ஒரு பின்னூட்டம்


ப்டத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டி அந்நியன் பேசும் வசனங்கள் அபத்தம், ஒரு மேடைப்பேச்சு என்ற அளவில் கூடசகிக்க முடியாதவை.50களில்,60களில் திமுக முன் வைத்த வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, அங்கே சிந்திரியில் உரத் தொழிற்சாலை, இங்கே முந்திரி தொழிற்சாலை ரகத்தினி விட அபத்தமானவை.

அதை கேட்டு ஆமோதிக்கிற நீங்கள் முதலில் பொருளாதார வளர்ச்சி குறித்த அடிப்படைகளையும், கிழக்காசிய வளர்ச்சி முன்மாதிரி குறித்த் விவாதங்களையும் அறிய முயற்சி செய்யுங்கள்.ஜ்ப்பான் இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது நவீனமடையத்துவங்கியது போருக்கு வெகு முன்பாகவே.சிங்கப்பூர் பெரும் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது.ஒரு நகரக் குடியரசில் அது சாத்தியம், ஆனால் அங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது.சீனாவில் ஒரு கட்சி ஆட்சி , நீங்கள் நினைத்தபடி திரைப்படம் எடுக்க முடியாது, அரசை விமர்சித்தால் சீர்த்திருத்த மையங்கள், அதாவது சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் கழிக்க வேண்டியிருக்கும்.மலேசியாவிலோ அல்லது தைவானிலோ அல்லது சீனாவிலோ இது மாதிரி படம் எடுக்க முடியுமா. இந்தியாவில் சாத்தியம். சுஜாதாவிற்கோ சங்கருக்கோ சமூக அக்கறை கிடையாது. எதையாவது வைத்து காசு பார்க்க வேண்டும்,.இவர்கள் சராசரி இந்தியனை விட மோசமானவர்கள்தான். இவர்கள் ஒட்டுண்ணிகள் என்றே கருதுகிறேன்.

பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசும் வசனம் எவ்வளவு அபத்தம் என்பதை விளக்கி ஒரு கட்டுரையே எழுதலாம். ஆனால் இங்கு சுஜாதா என்கிற ஒரு மனிதன் எழுதுகின்ற அபத்தங்களுக்கும், அதற்கு கிடைக்கிற மரியாதையும் பார்க்கும் போது உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.
முட்டாள்கள் இருக்கும் வரை சுஜாதாவிற்கும், சங்கருக்கும் கவலையில்லை.

this is my response posted in http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_18.html

10 மறுமொழிகள்:

Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

Dear Ravi Srinivas,

This my comment on your comment in my blog. :-)

ரவி ஸ்ரீனிவாஸ்,

உங்களது கேள்வி காட்டமாக இருந்தாலும் ( :-) ) ஷங்கர் மற்றும் சுஜாதா சொன்ன ஒரே காரணத்திற்காக இந்தப்படத்தில் கூறப்படும் கருத்துக்களை புறக்கணித்துவிடாமல் இது பாமரர்களையும் உள்ளடக்கிய ஊடகத்தில் சொல்லப்பட்ட எளிய கருத்து என்ற புரிதலுடன் இதைப் பார்க்க வேண்டுகிறேன். இந்த ஆரம்பத்தை தொடர்ந்து 'அதானே, ஏன், எப்படி அந்த நாடுகள் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் நம்மைத் தாண்டிச் சென்றன?' என்று ஒரு பாமரனையும் யோசிக்க வைப்பதையே இந்தப் படத்தின் வெற்றியாக கருதுகிறேன், இது அவ்வாறான நோக்கத்தை முதன்மையாக கொள்ளாமல், வணிக நோக்கத்தையே பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும்.

நாம் தினமும் சாலைகளில் பார்த்து அருவருக்கிற தனிமனித ஒழுக்கமின்மைகளை குறித்து இந்தப்படம் கேள்வி எழுப்புகிறது. அதிகமான கழிப்பிடங்களை கட்டித்தராமல் பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதே என்கிற அரசாங்கத்தின் நிலைப்பாடு தவறென்றால், பக்கத்திலேயே கட்டண கழிப்பிடமிருந்தும் ஐம்பது காசுக்கு யோசித்துக் கொண்டு பக்கத்து சுவரில் சிறுநீர் கழிக்கும் நம்முடைய நிலைப்பாடும் தவறுதான். சின்ன சின்ன அக்கம்பக்கத்து நாடுகள் நம்மை தாண்டிச் செல்லும் வேளையில் நாம் யோசிக்காமலேயே உட்கார்ந்திருப்பதை விட ஒரு ஆரம்பம் தேவைதானே?


--------------------------------------------------------------------------------


சுரேஷ் கண்ணன் 10:26 AM மணிக்குச் சொன்னது:

///பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசும் வசனம் எவ்வளவு அபத்தம் என்பதை விளக்கி ஒரு கட்டுரையே எழுதலாம்.////

தயவுசெய்து எழுதுங்கள். இவ்வாறான கட்டுரைகள்தான் தேவையே ஒழிய, இந்தப்படம் எவ்வாறு பிராமண ஆதரவு நிலையை நிலைநாட்டுகிறது என்பதெல்லாம் தேவையற்றது.

3:35 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ரவி எழுதியுள்ளதை அப்படியே ஒப்புகொள்கிறேன் -கடைசி வரியை தவிர. சுரேஷின் விமர்சனம் அபத்தமானது. ஆனால் சுஜாதாவும், சங்கரும் தரும் கதையின்பத்தை ரசித்துவிட்டு மக்கள் திரும்புவதால் முட்டாள் என்று என்னால் எண்ண முடியவில்லை.

இந்த விமர்சனம் சங்கர் ஏதோ உன்னத கருத்தை சொல்லிவிட்டதாகவும், ஆனால் அதை பாட்டு, சண்டை பிரமாண்டம் என்ற 'இனிப்பு' கலந்து அளிப்பதாகவும் சொல்கிறது. மக்கள் இனிப்பை மட்டும் சுவைத்துவிட்டு மருந்தை துப்பிவிட போகிறார்களே என்று கவலைப்படுகிறது. எனக்கு அந்த காரணத்தினால் மட்டுமே இந்த படத்தினால் ஆபத்து எதுவும் விளையப் போவதாய் தோன்றவில்லை

3:36 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

//இவ்வாறான கட்டுரைகள்தான் தேவையே ஒழிய, இந்தப்படம் எவ்வாறு பிராமண ஆதரவு நிலையை நிலைநாட்டுகிறது என்பதெல்லாம் தேவையற்றது.//

தேவை எதற்கானது என்பதை முன்வைத்தே தேவை/தேவையற்றது தீர்மானிக்கபடமுடியும்.

4:10 AM  
Blogger goinchami-8A மொழிந்தது...

ஏய்யா இப்பிடி ஒரே விஷயத்தை மறுஒளிபரப்பு செஞ்சு வெறுப்பேத்தறீங்க...? புதுச்சா ஏதோன்னு நெனைச்சு ஏமாந்தேன்.. எல்லாரும் முன்னாடி , தூர்தர்ஷலே வேலை பாத்தீங்களா?

4:12 AM  
Blogger Narain மொழிந்தது...

//தேவை எதற்கானது என்பதை முன்வைத்தே தேவை/தேவையற்றது தீர்மானிக்கபடமுடியும்.//

அது!!

மேலும் பெரிதாக எந்த பாதிப்பினையும் உண்டாக்காத படமென்றுதான் சொல்லவேண்டும். வெளியில் வரும் எவரும் சிறுநீர் கழிக்க அச்சப்படப்போவதில்லை. ஆனாலும், அவர்களுக்கு மேட்ரிக்ஸீனை காண்பித்து ஏமாற்றிவிட்டார்களே என்கிற ஆதங்கமும், ஆறுல 3 பாட்டு சூப்பர்பா என்கிற மனசாந்தியும்தான் இருந்து வருகிறது.

4:37 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பின்னூட்டங்களுக்கு இன்று இரவு அல்லது நாளைக் காலை பதில் இடுகிறேன்.

கரீக்ட்டாய் சொன்ன கோவிஞ்சாமிக்கு ஒரு ஜே இல்லை ஒ போடுவோம் .

நான் போன ஜன்மத்தில் தூர்தர்ஷனில் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்தேன் என்று வைத்தீஸ்வரன் கோயில் ஏடு சொல்கிறது, ஜனங்களைப் படுத்தியதால் இந்த ஜென்மத்தில் இந்தியாவில் பிறந்தவுடன்
முன் ஜென்ம கர்ம வினைகள் வெளிநாட்டிற்குத் துரத்திவிட்டனவாம், ஆயுசு முழுக்க வெளிநாட்டில்தான் கழியுமாம் :)

8:43 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

yedhaiyenum,
Shankar panam paarthu vittar,

Vikrammukku per solla oru padam, innum marketil iruppar..

Sujathavukku innum sila padangal vasanam yeludha kidaikum,

Summa panam pannuvatharkaa seitha pammathu idhu...

1:36 PM  
Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

///பின்னூட்டங்களுக்கு இன்று இரவு அல்லது நாளைக் காலை பதில் இடுகிறேன்.////

Dear Ravi,

When you are going to write? "-)

- Suresh Kannan

2:08 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

i wanted to do then but could not.i can write a lengthy reply but i wonder how far the debate
will go.to explain my position i have to write at length and now i have urgent matters to attend to.

7:21 AM  
Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

///i have urgent matters to attend to.//

No problem. Pl. write whenever you have a leisure time, as a seperate post.

- Suresh Kannan

7:57 AM  

Post a Comment

<< முகப்பு