ஒரு 'பொன்மொழி'

வலைப்பதிவுகளைப் பற்றி ஒரு பொன் மொழி கீழே தரப்பட்டுள்ளது. அதை உதிர்த்தவர் யார்என்பதை ஊகிக்க முடிகிறதா ?

Avoid blogs, they are endless ego trips.

16 மறுமொழிகள்:

Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

இன்றைய நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் படிச்சீங்களா ரவி?!

பின் குறிப்பு : நான் இந்தியன் எக்ஸ்பிரசும் படிச்சேன்.. அதுக்கு அப்புறம் அது குறித்து இங்கேயே வந்திருக்கும் இன்னொரு பதிவையும் படிச்சேன்.

10:59 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மாயவரத்தான் அவர்களே, நீங்கள் அந்துமணியின் பதில்கள் தவிர வேறு எதையும் ஞாயிற்றுகிழமைகளில் படிப்பதில்லை என்றல்லவா நினைத்திருந்தேன்.
கோயிஞ்சாமி 12B

12:06 PM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

//மாயவரத்தான் அவர்களே, நீங்கள் அந்துமணியின் பதில்கள் தவிர வேறு எதையும் ஞாயிற்றுகிழமைகளில் படிப்பதில்லை என்றல்லவா நினைத்திருந்தேன்.
கோயிஞ்சாமி 12B//

அழுத்தமான இன்றைய நாளில் நான் மனம் விட்டு சிரித்தது இந்த பின்னூட்டத்திற்குதான்

மாயவரத்தான் கோவிக்காதிங்கோ...

12:40 PM  
Blogger Narain மொழிந்தது...

Ravi, i read the column. He quotes from McLuhan and forgot his final word "Medium is the message". What to say?

12:49 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

1:09 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

மாயவரத்தான் - அதையும் படித்தேன், மாலனின் பதிவின் வழியே

கோயிஞ்சாமிகள் எத்தனை பேர், வழித்தட எண்கள் எவை என்று யாராவது பட்டியல் தாருங்களேன்,
ஒருத்தர் 8A என்கிறார் இன்னொருவர் 12B என்கிறார் :)

மாயவரத்தானும், குழலியும் சேர்ந்து இங்கே சிரித்தாலும், எங்கே சிரித்தாலும் சரி, உங்கள் நண்பர்கள் இங்கு வந்து சேர்ந்து சிரித்தாலும் சரிதான்.என்றென்றும் அன்புடன் பாலா எங்கிருந்தாலும் உடனடியாக இங்கே வரவும்.

நாராயண் அதுதான் சுஜாதாவின் தனித்தன்மையே :(

1:10 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் மொழிந்தது...

பீஷ்மர்- ரிட்டயர்மென்ட் வயசைத் தாண்டி வேலை செய்தால் என்ன ஆகும் என நிரூபித்தவர்!
-- This is a part of my comment to Bala's Blog

Looks it suits to more than Bhishma and more so for other pithamahs!

3:07 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

ரவி,
//மாயவரத்தானும், குழலியும் சேர்ந்து இங்கே சிரித்தாலும், எங்கே சிரித்தாலும் சரி, உங்கள் நண்பர்கள் இங்கு வந்து சேர்ந்து சிரித்தாலும் சரிதான்.என்றென்றும் அன்புடன் பாலா எங்கிருந்தாலும் உடனடியாக இங்கே வரவும்.
//
என்னை ஏன் இந்த வம்பில் இழுத்து விடுகிறீர்கள் ??? :)) இருந்தாலும் "நண்பர்கள்" குறித்த உங்கள் புரிதல் ஓரளவு சரியே !!!

குழலியைப் பாருங்கள் ! அந்துமணி (அல்லது தினமலர்!) என்ற வார்த்தையை கூகிளில் தேடி இங்கு வந்து பின்னூட்டமும் இட்டு விட்டாரே ;-)

சுஜாதா அவர்கள், இப்படி சொல்லியிருக்க வேண்டாம் ! "Ego Trip" அடிக்காத பல நல்ல (தமிழ்) வலைப்பதிவுகள் இருக்கின்றன.

//கோயிஞ்சாமிகள் எத்தனை பேர், வழித்தட எண்கள் எவை என்று யாராவது பட்டியல் தாருங்களேன்,
ஒருத்தர் 8A என்கிறார் இன்னொருவர் 12B என்கிறார் :)
//
எனக்கும் பயங்கர confusion தான் :)

பி.கு: குழலி, கிண்டல் அடித்தேன் ! தவறாக நினைக்க வேண்டாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

3:37 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

suresh,
//Looks it suits to more than Bhishma and more so for other pithamahs!
//
Good one :-)

3:43 PM  
Blogger Thangamani மொழிந்தது...

ஈகோ இல்லாத, சுஜாத புழங்கும் ஒரு துறையையாவது அவரால் காட்ட முடியுமா? சினிமா, அரசியல், (சங்கர) மடங்கள், கர்நாடக இசை, பத்திரிக்கை, இலக்கியம் etc. எதில் இல்லை. மக்களுகு தங்களுக்கு வெண்டியது எது என்பதை தேடித் தெரிந்துகொள்ளத் தெரியும் என்ற நம்பிக்கைகூட (அதுவும் இத்தனை வயதில்) வராமல், ஆச்சர்யமாய் இருக்கிறது!

ஒன்றும் மட்டும் தெரிகிறது, பதிவுகள் சிலரை சங்கடப்படுத்துகின்றன.

4:37 PM  
Blogger துளசி கோபால் மொழிந்தது...

மாயவரத்தாரே
நேத்து தினமலரில் 'அந்துமணியின்
பதில்கள்' வரலையேப்பா! நெட்லேயா படிச்சீங்க?

பாலா,
//"Ego Trip" அடிக்காத பல நல்ல (தமிழ்) வலைப்பதிவுகள் இருக்கின்றன. //

போங்க பாலா. இப்படியெல்லாம் புகழாதீங்க. வெக்கமா இருக்கு:-)

ரவி,

உங்க பதிவுலே இப்படி எழுதிட்டேன். sorry.

என்றும் அன்புடன்,
துளசி.

5:03 PM  
Blogger goinchami-8A மொழிந்தது...

கோயிஞ்சாமிகள் எத்தனை பேர், வழித்தட எண்கள் எவை என்று யாராவது பட்டியல் தாருங்களேன்,
ஒருத்தர் 8A என்கிறார் இன்னொருவர் 12B என்கிறார் :)


கோயிஞ்சாமிகள் அனானிமஸ் கமண்ட்டுப் போடுவதில்லை. எல்லா கோயிஞ்சாமிகளுக்கும், ப்ளாகர் கொடுத்த உருப்படியான ஐடியே இருக்கிறது. கோயிஞ்சாமி கிளப்பில் யார் யார் உறுப்பினர்கள் என்று தெரிந்து http://goinchami.blogspot.com/ வலைப்பதிவின் முதல் பக்கத்துக்கு வருகை தரவும். ஆனால் யார் எந்த ஐடியில் போடுகிறார்கள் என்பது மட்டும் பழனி ( சும்மனாச்சியும் ஒரு சேஞ்சுக்காக ) ரகசியம். எவ்வளவு ரூபாய் லஞ்சம் குடுத்தாலும் சொல்ல மாட்டோம்.

ஒன்றும் மட்டும் தெரிகிறது, பதிவுகள் சிலரை சங்கடப்படுத்துகின்றன.

தங்கமணி அவர்களே, அந்த சிலரில் ஓரிருவர் கோயிஞ்சாமிகள். அவர்கள் வந்து உங்களுக்கு பதில் சொல்லுவார்கள்.

5:23 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

மாயவரத்தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். கொஞ்சம் விட்டால் நீங்கள்தான் அந்துமணி என்று சொல்லிவிடுவார்கள்.

துளசி இதில் எதற்கு சாரி .

சுரேஷ் அந்த பினாத்தல் என்ற முன் அடைமொழியை எடுத்துவிடுங்கள்.

உலக் கோயிஞ்சாமிகளே ஒன்று சேருங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை பிளாக்கர் அடையாளத்தைத் தவிர.
ஒருவேளை கோயிஞ்சாமி கிள்ப்பில் சேர முடியாத கோயிஞ்சாமிகள்தான் இப்படி பெயர்தராமல் கோயிஞ்சாமி 12B 13அ என்று எழுதி குழப்புகிறார்களோ. எச்சரிக்கை வழக்குத் தொடருவோம் 48 மணி நேரக் கெடு என்று ஒரு பதிவு போடுங்கள்.அப்புறம் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். அப்புறம் பெண் பால் கோயிஞ்சாமிகளுக்கு தனியாக கிளப் கிடையாதா.

பாலா, கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது , எ.அ.பாலாதானே, ஞான பண்டிதா, வலையேறி விரைந்தொடி வந்த வடிவேலா இதை கிருபானந்த வாரியார் குரலில் படித்துக் கொள்ளவும்

11:03 PM  
Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

ஹிஹி... வாரா வாரம் 'அந்துமணி' மட்டும் தான் படிப்பேன். நேத்தைக்குன்னு பாத்து அவரு அம்பேல் ஆகிட்டாரு. அதான்..!! மற்றபடி இந்தளவுக்கு என் மேல் நம்பிக்கை வைத்திருக்கீற கோடானு கோடி நெஞ்சங்களுக்கு நன்றி.. நன்றி.. நன்றி..!

1:14 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

**************
பாலா,
//"Ego Trip" அடிக்காத பல நல்ல (தமிழ்) வலைப்பதிவுகள் இருக்கின்றன. //

போங்க பாலா. இப்படியெல்லாம் புகழாதீங்க. வெக்கமா இருக்கு:-)
*****************
இது ... இது ... சூப்பர் :)
ஆனாலும், நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்னு பெரியவங்க சொல்றாங்க ;-)

மத்தபடி, இந்த பதிவின் பின்னூட்டங்களை படிக்கையில் மனசு லேசானதை உணர்ந்தேன் !!! பொதுவாக, பின்னூட்டர்கள் (அல்லது
மறுமொழியாளர்கள்!!!) ஒரு ஜாலியான மூடில் இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. அனைவரும் இப்படியே தொடர்ந்தால்
நல்லது !!! விவாதமும் செய்யலாம், ஒருவரை ஒருவர் இடறாமல் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

5:23 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

response posted in padma arvind's blog is given here for the sake of record.please dont comment on it in this blog.

கோயிலின் கருவறைக்குள் நுழையும் உரிமை ஒரு சிலருக்கே இருக்குமானால், இங்கு சங்கராச்சாரியார்கள், நேபாள மன்னர் அதை நீக்கி யாருக்கும், கோயிலில் பூஜை செய்யும்
அர்ச்சகர்கள் தவிர, யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று ஆக்க வேண்டும்.இதுதான் நான் சொல்லவந்தது.கருவறைக்குள் நுழைவது ஆகமவிதிகளின் படி வழிபாடு நடத்தப்படும் கோயில்களில் அனைவருக்கும் கிடையாது.நானறிந்த வரையில் பல கோயில்களில் எந்தத்துறவிக்கும், சங்கராச்சாரியாருக்கும் இந்த உரிமை கிடையாது.

உச்சநீதிமன்றம் 2002ல் கொடுத்த தீர்ப்பின் படி அர்ச்சகராககும் உரிமை அனத்து இந்துக்களுக்கும் உண்டு.முறைப்படி பயிற்சி பெற்றவர் யாராயிருந்தாலும் ஜாதி பாகுபாடு காட்டாமல் அவரை அரச்சகராக அரசு நியமிக்கலாம். தமிழக அரசு பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க தயாராக உள்ளது என்று இந்த் ஆண்டு மார்ச் 8ம் தேதி அறிவித்தது. அதை விஸ்வ இந்து பரிஷத் ஏற்கவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்துதான் சட்டம் இயற்றப்பட்டது, முன்னர் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.ஆனால் 2002ல் தரப்பட்ட தீர்ப்பு வேறுவிதமாக உள்ளது. இது பழைய கண்ணோட்டத்திலிருந்து மாறுபடுகிறது.

அனைவரும் கருவறைக்குச் சென்று வழிபாடு நடத்த வகைச் செய்யும் சட்டம் எதுவும் இயற்றப்பட்டதாகவோ அல்லது அதை உச்சநீதிமன்றம் தடை செய்ததாகவோ தெரியவில்லை, நானறிந்த வரையில்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் வழிபாட்டு உரிமை மத உரிமைகளின் கீழ் வருகிறது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை எப்படிப் பொருள் கொள்வது என்பதுதான்
பிரச்சினையே.ஒரு அடிப்படை உரிமை (அனைவருக்கும் சம உரிமை) இன்னொரு அடிப்படை உரிமையுடன் (இங்கு மத உரிமை, சம்பிரதாயங்களை, பாரம்பரிய வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் உரிமை) முரண்படும் வகையில் பொருள் கொள்ளப்பட்டு அமுல் செய்யப்பட்டால்
என்ன நிலைப்படு எடுப்பது, சட்ட ரீதியாக இதை எப்படித் தீர்ப்பது என்பதே கேள்வி

7:42 AM  

Post a Comment

<< முகப்பு