தட்டையான உலகம் ?

தாமஸ் பிரெட்மென் நியுயார்க் டைம்ஸில் பத்தி எழுதுபவர். உலகமயமாதல் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். அவரது சமீபத்திய நூல் பரபரப்பாகப் பேசப்படுகிறது. நான் அதைப் படிக்கவில்லையென்றாலும் அவரது பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். புத்தகத்தினை படிக்க முயல்கிறேன், இந்த பரபரப்பு ஒய்ந்த பின் அதைப் பற்றி எழுத முயல்கிறேன். கவுன்டர் பஞ்சில் வெளியான இந்தக் கட்டுரை அவரது கருத்துக்கள் மீது ஒரு சிறப்பான விமர்சனம் வைக்கிறது.

உலகமயமாதல் குறித்து கடந்த 15 ஆண்டுகளில் பலர் எழுதியுள்ளனர். பல்வேறு துறைகளிலிருந்து இது குறித்து விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன, நான் கடந்த ஆண்டு உலகமயமாதலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய நூல்கள் எத்தனை வெளியாகியிருக்கும் என்பதை ஒரு பல்கலைகழக நூலகத்தில் உள்ள அந்த் ஆண்டு வெளியான நூல்களை மட்டும் கருத்தில் கொண்டு தேடியதில் சுமார் 400 நூல்கள் தேறின.

பிரெட்மென் போன்றோர் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சித்திரத்தினை தருகின்றனர். ஊடகங்களுக்கு இது மிகவும் வசதியானது. தொலைக்காட்சி பேட்டிகளில் ஒரு சில வார்த்தைகளை கொண்டு ஏதோ உலக மகா உண்மையினைக் கூறுவது போன்ற தோற்றத்தினை தருவது எளிது. ஆனால் யதார்த்த உலகம் இந்த மிகவும் எளிய விளக்கங்களுக்கு அபாற்பட்டு இருக்கிறது.

உலக வர்த்தகம், அரசியல், ஐ.நாவின் செயல்பாடுகள், அது எதிர்நோக்கும் சவால்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குறிப்பாக தட்பவெப்ப நிலை மாற்றத்தின் தாக்கங்கள் இவை எல்லாம் மேலும் மேலும் சிக்கலாகி வருகின்றன. கணினி மற்றும் மிண்னௌ சாதனங்களும் உற்பத்தியும்,நுகர்வும் இகழிவுகள் என்னும் மின்னணு கழிவுகளின் பெருக்கத்தின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்க்ன்றன. இவை சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மறு சுழற்சிக்கும் அனுப்படுகின்றன. இவையெல்லாம் அதிகம் பேசப்படுவதில்லை. டெல் எங்கு உற்பத்தியாகிறது, அதில் உள்ள பாகங்கள் எங்கெங்கு தயாரிகின்றன என்பதை மட்டும் பேசினால் போதாது.

என்னைக் கேட்டால் ப்ரெட்மேன் போன்றவர்கள் செய்யும் வேலையை இந்தியாவிற்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ அவுட் சோர்ஸ் செய்து விடலாம. நிச்சயம் நம்மால் அவரை விட நன்றாகவும், நுட்பமாகவும் எழுத முடியும்.

3 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

ரவி
தொமஸ் ப்ரீட்மென் நெடுங்காலமாக எழுதிவந்தாலுங்கூட சவூதி ஸ்ரீபட்டத்தினூடாக இஸ்ரேல்-பலஸ்தீனிய ஒப்பந்தம் செய்ய முயன்றபோதே, பெயர் அடிபடத்தொடங்கினார். அப்போதுகூட, இரண்டாம் தரத்தினைச் சேர்ந்த பத்திரிகையாளர் என்றதுபோலத்தான் பெயர்.

ஆனால், ஈராக் யுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தததுடன், அதிகாரபீடப்பத்திரிகையாளர்களிலே ஒருவராக, எங்கும் எதிலும் அழைக்கப்படுகிறார். ஆனால், அவருடைய செவ்விகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து கண்டும் வாசித்தும் வருகின்றவர்களுக்கு, நிச்சயமாக நீங்கள் சொன்ன, "என்னைக் கேட்டால் ப்ரெட்மேன் போன்றவர்கள் செய்யும் வேலையை இந்தியாவிற்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ அவுட் சோர்ஸ் செய்து விடலாம. நிச்சயம் நம்மால் அவரை விட நன்றாகவும், நுட்பமாகவும் எழுத முடியும்." கருத்து தோன்றாவிட்டால்மட்டுமே ஆச்சரியம். என்ன பார்க்கமட்டும் 70 களின் அமெரிக்கப்படநாயகர்கள்போல ஒரு தோற்றம். அவ்வளவுதான்.

Counter Punch கட்டுரைகள் எப்போதுமே முகத்திலடித்தவை போலத்தான் இருக்கும் - குறிப்பாக ஆசிரியர்கள் Alexander Cockburn
உம் Jeffrey St. Clair உம். எழுதுகின்றவை. ஈராக் யுத்தத்துக்கு ஆரம்பமிருந்தே எதிர்த்துக் குரல் கொடுக்கும் குரல்களிலே இதுவும் ஒன்று. Z net போன்றவைபோல, அநாவசிய நாகரீகத்தொனியினைக் கடைப்பிடிப்பதில்லை. நேரடி அடிதான்,

9:04 PM  
Blogger Badri மொழிந்தது...

சாய்நாத் - "India's greatest journalist" என்பது கொஞ்சம் ஓவர்...

தி ஹிந்து தான் செய்யும் பிற பாவங்களுக்குப் பரிகாரமாக ஒருவரை கிராமப்புறங்களுக்கான ஆசிரியராக நியமித்திருக்கிறது. அவரும் இன்று கிராமப்புறங்களை விட்டுவிட்டு அத்வானியைப் பந்தாடியிருக்கிறார். அதற்குத்தான் ஹரீஷ் கரே இருக்கிறாரே.

கவுண்டர்பஞ்ச் காக்பர்ன் நாயுடுவுக்கு பதில் வந்திருக்கும் ராஜசேகர ரெட்டி என்ன செய்கிறார் என்று எழுதவில்லையே?

அதேபோல கேரளா - காங்கிரஸ் ஆண்டாலும் சரி, கம்யூனிஸ்ட் ஆண்டாலும் சரி, உருப்படியில்லாத மாநிலமாகவே இருக்கிறது என்று அறியவில்லையா?

இந்தியாவின் வளர்ச்சியில் விடுபட்டுப்போனவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள், நிலமற்ற விவசாயக்கூலித் தொழிலாளர்கள், சிறுநில விவசாயிகள் என்பது உண்மைதான். ஆனால் குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் சாய்நாத்கள் உருப்படியான யோசனை எதையும் சொல்வதில்லை. நாட்டையே கம்யூனிஸ்ட்களிடம் விட்டால் இந்தப் பிரச்னைகள் தீருமென்றால்

1:28 AM  
Blogger Badri மொழிந்தது...

ouch. தொடர்ச்சி...

அதைச் செய்துவிடலாம்.

இடதுசாரிகள் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் உழைக்கும் வர்க்கங்களின் வாழ்க்கை உயர்வுக்காகவும் என்ன திட்டங்கள் வைத்திருக்கின்றனர் என்பதை மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர் போலும்.

1:29 AM  

Post a Comment

<< முகப்பு