சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்


காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் ப்திவு செய்து விசாரிக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.திருக்குறுங்குடி என்ற ஊரில் உள்ள வைணவக்கோயிலில் இருந்த மகேந்திர கிரிநாதர் சன்னிதி இடிக்கப்பட்டு அங்கிருந்த லிங்கம் அகற்றப்பட்டது. அரசு அனுமதி இன்றியே இதை செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக கேள்வி எழுப்பினார் என்பதற்காக திருக்கோட்டியூர் அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும், அவர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு தொடர்பிருப்பதாகவும் செய்திகள் வெளியானதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

வைணவக் கோயில் விவகாரங்களில் தலையிட ஜெயேந்திரருக்கோ அல்லது காஞ்சி சங்கர மடத்திற்கோ எந்த உரிமையும் கிடையாது. இருப்பினும் தன் செல்வாக்கினைப் பயன்படுத்தி தலையிட்டு சன்னிதியை இடிக்க அவர் உதவியுள்ளார் என்பது நீருபிக்கப்படுமானால அவருக்குகடும் தண்டனை தர சட்டத்தில் இடமிருக்கிறது. இது பற்றிய விபரத்தினை இப்போது நான் எழுத மாட்டேன். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை போகும் போக்கினைப் பொருத்தே எதுவும்சொல்ல முடியும். பொதுவாக கோயில்கள் விவகாரத்தில் ஆலோசனை சொல்வது கூட சம்பந்தப்பட்ட மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் செய்வதுதான் பொருத்தமும், சரியும் கூட.

ஆகம விதிப்படி உள்ள கோயில்களில் சைவ, வைணவ சம்பிரதாயங்களில் வேறுபாடுகளும், சம்பிரதாயங்களுக்குள்ளேயும் வித்தியாசங்கள் உள்ளன. இங்கு போப் என்று கருதப்படக் கூடியவர் யாரும் கிடையாது. தென்கலை மட,சன்னிதி விவகாரங்களில் தலையிடும் உரிமை வடகலை மடாதிபதிகளுக்கு கிடையாது. தமிழ் சைவ மடங்களில் தலையிடும் உரிமை சங்கராச்சாரியார்களுக்கு கிடையாது. தத்துவ ரீதியாகவும், வழிபாட்டுக் கொள்கைகள், நெறிமுறைகள் ரீதியாகவும் உள்ள வேறுபாடுகளை அங்கீகரித்து பிறர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பதுதான் முறையும், பண்பும் ஆகும்.

ஆனால் ஜெயேந்திரர் தன்னை இந்து மதத்தின் தனிப் பெரும் தலைவராக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார். திருப்பதி கோயில் நிர்வாகம் குறித்துப் பேசி , அதை வைணவ ஜீயர்கள் கண்டித்த உடன் அப்படிச் சொல்லவில்லை என்று ம்றுத்தவர்தான் இவர். ஒரு நாடகத்தினை நடத்தக் கூடாதுஎன்று முயற்சி செய்தவர்தான் ஜெயேந்திரர்.

ஒரு வேளை சங்கர்ராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு போன்றவற்றில் தண்டனை கிடைக்காவிட்டலும், இவ்வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யுமானால் அவர் த்ண்டிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன,

14 மறுமொழிகள்:

Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

//ஆலோசனை சொல்வது கூட சம்பந்தப்பட்ட மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் செய்வதுதான் பொருத்தமும், சரியும் கூட.//
சங்கர மட ஞானிக்கு இது எப்படி தெரியாமல் போனது என்றுதான் புரியவில்லை?
வழக்கை பொறுத்திருந்து பார்த்து கருத்து சொல்வதுதான் முறை. செய்திக்கு நன்றி ரவி.

5:34 PM  
Blogger Nambi மொழிந்தது...

Yes. Let us see how it goes.

Jendran once mentioned that he bailed out Jeya from corruption cases aginst her during BJP govt. This news was reported in Nakheeran - I bleive. Can PIL be luanched against him based on that report?

6:03 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

no, that is not possible

7:02 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

http://www.dinamalar.com/2005june17/imp14.asp

7:05 PM  
Blogger Moorthi மொழிந்தது...

நியாயமான நீதியான தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். தவறு செய்தவர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்யாத நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

9:15 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,
//திருப்பதி கோயில் நிர்வாகம் குறித்துப் பேசி , அதை வைணவ ஜீயர்கள் கண்டித்த உடன் அப்படிச் சொல்லவில்லை என்று ம்றுத்தவர்தான் இவர்
//
At the time of his interference in the dispute between TTD and Chinna Jeeyar, I had written a letter to Indian Express that read as below:

"It is irresponsible on the part of Kanchi Sankaracharya to interfere in the affairs of the Tirumala temple. It is high time that Jayendra saraswati stops meddling in the ongoing issue between the TTD and the Chinna Jeeyar Swamigal. Jayendrar is just a religious head of Saivites in Tamilnadu which is a miniscule percentage of the Hindu population in India. Neither does he have a standing like the Pope who is the undisputed religious head of Catholics all over the world nor can he be equated to the "Maha Periavaal", the earlier Shankaracharya of Kanchi to evoke wide spread approval of his words and actions.

Let him not kindly interfere and give advice or suggestions in matters concerning Vaishnavites/Vaishnavism."

//ஒரு வேளை சங்கர்ராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு போன்றவற்றில் தண்டனை கிடைக்காவிட்டலும்,
//
Could you explain your reasoning behind this thinking ?????? Do you mean the case may not stand scrutiny in the
court of law ?

//தத்துவ ரீதியாகவும், வழிபாட்டுக் கொள்கைகள், நெறிமுறைகள் ரீதியாகவும் உள்ள வேறுபாடுகளை அங்கீகரித்து பிறர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பதுதான் முறையும், பண்பும் ஆகும்.
//
It is best for all concerned to follow this.


கார்த்திக்,
//சங்கர மட ஞானிக்கு இது எப்படி தெரியாமல் போனது என்றுதான் புரியவில்லை?//
அது தான் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே ;-)

1:01 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மார்சிஸ்ட்-பெரியாரிஸ்ட்க்கு கோயில் மீது என்ன அக்கறை. காஞ்சி சுவாமிகளைத் திட்ட வேண்டும் அதற்கு ஒரு காரணம் வேண்டும்

4:58 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

thanks bala, i will reply later.
annonymus - i will reply to your question also later

5:49 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Eventhough I don't consider Sri Jayanderar in par with other good folks, there is something fishy about this whole case you dont' have to be a expert in law, whole point is to terrorize kanchi mutt,1000pages of blah blah submitted in the court without any evidence, which the supreme court pointed out to the proscutor,Tulsi , who till that time making so much noise didnt have nothing to say.
This whole case is sham pure personal vendetta.
Mr.Wilson close friend and lawyer of Ravi Subramanium has given an interview about Ravi Sub. and how he has changed his story under police custody, Mr.Wilson also added Ravis family cut their ties off him and asked wilson to walk away from this.

If personal prejudice gets in the way there is noway justice is going to be served.
Today politicians use all these kind of tactics to get away with things thats the sad part.

regds
stanley

10:01 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

////சங்கர மட ஞானிக்கு இது எப்படி தெரியாமல் போனது என்றுதான் புரியவில்லை?
அது தான் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே ;-)//

பாலா, பிரச்சினையே அங்குதானே ஆரம்பம். நான் 'மட' என்று வாசிக்கிறேன். சிலர் 'ஞானி என்று' வாசிக்கின்றனர். நீங்கள் எப்படி? ;-)

11:08 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

karthik,
I just pointed out :)
Please do not put wordes into my mouth ;-)

11:53 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Please do not put wordes into my mouth ;-)

:)

11:35 AM  
Blogger pulipaandi மொழிந்தது...

கக்..கக்..காம கோடி ன்னு சு..சு..சும்மாவா ச்..ச்..சொன்னாங்க?

8:25 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

HC stays Order
http://thatstamil.indiainfo.com/news/2005/06/24/kanchi.html

6:20 AM  

Post a Comment

<< முகப்பு