ஒரு அவசரப் பதிவு- உங்கள் மேலான கவனத்திற்கு

சக வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் வணக்கங்கள். நவம்பர் 2003 முதல் நான் தமிழில் வலைப்பதிந்து வருகிறேன். தொடர்ந்து இடைவெளி இல்லாமல் என்று கூற முடியாது. உங்கள் ஆதரவிற்கும்,கருத்துக்களுக்கும் நன்றி. அவற்றை நான் மதிப்பதாலும், உங்களிடம் சிலவற்றை தெளிவுபடுத்த, விவாதிக்க விரும்புவதாலும் இந்தக் குறிப்பினை இட்டுள்ளேன். இது ஒரு தன்னிலை விளக்கம்.

தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் கருத்தினைக் கூறும் சுதந்திரம் முக்கியமானது.இணையத்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்ப்டும் சுதந்திரம் இது. இது முக்கியமான உரிமை என்று நான் கருதுகிறேன். எனவேதான் என்னுடைய வலைப்பதிவில் தன் பெயரினை அல்லது தன்னைப் பற்றி வேறு தகவல்கள் தர வேண்டிய கட்டாயமின்றி கருத்துக்களை பதிய வழி இருப்பதை சிலர் நீக்கிவிடுமாறு ஆலோசனை கூறியும் நான் நீக்கவில்லை.

அதே சமயம் என்னுடைய வலைப்பதிவில் யார் எந்த இணைய முகவரியிலிருந்து படிக்கிறார்கள், பின்னூட்டம் இடுகிறார்கள் என்பதை சேகரிக்கும், பதிவு செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனெனில் அவ்வாறு சேகரிப்பதும் ஒருவர் தன் அடையாளத்தினை வெளிக்காட்டாமல் படிக்க,பின்னூட்டமிட இடைஞ்சலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இணைய வர்த்தக தளங்களில் கடனட்டைகள் போன்றவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுவதாலும், பிற காரணங்களுக்காவும் இவ்வாறு சேகரிப்பதும், பதிவு செய்யவும் தேவை இருப்பதை நான் அறிவேன். வலைப்பதிவு என்பது வணிக தளம் அல்ல. இங்கு சுதந்திரமாக கருத்துக்களை விவாதிக்க உரிமை உண்டு, உங்கள் சுதந்திரத்தினை மதிக்கும் நான் அதற்கு இடமளிக்கும் வகையில்தான் வலைப்பதிவினை வைத்திருக்க வேண்டும்.

புனை பெயர்களில் எழுதுவது, தன் சொந்தப் பெயரிலும், புனைபெயர்(களில்) வலைப்பதிவு(கள்) வைத்திருப்பதும், எழுதுவதும் என்னைப் பொருத்தவரையில் தனிப்பட்ட நபர்களின் தெரிவுகள். அதில் நான் தலையிட மாட்டேன். ஏனெனில் சமயங்களில் புனை பெயரில் எழுதுவது குறிப்பிட்ட ஆளுமை, பெயர் என்பதற்கு அப்பால் சிந்திக்க உதவுகிறது.

காங்கிரஸின் தலைவராக இரண்டாவது முறை (3வது முறை?) தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நேரு அது குறித்து ஒரு கட்டுரையினை சாணக்யா என்ற பெயரில் எழுதினார். அதில் அவர் மீது, காங்கிரஸ்மீதும் விமர்சனக் குறிப்புகள் இருந்தன. அக்கட்டுரையை அவர்தான் எழுதியது என்று தெரியாமல் படிக்கும் எவரும் அதில் உள்ள கருத்துக்களை ஒரு நடுநிலையான விமர்சகரின் கருத்துக்கள் என்றேகொள்வர்.

எனவே ஒருவரின் கருத்து சுதந்திரம் என்பது தான் விரும்பிய வகையில் பிற பெயர்களிலும் , பெயர் தெரிவிக்காமலும் கருத்தினை தெரிவிக்கும் சுதந்திரத்தினையும் உள்ளடக்கியதுதான். இது பலருக்குப் புரிவதில்லை. எந்த சுதந்திரமும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக அதை நிராகரிக்கும் போக்கினையா நாம் கடைப்பிடிக்க முடியும். என் கருத்துக்களை படிக்கலாம், சர்சிக்கலாம், இங்கு ஆளுமை முக்கியமல்ல, கூறும் கருத்துக்களே முக்கியம் என்று நான் கருதுகிறேன். ஆகவேதான் ஒருவர் தன் பெயரில் கூறினாலும், புனை பெயரில் கூறினாலும், அல்லது பெயரினை தெரிவிக்காமல் எழுதினாலும் அதை நான் வலைப்பதிவில் படிக்கத் தயாராக இருக்கிறேன்.

அது போல் யார் வேண்டுமானலும் கருத்துச் சொல்ல இடமளிப்பதும் இன்றியமையாயது என்று நான் கருதுகிறேன். ஆகையினால் யாகூ 360 வலைப்பதிவு சில வசதிகளை அளித்தாலும் அதை நான் வலைப்பதிய பயன்படுத்துவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்.

ஒருவர் பெயரில் இன்னொருவர் பின்னுட்டமிடுவது ஒரு பெரிய பிரச்சினையாகவில்லை என்னைப் பொறுத்த வரையில்.அப்படியே இன்னொருவர் எழுதினாலும் என் எழுத்து,கருத்துக்களுடன் பரிச்சயமுடையவர்களால்என் எழுத்தினை, கருத்தினை அடையாளம் காண்பது சிரமம் அல்ல. நான் கருத்துக்களை கார சாரமாக விவாத்திருக்கலாம், ஆனால் தரக்குறைவாக எழுதுவதில்லை, தனி நபர் மீது அவதூறு பரப்புவதில்லை,ஜாதி,மதம்,இனம், பாலினம் ஆகியவற்றில் பெயரில் வசை பாடுவதில்லை என்பது தெரிந்த ஒன்று. ரோசா வசந்துடன் சர்ச்சை எழுந்த போது அவர் பதிவில் பின்னூட்டமிடுவதில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தவன் நான். அவர் பதிவினைப் படிக்கிறேன் அங்கு பின்னூட்டமிடுவதில்லை அவ்வளவுதான். எனவே நான் என்ன எழுதுவேன் என்பதை ஊகிப்பது ஒரள்விற்கேனும் சாத்தியம்.

இப்போது சில வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவில் இந்த இணைய முகவரியிலிருந்து இந்த நேரத்தில் பின்னூட்டமிடபட்டது என்ற தகவல்களைத் தருகிறார்கள். இத்தகவல்களை சேகரிக்கிறோம் என்று இவர்கள் வெளிப்படையாக தங்கள் வலைப்பதிவுகளில் கூறி இருக்கிறார்களா.அப்படி தகவல் சேகரித்தால், தகவல் சேகரிக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் கூறி, அதற்கான காரணங்களை முன் வைப்பதுதானே முறையும், நியாயமும் கூட. பல தளங்களில் இது குறித்து வெளிப்படையான அறிவிப்பும், பிரைவஸி பாலிசி குறித்தும் தெரிவிக்கப்படுகிறது.

வணிக நோக்கற்ற வலைப்பதிவுகளில் ஏன் இந்த குறைந்தபட்ச நாகரிகம் கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்த நாகரிகம் தேவை என்று கருதுகிறேன். போலிப் பின்னூட்டங்கள்,ஆபாசப் பின்னூட்டங்கள் என்று காரணங்கள் கூறப்பட்டாலும் இத்தகவல்கள் இப்பிரச்சினைகள் எழும் முன்னரே சேகரிக்க்ப்படுகின்றன, இப்பிரச்சினை தங்களுக்கு இருப்பதாக கூறாத வலைப்பதிவாளர்களும் தகவல் திரட்டுவதாகவே தோன்றுகிறது. ஆனால் இவர்கள் யாரும் ஏன் தங்கள் வலைப்பதிவினில் வெளிப்படையாக இது குறித்து ஒரு குறிப்பினை அல்லது வலைப்பதிவில்ஒரிடத்தில் என்னென்ன தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பதை எழுதவில்லை. இப்படி சேகரிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது அதில் ஒப்புதல் இல்லை என்றால் அதை தெரியப்படுத்துங்கள் என்று கூறும் எண்ணம் கூட ஏன் இல்லை. தாங்கள் பெரிய தொழில் நுட்பவல்லுனர்கள், நாம் யாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கா.

தமிழ்மணத்தில் இப்படி தகவல் திரட்டும் வலைப்பதிவுகளை அடையாளம் காட்ட வசதி இருக்க வேண்டும். வலைப்பதிவிம் பெயருடன் இது குறித்த தகவல்களைக் குறிக்கும் ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அப்படி தகவல் ஏதும் திரட்டப்படவில்லை என்றால் அதுவும் அடையாளம்காட்டப்பட வேண்டும். இப்போது யார் எந்தெந்த தகவல்களை திரட்டுகிறார்கள், எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இப்படி திரப்பட்டும் தகவல்கள் எந்தளவு நம்பகமானவை என்ற கேள்விக்குள் இப்போது நான் போகவில்லை.

இக்கேள்விகளுக்கு நாம் விடை கண்டாக வேண்டும். வலைப்பதிவுகளில் திரட்டப்படும் தகவல்கள் அவைபயன்படுத்தப்படும் விதம் இதில் உள்ள தார்மிக, அறநெறிப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

முதற்கட்டமாக் அப்படி தகவல் திரட்டாத வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவுகளை அதை தெளிவுபடுத்த வேண்டும். நான் அதைச் செய்யப்ப் போகிறேன். என்னுடய வலைப்பதிவுகளில் அவற்றை படிக்கும், பின்னுட்டமிடும் நபர்கள் குறித்த தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் உலாவி, இணைய முகவரி உட்பட எந்த தகவலும் திரட்டப்படுவதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். முன்னரும் இப்படி தகவல் திரட்ட்டியதில்லை. இனியும் அதற்கான தேவை இருக்கும் என்று நான் கருதவில்லை. அதாவது நீங்களாக விரும்பித் தரும் தகவல்களே இடம் பெறுகின்றன, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தகவலும் திரட்டப்படுவதில்லை.

அறிவிப்பின்றி தகவல் திரட்டுவதாக நான் அறிய வந்துள்ள வலைப்பதிவுகளை இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படும் வரை, தாங்கள் என்னென்ன தகவல்கள் திரட்டுகிறோம் போன்றவற்றை சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்கள் தெளிவுபடுத்தும் வரை நான் படிக்கப்ப் போவதில்லை, பின்னூட்டமும் இடப் போவதில்லை.

உங்கள் எதிர்வினையினை அறிய விரும்புகிறேன். நான் எழுப்பியவுள்ள சில கேள்விகளை நாம் விவாதித்து விடை காண முடியும். அது பரஸ்பர நம்பிக்கையினையும், புரிதலையும் அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன்.

37 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

hi
dont you have better things to do

3:16 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ம். சுவாரசியமானது. இதுவரை நான் புரிந்துகொண்டவரையில் யாரும் தகவல்களை சேகரிக்கவேண்டும் என்ற நோக்கத்தொடு செய்யவில்லை. பெரும்பான்மையோர் இலவசசேவைகள் வழங்கும் , வாசிப்பு எண்ணிக்கையைச் சொல்லும் வசதியை பயன்படுத்துகிறார்கள். அதில் இலவசமாக வரும் தகவல்களைக்கொண்டு தேவைப்படும்போது ஊர்,இடம்,ஐபி எண் ஆகியவற்றை தெரிவிக்கிறார்களே ஒழிய இது நிரந்தரமாக சேமிக்கப்படவில்லை என்பேன்.

மேலும் , நெட்ஸ்டாட்பேசிக் போன்ற அமைப்பின் சிறிய நீலநிறப்படம் இருந்தால் அது இந்த் தகவல்களை தரும் என்பது எனக்ல்குத்தெரிந்து இங்கு கொஞ்ச நாட்கள் தொடர்ந்து எழுதிவரும் 80% பதிவகளுக்கும் தெரியும் என்றே நிணைக்கிறேன்.

ஒருவேளை அவ்வாறு வெளிப்படையாக செய்வது ஒருவேளை போலிப்பின்னூட்டங்களை "பயமுறச்செய்து" நாளடைவில் குறைக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால் அப்படி அறிவிக்கவேண்டும் என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.

3:34 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

நீங்கள் சொல்வது சரி. நிறைய வலைப்பதிவாளர்கள் google.com ad தங்கள் வலைபதிவில் இடுகிறார்கள் இவர்கள் மறைமுகமாக தன் வலைபதிவின் வாசகர் விவரங்களை கேவலம் சில்லறை காசுகளுக்காக விற்கின்றனர். குறிப்பாக இதுவும் அவாதான். இதற்கு தன் மனைவியை விற்கும் மாமா வேலை செய்யலாம் இது போன்ற அற்பர்கள்.

3:59 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

நீங்கள் சொல்வது சரி. நிறைய வலைப்பதிவாளர்கள் google.com ad தங்கள் வலைபதிவில் இடுகிறார்கள் இவர்கள் மறைமுகமாக தன் வலைபதிவின் வாசகர் விவரங்களை கேவலம் சில்லறை காசுகளுக்காக விற்கின்றனர். குறிப்பாக இதுவும் அவாதான். இதற்கு தன் மனைவியை விற்கும் மாமா வேலை செய்யலாம் இது போன்ற அற்பர்கள்.

3:59 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

நீங்கள் சொல்வது சரி. நிறைய வலைப்பதிவாளர்கள் google.com ad தங்கள் வலைபதிவில் இடுகிறார்கள் இவர்கள் மறைமுகமாக தன் வலைபதிவின் வாசகர் விவரங்களை கேவலம் சில்லறை காசுகளுக்காக விற்கின்றனர். குறிப்பாக இதுவும் அவாதான். இதற்கு தன் மனைவியை விற்கும் மாமா வேலை செய்யலாம் இது போன்ற அற்பர்கள்.

3:59 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

test

4:40 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/பின்னுட்டமிடும் நபர்கள் குறித்த தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் உலாவி, இணைய முகவரி உட்பட எந்த தகவலும் திரட்டப்படுவதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்./
நான் பின்னூட்டங்கள் பிழையான விதத்திலே வரும்போது, அதைச் சூழ்ந்த நேரத்திலே, திரட்டுவதுண்டு. திரட்டுவதற்கான ஒரே காரணம், இப்படியான பின்னூட்டம் தொடர்ந்து என்னைத் தாக்கவென்றெ வருகின்றதா என்பதைக் காணவும் அப்படியான நிலையினைக் கண்காணிக்கிறேனென்பதை அந்த மனிதர் அறிந்து கொண்டால், ஓரளவுக்கு நேரச்சிக்கலையிட்டு அவர் குறைத்துக்கொள்ளவும். கூடவே, இரட்டைநிலைப்பாடு கொண்டு, முகமூடியாக எழுதுகின்றவர்களைக் கண்டித்துவிட்டுத் தாமே முகமூடியாக எழுதுகின்றவர்களைக் கண்டுகொள்ளவும். மிகுதிப்படி, வேறெந்தக் கெடுதலுக்காகவும் அல்ல. ;-)

4:52 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Dear Ravi,

thanks a ton...i ve just been a reader all these days and i do post a comment once in a while.But now since most of the bloggers dont allow "others"..in their blogs i was dilly dallying in my mind whether i should start a blog just to post a comment when iam inspired by an article...thanks anyway...for allowing US to comment.

Radha sriram

1:54 AM  
Blogger கஜேந்திர பாலன் மொழிந்தது...

Dear Ravi,

I don't know why such as a big post for this IP matter. When you surf through internet your IP is captured in 1000 places. You might have seen spammer concept in mail and feedback section. We cannot offense them since they are sending spammer mail. Spammer is utilising your IP info and mail id info.

I have seen among 90% of the technically sound bloggers are using free IP tracker as counter. You cannot blame them at all. Because they want statistics of visitors etc., etc.,

You IP is exposed even for small server side program. According to HTTP protocol RFP, HTTP client sends IP information to server. There is nothing wrong by design. Even non commercial website allows to ban IP which you don't like. Due to this reason, there are so many technical concepts developed like firewall, proxy, anonymous browse etc., etc.,

Everyone follow their own method to avoid outsider to enter into your house. Even if you are not a blogger, if you are exposed to internet without firewall etc.,, you can see so many people will try to hack you. Programs like kaja, napstar are nothing but sharing your machine and allows you to search files on other' machine.

I don't know why this IP exposure is big issue here.

For safe public sex, you must use condom. Likewise for safe browsing, you must use your own firewall. Complaining cannot rectify your problem. You needed protection.

3:35 AM  
Blogger கஜேந்திர பாலன் மொழிந்தது...

//நீங்கள் சொல்வது சரி. நிறைய வலைப்பதிவாளர்கள் google.com ad தங்கள் வலைபதிவில் இடுகிறார்கள் இவர்கள் மறைமுகமாக தன் வலைபதிவின் வாசகர் விவரங்களை கேவலம் சில்லறை காசுகளுக்காக விற்கின்றனர். குறிப்பாக இதுவும் அவாதான். இதற்கு தன் மனைவியை விற்கும் மாமா வேலை செய்யலாம் இது போன்ற அற்பர்கள். //

This is really stupid statement. Whether he knows or not, even thamizmanam is running using google ad. Where is your brain buddy?

3:40 AM  
Blogger கஜேந்திர பாலன் மொழிந்தது...

Dear Ravi,

It is really funny to know that you are worrying about IP address when somebody know how to hack your blogger account. Please check what is our fellow blogger tells in Usha ramachandran's blog Visit here http://nunippul.blogspot.com/2005/07/blog-post_112114101310373341.html

There is a danger. So I am repeating the thread here. (It is from usha's feedback section). Sorry to bug you. You must realise dangerous your blogger account hacked

*************************

Moorthi said...
//இதை செய்கிறவர் என்று ஒற்றை ஆளை காட்டுகிறார்கள், ஆனால் என் சந்தேகம் இன்னும் சிலர் இருக்கலாம்.//

உங்களின் மற்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் இந்தக் கருத்தினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

'இன்னும் சிலர் இருக்கலாம்' என்றால் என்னோடு சேர்ந்த ஒரு பெரிய குரூப்பே இருக்கிறது என்பதாக சொல்லி இருக்கிறீர்கள். நான்தான் என்று உம்மிடத்தில் சொன்னது யார்? அந்த ஆட்டுமந்தை வெறியர் கும்பல்தானே. ஜாதி என்று புலம்பும் அந்த மந்தையை நான் மனிதராகவே பார்க்கவில்லை!

அந்த கும்பல் வாங்கிக் கொடுத்த போண்டாவுக்கும் டீக்கும் புகழ்பாடுபவன் நானல்லன். எனது எந்த புத்தகத்தையும் அச்சடிக்க காக்காய் பிடிக்க வேண்டிய கட்டாயத்திலும் நானில்லை. எதிர்க்க வேண்டும் என நான் நினைத்து விட்டால் கும்பல் எல்லாம் எனக்கு தேவையில்லை. நான் தனி ஒருவனே போதும்.

போலியானவர்களின் பின்னூட்டங்களைத் தடுக்க பெருமுயற்சி எடுத்தவர்களில் நானும் ஒருவன். அதற்காக பலவகையான இலவச ஸ்கிரிப்டுகளையும் உபயோகித்து உபயோகமின்றிப் போகவேதான் 'திருடராய்ப் பார்த்து திருந்தினால்தான் உண்டு' என்றேன்.

ஜாதியே வேண்டாம் என்றபோது ஒரு குறிப்பிட்ட வகை வெறியர்களுக்கு மட்டும்தான் கோபம் வந்தது. அங்கே ஒரு தலித்துக்கோ, வன்னியருக்கோ, மறவருக்கோ, வெள்ளாளருக்கோ, முதலியாருக்கோ கோபம் வரவில்லை. அந்த வெறியர்கள் ஒரு மந்தையாக சேர்ந்து கொண்டு போகும் இடமெல்லாம் என்னைக் கைகாட்டினார்கள். வாலி என்ற பெயரில் வந்து வசைபாடினர். ஒருவர் கொஞ்சம் அதிகமாகச் சென்று என் பெயரில் போலி வலைப்பூவே ஆரம்பித்தார். காமத்தளங்கள் நடத்தப்படுவதாக பொய்யுரைத்தார். அடுத்த ஒருசில மணித்துளிகளிலேயே அந்த தளத்தை உடைத்து யாரென நிரூபித்தேன். இப்போது நான் அவர்களிடத்தில் சவால் விடுகிறேன்.. என்னோடு நேருக்கு நேர் நின்று மேடையில் சவால் விட்டுப் பேசமுடியுமா? ஜாதி இல்லை என்று சொல்லும் என்னைப்போல் உங்களால் வாழ்ந்து காட்டத்தான் முடியுமா?

குதிருக்குள் அப்பன் இல்லை சித்தப்பன் இல்லை என்று யாரேனும் புலம்பக் கூடும். அவர்களுக்கும் இங்கே ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் யூகமாகவோ, மறைமுகவாகவோ சொல்லித் திரிய வேண்டியதில்லை. பெயர் சொல்லியே தாராளமாக எழுதலாம். உங்களுக்கு தகுந்த பதில் தர தயாராக இருக்கிறேன்.

10:18 PM


ramachandranusha said...
மூர்த்தி, கணிணியில் வல்லமை இல்லாத என்னால் சரியான ஆதாரம் இல்லாமல் பெயர் சொல்லி ஒருவரை எப்படி குற்றம் சாட்டமுடியும் என்பதுதான் நான் எழுதியதற்கு பொருள். பலரும் இருக்கலாம் என்று என் ஊகம். அதற்காக நீங்களே இன்னும் பலரை கூட்டி சேர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாக பொருள் கொள்ள வேண்டாம்.
//22-5-2005ல் தோழியர் வலைப்பதிவில் நான் எழுதியது//

"அப்புறம் சாதீ! நாம கேட்டுக் கொண்டா இன்ன சாதில பொறந்தோம்? இதுல ஒசந்த சாதின்னு பெருமை படவும், கீழ் சாதின்னுவேதனை படவும் என்னங்க இருக்கு? இன்னும் எத்தனை நாளு இந்த கொடுமைய கட்டிக்கிட்டு அழப் போறீங்க? உலகத்துல ரெண்டே சாதி- இருப்பவன், இல்லாதவன்! இருப்பவர்கள் ஒன்று சேர மொழி, சாதி, இனம், நாடு....லொட்டு லொசுக்கு எதுவுமே இடையில வராது.
எனக்கும் யாரையும் "காக்கா" பிடிக்க வேண்டிய தேவையில்லை.

மற்றவர்களுக்கு! இந்த ஒரு விஷயத்தை மட்டும் பெரிதாகக்க வேண்டாம் என்பது என் கருத்து.

10:39 PM


maalan said...
>>மாலன் குறிப்பிட்ட, யாஹ¤ குழுவில் உள்ள குறைப்பாடு, எழுதிவிட்டு, படிக்க ஆட்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவேண்டும்<<

ஒரு முறை அழைத்தால் போதும். அவர்கள் அந்த முதல் அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டால் பின் தானாகவே நீங்கள் ஒவ்வொரு முறை எழுதும் போதும் அவர்களுக்கு தகவல் போய்விடும்.

முதல் அழைப்பைக் கூட வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் அழைப்பாக நீங்கள் கருதவேண்டியதில்லை. அதைத் தகவலாக கருதலாம். 'என் கதை இந்த வார விகடனில் வந்திருக்கிறதே பார்த்தாயா?' என்று சொல்லமாட்டீர்களா அது போல.

யாகூ பதிவுகளுக்கும் தமிழ்மணத்தில் இணைப்புக் கொடுத்துவிட்டால் இந்த தகவல் சொல்வது கூடத் தேவை இல்லை. அதை ஏன் தமிழ் மணம் செய்ய முன் வரக்கூடாது? அதைச் செய்யுமாறு ஏன் தமிழ்மணத்தை வற்புறுத்தக்கூடாது?
மாலன்

11:04 PM


ramachandranusha said...
மாலன் எழுதுகிறார், எழுதியுள்ளார் என்பதற்கும் ராமசந்திரன் உஷா எழுதியுள்ளார் என்பதற்கும் உள்ள
வித்தியாசம் எல்லாருக்கும் தெரியும். ஈமெயிலில் செய்தி அறிந்து எத்தனை பேர் படிப்பார்கள்? பிறகு
படிக்கலாம் என்று அப்படியே மறந்துவிடும்.

நான் எழுதியிருக்கிறேன், அதாவது நிஜமாகவே நான், என்று தெரிந்த சில பேருக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து :-), அதற்கு பின்னூட்டம் என்ற பெயரில் சிலர் அனுப்பும் வழக்கமான சிலாக்கிப்புகள் என்னைப் போன்ற சாதாரண எழுத்தாளன், ளி க்கு எந்த வகையில் உபயோகமாய் இருக்கும்?
பெயர் சொல்லாத, அனாமதிய( நாகரீகமான), உண்மை விளம்பிகளின் கமெண்ட்டுகள் எழுத்துக்கு தேவை என்பது என் சொந்த கருத்து

11:41 PM


Thangamani said...
//கணிணி அறிவு கொஞ்சமாய் உள்ள எனக்கு இப்படி ஏதாவது நேர்ந்தால் கமெண்ட் என்பதையே எடுத்து விடுவேன். ஆனால் தமிழுக்கு ஆற்றும் சேவையை நிறுத்த மாட்டேன் என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.//

நாராயணன் சொன்னதுதான். இதுதான் வேண்டிய சரியான பார்வை!

11:43 PM


கஜேந்திர பாலன் said...
Sorry to write this feedback in english. I am not well practised in tamil typing. I have been a lover of thamizmanam so far. Thamizmanam is stimulating me to write my thoughts. I have to fill 3 post to show up in thamizmanam. Thamizmanam was blandest aggretor which inspired many people like me to do tamil blogging. I am ashamed of current situation really. I was really shocked to see following statement from the fellow blogger moorthy.

//ஒருவர் கொஞ்சம் அதிகமாகச் சென்று என் பெயரில் போலி வலைப்பூவே ஆரம்பித்தார். காமத்தளங்கள் நடத்தப்படுவதாக பொய்யுரைத்தார். அடுத்த ஒருசில மணித்துளிகளிலேயே அந்த தளத்தை உடைத்து யாரென நிரூபித்தேன். இப்போது நான் அவர்களிடத்தில் சவால் விடுகிறேன்.. என்னோடு நேருக்கு நேர் நின்று மேடையில் சவால் விட்டுப் பேசமுடியுமா? //

Dear Moorthy,

I am not sure whether your statement is true or false. I don't know which site you are talking about. I was missing from the scene I think. If your statement is true, it is a cyber crime. If it is really a fake blog of you, you must have reported to blogger instead of hacking it. If you really hacked this site, I would say blogger service is not safe. Really I don't know the site which you hacked, otherwise I would have reported this incident to blogger. How can we gurantee that you would not hack other bloggers account. I think blogger should revamp their security features.

I really hate to see all this.

Thanks. I just expressed my view.

11:44 PM


madhumitha said...
உஷா அது போண்டா அல்ல
வடையும்,அரைச்சக்கரை காபியும் என நினைவு

11:46 PM


Sudharsan said...
//அதை ஏன் தமிழ் மணம் செய்ய முன் வரக்கூடாது? அதைச் செய்யுமாறு ஏன் தமிழ்மணத்தை வற்புறுத்தக்கூடாது?//

மாலன்,

திலகபாமா என்பவர் Yahoo 360 பதிவை தமிழ்மணத்தில் சேர்த்திருக்கிறார், தமிழ்மணம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், உங்களுக்கு தமிழ்மணத்தில் புதிய வசதி தேவை என்றால், தமிழ்மணம் மன்றத்தில் 'விழைப்பட்டியல்' என்று ஒரு இழை இருக்கிறது, அங்கே விழையலாம்.

1:09 AM


Moorthi said...
//I am not sure whether your statement is true or false.//

எச்யூஸ்மி மிஸ்டர் கசேந்திரா,

வணக்கமுங்க.. இன்னா நட்துந்திச்சின்னு தெர்யாம மூக்க நொழைக்கலாமுங்களா? நான் சொன்னது உம்மை.. உம்மை.. உம்மையத் தவிர வேறெதுவும் இல்லை. என்னைத் திட்டி எய்துன அந்த பதிவருக்கு கண்டிப்பா தெரியும்.


//I don't know which site you are talking about. I was missing from the scene I think. If your statement is true, it is a cyber crime.//

ஆமாங்களா... சரிங்க.

//If it is really a fake blog of you, you must have reported to blogger instead of hacking it. If you really hacked this site, I would say blogger service is not safe.//

இதத்தானுங்க அல்லாரும் சொல்லிக்கிறாங்க.. ப்ளாக்கருல செல ஓட்டை இருக்குன்னு. ஆனா கொஞ்சம் மூளைய ஊஸ் பன்னினா சரி பன்னிடலாமுங்க.. இது பேக்கு ப்ளோக்கெல்லாம் இல்லையிங்க.. அந்த பயலுங்க ப்ளோக்கு ஆரம்பிச்சி திட்டிட்டு இருந்தானுங்க.. அதான் ஊத்தி மூடுனேனுங்க..

//Really I don't know the site which you hacked, otherwise I would have reported this incident to blogger.//

தாராளமாங்க.. அவிய ஈமெயிலு ஐடி வேனுங்களா?

//How can we gurantee that you would not hack other bloggers account. I think blogger should revamp their security features.//

ஓசில எடம் கொடுத்தவுக வேலியுமா அடைச்சு கொடுப்பாக.. நாமதான் சொந்தமா வேலி வெச்சிக்கனும்..

//I really hate to see all this. Thanks. I just expressed my view.//

நானும் தானுங்க.. நான் சொல்ல வந்த அதே கருத்து தானுங்க..

1:13 AM


Moorthi said...
////இதை செய்கிறவர் என்று ஒற்றை ஆளை காட்டுகிறார்கள், ஆனால் என் சந்தேகம் இன்னும் சிலர் இருக்கலாம்.//

ஒத்தை ஆள காட்றாங்க... ஆனால் இன்னும் சிலர் இருக்கலாம் என எழுதி இருக்கிறீர்கள். இந்த "இன்னும்" என்பதற்கான பொருள் இவருடன் சேர்ந்த இன்னும் என்பதா? அல்லது ஒற்றை என்ற எண்ணுடன் சேர்ந்து இன்னும் பலர்(எண்ணிக்கை) என்பதா என தெரியலீங்க.. நீங்க பெரியவுக.. ரொம்ப படிச்சவுக..

உண்மையிலேயே நீங்கள் நான்தான் என நம்பினால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் இல்லை என்று நீங்கள் நம்பினாலும் அதற்காக மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் நிலையில் நான் இல்லை.

எனக்கு ஒலகத்துல ரெண்டே சாதிங்க.. ஒன்னு ஆஞ்சாதி, இன்னொன்னு பொஞ்சாதி. எங்க ஒளவைப் பாட்டி அதான் சொல்லிக் குடுத்தாக... சாதி வானாம்னு நாஞ்சொல்றதால எனக்கு எதிரிங்க நெறைய வரும்னா திறந்த மனத்தோடு ஏத்துக்குறேனுங்க.. எங்க முண்டாசுக்கவி பாரதியும் அதத்தானுங்க சொல்லிக் குடுத்தாரு..

1:23 AM


vaali said...
அன்பின் உஷா மேடத்துக்கு.
மூர்த்தி செல்லும் இடங்களெல்லாம் நானும் பின் தொடர்ந்து சண்டைபிடிப்பதாக யாரும் நினைச்சுட வேணாம்.ஆபாசப் பின்னூட்டங்களை இடுவது மூர்த்திதானென்று ஐயம் திரிபறத் தெரியும் அதை நான் உங்களுக்கு எப்படி நிரூபிப்பது என்பதுதான் பிரச்சனை.அவர் புரொக்ஸி சேர்வர்களை உபயோகித்து பின்னூட்டுகிறார்.இதைப் படித்தவுடனேயே என்னிடம் சேர்வர் வாங்க வசதி இல்லை என்பார்.புரொக்ஸி சேர்வர் என்பது வழமையாக நீங்கள் உங்கள் நாட்டுக்கு அல்லது பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழங்கியினூடாக இணைய சேவையைப் பெற்றுக்கொள்ளாமல் அதற்கெனவே இருக்கும் மென்பொருள் அல்லது இணையத்தளங்கள் மூலம் இன்னொருவர் பதிவைப் படிப்பதாகும்.அப்படிப் படிக்கும்போது உங்கள் பதிவில் ஐபி ட்ரேஸர் போன்ற மென்பொருட்கள் இருந்தாலும் அவை புரொக்ஸி சேவர் உள்ள நாடான டெக்ஸாசையோ,மெக்சிக்கோவையோதான் காட்டும்.

ஆனால் புரொக்சியையும் ஏமாற்றும் தந்திரம் உண்டு.அதன் மூலம் ஆபாசப் பின்னூட்டங்கள் மலாகா என்னுமிடத்தில் அதாவது மலேஷியாவின் ஒரு மாகாணத்திலிருந்து வருகின்றன என்பது தெரிகிறது.இதே மூர்த்தியும் மலாக்காவில்தான் இருக்கிறார் அல்லது பணிபுரிகிறார்.அவரது பெயரிலேயே வரும் பின்னூட்டங்களை எடுத்துப் பாருங்கள் அந்த ஐபி வேறேதோ நாட்டிலிருந்து வந்திருக்கும்.இணையத்தில் நுழையும்போதே மென்பொருள் மூலம் ஐபியை மாற்றிக்கொண்டு விடுவதால் அவரது சொந்தப் பின்னூட்டம் கூட வேறு ஐபியிலிருந்து வரும்.

அப்படியிருக்க மாலன் கேட்பதுபோல அல்லது இப்போது மூர்த்தி கேட்பதுபோல ஆண்மையிருந்தால் அது நான் தானென்று நிரூபியுங்கள் என்றால் எப்படி நிரூபிப்பது இணையம் தரும் வசதிகள் கையைக் கட்டிப் போட்டிருக்கின்றன.

மூர்த்தி பின்னூட்டமிடும் இடமெல்லாம் சென்று அவரை அடையாளம் காட்டுவதை தொழிலாகவே செய்கிறேன் என்றால் எனக்கு அவர்மீது தனிப்பட எந்த எதிர்ப்பும் இல்லை.என்னை அவருக்கு தெரியுமோ என்றுகூடத் தெரியாது.அவர் மலாக்காவில் இருப்பது கூட நண்பர்கள் மூலமே எனக்குத் தெரியும்.

அவர சொன்னாரே தனது பெயரில் வந்த புளொக்கை ஹக் பண்ணி தான் யாரென்று நிரூபித்தேன் என்று அதெப்படி என்கிறீர்களா அடிப்படையில் புளொக்கர் மிகுந்த பாதுகாப்பு உள்ள தளம்.அதை ஹக் பண்ண முடியாது.அப்படி இவரால் பண்ண முடிந்திருந்தால் டோண்டு பதிவை எப்போதோ ஹக் பண்ணியிருப்பார்.தனக்கான அனுதாபத்தை மற்றவர்களிடம் தேடிக்கொள்ளும் பொருட்டு மூர்த்தி தானே உருவாக்கியதுதான் தன்னுடைய பெயரிலான போலித்தளம்.பின்னர் நான் அவரைப் பற்றிச் சொன்ன இடங்களில் போலிகள் தன் பெயரிலும் பின்னூட்டுவதாய் மற்றவரக்ளை கருதும்படி திசை திருப்ப தன் பெயரிலியே போலிப் பின்னூட்டமிட்டார்.பின்னர் தன்னுடைய திறமையை நிரூபிக்கிறேன் பேர்வழியென்று தன்னுடைய பதிவைத் தானே அழித்துவிட்டார் அல்லது மறைத்துவிட்டார்.இப்படியான மிக நுண்ணிய செயற்பாடுகள் மூலம் மற்றவர்களைப் பயமுறுத்துவதில் இவர் கில்லாடி.உங்கள் வலைப்பதிவு ஹக் செய்யப்பட முடியாதது இயன்றவரை பாஸ்வேர்ட்டை மற்றவர்கள் ஊகிக்கமுடியாதபடி வையுங்கள்.

மாயவர்த்தான் தன்னுடைய பதிவு ஹக் செய்ய முயற்சிக்கப்படுவதாகக் கூறினார்,அது இவரது திருவிளையாடல்தான்.புளொக்கர் தளத்துக்குப் போய் உங்கள் பாவனைப் பெயரை கொடுத்துவிட்டு போர்கொட் பாஸ்வேர்ட் பட்டனை அமுக்குங்கள் உங்கள் மின்ஞ்சலுக்கு நீங்கள் கேட்டுக்கொண்டபடி பாஸ்வேர்ட்டை சேஞ் பண்ணுவதர்கான லிங் என்று ஒன்றை அனுப்புவார்கள்.அப்படி இவர் முயற்சிப்பதால்தான் மாயரவத்தானுக்கு புளொக்கரிலிருந்து மின்ஞ்சல் போயிருக்கிறது.

இதன் மூலம் இவர் செய்ய முயற்சிப்பது என்னவென்றால் உங்கள் பாவனைப் பெயரை டைப் பண்ணிவிட்டு பாஸ்வேர்ட்டை மறந்துவிட்டேன் என்று பட்டனை அமுக்குவார்.பின்னர் மின்ஞ்சல் வந்து சேரவில்லை என்று புளொக்கர் சப்போர்ட்டிடம் முறையிடலாம்.குருட்டாம் போக்கில் நீங்கள் கொடுக்கும் தகவல் சரி என்றால் அந்த கணக்கு உங்களுக்கு கிடைக்கும்.இன்னும் சில சாப்ட்வேர்கள் புளொக்கர் அனுப்பும் லிங்கை உடைத்து உள்ளேபோய் அந்த லிங்கை ஆக்சஸ் பண்ணக் கூடியவை அவை புளொக்கரிடம் பயனில்லாதவை சில மின்ஞ்சல்களுக்கும் கிரெடிட் கார்ட் போன்றவற்றுக்கும் பயனுள்ளவை.யாருக்குத் தெரியும் மலேசியாவில் கிரெடிட் கார்ட் திருடித்தான் பிழைக்கிறாரோ என்னமோ.ஏனென்றால் 24 மணிநேரம் இன்ரநெர்ட்டிலீயே இருக்கிறார் உழைக்க எங்கே நேரம்.போலீஸ் கதைவைத் தட்டினால் தான் வெளிக்கும்

உண்மையைச் சொன்னால் ஒரு கிரிமினல் லாயருக்குரிய சித்தாந்த அறிவு இவரிடம் இருக்கிறது அதைப் பாராட்டத்தான் வேண்டும் .ஆனால் தமிழ்மணம் மாதிரி நான் மிகவும் மதிக்கும் ஒரு தளத்தையும் காசி,மதி போன்றவர்களுடைய உழைப்பையும் இவர் குப்பைக் காடாக்குவதை நான் அனுமதிக்க முடியாது.

மூர்த்திதான் செய்கிறார் என்று தெரிந்துமே வாய்திறக்க விரும்பாமல் பலர் இருக்கிறார்கள் காரணம் அதை வெளியில் சொன்னால் தங்கள் மீதும் சேற்றை வாரியடிப்பான் என்றுதான்.நான் வலைப்பதிவு வாசகன் மட்டுமே பதிவு எதையும் வைத்திருக்கவில்லை எழுதவில்லை.என்மீது சேற்றை வாரியடித்தால் சுவரின் மீது முட்டுவதாகத் தான் இருக்கும்.அவர் எனது தாய் சகோதரிகளைப் பற்றித் திட்டும்போது எனக்கு கவலையேதும் இல்லை.அவரை இனங்காட்டுவதன் மூலம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துச் செய்கிறேன்.

இப்போதும் கூட உங்கள் பதிவிலும் சுரேஷ் பதிவிலும் குதிக்கிறார் எப்படியென்றால் மாலன் காசி போன்றவர்கள் மற்றவர்களௌக்கு போண்டாவும் டீயும் கொடுத்து தன்னைக் கைகாட்டச் சொன்னதாக இருக்கிறது அவரது பேச்சு அப்படியிருந்தும் மாலன் அவரைத் தன்னுடைய நண்பனாக அங்கீகரித்து வைத்திருக்கிறார்.அவருக்கும் மூர்த்தியின் சேவை தேவைப்படுகிறதோ என்னவோ.

டோண்டு பதிவில் மூர்த்தியை நான் திட்டியதற்காகவே ஒக்கா....ஓயி.. என்று படு ஆபாசாமான பெயர்களில் ஆபாசமாகத் திட்டினார்.அது மூர்த்தி இல்லை என்று வைத்துக்கொண்டால் ஒரு கேள்வி மூர்த்தியை நான் திட்டினால் அனாமதேயங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?மூர்த்தி என்ன சங்கத் தலைவனா அரசியக் கட்சித் தலைவனா ஏதோ மாபெரும் தலைவரை நான் திட்டிவிட்டதைப் போன்றல்லவா அனாமதேயங்கள் குதிக்கின்றது என்ன கனெக்சன் முட்டாளுக்கன்றி எல்லோருக்கும் புரியும் கனெக்சன்.

மூர்த்தி இதுவரை யார்வது உன்னை இப்டி புடுங்கியிருப்பாங்களான்னு தெரியல.

1:27 AM


samiyar said...
I agree with most of the points, esp. the last 2 paras of vaali...

moorthy, no one is interested in your stance on caste... If you are a non-believer of caste its up to you... if someone believes in caste, you dont have right to use abusive words against them as if you're a pure human being... why worry, you go ahead and do your duty..

If you are not the one who post dirty comments, then just move on, dont go to each and every place and explain your stance on caste...

1:39 AM


கஜேந்திர பாலன் said...
Dear Moorthi,

I asked you this

//If it is really a fake blog of you, you must have reported to blogger instead of hacking it. If you really hacked this site, I would say blogger service is not safe.//

But you answered this

//இதத்தானுங்க அல்லாரும் சொல்லிக்கிறாங்க.. ப்ளாக்கருல செல ஓட்டை இருக்குன்னு. ஆனா கொஞ்சம் மூளைய ஊஸ் பன்னினா சரி பன்னிடலாமுங்க.. இது பேக்கு ப்ளோக்கெல்லாம் இல்லையிங்க.. அந்த பயலுங்க ப்ளோக்கு ஆரம்பிச்சி திட்டிட்டு இருந்தானுங்க.. அதான் ஊத்தி மூடுனேனுங்க..//

But Blogger privacy statement says...

Information security

We take appropriate security measures to protect against unauthorized access to or unauthorized alteration, disclosure or destruction of data.
We restrict access to your personally identifying information to employees who need to know that information in order to operate, develop or improve our services.
(This is just excerpt). To read fully click on the above blogger privacy statement.

How can we believe your statement?
It is a absolute Cyber crime. If blogger knows that you hacked their security, they can go upto imprisonment. It is not my responsibility to tell all this. Thamizmanam blogger people should know this. So Moorthi you know the techniques to hack others blog.

Dear blogger, please be careful with your blogger data. If possible take backup of your blog. It can be hacked by him if you hate him, it seems.

If you know how to hack blogger, can you please let us know?

2:09 AM

*******************************

5:35 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,
என் வாக்குமூலம்: நான் எனது வலைப்பதிவுக்கு வருகை தரும் வாசகர்கள் சம்மந்தப்பட்ட எந்த தகவலையும் திரட்டுவதில்லை !!! எப்படி திரட்டுவது என்றும் தெரியாது :-(

I think collecting personal info. for a specific purpose is agreeable if a disclaimer (as you specified) is visible in the concerned blog.

Further distribution of personal info. should not be done.

என்றென்றும் அன்புடன்
பாலா

7:52 AM  
Blogger கஜேந்திர பாலன் மொழிந்தது...

Dear Ravi,

I beg you not to delete my 'Big' comment from your comment list. This is the only proof which I have to show the culprit who boldly said he hacked somebody's site. I have pasted it from usha's blog. Intelligently he removed his comment from Usha's blog. Some people might have seen his comment. Not many. I would like keep his comment here. It is very very very important security issue regarding blogger. I am sorry for such big comment.

Regards,
Gajendra

8:10 AM  
Blogger கோபி(Gopi) மொழிந்தது...

அன்புள்ள ரவி ஸ்ரீநிவாஸ்,

வணக்கம்.

//நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தகவலும் திரட்டப்படுவதில்லை. //

http://www.blogger.com/ யின் Privacy Policyயின் சுட்டியில் (http://www.google.com/privacy.html) இவ்வாறு கூறப்பட்டுள்ளது :


Google collects limited non-personally identifying information your browser makes available whenever you visit a website. This log information includes your Internet Protocol address, browser type, browser language, the date and time of your query and one or more cookies that may uniquely identify your browser. We use this information to operate, develop and improve our services
.


இந்த Privacy Policy, http://www.blogger.com/ க்கும் பொருந்தும் என்கிற பட்சத்தில் எந்தத் தகவலும் திரட்டப்படுவதில்லை என்று சொல்ல முடியாது.

நேரடியாக நீங்கள் திரட்டாமல் இருக்கலாம். Google/Yahoo! நிறுவனங்கள் IP முதலான தகவல்களை சேகரித்துக் கொண்டுதான் உள்ளன
(உங்கள் தளம் உட்பட). அந்தத் தகவல்களை நீங்கள் திரட்டுவதில்லை, அதை நீங்கள் பயன்படுத்துவதில்லை என்று வேண்டுமானால்
உங்களால் உறுதி கூற முடியும்.

யாஹூ360 (http://360.yahoo.com/) வழங்கும் சேவையும் இந்த விஷயத்தில் அவ்வாறே செய்கிறது. அதன் Privacy Policyயின் சுட்டி:
http://privacy.yahoo.com/privacy/us/Yahoo! automatically receives and records information on our server logs from your browser, including your IP address, Yahoo! cookie information, and the page you request.

Yahoo! uses information for the following general purposes: to customize the advertising and content you see, fulfill your requests for products and services, improve our services, contact you, conduct research, and provide anonymous reporting for internal and external clients.


ப்ரியமுடன்,

கோபி

9:05 AM  
Anonymous மத்தளராயன் மொழிந்தது...

ஏன்டா மாயவரத்தான், இன்னும் எத்தனை பெயர்களில்தான் நீ வருவாய்? அது என்ன பெயர் கஜேந்திர பாலன்? ஏற்கெனவே முகமூடி என்ற பெயரில் எழுதுகிறாய். அதன்பின் மாயவரத்தான். அப்புறம் சிங்கா. அதன்பின் வாலி, அதன்பின் தகதிமிதா, அதன்பின் ரஜினிகாந்த், அதன்பின் விஜயகாந்த், அதன்பின் போலி டோண்டு, அதன்பின் போலி காசி, அதன்பின் போலி அல்வாசிட்டிவிஜய், போலி லாடுலபக்குதாஸ், போலி ரோசாவசந்த், போலி பெயரிலி. இன்னும் எத்தனை பெயர்களில் எழுதுவதாக உத்தேசம்?

9:35 AM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

Dear Gajendrapalan,
Don't worry. I have copy pasted these comments in a Word file along with all the references. If you want I can send the same to you per email as attachment.

And I saw all the comments in the blog of Usha Ramachandran as referred to by you here.

Regards,
N.Raghavan

10:30 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Dear Gajendrapalan,

His game is up. He is a crazed individual who needs immediate psychiatric help. Don't waste your time.

The small community of tamil bloggers know him and have started to ignore him.

Please do the same and carry on with more productive work.

Why are most people choosing to be anonymous?

Because we can argue/fight with a normal person but not with someone who needs to be institutionalised.

10:35 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//Why are most people choosing to be anonymous?

Because we can argue/fight with a normal person but not with someone who needs to be institutionalised.
//

Every blogger needs to understand this basic fact, That is all.

11:06 AM  
Blogger கஜேந்திர பாலன் மொழிந்தது...

Dear Anonymous,

Thanks for the feedback on my comments. When I first saw the statement on "Hacked", I realy pissed off. What a stupidity. He must be cheating all the people by his blunder statement and projecting him as 'Dhadha'. After asking how he hacked the site, he removed all his comment. It was very suspecious to me. I don't worry whether I got hurt by him or not. This is really public nuesance in thamizmanam which bothers many people. I took my own time to go through his blog. There are so many contradictory statements which was already reflected on his anonymous comments. He was pointing somebody as "Jathi veriyar", he was saying many people as "Jathi veriyar's piyan". At the same time, when I see 'aabasa comments' on some of the blogger, I clicked the ID. Those ID reflects such as "Donduvin magan". What a complex personality he got? He tells samething in his post, also blogger ID which he creates. He shows all glimpse and eyewash statements in his blog. I hate to see that some of the people go there and encourage him. NONSENSE!!!

Bad thing is, we cannot protect us in the internet. He may come in different forms to attack people. He should be marked always.

I don't know why such people are living useless life.

Many people shut there mouth because they don't want to be attacked. + he is not showing his original identity.

Today I got sometime to observer this kind of nonsense. Just ignore him. Also be aware about him.

Dondu, could you send me the feedback file to my gmail account. Gmail account is available in my blogger profile.

Let us do our work instead of observing that crazy guy.

12:02 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பின்னூட்டமிட்ட வலைப்பதிவாளர்கள்,வாசகர்களுக்கு நன்றி. என்னமோ நடக்குது மர்மாயிருக்குது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.பின்னூட்டங்களில் கூறப்படும் பல விஷயங்கள் என் சிற்றிவிற்கு எட்டவில்லை, எட்டாது என்றே நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொள்ளக் கூடிய மர்மக்கதையாக இது இல்லை.இதில் ஈடுபட நேரமும் இல்லை, இப்போது ஆர்வமும் இல்லை. ராதா ச்ரிராம் என்ற பெயரை இந்த வலைப்பதிவில் பின்னூட்டங்களில் பார்த்ததாக நினைவில்லை. நீங்கள் ஏன் ஒரு வலைப்பதிவினை துவங்கக் கூடாது.பெயரிலி எடுத்துரைக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது.கடைசியாக இட்ட பதிவின் நோக்கங்களில் ஒன்று சில கேள்விகளை எழுப்புவது. அவற்றிற்கான விடைகள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.என் பணி கேள்வி எழுப்புவதே :)

2:22 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

கஜேந்திர பாலன் பின்னூட்டம் பதிபவர் அவர் பின்னூட்டத்தை நீக்கினால், அடையாளமே தெரியாமல் அழியாது... அவர் பெயர் மிச்சம் இருக்கும், comment deleted by author என்று செய்தி இருக்கும்... அடையாளமே தெரியாமல் ஒரு பின்னூட்டம் அழிக்கப்பட வேண்டுமென்றால் அது பதிவின் அட்மினிஸ்ட்ரரால்தான் முடியும்... பதிவின் அட்மினிஸ்ட்ரேட்டரான ராமச்சந்திரன் உஷா அவர்கள் மூர்த்தி பின்னூட்டத்தை அழித்ததற்கு ஏதாவது காரணம் இருந்தால் அதை அவர்தான் சொல்ல வேண்டும்... அவர் பதிவில் பின்னூட்டம் இடும் வசதியும் நீக்கப்பட்டுள்ளது... ஆகவே இங்கே என் கருத்தை பதிகிறேன்

2:43 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

// ஏற்கெனவே முகமூடி என்ற பெயரில் எழுதுகிறாய். // வாடா மத்தளராயா... வா.. வா.. இன்னும் கொஞ்ச நாள்தான் வெளி உலக வாழ்க்கை... ஜாலியா இரு... என்ன வேணா பெனாத்து... கடந்த ஒரு வாரத்துல சில வேலைகள பண்ணியிருக்கேன்... அரசாங்கம் கொஞ்சம் மெதுவாத்தான் வேலை செய்யும்... என்ன பண்றது... என் திட்டம் ஜெயிக்கட்டும், அப்புறம் என் பதிவுல சொல்றேன் நீ எப்படி மாட்னேன்னு... அதுவரைக்கும் free sites that gives proxy service எல்லாம் நீ நல்லா உபயோகிக்கலாம்... நீ இருக்கற நாட்டுல ஜெயிலில படிக்கிறதுக்கு hacking புக் எல்லாம் அனுமதிப்பாங்களான்னு தெரியல... தெரிஞ்சி வச்சிக்க...

2:43 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

any blogger with a blogspot account can delete a comment without a trace.

what should you do?

1. delete the comment.

2. you will a msg. click on the link provided on the msg quickly and delete the comment a second time. blogpot login/password woul;d be asked.

the comment would be deleted without a trace!

Mugamoodi, get your facts straight.

Are you part of the gang that's abusing Tamil Bloggers?

3:02 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

http://www.ip-watch.org/weblog/index.php?p=75&res=1024&print=0

6:30 PM  
Blogger Partha (பார்த்தா) மொழிந்தது...

//Anonymous said...
any blogger with a blogspot account can delete a comment without a trace.

what should you do?

1. delete the comment.

2. you will a msg. click on the link provided on the msg quickly and delete the comment a second time. blogpot login/password woul;d be asked.

the comment would be deleted without a trace!

Mugamoodi, get your facts straight.

Are you part of the gang that's abusing Tamil Bloggers?

12:02 PM

//

I have a blogger account and I deleted a message yesterday @ one of the blog-sites. But I never received a mail as noted. Is there a setting that I should be using to receive the mail?

7:16 PM  
Anonymous தங்கமணி மொழிந்தது...

ரவி, பதிபவர் பற்றிய தகவல்களைத் திரட்டுவது உரிமை மறுப்பாகுமா என்றால் பதிவில் பின்னுட்ட வசதியை தவறாக பயன்படுத்துகிறவர்கள் அதை நியாயப்படுத்துகிறார்கள். இருந்தாலும் தகவல்கள் திரட்டப்படுவதைப் பற்றி ஒவ்வொரு பதிவும் ஒரு அறிவிப்பைக் கொண்டிருக்கவேண்டும்.

8:15 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

// Mugamoodi, get your facts straight. Are you part of the gang that's abusing Tamil Bloggers? // what kind of question is this?? Let me ask you anonymous:: are you the one that's abusing tamil bloggers using various names??

11:25 PM  
Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

நண்பர்களே,

கஜேந்திரபாலன் என்ற பெயரில் எழுதியதும், நான்தான், முகமூடி, ரஜினிகாந்த், வாலி, விஜயகாந்த், அனானிமஸ், மற்ற போலிவகையறா பெயர்கள் எல்லாவற்றிலும் எழுதியது நானேதான். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு யார் பிராமனர்களைப் பேசினாலும் பிடிக்காது. வேறு ஏதாவது ஒரு ஜாதியினரை திட்டிக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்கள் பிராமனர்களை திட்ட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

11:57 PM  
Blogger கஜேந்திர பாலன் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

1:44 AM  
Blogger கஜேந்திர பாலன் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

1:52 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

3:12 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

3:19 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

என் பெயரை, பதிவில் பேசப்படும் விஷயத்துடன் தொடர்பில்லாமல், இழுத்ததால் பின்னூட்டம் இட்டேன். ஆனால் மேலே பேசும் விருப்பமின்மை காரணமாய் என் கருத்துக்களை நீக்கியுள்ளேன். ரவி இன்னொரு முறை இந்த வேலையை (யாருக்கும்)செய்யாமலிருப்பது ஆரோக்கியமானதாய் இருக்கும்.

4:50 AM  
Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

கருணாநிதி மஞ்சள் துண்டு போடுகிறார்.

தமிழ்குடிதாங்கி தார் அடிக்கிறார், மரம் வெட்டுகிறார்.

திருமா விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார், மேலும் அவர் ஒரு தலித்.

வாசன் அவர்கள் நமது சமூகத்தில் பிறந்தவர் இல்லை மேலும் அவர் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப் பட்ட வாரிசு.

கம்யூனிஸ்ட் கட்சிகள் சரியில்லை., அவை உண்டியல் குலுக்குவதற்குத்தான் ஒத்துவரும்.

காங்கிரசில் சோனியாதான் முதலாக இருக்கிறார். அவர் ஆட்டுவிக்கிறார். பிரதமர் ஆடுகிறார். சோனியா இத்தாலியர். அவர் படிப்புச் சான்றிதழே பொய் என்று எங்கள் சுப்பிரமணிய சாமி அவர்கள் ஆதாரம் காட்டினார்.

ராம்விலாஸ் பாஸ்வான் தலித்து கட்சி

லள்ளுபிரசாத் யாதவ் நம் ஜாதி இல்லை.

சரத் பவார் அரச வம்சத்தைச் சேர்ந்தவர். நமது இனமில்லை.

பாஜக மிக நல்ல கட்சி.

பால்தாக்கரேயை எனக்கு பிடிக்கும்.

RSS ல் நான் சின்ன வயதில் இருந்து உறுப்பினர்.

பஜ்ரங்தள் என் பாட்டனார் கட்சி.

விஸ்வ ஹிந்து பரிஷத்தில் என் அப்பா இருக்கிறார்.

இராமகோபாலன் என்றால் எனக்கு உயிர்.

சோ அவர்களின் அனைத்து கூட்டத்துக்கும் தவறாமல் செல்வேன்.

வாரம்தோறும் துக்ளக் படிப்பேன்.

நாள்தோறும் தினமலர் படிப்பேன். அவர்கள் குடிதாங்கியை கிண்டல் செய்வதை ரசிப்பேன்.

அனுதினமும் ஜேஜே டிவி பார்ப்பேன். சன்டிவி பாக்க மாட்டேன். ஓசியில் கிடைத்தாலும் குங்குமம் படிக்க மாட்டேன்.

ஜெயை ஆதரிப்பதால் எனக்கு ரஸ்னி பிடிக்கும்.

5:23 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Rosa vasanth
I am sorry if i have hurt your feelings.i wrote that as a matter of fact to imply that i had been frank when there had been serious differences of opinions.i will ensure that this is not repeated elsewhere unless it is absolutely necessary

3:30 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

thanks, I objected to it, as I thought it may lead to different readings, by the way it is placed. Thanks!

12:40 AM  
Anonymous அறிவு ஜீவி மொழிந்தது...

ஊரின் பெயரில் தொடங்கும் ஒரு வலைப்பதிவில் நாம் நுழைந்தவுடன் நமது ஐபி அட்ரஸ், சர்வரின் பெயர் ஆகியவற்றை அந்த தளம் குறிப்பிடுகிறது. இது தேவை தானா? நான் விரும்பிப் படித்த அந்த தளத்தை இனி படிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

9:20 AM  

Post a Comment

<< முகப்பு