ஒன்று இரண்டு மூன்று நான்கு

1,இன்று ஹெர்மன் ஹெஸ்ஸின் பிறந்த தினம்.ஜுலை 2, 1961ல் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டார். ஜூலை 3 காப்காவின் பிறந்த தினம்.

தற்கொலைக்கு உகந்த தினம் எவை எவை என்று என்னிடம் கேட்காதீர்கள். இருப்பினும் தற்கொலை குறித்து எழுதி விட்டு தற்போது விடுமுறையில் போயிருக்கும் வலைப்பதிவாளர்-எழுத்தாளர்-குறும்பட இயக்குனரை கேட்டால் பதில் கிடைக்கலாம். மற்றப்படி இப்படி அடுத்தடுத்த நாட்களில் ஒரு எழுத்தாளரின் தற்கொலை, இரண்டு எழுத்தாளர்களின் பிறந்த தினம் வருகிறதா என்று கூகுளிலிட்டுப் பார்த்து யாராவது சொல்லலாம்.

2,இன்று இந்தியாவிலிருந்து என் நண்பர் கொடுத்தனுப்பிய இரண்டு நூல்கள் கிடைத்தன.

The History of History : Politics and Scholarship in Modern India- Vinay Lal-Oxford India
Paperbacks-2005 First published in 2003

India's Political Economy 1947-2004 - Francine R.Frankel-Oxford University Press-2005-Hardcover

இவற்றை உடனே படிக்கப் போவதில்லை. சக வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் படித்துவிட்டுஅறிமுகம் செய்து எழுதலாம்.இரண்டும் முக்கியமான நூல்கள். அதுவும் இரண்டாவது நூல் 2005ல்வெளியானது.இதன் முதல் பதிப்பினை பல ஆண்டுகள் முன்பு முழுமையாக வாசித்திருக்கிறேன்.

3,இம்ரானா என்ற பெயர் இப்போது ஊடகங்களில் பரவலாக அடிபடுகிறது. இது போல் ராஜீவ் காந்திபிரதமராக இருந்த போது ஷா பானு என்ற பெயர் அடிப்பட்டது. இம்ரானா குறித்து இந்தக் கட்டுரையில் எதுவும் இல்லை என்றாலும் அந்த சர்ச்சையினைப் புரிந்து கொள்ள இது உதவும். இதை எழுதிய நளினி ராஜன் சென்னை ஆசிய பத்திரிகையியல் கல்லூரியில் கற்பிக்கிறார்.

4,ஜுன் 30துடன் எம்.ஐ.டி பிரஸின் தள்ளுபடி விலையில் புத்தக விற்பனை முடிந்தது. நான் நான்கே நான்கு நூல்களைத்தான் இதில் இணையம் மூலம் வாங்கினேன்.

Democracy's Dilemma

Writing on Water

Inventing Modern America

Modernity and Technology

இன்னும் சிலவற்றை வாங்கியிருக்கலாம். இடம்,படிக்க நேரமின்மை, அமேசானில் கிட்டதட்ட எல்லா நூல்களும், அதாவது எனக்குத் தேவையான நூல்கள்,கிடைப்பது போன்ற பல காரணங்களால் நான்கு போதும் என்று பு.க செய்துவிட்டேன்.


4 மறுமொழிகள்:

Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

படித்துவிட்டு எழுதுங்கள் ரவி.

4:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

பு.க செய்துவிட்டேன்.
?

4:24 PM  
Blogger சன்னாசி மொழிந்தது...

ஹெர்மன் ஹெஸ்ஸியின் 'சித்தார்த்தா'வை, கிட்டத்தட்ட அப்போது படித்த சில புத்தகங்களுக்கான விஷமுறிவு மருந்து (antidote) என்ற ரீதியில் படித்ததுண்டு!! சசி கபூர் உபயத்தில் படமாக அது குதறப்பட்டதைக் கண்டு வருந்தியதும் உண்டு!! நினைவுறுத்தியதற்கு நன்றி.

11:12 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

cherrymas, your profile pic is nice but dont put it in your matrimony or datind advt.
ravi srinivas

7:09 AM  

Post a Comment

<< முகப்பு