக்ஷீவீஷீக்ஷீவீtஹ் tஷீ மீஜ்வீstமீஸீநீமீ ஷீஸ்மீக்ஷீ மீssமீஸீநீமீ. இதுதான் ஆதார சிந்தனை.

கொஞ்சம் விளக்குகிறேன்...
நீங்கள் உயிர் வாழும் பிறவி. உங்களைப் பலவாறு வர்ணிக்கலாம். சமூகத்தில் ஒரு விதமாக, குடும்ப அமைப்பில் ஒரு வகையாக, படிப்பினால், உத்தியோகத்தால், உங்கள் டாக்டரால்... இப்படி ஒவ்வொரு பாகுபாடும் உங்களைப் பற்றிய (மீssமீஸீநீமீ) சாரம்தான். உங்களை ஒரு தகப்பன், நல்லாசிரியன், டயாபடீக், ரத்த அழுத்தக்காரன், பிடிவாதக்காரன், ஆணழகன் என்று வர்ணிப்பதெல்லாமே சாரங்கள். நீங்கள் நீங்கள்தான்! உங்களுடைய இருத்தல்தான், அதாவது உயிர் வாழ்தல்தான் எல்லாவற்றுக்கும் மேம்பட்டது; முக்கியமானது. உங்களை வகை பிரிக்கும்போதுதான் பிரச்னை எழுகிறது. உங்களுக்குப் பொறுப்புச் சுமை ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் சங்கடத்தை வெளிப்படுத்தும் தத்துவம் இது.

ÔÔயாரை நம்பி நான் பிறந்தேன்... போங்கடா போங்க!ÕÕ என்று கண்ணதாசன் பாடினாரே, அதுதான் இந்தத் தத்துவத் தின் ஆதாரக் கேள்வி. ‘என்னை யாரும் கேட்கவில்லை. அதனால், என் செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது!’
இந்தத் தத்துவத்துக்கு மறைமுகமாக வித்திட்டவர் இருவர். கியர்க்ககார்டு (1813&1855) என்னும் டென்மார்க் தத்துவ ஞானி. ‘நான் யார்? எப்படி இவ்வுலகில் வந்தேன்? என்னை ஏன் யாரும் கேட்கவில்லை?Õ என்ற கேள்விதான், புதிய சிந்தனையை ஆரம்பித்தது. ‘கடவுள் இறந்துவிட்டார். நானும், நீயும், நாம் எல்லோரும் அவரைக் கொன்றுவிட்டோம்’ என்றார் நீட்ஷே. இவர்கள் இருவருடைய தத்துவங்களும், இருபதாம் நூற்றாண்டின் எக்சிஸ்டென்ஷியலிசக் கருத்துகளைப் பாதித்தன.

மனிதனுக்கு எந்த விதப் பொறுப்பும் கிடையாது, கூடாது என்பதை வலியுறுத்தினார் ஸார்ட். அவரே வாழ்வில் பொறுப்பில் லாமல்தான் திரிந்தார். ‘ஸிமோன் த போவார்’ என்னும் பெண்மணி யுடன் வாழ்ந்து, பாரீஸின் இடது கரை காபி கிளப்களில் எழுத் தாளர்களும் கலைஞர் களும் சூழ, பொறுப் பின்மையை போதித் தார். ஆல்பெர் காம்யு, ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்களின் நாவல்களில் இந்தத் தத்துவம் மிளிர்வதைக் காணலாம். ஜி.நாகராஜ னின் ‘நாளை மற்றுமொரு நாளே’ என்பது தமிழின் முதல் எக்சிஸ்டென்ஷிய நாவல் என்று சொல்ல லாம்.
இரு உலக யுத்தங் களுக்கும், கொரியா, வியட்நாம் வெட்டி யுத்தங்களுக்குப் பின்னும் தோன்றிய உலக இலக்கியங்களில், ஸார்ட் எங்காவது தோன்றியே தீருவார். அவரது ‘இருத்தலும் இல்லாமையும்’ (ஙிமீவீஸீரீ ணீஸீபீ ழிஷீtலீவீஸீரீஸீமீss) என்னும் புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம்.

58 மறுமொழிகள்:

Blogger மயிலாடுதுறை சிவா மொழிந்தது...

"இப்படிப்பட்ட கட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதேஒருவிதத்தில் மேல்.தவறான புரிதலை விட அறியாமையே பரவாயில்லை என்று கருதக்கூடியவகையில் கட்டுரைகள், பத்திகள்தமிழில் எழுதப்படுவதும், அவை வெளியாவதும் கேலிக்கூத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும்"

நீங்கள் சொல்வது மிகச் சரி. மனதிற்கு கடினமாகவும் உள்ளது. உங்கள் நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
மயிலாடுதுறை சிவா...

4:54 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

ரவி ஸ்ரீனிவாஸ்,
நீங்கள் சொல்லியிருப்பதாலே பலனிருக்குமா இல்லையா என்று சொல்லமுடியாவிட்டாலுங்கூட, கருத்தினைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இருத்தலியம் குறித்து எஸ். வி. ராஜதுரை எழுத முன்னரே, சண்முகம் சிவலிங்கம் அலை சஞ்சிகையிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தாரென அலை சஞ்சிகையுடன் தொடர்புபட்டிருந்த நண்பரொருவர் சொல்லியிருந்தார். இது கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்னாலே நிகழ்ந்தது.

சுஜாதா புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிப்பதொன்றும் புதிதில்லை. கணணி/கணிணி ஆகிய சொற்கள் நன்கு பயன்பாட்டுக்கு வந்தபின்னாலுங்கூட, கணிப்பொறி என்பதைப் பிடித்துக்கொண்டு நெடுங்காலம் தொங்கினார்.

சொன்னால், அவருடைய விசிறிகள் கோபப்படலாம்; சுஜாதா ஒரு காலகட்டத்திலே தமிழுக்குப் பலதினை "உள்வாங்கி வெளிவிட்டதாலே" பயன்பெற்ற வாசகர்கள் ஏராளம்; ஆனால், இன்றைக்கு அவரினைக் கடந்து அவருடைய ஆரம்பகால வாசகர்களாக இருந்த தலைமுறையிலே குறிப்பிட்டபகுதி சென்றுவிட்டதென்பது உண்மை. தவிர, அவருடைய எழுத்து வீரியம் கெட்டுவிட்டதென்பதும் உண்மை. கற்றதும் பெற்றதும் எழுத "சுஜாதா" தேவையென்பதில்லை. அண்மையிலே, நாராயணன் கிண்டலாக விடயங்களை அள்ளிப்போட்டதுமாதிரி எழுதிய பதிவினைப் பார்த்தீர்களா? அதுமாதிரியாகத்தான் கற்றதும் பெற்றதுமிருக்கின்றது. ஆனால், அவர் இப்போது குறிவைத்து சார்த்(தர்) தொடக்கம் சட்டைக்காரிவரைக்கும் எழுதுவதெல்லாம், பெரும்பாலும் விகடனையே விஷயதானத்துக்கு நம்பியிருக்கின்றவர்களுக்கும் சில "போனவாட்டி வருந்திருப்ப, எங்க வீட்டு பாத்ரூம்ல சுஜாதா ஒண்ணுக்குப் போனார்" எழுதுகிற சில பழைய விசிறிமட்டைகளையுமே. அது தவறில்லை; ஆனால், அவருக்குத் தன்னுடைய எல்லை எதுவென்பதையாவது தெரிந்துகொண்டு நடக்கத் - குறைந்த பட்சம் வாயை மூடிக்கொண்டிருக்கவேனும்- தெரிந்திருப்பின், எரிச்சலூட்டாது. அவருக்கு அதுவும் தெரிவதில்லை; அநாவசியத்துக்கு, "ego trip" மாதிரியான கருத்துகள் தெரிவிக்கும்போது, ஆத்திரம் வருகின்றதுதான். இணையப்பதிவுகள் Ego Trip என்றால், அவருடைய கற்ற கருத்துகளும் பெற்ற பதிவுகளும் Super Ego striptease.

தொழிலிருந்து ஓய்வெடுத்து விட்டு எழுதும் அவரைப் போன்றவர்களும் பத்திரிகைத்துறையே தொழிலாகக் கொண்டவர்களும் அநாவசியமாக மற்றவர்களை மடையர்கள் என்பதுபோலவோ அல்லது உங்களைப் போன்றவர்களோடு சரிசமமாக நாங்களே கீழிறங்கி வந்து செயற்படுகிறோமே அதற்கு நீங்கள் காட்டும் மரியாதை இதுவா என்பதுபோலவோ பேசுவது எரிச்சலூட்டவே செய்கிறது.

எனக்கோர் ஆசையுண்டு; சுஜாதா தொடக்கம் பத்திரிகை/ஊடகத்துறையினை முழுநேரத்தொழிலாகக் கொண்டியங்கிக்கொண்டு இணையத்திலே எழுதுகின்றவர்களைப் பற்றி இழிவுப்பார்வை பார்க்கும் பெருந்தகை/லைகள் மற்றவற்றினையும் ஒரு மேசை போட்டு வலப்பக்கமிருத்தி, இணையத்திலே இவர்கள் எழுதும் விடயங்கள் குறித்தே தமிழிலே எழுதும் சிலரைத் தேர்ந்தெடுத்து இடப்பக்கத்திலே இருத்திவைத்து, அவர்கள் பேசும் விடயங்கள் குறித்து வாதிக்கவிட்டுப்பார்க்கவேண்டும். உ+ம்: எஸ். ராமகிருஷ்ணனையும் தமிழ்ப்பாம்பையும் (சினிமா குறித்து) சுஜாதாவையும் வெங்கட்டையும் (அறிவியல் எழுத்தினைக் குறித்து).... என்னதான் தங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?

ஆனந்தவிகடன் உங்கள் கருத்தினைக் கருத்தெடுக்குமென்று நினைக்கின்றீர்களா? பிதாமகர் பிழைவிட்டிருக்கின்றாரென்று அடுத்த பதிப்பிலே சொல்லிவிட்டு, அவர்களுக்கு விற்பனையைச் சாய்த்துக்கொள்ளமுடியுமா?

பேசாமல் போய் நல்ல படமொன்று பாருங்கள். இன்றைக்கு என் சிபார்சு இது ஸ்பென்ஸர் ட்ரேஸியின் பாத்திரம் அருமை.

5:11 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

/ராமகிருஷ்ணனையும் தமிழ்ப்பாம்பையும் (சினிமா குறித்து) சுஜாதாவையும் வெங்கட்டையும் (அறிவியல் எழுத்தினைக் குறித்து).... என்னதான் தங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?/
அப்படியே ரோசாவசந்துக்கும் ஜெயகாந்தனுக்கும் ஒரு சீட்டு போட்டால் சவுகரியம். :-)

விஷயமே இல்லாமல் "இட்டு நிரப்புவது" என்பது பொதுவான தமிழ் பத்திரிகைகளின் நடைமுறைதான் என்றாலும் , சுஜாதாவின் இந்தக்கட்டுரை அவமானப்படவைக்கிறது. 1 மணி நேரம் வாசித்தால் கூட இன்னும் சிறப்பாக எழுதமுடியுமென்று தோன்றுகிறது.இன்னும் இது "எளிமைக்காக" என்று வாதிட்டால் நாம்தான் முட்டாளாகிப்போய் காட்சியளிப்போம்.

5:24 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

ரவி
எனக்கு நீங்கள் எழுதி இருப்பது பற்றி தெரியாது. ஆனால் வெகுகால் முன் க்ளோனிங் பற்றி சுஜதாவின் கட்டுரைக்கு நான் விகடனுக்கு எழுதிய கடிதம் கிணர்ருள் போட்ட கல்லாய் காணாமல் போய்விட்டது.எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

5:41 PM  
Blogger Ramya Nageswaran மொழிந்தது...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றாக புரியும்படி எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆங்கில வார்த்தைகள் சரியாக தெரியவில்லை.

7:38 PM  
Blogger கிவியன் மொழிந்தது...

சுஜாதா என்னத்த கற்றார் என்னத்த பெற்றார்ன்னு கட்டுரை வேற எழுதி நமக்கெல்லாம் சொல்றாரு அதுக்கு ஒரு பத்திர்க்கை வேற. மூணே வரியில் ஹைக்கூ மாதிரி எல்லாத்தையும் சொல்லுவது கடினம். சிலவற்றில் வழுக்கிவிடுகிறார். அதுக்குத்தான் அவரு மீசையே வெக்கல, எல்லாரும் பாக்கச்சொல்ல மண்ண தட்டும்படி ஆகாது பாருங்க. என்னத்த சொல்ல
ரவி, கிணத்த சுத்தி நின்னு நாமெல்லா பாத்துட்டே இருக்க வேண்டிதான் ஒரு மண்ணும் நடக்காது.

9:13 PM  
Blogger சன்னாசி மொழிந்தது...

அனைத்துக்கும் ஒரே ஆளை எதிர்பார்க்கும் 'குரு' மனோபாவம் இப்போதும் இருப்பதற்கு சுஜாதாவைக் குறைசொல்லும் அதே அளவு அவரிடமிருந்து லாண்டரி லிஸ்ட்டு முதற்கொண்டு ;-) அனைத்தையும் வேண்டிநிற்கும் பத்திரிகைகளின் "கண்ணைக்கட்டிக் காட்டில் விட்ட மனோபாவத்தின்" முதுகெலும்பின்மையையும், ஆல் இன் ஆல் அழகுராஜாவை எதிர்பார்க்கும் (சுஜாதாவையாவது ஓரளவு ஒத்துக்கொள்ளலாம், மதன், அந்துமணி போன்ற அடுத்த தலைமுறை அறிவுஜீவிகளை நினைத்தால்தான் திகிலாக இருக்கிறது!) மனோபாவத்தையும்கூடக் குற்றம் சொல்லலாம். ஒரே Readers don't digest ரீதியிலான தொல்லைதான்!! ரிட்டர்ன் ஸ்டாம்பாவது ஒட்டினீர்களா இல்லையா ரவி ஸ்ரீனிவாஸ்? ;-)

9:20 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

/மாண்ட்ரீஸர்/

?!!

10:38 PM  
Blogger அல்வாசிட்டி.விஜய் மொழிந்தது...

//சுஜாதா எழுதியுள்ளது அச்சாகி வாசகர் கையிலும், இணையத்தில் இருக்கும் நிலையில் அடுத்த இதழில் சுஜாதா எழுதியுள்ளதில் பிழைகள்,தவறுகள் இருப்பதால் அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், அத்தகைய குறிப்பு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்தும் ஆசிரியர் என்ற முறையில் நீங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். //

அநியாத்துக்கு நகைச்சுவையாக இருக்கிறது நீங்க என்ன சுஜாதாவா லாண்ட்ரி பில்லை கூட ஆவில போடுறதுக்கு. அநேகமாக சுஜாதா பார்வைக்கு கூட போகாது என நினைக்கிறேன்.

எது எப்படியோ நான் நிறைய விசயத்தை தெரிந்துக் கொண்டேன். நன்றி ரவி,

10:48 PM  
Blogger Venkat மொழிந்தது...

ரவி - காலம் காலமாக நாமெல்லாம் இந்தச் சங்கை ஊதிக்கொண்டுதானிருக்கிறோம். ஆனால் வர்த்தக மாஃபியா அதுபாட்டுக்கு கருத்தியில் நஞ்சை விதித்துக் கொண்டுதானிருக்கிறது. பத்மா க்ளோனிங் பற்றி விகடனுக்கு என்ன எழுதினார் என்று தெரியாது. ஆனால் நான் க்ளோனிங்க் தொடரைப்பற்றி விகடனுக்கு (ஜூனியர் என்று ஞாபகம்) மிக நீளமாக சுஜாதாவின் பல ஒற்றை வரி விளக்கங்களில் இருக்கும் அபத்தங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கிணறுதான்; கல்தான்.

11:06 PM  
Blogger Venkat மொழிந்தது...

தொடர்பான இன்னும் கொஞ்சம் என் பதிவில் எழுதியிருக்கிறேன்.

http://www.domesticatedonion.net/blog/?item=570

11:36 PM  
Blogger Kannan மொழிந்தது...

சுஜாதாவை நான் ஒரு பாலமாகத் தான் பார்க்கிறேன்.

ஜூனியர் விகடனும் ஆனந்த விகடனும் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களின் வாசிப்பு இந்த வகையறாக்களைத் தாண்டுவதில்லை. புதிய விஷயங்களை இங்கே அறிமுகம் செய்து வைப்பதற்காகவேனும் அவரை மன்னிக்கலாம். இதற்காக இன்னும் அவர் குமுதத்திலும் குங்குமத்திலும் கூட 'ஜல்லியடிக்கலாம்' . இதனால் சிலரேனும் தம் வாசிப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லத் தூண்டலாம்.

எதையும் எளிமையாக எழுதக் கூடிய நல்ல engaging நடை கொண்டவர் சுஜாதா. இதனால் இவரைப் படித்ததன் மூலமே இவரைத் தாண்டியவர்கள் (எழுத்து, மற்றும் வாசிப்பு அளவில்) இருக்கலாம். சாதாரணப் பெரும்பான்மைக்கு நல்ல விஷயங்கள் போய்ச்சேர, இதனால் சிலர் உந்தப்பெற்று அவற்றைத் தேடித் தெரிந்து கொள்ள ஒரு பொறியைக் கிளப்பினாலே அதன் உபயோகம் முழுமையாகி விடுகிறது. ஆனால் விஷயம் தெரியாத பலருக்கு அறிமுகம் செய்து வைப்பதாலேயே தன் கட்டுரையின் உள்ளடக்கத்தைக் கொஞ்சம் கவனமாகத் தரவேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.

மற்றவர்களை மடையர்களாக பாவித்துக் கொள்ளுதல், தம்மைச் சகலமும் தெரிந்ததாகக் கற்பித்துக் கொள்ளுதல், சப்ஜாடாகக் கருத்துச் சொல்லுதல் என்பவை ஆத்திரமூட்டுபவைதான். ஆனால் அவரைக் கடந்தவர்களுக்கு ஒரு filter உபயோகித்துக் கொள்வது கடினம் இல்லையே!

நன்றி, ரவி. உங்களின் இந்தப் பதிவு மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

12:06 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

/ஆனால் அவரைக் கடந்தவர்களுக்கு ஒரு filter உபயோகித்துக் கொள்வது கடினம் இல்லையே!/

நீங்கள் அறிதலுக்கு அவரின் அவசியம் தேவைப்படாதவர்கள் என்ற அர்த்தத்திலே சொன்னாலுங்கூட, "அவரைக் கடந்தவர்கள்" எனும் பதம் மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஈகோ ட்ரிப் உளப்பாங்கினைத்தான் ஞாபகப்படுத்துகின்றது ;-)

வடிகட்டி வாசிப்பதற்கு, இஃது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களாலே அவரைக் கடந்தவர்களுக்கான பிரச்சனையில்லை என்றே படுகிறது.

1. வலைப்பதிவு என்பது ஓர் ஈகோ ட்ரிப் எனும்போது, அவரின் இலக்கு வாசகனுக்குப் பாலமாகத் தொழிற்படுகின்றாரெனச் சொல்லமுடியவில்லை

2. மேற்கூறிய இருத்தலியல் குறித்த அவர் கருத்து வாசகனுக்குத் தெளிவைத் தருகிறதா அல்லது தவறான கருத்தைத் தருகின்றதா என்பதிலே பாதிக்கப்படுவது, அவரைக் கடந்தவர்கள் அல்ல

3. தமிழூடகங்களுக்கும் எல்லாம் வல்ல ஈசன் ஒருவனே என்ற மாமதமாயை விலகவேண்டும்

4. அவருக்குக் கொஞ்சமேனும் ஈகோ ட்ரிப்பிலே இருக்கின்றவர்கள் அவருடைய ட்ரிப்பினையும் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற உணர்வு வர இஃது உதவும்.

12:25 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி,
சாருவின் 'எக்சிஸ்டின்ஷியலிசமும், ஃபேன்சி பனியனும்' நாவலை சுஜதா மறந்துவிட்டார் போல இருக்கிறதே!

12:45 AM  
Blogger இராம.கி மொழிந்தது...

அன்பிற்குரிய ரவி,

ஆனந்த விகடன் உங்களுக்கு மறுமொழி சொல்லும் என்றோ, சுஜாதாவை மறுத்து ஒரு வரி எழுதும் என்றோ எதிர்பார்க்காதீர்கள். அது நடவாது. தமிழ்நாட்டில் உள்ள பெருந்தாளிகைகள், தொலைக்காட்சிகள் இன்னும் இதுபோல வேறு மிடையங்கள் என எல்லாமே இப்படித்தான் இயங்குகின்றன. அவற்றிற்கு எது சரி என்பது முகமையே கிடையாது. எது விற்கும் என்பதில்தான் குறி.

உங்களுக்குச் சரி என்று தென்பட்டதை உங்கள் வலைப்பதிவில் எழுதுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

12:51 AM  
Blogger முகமூடி மொழிந்தது...

ரவி... புது விஷயங்கள் பல அறிந்து கொண்டேன்... உங்கள் கூற்றை சரிபார்க்கப்போய், மேலும் பல விஷயங்கள் அறிந்து கொள்வேன்...

தமிழில் இலக்கியம் வருகிறதா?? எனில் யார் வெளியிடுகிறார்கள்... எங்கு கிடைக்கும்... என்னை போன்ற ஒரு சாமானியனுக்கு இணையம் சல்லிசாக கிடைப்பதற்கு முன் எழுத்தென்றால் அது வெகுஜன பத்திரிக்கைதான்.. சீரியஸ் எழுத்துக்களை தேடி படிக்க குறைந்த பட்சம் ஒரு அறிமுகம் வேண்டாமா... யார் அறிமுகப்படுத்தி வைப்பது...

பெரும்பாலான ஜனங்களுக்கு இலக்கியம் என்றால் அது வெகுஜன பத்திரிக்கைகளில் வரும் எழுத்துக்கள்தான்... அதில் என்ன வருகிறது... 70 சதவீதம் சினிமா செய்திகள்... மனச்சோர்வு தரும் அளவில் நடிகை வீட்டு நாய் வயத்தால போவதை கூட எழுதுகிறார்கள்... அப்புறம் ஒரே மாதிரியாக துணுக்குகள், ஒரு பக்க கதை, 5 பக்க கதைகள், பக்தி சம்பந்தமாக சில பக்கங்கள்... இந்த மாதிரி சூழ்நிலையில் சினிமா, சிறுகதை இல்லாத மாற்றுச்சிந்தனை என்றால் - அது தப்பும் தவறுமாக இருந்தாலும் - சுஜாதா போன்றவர்கள்தான் செய்கிறார்கள்... இது நிதர்சனமான உண்மை...

தவறான புரிதலை விட அறியாமையே பரவாயில்லை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை... உண்மை வேண்டுவோர் இந்த அறிமுகத்தை வைத்து மேலும் ஆராய்ச்சி செய்து விருத்தி செய்து கொள்வர்... மற்றவருக்கு இது இன்னுமொரு - சீக்கிரமே மறக்கக்கூடிய - கற்றதும் பெற்றதும் அவ்வளவுதான்...

மற்றபடி நீங்கள் விகடனுக்கு கடிதம் எழுதிய செயலை வரவேற்கிறேன்.. உங்கள் கடிதம் பிரசுரிக்கப்பட வேண்டுமானால் ரஜினியையோ கமலையோ வைத்து கடிதத்தை வெளியிடுங்கள்... இது போன்ற பதிவுகளை நிறைய எழுதுங்கள்..

1:30 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

உங்கள் கடிதம் பிரசுரிக்கப்பட வேண்டுமானால் ரஜினியையோ கமலையோ வைத்து கடிதத்தை வெளியிடுங்கள்

தேவுடா -:(

8:19 AM  
Blogger Narain மொழிந்தது...

முதலில் வாழ்த்துக்கள். இருத்தலியல் பற்றி பெரியதாக தெரியாததாலும், ஆனால் கொஞ்சமாய் சகவாச தோஷத்தினால் தெரிந்து வைத்திருப்பதனாலும், படிக்கும் போதே ஜல்லியடிக்கிறார் என்று தெரிந்தது. ஆனாலும், அதன் பின் இவ்வளவு விவரங்கள் இருக்கும் என்கிற உண்மைகள் இப்போதுதான் தெரிகிறது. இதுப்போல எதையாவது ஏடாகூடமாய் சுஜாதா நிறைய எழுத வேண்டும். அப்போதுதான் நிஜமான ஆழமான பார்வைகள் உங்களைப் போன்றவர்களிடமிருந்து வெளிவரும். இதுப்போல சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தற்காக சுஜாதாவுக்கு நன்றிகள்.

//இப்படிப்பட்ட கட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதேஒருவிதத்தில் மேல்.தவறான புரிதலை விட அறியாமையே பரவாயில்லை என்று கருதக்கூடியவகையில் கட்டுரைகள், பத்திகள்தமிழில் எழுதப்படுவதும், அவை வெளியாவதும் கேலிக்கூத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும//

இதை மிக முக்கியமான கருத்தாக்கமாகப் பார்க்கிறேன். அரைகுறை விஷயஞானத்தோடு எதையாவது எழுதி, வாசகனை குழப்புவதையும் தவறான தகவலையும் தருவதை விட்டுவிட்டு கமலோடு தானெழுதும் அடுத்தப் படத்திற்கான கதையினை உலகத் திரைப்படங்களிலேயே முதன்முதலாக என்று டிரைய்லர் காண்பிக்கலாம். யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் சினிமா,அரசியல், சிறுகதைகள் என்று இன்னமும் சில வட்டங்களிலேயே எல்லா வணிக செக்குமாடுகளும் சுற்றி வருகின்றன. தனிப்பட்ட முறையில் சிற்றிதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்று தோன்றுகிறது. குமுதமில் காஜா மைதீன், அஜீத் பிரச்சனையென்றால், காலச்சுவட்டில் ஜெயமோகன், சு.ரா பிரச்சனை. தளம் வேறாக இருந்தாலும், ஆணிவேறாக இருப்பது அக்கப்போர் ஜர்னலிசம் தான். வெகு சில சிற்றிதழ்களில் விதயங்கள் வேறாக இருக்கலாம்.

முதலில் இதனை தேர்ந்த இடைநிலை இதழ்களுக்கு அனுப்புங்கள். வெங்கட் சொன்னதுப் போல, உயிர்மை வேலைக்காகாது. காலச்சுவடு தெரியவில்லை. கவிதாசரணில் கண்டிப்பாக பிரசுரிப்பார்கள். உண்மை உடனே வெளியிடும். ஆனால், பிரச்சனை இவ்வாறு விஷயரீதியாக எழுதப்படும் பத்திகளை எத்தனை இதழ்கள் பிரசுரிப்பார்கள், எத்தனை பேர்கள் படிப்பார்கள் என்பது தான். ஆனாலும், நீங்கள் கடிதமெழுதியதை மதிக்கிறேன்.

உங்களின் கடிதம் என்னை வியப்பிலாழ்த்தவில்லை. அதேப் போல் வெங்கட்டின் பதிலும் வியப்பிலாழ்த்தவில்லை. வெங்கட்டின் கிணற்றிலிட்ட கல் தான் இதுவும். ஒருவேளை ஏதாவது அதிசயங்கள் நேர்ந்தால், அடுத்த வார க.பெ.யில் ஒரு வரி வரலாம். இதுதாண்டி, உங்களுக்காக, பெயரிலி சொன்ன மாற்று ஏற்பாட்டினை நானும் வழிமொழிகிறேன்.

10:16 AM  
Anonymous iamsorry மொழிந்தது...

//ஒருவேளை ஏதாவது அதிசயங்கள் நேர்ந்தால், அடுத்த வார க.பெ.யில் ஒரு வரி வரலாம்//

சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு, பிரபு சீனிவாசன் என்ற ஒரு அன்பர், ஏகதேசத்துக்கு பூச்சி பூச்சியாக ஹைப்பர் லிங்க்குகள் எல்லாம் கொடுத்து மறுப்புக் கடிதம் எழுதியிருந்தார். சில அன்பர்கள் தொலைபேசினார்கள். வழக்கம் போலவே அதை என் ரீசைக்க்கிள் பின்னில் சேகரம் செய்தேன். இது போன்ற தாக்குதல்கள் எனக்குப் புதிதல்ல. i provide an easy target. கணையாழி காலத்தில் இருந்தே, முடிச்சவிக்க வா என்று வெண்பா எழுதும் ராயப்பேட்டை பாலுக்களை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறேன். கடிதத்தின் தொனியில் இருந்தே, இவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று தெரிந்துவிடுவதால், எனக்குக் கோபம் வருவதில்லை. விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில் எழுதுவதால் நேரும் occupational hazard இது என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதால், பதிலுக்கு கோபம் காட்டாமல் அமைதியாக இருக்க முடிகிறது. இலக்கிய உலகத்தில், வழிப்போக்கர்களிடம் எல்லாம் என்னளவுக்கு யாராவது தர்ம அடி வாங்கி இருப்பார்களா என்பதை, சோஷியாலஜிகல் பர்ஸ்பக்ட்டிவில் வைத்து யாராவது ஆராய்ச்சி செய்தால், அவருக்கு பி.எச்.டி பட்டத்துக்கு பரிந்துரை செய்கிறேன். விருப்பமிருப்பவர்கள் ரிப்ளைகார்டில் எனக்கு எழுதவும்.

உள்ளம் கேட்குமே படத்துக்கு ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் ஜீவாவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவம் ( இவர் இயக்குனர் வஸந்தின் மைத்துனர் என்ற விஷயம் ஆருக்காவது தெரியுமோ? )...blah blah blah.........

10:53 AM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

இரவி அவசியமான பதிவு. நீங்கள் கூறியது மாதிரி அரைகுறையாக தவறாக அறிவதைவிட, அறியாமல் இருப்பது சிறந்தது. சுஜாதா போன்ற வெகுசன ஊடகங்களின் (அதற்காய் சிற்றிதழ்கள் அனைத்தும் திறமென்று கூறவரவில்லை) திருவுருக்கள் சொல்வதை அனேகர் பேர் உண்மை என்று நம்பிவிடும் அபாயமுண்டு. இதை ஏன் சொல்கின்றேன் என்றால், என்னுடைய பதினான்கோ, பதினைந்தோ வயதில் சுஜாதாவின் 'ஏன்? எதற்கு? எப்படி?' புத்தகமாய் வந்தபோது, அப்படி ஒரு புத்தகத்தையும் தமிழில் பார்க்காத பிரமிப்பில் ஒரு பெரும் அதிசயமாக அதை வாசித்து பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அந்த வயசில் சுஜாதா எது கூறினாலும் சரியாய்த்தான் இருக்கும் என்று உறுதியாய் நம்பியிருப்பேன். எனவே தவறான தகவல்கள் பிழையான புரிதலுக்குத்தான் வழிநடத்திச் சென்றிருக்கும்.
.........
நரேன், இந்தக்கட்டுரையை காலச்சுவடுக்கு அனுப்பினால் அவர்கள் பிரசுரிக்கக்கூடும். ஏனெறால் உயிர்மை பதிப்பித்த சுஜாதாவின் புறநானூற்றுப் புத்தகத்தில், 'உன்னுடையதுதான் பிழை, என்னுடையது சரியென்று' காலச்சுவடும், உயிர்மையும் அடிப்பட்டுக்கொண்டு இருந்ததை வாசித்தது ஞாபகம்:-).

11:42 AM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

//டிசே: சுஜாதாவின் 'ஏன்? எதற்கு? எப்படி?' புத்தகமாய் வந்தபோது, அப்படி ஒரு புத்தகத்தையும் தமிழில் பார்க்காத பிரமிப்பில் ஒரு பெரும் அதிசயமாக அதை வாசித்து பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். //

அட நீங்களுமா? ஜூனியர் விகடனில் வந்த தொடரை விடாமல் கிழித்து தைத்துக்கொள்ள வைத்திருந்தேன். கிட்டத்தட்ட அந்தத் தொடர் புத்தகமாக வெளிவரும் வரையில் என் பொக்கிஷங்களில் ஒன்றாக இருந்தன அந்தப் பக்கங்கள்.

பள்ளி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் எல்லாம் என்னை எவ்வளவு பிரமிக்கவைத்திருக்கிறார்கள்! அதுபோல அடுத்த கட்ட ஆசான் சுஜாதா. அவர் சொல்லிக் கொடுத்த பல பால பாடங்கள் அறிவியல்பால் ஆரவ்த்தை ஊட்டியது மறுக்கமுடியாத உண்மை.

எப்படி கல்லூரி வந்ததும் பள்ளி ஆசிரியரின் பரிமாணம் என் பார்வையில் புதுநிர்மாணம் பெற்றதோ, எப்படி நேரடியாக தொழிலகத்தில், பணியிடத்தில் அறிவு விரியும்போது கல்லூரி ஆசிரியர் பற்றிய பிம்பம் தன் உயரத்தை இழக்கிறதோ அதுபோலவே, பல மூல நூல்களையும், எட்டுத்திக்கும் கிட்டும் தகவல்களையும் உணர்ந்து, புரிந்து அறிந்து கொள்ளும்போது சுஜாதாவைப்பற்றிய பிம்பமும் தன் உண்மை நிலையை எனக்கு உணர்த்துகிறது. அவர் அதே நிலையில் இருந்து, நான் அன்று இருந்த நிலையில் இன்று இருக்கும் பலருக்கு நான் பெற்ற உரத்தை அளித்துக்கொண்டிருக்கிறார். இருப்பார். இருக்கட்டும். ஆனால் அவரின் அடிப்பொடிகள் என்று நினைத்துக்கொள்ளும் சிலர் தாங்கள் வளரவில்லையோ, அல்லது அவரைத்தாண்டி வளர்ந்துவிடக்கூடாதென்ற சங்கல்பம் காரணமாகவோ, இதைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்னும்போதுதான் நகைப்பு வருகிறது. இரவியின் கருத்துக்கள் முழுக்கமுழுக்க சரியானவையானாலும், அவர் இயங்கும் தளம் வேறு என்பதால் 'ஆனந்தவிகடனுக்கு இதுவே அதிகம்'. ஆனாலும் இவர் ஒதுங்கி புதுத் தலைமுறைக்கு வழிவிடாமல் இருப்பதில் மிகுந்த வருத்தம்.

like every teacher, he has limitations. one of his biggest limitations is that he doesn't realize his limit, or atleast, he pretends so.

ஒண்ணுமட்டும் விளங்குவதே இல்லை. புகழின் உச்சம் பெற்ற பலரும் ஏன் உச்சத்திலிருக்கும்போதே துறையிலிருந்து விடைபெறக்கூடாது? தோன்றிற் புகழோடுதோன்றுக, அதிலும் பெரிது: நீங்கிற் புகழொடு நீங்குக' (வள்ளுவர் மன்னிக்க,)

பி.கு.:

iamsorry அட்டகாசம். கொன்னுட்டீங்க.

12:09 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy) மொழிந்தது...

ரவி, பல விதயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி!

iamsorry, அசத்திட்டீங்கப்பூ

-மதி

12:22 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பின்னூட்டங்களுக்கும், உங்களுடைய கருத்துக்களுக்கும் நன்றிகள். நானும் போட வேண்டிய கல்லினைப் போட்டுவிட்டேன். இக்கடித்ததினை சிறு பத்திரிகைகளுக்கு அனுப்புவதாக எண்ணம் இல்லை. அது சுஜாதா எதிர்ப்பு அல்லது ஆதரவு நோக்கங்களுக்கே பயன்படும் என்று அஞ்சுகிறேன்.
இணைய இதழ்களுக்கு அனுப்பப்க் கூடும். பொறுப்பினமையினைப் போதிக்கும் இருத்தலியத்தினையும், சார்த்தையும் குறித்து அறிந்து கொண்டு என்ன பயன் இருக்க முடியும் என்றும் வாசகர்களுக்குத் தோன்றலாம். வேறு சிலர் ஏதோ புரியாத இலக்கிய சமாச்சாரம் என்று நினைத்து விடலாம். கண்ணதாசன் எழுதிய அந்தப் பாட்டைக் கேட்டாலே இருத்தலியத்தினை தெரிந்து கொண்டது மாதிரி சிலர் நினைக்கலாம். இன்னும் சிலர் கண்ணதாசன் ஒரு ஐரோப்பியத் தத்துவத்தினை எல்லாருக்கும் புரியும் வண்ணம் தன் பாட்டில் சொல்லிவிட்டார் என்று கூட நினைக்கலாம். ஒரு பிரபல சினிமா நடிகர் அல்லது நடிகையைப் பற்றி இப்படி எழுத முடியாது. பலத்த எதிர்ப்பு வரும். இது சுஜாதாவிற்கும் தெரியும்.

காசி முன் வைத்த கருத்தினை வேறு வார்த்தைகளில் நான் முன்வைத்த போது சிலர் அதை ஏற்கவில்லை. கொஞ்சம் தேடிப்பார்த்தால் வலைப்பதிவிலும் சார்த் பற்றி ப.வி. சீரங்கன் எழுதியிருப்பதை படிக்க முடியும்.அலைகளில் வெளிவந்த கட்டுரை பற்றி நான் அறிவேன். ஆனால் அதை விட கிடைக்கக்கூடிய நூலினை முன் வைத்து எழுதுவது எளிது. மதன், அந்துமணியுடன் ஒப்பிடுகையில் சுஜாதா பரவாயில்லை. ஆனால் இப்போது அபியே பதில் சொல்கிறார். அடுத்து எந்தத்
தொடரின் எந்தச் சின்னத்திரை நட்சத்திரமோ. அப்புறம் இவர்களுக்கு மதன், அந்துமணி பரவாயில்லை என்றாகிவிடும்.

6:36 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

iamsorry உங்க பின்னூட்டம் கலக்கல்...

இது பிரபலங்களின் அபத்த வாரம் போலிருக்கிறது... சுஜாதாவின் அபத்தமாவது ஒரு வாசகர் வட்டம் என்ற அளவில் முடிந்துவிடும்... பொதுமக்களோடு பேசி பழகும் இன்னொரு பிரபலம் இவ்வார குமுதத்தில் சில அபத்தங்களை உதித்திருக்கிறார்... அதுபற்றி என்னுடைய கருத்து இங்கே நேரம் கிடைத்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள்

8:12 PM  
Blogger அன்பு மொழிந்தது...

அங்க வெங்கட் எழுதுனதுக்கு பதில் எழுதிட்டு இந்த பக்கம் வந்தால் இங்க.. iamsorry
கலக்கிருக்கீங்க. பாராட்டுக்கள்.

பி.கு: இதுக்குப்போய் ஏன் சாரியெல்லாம்:)

11:14 PM  
Blogger Thangamani மொழிந்தது...

காசியைப்போலத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் தீர்ந்துபோய்விட்ட ஒருவர் விலகும் போது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இன்னொருவர் நிரப்ப ஒரு வாய்ப்பு இருக்கிறது. சுஜாதா அதை கருத்தில் கொள்ளலாம்.

iamsorry- கலக்கிட்டார்!

11:27 PM  
Anonymous iamsorry மொழிந்தது...

நல்ல வேளை... சொந்தப் பெயரில் போடலாம் என்று நினைத்து, கடைசி நிமிஷத்தில் பொய்ப்பெயரில் போட்டேன்.

இல்லாட்டி.... எகிறுதுங்கோ.... அட எகிறுதுங்கோ...:-)

11:36 PM  
Blogger அன்பு மொழிந்தது...

ரவி உங்கள் பதிவுக்கும், வந்துள்ள பின்னூட்டத்தின் ஊடான பல தகவல்களுக்கும் நன்றி.

ஆனால், என் மனதுக்குப்பட்ட இன்னொரு கருத்தையும் இங்கு சொல்ல விரும்புகிறேன்....

சுஜாதாவின் எழுத்தில் தவறு கண்டுபிடிக்கும் அளவுக்கு பலர் இங்கு இருப்பது பெருமையாய் இருக்கிறது. அதேநேரம் - இங்குள்ள பலரும் சுஜாதா மூலமாக தெரிந்துகொண்ட விடயம் பலப்பல... அது இன்றும் தொடர்கிறது. கற்றதும், பெற்றதும் தாண்டி எழுதப்பட்ட விசயம் தொடர்பான பிற கட்டுரைகள், புத்தகங்கள் படிக்கும்போது உங்களைப்போன்ற சிலருக்கு இன்னும் அதிக விபரம் தெரியலாம். அல்லது நீங்கள் அந்த துறையில் இருப்பதால் அதுபோன்ற விடயங்கள், நுட்பங்கள் உங்கள் அன்றாட வாழ்வாய் இருக்கலாம்.

இருந்தாலும், சுஜாதா அறிமுகப்படுத்தி தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயமும் இருக்கிறது, என்னைப்போல நிறைய பாமர மக்களும் இருக்கிறோம்...

அதனால், அவர் எழுதுவது தொடர்பாகவோ அல்லது வேறு விடயங்களோ தெரிந்த விற்பன்னர்கள் தொடர்ந்து எழுதுங்கள். ஆனால், அதே நேரத்தில் - சுஜாதா சும்மா... என்ற தொனியில் அவரை கீழிறக்கும் விதமான எழுத்துக்கள், பழிகூறல்கள், கிண்டல்/கேலி தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

இங்கு நான் 'சுஜாதா' என்று பெயர் குறிப்பிட்டிருந்தாலும் அந்த பெயருக்குபதில் பல பெயர்களை மாற்றும் நிலை இருப்பதால் இதை எழுதத்தோன்றியது.

நன்றி.

2:16 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஆனால், அதே நேரத்தில் - சுஜாதா சும்மா... என்ற தொனியில் அவரை கீழிறக்கும் விதமான எழுத்துக்கள், பழிகூறல்கள், கிண்டல்/கேலி தேவையில்லை என்றே நினைக்கிறேன்/

ஆனால், சுஜாதாக்கு மட்டும் ego trip என்று மற்றவர்களைக் கீழிறக்கும் விதமான எழுத்துக்கள், பழிகூறல்கள், கிண்டல்/கேலி செய்ய உரிமை இருக்கிறது. ஏனெனில் அவர் பிரபலம். மற்றவர்கள் பாமரங்களும் பல moronகளும் ஆவார்கள்

2:38 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

ரவி,
இந்த பதிவின் மூலம் இருத்தலியல் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

சில கருத்துக்கள்:

சுஜாதா இருத்தலியல் குறித்து மேம்போக்காக (உங்கள் அளவில் கொஞ்சம் தப்பும் தவறுமாக!) ஆ.வியில் எழுதியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், அவர் அதைப் பற்றி விஸ்தாரமாக படித்தறிந்தவர் அல்லர் என்று அவசரமாக தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை (by Giving him the benefit of doubt!). ஆ.வி, குமுதம் போன்றவற்றுக்காக எழுதும் போது சமரசம் செய்து கொண்டு, எளிமையாக எழுதுவதாக எண்ணி கொஞ்சம் சொதப்பியிருக்கலாம். மற்றபடி, இதனால் 'தவறான புரிதல்' ஏற்படும் என்பதை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில்,

1. ஆ.வி யை படிப்பவர்களில் 95% பேர்கள் சுஜாதா எழுதியிருப்பதை மேய்ந்து விட்டுப் (மறந்து!)போய் விடுவார்கள். அவர்களுக்கு இருத்தலியல் குறித்து இன்னும் தெரிந்து கொள்ள அவசியமும் கிடையாது, ஆர்வமும் கிடையாது என்பதே உண்மை.

2. உங்களைப் (உங்களோடு, வெங்கட், ரோசா, மாண்டியையும் சேர்த்துக் கொள்ளலாம்!) போன்று (சுஜாதாவை தாண்டி) அடுத்த லெவல் வாசிப்பனுபவத்தில் திளைப்பவர்களுக்கு (by giving you the SAME benefit of doubt!) சுஜாதா இப்படி எழுதியதால் எந்த பாதிப்பும் கிடையாது. இதைக் கிண்டலாகவோ, முகஸ்துதியாகவோ சொல்லவில்லை !!!

3. ஆ.வி யை படிக்கும் (என் போன்ற!) மீதி 5% பேருக்கு, சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" படிப்பதால் பயனே! அவர் passing-இல் குறிப்பிடும் பல விஷயங்கள் குறித்து, இணையத்தில் தேடியோ, புத்தகங்கள் படித்தோ நிறைய (விளக்கமாகவும், சரியாகவும்) அறிய முடிகிறது !

அதே போல், விமர்சிப்பது / மறுத்தெழுதுவது தங்கள் உரிமை என்பதையும் உணர்கிறேன். நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

3:03 AM  
Blogger சுதர்சன் மொழிந்தது...

iamsorry, you are excellent! LOL

6:33 AM  
Blogger கோபி(Gopi) மொழிந்தது...

iamsorry - கலக்கல்.. கம்முன்னு சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதிக்கு கோஸ்ட் ரைட்டர் ஆயிடுங்க :-)

சுஜாதாவின் தொழில்நுட்ப, இதர அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை ஆறாண்டகளுக்கு முன்பு நண்பன் ஒருவனின் மூத்த சகோதரன் திருமணத்தில் அவரைச் சந்தித்து சில சந்தேகங்களை கேட்ட போது அவர் சொன்ன பதில்களிலேயே தெரிந்துவிட்டது.

இந்த மாதிரி புகழின் உச்சியில் இருப்போருக்கு தொழில்நுட்ப, இதர அறிவை Update செய்துகொள்ள வாய்ப்பே கிடைப்பதில்லை.

பாவம்.. வேறென்ன சொல்ல..

6:40 AM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

தேவையான கடிதம்.
சுஜாதா உண்மையிலேயே மக்கள் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் எனக்குத் தெரிந்தது இவ்வளவு, இதற்கு மேல் வேண்டுமானால் இங்கேயிருக்கிறது என்று நியாயமான வகுப்பாசிரியர்களைப் போல மேலதிகத் தகவல்களுக்கான சுட்டிகளை, புத்தகங்களைக் காட்டலாம். அதை விடுத்து இது இவ்வளவுதான், உனக்கேன் இதுக்கு மேல என்ற தொனியில் எழுதுவதும், அவ்விதம் அதிகமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கும் இணைய எழுத்துக்களை மட்டந்தட்டி வருவதும் தன்னுடைய ஒற்றைத்தலை இருத்தலைக் குறித்தோ என்று ஐயத்தினைக் கிளப்புகிறது. மேலே யாரோ சொன்ன மாதிரி பாலமாக இருப்பதற்குப் பதில் நட்டாறு வரை கட்டிய பாலமாக இருப்பதில் பிரச்சினைதான்.

6:42 AM  
Blogger கோபி(Gopi) மொழிந்தது...

Disclaimer: நான் சுஜாதாவிடம் சந்தேகங்கள் கேட்டபோது அவர் சொன்ன பதில்களை வைத்து அவர் அறிவு குறித்த என் அளவீட்டைப் பற்றியே முந்தய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். இது என் கருத்து. எவர் மீதும் அதை திணிக்கவில்லை.

6:46 AM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

அன்பின் ரவி,
சார்த்தின்"Being and Nothingness" பற்றி கொசுறாக சுஜாதா எழுதியிருப்பது வேதனைக்குரிய விசயம். தங்களது சுட்டிக்காட்டலுக்கு நன்றி. பல வருடங்களாக அந்த புத்தகத்துடன் போராடிவருகிறேன். புரிவதென்பது இன்னும் இயலாததாக இருக்கிறது!
Existence precedes Essence பற்றி எழுதியிருப்பது ஆச்சரியமில்லை. அதைப்பற்றி ஜவ்வாக இழுக்கலாம். Being and Nothingess -ன் முன்னுரையில் சார்த்தின் கொள்கையை டெகார்டேயின் "I think therefore I am" உடன் ஒப்பிட்டு " I am aware that I exist, therefore I am" என்று சொல்லியிருப்பதினை சுஜாதா ӾĢø எடுத்திருந்தால் இருத்தலியத்தைப் பற்றி நிஜமான அக்கறையோடு எழுத முயன்றிருக்¸¢È¡÷ எனலாம். "பொறுப்பின்மையை வளர்த்தார், அவர் ஒரு நாத்திகவாதி" என்பது மட்டும் சொன்னது இருத்தலியத்தைப் பற்றிய ஒரு skewed outlook கொடுக்கிறது.
தவற்றினைச் சுட்டியதற்கு நன்றிகள். மேலும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
க.சுதாகர்.

11:05 AM  
Anonymous ராமேஸ்வரம் மொழிந்தது...

//'ஆனந்தவிகடனுக்கு இதுவே அதிகம்'//

அய்யோ பாவம். ஒரு தம்மாத்தூண்டு வெப்சைட்டை வெச்சுக்கிட்டு இந்த ஆளுங்க பண்ணுற அலம்பல் தாங்க முடியலடா சாமி. காசி, இதெல்லாம் ஓவரா தெரியல. சுஜாதாவை எதிர்த்து எழுதின உடனே என்ன ஏதுன்னு புரியாத ஆளுங்க எல்லாம் ஓடி வந்து ஆஹா ஓஹோன்னு இந்த பதிவை பார்த்து பின்னூட்டமிடரதை பார்த்தா சிரிப்பு தான் வருது. 'ஒரு பேப்பரும், பேனாவும் இருந்தா எது வேணும்னாலும் எழுதுவீங்களாடா'ன்னு ஒரு படத்திலே வாசகர் கடிதத்துக்கு எழுதின ஒருத்தனை போட்டு பின்னியெடுப்பாங்க. ஒரு கம்ப்யூட்டரை மட்டும் வெச்சுக்கிட்டு யார் யாரு எதை பத்தி எழுதறதுன்னு வெவஸ்தை இல்லாம போய்டிச்சி.

12:04 PM  
Anonymous திருவண்ணாமலை மொழிந்தது...

எனக்கென்னவோ இந்தப் பக்கம் வந்தாலே ஸ்டொமக் அல்சர் நாத்தம் பயங்கரமா அடிக்கிது. அவ்வளவு தான் சொல்ல முடியும்.

12:09 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

ரவி ஸ்ரிநிவாஸ் சுஜாதா எழுதிய அபத்தத்தை குறிப்பிட்ட போது அதை வழிமொழிந்தவர்கள் அவர் கருத்தை ஆமோதிக்கிறார்கள் என்றே நினைத்தேன்... திருமாவின் அபத்த கருத்தை பற்றிய குமுதம் ஆசிரியருக்கு என்ற பதிவில் இப்பதிவில் கருத்து சொன்ன பலர் ஒன்றும் சொல்லாததற்கு அது அவர்களின் உரிமை, நேரமின்மை, படிக்க தவறியிருக்கலாம், கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்று ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்...

ஆனால் குமுதம் ஆசிரியருக்கு வந்த மணிக்கூண்டு சிவா அவர்களின் பின்னூட்டத்திற்கு நான்
பதில் எழுதிய போது எனக்கு நியாயமாக தோன்றிய கிளை சந்தேகம் இது...

ஆனால் இங்கே பின்னூட்டமிட்டவர்கள் அங்கே பின்னூட்டமிடாததற்கு உண்மையான காரணம் - பார்ப்பண எதிர்ப்பு / தலித் ஆதரவா??... நான் அப்படி நினைக்கவில்லை... இருப்பினும் நேரமிருப்பவர்கள் யாராவது என் சந்தேகத்துக்கு விளக்கமளிக்கலாமே...

12:50 PM  
Anonymous கும்மோணம் மொழிந்தது...

ராமேஸ்வரம், திருவண்ணாமலை - பெயர் மாற்றினாலும் எழுதியிருப்பது மாயவரத்தான் .ஸ்டொமக் அல்சர் உம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டதே

1:00 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

1:43 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

1:43 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

பெயரிலி... இங்க பேசினா அடுத்த வூட்டுல வந்து சம்பந்தம் இல்லாம பேசறோம்னு யாராவது சொன்னாலும் சொல்வாங்க... அதனால கச்சேரிய நம்ம இடத்துல வச்சிக்குவோம், வாங்க...

2:00 PM  
Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

யாருப்பா அந்த பெரும் புத்திசாலி கும்மோணம். நீங்க யாரா இருந்தாலும் எனக்கு பிரச்னையில்லை. ஆனா உடனடியாக உங்கள் தலையில் காதை கவர் செய்து ஒரு பெரிய துண்டை எடுத்து கட்டி கொள்ளவும். ரெண்டு காது வழியாகவும் மூளை வெளியில் வழிந்தோடி விடப் போகிறது.

நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது தான். நான் எனது 'மாயவரத்தான்' என்ற பெயரில் தான் பின்னூட்டம் தருவேன். இங்கே மேலே ராமநாதபுரம், திருவண்ணமலை என்ற பெயரில் வந்து எழுதிச் சென்றிருப்பவரின் கருத்தை நான் எழுத வேண்டுமானால் எனது இந்தப் பெயரிலேயே வந்து எழுதி விட்டு செல்வதற்கு எனக்கு என்ன தயக்கம்? இதுவரை எனக்கு குத்தப்படாத 'பிராண்டும்','வசவுமா' இதற்கு மேல் கிடைத்து விடப் போகிறது? எவனுக்காக நான் கவலைப் பட வேண்டும்?

ஆனாலும், அவ்வப்போது நான் உபயோகிக்கிற ஒரு வார்த்தை பிரயோகம் முதற்கொண்டு தெரிஞ்சு வெச்சிருக்கிற மேலே உள்ள ரெண்டு (ஓண்ணு?!) பேரும் செமத்தியான வாசகர்கள் தான். 'மாயவரத்தான் தலைமை வாசகர் வட்டமா?'

7:44 PM  
Anonymous கும்மோணம் மொழிந்தது...

பிரதர் அணங்கு மாயவரத்தான் அவர்களே, உங்ள் மூளைக்கு என்ன் ஆனது என்பதையும் சொல்ல்விட்டீர்களே. அதை பத்திரமாக போயஸ் தோட்ட முகவரிக்கு அனுப்பி வைத்தீர்களா இல்லை தவறிப் போய் டி.ராஜேந்தரிடம் கொடுத்துவிட்டீர்களா. நீர் மாயவரம், நான் கும்மோணம், நமக்குள்ள என்ன தகராறு. மாயவரம் மாபியா தெரியும். வலைப்பதிவாளர்களில் மத்தியில் கும்மோணம் குழு இருப்பது உமக்குத் தெரியுமோ.நான் தான் அதன் அமைப்பாளர். அதன் சார்ப்பில் இப்படி தர்ம அடிகள் கொடுப்பது என் வேலை. பிரதர் அணங்கு எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான். கண்டுக்காதீங்க. ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. எதுக்கும் குற்றாலம் போய் குளித்துவிட்டு கூலாக வாங்க.தப்பித்தவறி கூட அந்துமணியைப் பார்க்காதீங்க, அப்படியே பார்த்தாலும் கேள்வி கேட்காதீங்க. அப்புறம் டென்ஷன் ஆகிடுவீங்க.

1:56 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

பிரதர் அணங்கு மாயவரத்தான் அவர்களே
kumbakonam kusumbu :)

4:44 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

ஐயாம் சாரி யார், ராயப்பேட்டை பாலு பற்றி பேசுவதால் ரா,கா.கி ராயர்களில் ஒருவர்தான் ஐயாம் சாரி
என்று ஊகிக்கிறேன், அவருக்கு மத்தளம் என்றால் ரொம்ப பிரியமோ, ஆறுமுகம் ஐயாம் சாரி உம்முடைய எத்தானவது முகம் :)

4:49 AM  
Anonymous iamsorry மொழிந்தது...

ரா,கா.கி ராயர்களில் ஒருவர்தான் ஐயாம் சாரி
என்று ஊகிக்கிறேன்,


இந்த மாதிரி ஜுஜுபிக்கெல்லாம் எதுக்குங்காணும் அவரை இழுக்கறீர்... அவரே பாவம்.. பாக்கறப்பல்லாம் டைமில்லேன்னு பொலம்பறார்....... ரொம்ப டெஸ்பரேட்னா சொல்லுங்கோ.. அவுத்து வுட்ருவோம்... :-)

ஐயாம் சாரி உம்முடைய எத்தானவது முகம் :)

8-A

5:49 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy) மொழிந்தது...

Ravi,

For some reason, thamizmanam is not reading my musings blog. Am yet to figure out the problem.

posted shanmugam sivalingam's article on existentialism.

http://mathy.kandasamy.net/musings

3:28 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks Mathy, I will read it soon.

4:21 PM  
Blogger ரவிசங்கர் மொழிந்தது...

ராமன் ராஜா எழுதியது சுஜாதா எழுதியதை விட அபத்தமாக இருக்கிறது. நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று இப்படி வதைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மனித குளோனிங் பற்றியும் அதி அபத்தக்கருத்துகளை தமிழ் ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

11:24 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

3:04 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

சிலர் சுஜாதா என்ன எழுதினாலும் பரவாயில்லை, நாலு பேருக்கு இந்தப் பெயர்கள் தெரிகின்றவே அது போதாதா என்ற ரீதியில் எழுதுகிறார்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு பொறுப்புணர்வு தேவையில்லையா.. தாம் என்ன எழுதுகிறோம் என்பதை சரிபார்க்க வேண்டா, பிழை இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டாமா. சுஜாதா ரஜினி காந்தைப் பற்றி இப்படி தப்பும் தவறுமாக எழுதியிருந்தால் இன்று சுஜாதாவிற்கு வக்காலத்து வாங்கும் பலர் அவரை எதிர்த்து இதற்குள் ஒரு இயக்கமே ஆரம்பித்திருப்பார்கள்.அரசியல்வாதிகள் எதையாவது தவறாகக் கூறினால் அதை கிண்டல் செய்யும், விமர்சிக்கும் ஊடகங்கள் பொறுப்பின்றி எழுதுவதும், அப்படி எழுதப்படுபவனற்றை பிரசுரிப்பதும் எப்படி சரியான செய்கைகள் ஆகும்.

மதி இட்டுள்ள கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. இதை நான் முன்பு படித்திருக்கிறேன். இக்கட்டுரை வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை. சுதாகர் கூறியுள்ளது போல் சில நூல்கள்
படிக்க எளிமையானவை அல்ல. ஆனால் சார்த்தை அறிமுகம் செய்யும் நூல்கள், கட்டுரைகளும் உள்ளன. ஒரு வாசகர் அவற்றிலிருந்து துவங்கலாம்.{சுதாகர் என் உறவினர் என்பதையும் இங்கு பதிந்து விடுகிறேன்.}

இருத்தலியம் பொறுப்பின்மையைப் போதித்து,
சார்த்தும் அதையே முன்னிறுத்தினார் என்று எழுதினால் எத்தனை பேருக்கு இதையெல்லாம் படிக்க
வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும், சுஜாதா ஒரு இலக்கிய ஏமாற்றுப் பேர்வழி, ஆங்கில நாவல்களின் கதைகளைத் திருடி தமிழில் எழுதுபவர் என்று யாராவது ஆங்கிலத்தில் அவுட் லுக்கிலோ அல்லது இந்தியா டுடேயிலோ எழுதினால் சுஜாதா சும்மா இருப்பாரா, எதிர்ப்பே தெரிவிக்க மாட்டாரா.

திருமாவளவன் சொன்ன கருத்துக்கள் மீது எனக்கு விமர்சனம் உண்டு. இதை விட அபத்தமான கருத்துக்களை எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். முகமூடிக்கு நான் படித்தவற்றில் விகடனில், குமுததில் வெளியாகும் பேட்டிகளில் உள்ள அப்பத்தங்களை செப்டம்பருக்குப் பின் அனுப்புவேன். அவர் அவற்றையும் விமர்சித்து கடிதம் எழுதுகிறார என்று பார்க்கலாம். பிரபஞ்சன் மரத்தடி பதிலகளில் சொன்னவ எவ்வளவு அபத்தமாக உள்ளன என்பதை நான் என் பதிவில் எழுதியிருக்கிறேன்.

3:08 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

ரவி,
நான் என் மனதில் பட்டதை எடுத்துரைத்தேன், அவ்வளவு தான். உங்கள் ஆதங்கம் (இந்த விஷயத்தில்!) புரிகிறது.
//சுஜாதா ரஜினி காந்தைப் பற்றி இப்படி தப்பும் தவறுமாக எழுதியிருந்தால் இன்று சுஜாதாவிற்கு வக்காலத்து வாங்கும் பலர் அவரை எதிர்த்து இதற்குள் ஒரு இயக்கமே ஆரம்பித்திருப்பார்கள்.
//
No comments, please :)
எ.அ. பாலா

8:52 AM  
Anonymous Tharumi மொழிந்தது...

பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் சிலர்
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்தான் பலர்

7:40 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Sujatha has replied in katrathum petrathum, in this week's issue of a.vikatan.what is your response.

3:21 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://www.vikatan.com/av/2005/aug/21082005/av0803.asp

சுஜாதா

ழான் பால் ஸார்ட் பற்றி நான் எழுதியதில் பல தவறுகள் இருப்பதாக, ஒரு பேராசிரியர் எனக்குக் கடிதம் எழுதி யிருந்தார். வழக்கம் போல் இது பற்றி வலைப் பதிவுகளிலும் சர்ச்சைகள் ஓடிக் கொண்டு இருப்பதாக தேசிகன் சொன்னார். பேராசிரியரின் வயதுக்கு (77) மதிப்பளித்து, அவருக்கு மட்டும் பதிலளித்தேன். ‘நான் எழுதினது எதுவும் சொந்த சரக்கல்ல. ஜி ஞீ லிணீஸ்வீஸீமீ எழுதிய திக்ஷீஷீனீ ஷிஷீநீக்ஷீணீtமீs tஷீ ஷிணீக்ஷீtக்ஷீமீ என்ற புத்தகத்திலும், விவீநீலீணீமீறீ விணீநீக்ஷீஷீஸீமீ எழுதிய ணிuக்ஷீமீளீணீ&விலும் படித்த தகவல்களின் தொகுப்பு.
T Z Lavine â¿Fò From Socrates to Sartre â¡ø ¹ˆîèˆF½‹, Michael Macrone â¿Fò Eureka&M½‹
அவர்கள் தப்பாகவும், தாங்கள் சரியாக வும் இருக்கலாம்!Õ இவ்வாறு எழுதி அனுப்பினேன்.

ஃபிலாசபி, கணிதம் போன்றது அல்ல. பாதராயணரின் ப்ரம்ம சூத்ரத் துக்கு சங்கரர், மத்வர், ராமானுஜர் விளக்கங்கள் நேர்மாறாக இருக்கும். அனைத்தும் வேத உபநிஷத் வாக்கியங்கள்தாம்!

6:08 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

சுஜாதா உளறியது பற்றி ஆனந்த விகடனுக்குக் கடிதம் எழுதுவதனால் உமது மேதாவிலாசத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாமே தவிர வேறு பயன் இருக்கப் போவதில்லை. அது சார்த் அல்ல, சார்த்ர். சுஜாதாதான் பிபிசி மேல் பழி போட்டு ர்ரை விட்டார் என்றால் நீங்களுமா ர்ரை விடுவது?

3:58 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

hello,
i am not having an software to type in tamil,i got interest in existentialism.so i want read some of the books. could u please tell me the name of the book that S.V.Rajadurai written on existentialism.i want to buy that book.i went to book fair in chennai and bought "naalai matrum oru nalaey" from kaalachuvadu pathipagam.and also tell me where i will get the book "Being and nothingness" by jean paul satre.

Is anybody can help me to get the following book.
1.இடைவெளி
2.சாமியார் ஜூவிற்கு போகிறார்

written by S.Sampath, please tell me the name of publisher if u know, otherwise tel me how and where can i find the publisher name for the books.and i request u to send me to my mail-id.

note:-
======
Copied the letters one by one from the blogs.it took 15 minutes to compile the words.

by
krisshnaprabhu
krisshnaprabhu@yahoo.co.in
madurai.

5:18 AM  

Post a Comment

<< முகப்பு