அசோகமித்திரன் கடிதமும், சில கேள்விகளும்

ஒரு வழியாக அசோகமித்திரன் தன் மெளனத்தினைக் கலைத்து தன் தரப்பு நியாயத்தினை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.31 மே 2005 தேதியிட்ட கடிதம் பதிவுகளில் வெளியாகியுள்ளது. அதில் அசோகமித்திரன் கூறுகிறார்:
I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine.

அவுட்லுக்கில் அவருடன் ஒரு செவ்வி அச்சிலும், இணையத்திலும் வெளியாகியது. இது குறித்து பத்ரி கூறுகிறார்

"அவுட்லுக் செவ்வி அச்சில் ஒன்றும், <http://www.outlookindia.com/full.asp?fodname=20050411&fname=Brahmins+%28F%29&sid=2> வெளியானது. இணையத்தில்தான் முக்கியமாக இந்த ஒரு விஷயம் இருந்தது. If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day.ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். "

அசோகமித்திரனின் கடிதத்தில் மேற்கூறியது குறித்து ஒரு விளக்கம் இருக்கிறது. பேட்டியில் அவர் கூறியதாக வெளிவந்த பிற கருத்துக்கள் குறித்து அவர் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

பத்ரியின் பதிவில் அசோகமித்திரனுக்கு செவ்வி இணயத்தில் வந்திருப்பது அவருக்கு தெரிய வந்ததாக பொருள் கொள்ளும் வகையில் வாக்கியங்கள் உள்ளன.

"இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். செவ்வி வெளியான சில நாள்களில், அசோகமித்திரனின் நெருங்கிய உறவினர் (பார்ப்பனரல்லாதவர்) அவரிடம் வந்து "என் அலுவலகத்தில் வேலை செய்யும் பல பார்ப்பனர்களும் குடிக்கிறார்கள், மாமிசம் சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் இதைச் செய்வதில் முதலில் நிற்கிறார்கள்" என்றாராம். அசோகமித்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். "ஏன் இவர் இதையெல்லாம் வந்து என்னிடம் சொல்கிறார்" என்று யோசித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார்.நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார். "

அச்சில் வெளியானது கூடவா அசோகமித்திரனுக்குத் தெரியாது. அவர் அவுட்லுக்கிற்கிற்கு அச்சு இதழில் வெளியான செவ்வி குறித்து கடிதம் ஏதும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை செவ்வி இணயத்தில் இருப்பது தெரியாவிட்டாலும் அச்சில் வெளியானதில் தன் கருத்துக்கள் திரிக்கப்பட்டிருப்பதாக அவர் அவுட்லுக்கிற்கு எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. 31 மே கடிதத்திலும் அவர் அவுட்லுக்கிற்கு கடிதம் ஏதும் எழுதியிருப்பதாகக் குறிப்பிடவில்லை. நானறிந்த வரையில் அவர் கடிதம் ஏதும் அவுட் லுக்கில் இச்செவ்வி குறித்து இதுவரையில் வெளியாகவில்லை. ஒருவேளை கடிதம் அனுப்பி அதை அவுட் லுக் வெளியிடவில்லை என்றால் அதாவது அவர் கடிதத்தில் பதிவாயிருக்கும் என்பதால் அவர் கடிதம் எழுதவில்லை என்ற முடிவிற்கு நாம் வரமுடியும், அதற்கு முரணான சான்றுகள் தற்போது முன் வைக்கப்படாததால்.

ராயர் காப்பி கிளப்பில் வெங்கடேஷ் எழுதுகிறார்
அப்பாடா..
கடைசியாக அசோகமித்திரன் பதில் எழுதிவிட்டார்.
அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்.ஒரு வகையில், இந்த அமைதி, என்னைப் போன்றவர்களுக்கு எரிச்சல் தந்தாலும், அவரது அமைதிக்கு ஒரு பொருள் இருக்கும் என்றே நான் நினைத்தேன்.அவரது மகன் ராமகிருஷ்ணன் என் நண்பர். அவரிடம் பேசும்போதும், இதைப் பற்றி வலியுறுத்தினேன். அவர்அப்பாவுக்கு மேல் அமைதியானவர். ஆமாம்... செய்யணும்... என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
பரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ என்னவோ?இருக்கலாம். நமக்குத்தான் எதைப் பார்த்தாலும் முட்டி மோதி, வீரத்தைத் நிரூபித்துவிடும் அவசரம்உண்டாயிற்றே. அவையெல்லாம் ஒரு துளி பயனும் தரப்போவதில்லை என்ற ஞானம் அவருக்கு இருக்கவேண்டும்.அனுபவம் தரும் பாடம், நமது அவசரங்களை விட மேலானது.
நல்லவேளையாக இப்போதாவது தன் கருத்தைத் தெரிவித்தாரே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.
சி·பிராயன்

வெங்கடேஷ் அச்சு வடிவில் வந்த பேட்டியினைப் பற்றி மட்டும் சொன்னாரா இல்லை இணையத்தில் வெளியானதையும் சேர்த்துச் சொன்னாரா.அ.மி தன் கடிதத்தில் தான் I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. என்கிறார். அ.மி யிடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த வெங்கடேஷ் இணையத்தில் வெளியானதைப் பற்றி குறிப்பிட்டிருக்க அனைத்து வாய்ய்புகளும் உண்டு. அவருக்கு இணையத்தில் வெளியான பேட்டி குறித்து தெரியாமலிருக்க முடியாது.மேலும் பத்ரி குறிப்பிடுவதையும் இங்கு கவனிக்க வேண்டும்"ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். " ".

தன்னை computer illiterate என்று அ.மி சொல்லிக் கொண்டாலும் நிச்சயம் அவருக்கு இணையத்தில் வெளியானதை குறைந்தது ஒருவராவது சொல்லியிருக்கிறார்கள்.அப்படியிருக்கும் போது அ.மி எதற்காக I have no way of knowing what appeared in the internet magazine என்று மே 31 தேதியிட்ட கடிதத்தில் கூற வேண்டும்.

மேலும் பத்ரி இது குறித்து அவரிடன் பேசியது குறித்தோ அல்லது வெங்கடேஷ் தன்னுடன் இது குறித்து தொடர்ந்து பேசியது குறித்தோ, பதில் தர வேண்டும் என அவர் கூறியது குறித்தோ அ.மி கடிதத்தில் ஒரு வாக்கியம் கூட இல்லை. ஆனால் வெங்கடேஷ் எழுதுகிறார்

"அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்." தான் கணினி அறிவிலி, இணையத்தில் வெளியானதை தான் அறிய வாய்ப்பில்லை என்று கூறும் அ.மி யின் மகனுடன் இது குறித்து பேசியிருப்பதாகவும், அ.மி அமைதி காத்ததாகவும் வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

மூன்று பேர், அ.மி, அ.மி யின் மகன் ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் இது குறித்து தங்களுக்கிடையே பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அ.மி யின் பதிலில் இது ஏன் குறிப்பிடபடவில்லை.வெங்கடேஷ், பத்ரி மூலம் இதை அறிந்து கொண்டேன் என்பது கூட ஏன் பதிவு செய்யப்படவில்லை. அ.மி.
தன் கடிதத்தில் செவ்வியில் தான் கூறியது இது, தான் கூறாதது இது என்று ஏன் தெளிவாக தன் கருத்துக்கள் இவைதான் என்று சொல்லவில்லை. மாறாக கடித்ததில் This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published. என்ற உபதேசம்தான் இருக்கிறது.

நான் சொன்னது இது, நான் சொல்லத இவை நான் சொன்னதாக வெளியாகியுள்ளன என்று அ.மி ஏன் தெள்ளத் தெளிவாக குறிப்பிடவில்லை. பேச்சின் தொனி எழுத்தில் வராது என்று மட்டும் கூறும் அ.மி தான் என்னதான் சொன்னேன் என்பதையாவது குறிப்பிடலாமே.நான் இந்தத் தொனியில் இதை கிண்டலாகக் குறிப்பிட்டேன், அது அச்சில் அந்த தொனி இல்லாதததால் இப்படி பொருள் கூறும் வகையில் உள்ளது என்று ஒருவர் குறிப்பிட்டால் அதை நாம் புரிந்து கொள்வோம்.ஆனால் அ.மி பொத்தாம் பொதுவாக தன் கடிதத்தில் கூறுகிறார்.

அ.மி கூறாததை அவுட் லுக் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் அவுட் லுக் மீது வழக்குத் தொடரலாம். மேலும் தொலைபேசி மூலம் செவ்வி என்னும் போது அதை செவ்வி கண்டவர் பதிவு செய்திருக்கவும், அந்தப் பதிவின் அடிப்படையில் அதை எழுதியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.அ.மி கூறுவது போல் 'prone to distortion and errors' என்பது உண்மையானால் அதை அவர்தானே தெளிவுபடுத்தி நான் கூறியது இதுதான், இதல்ல, ஆகவே அச்சில், இணையத்தில் வெளியானது தவறான புரிதலைத் தருகிறது என்று வாசகர் அறியத்தர வேண்டும். இது வரை அதை அவர் ஏன் செய்யவில்லை. மாறாக பொத்தாம் பொதுவாகப் பேசுவது ஏன். கடிதத்தில் அவுட் லுக் சார்பாக செவ்வி கண்டவர் தவறு செய்துவிட்டார், அவரின் செய்கையை நான் கண்டிக்கிறேன் என்று ஏன் அ.மி எழுதவில்லை.

கூர்ந்து கவனித்தால் வெங்கடேஷ் கடிதம் சொல்லும் செய்தியும், பத்ரி தன் வலைப்பதிவில் கூறியதன் அடிப்படையில் நமக்கு கிடைக்கும் புரிதலும்,அ.மியின் கடிதம் தரும் செய்தியும் முரண்படுவதை அறிய முடியும்.

வெங்கடேஷ் "தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்" என்கிறார். அ.மி யின் கடிதம் இப்படிக் கூறவில்லை. அது ஒரே ஒரு கருத்தினைப் பற்றி மட்டும் தன்னிலை விளக்கத்தினை தெளிவாக வைக்கிறது.அருளின் பதிவு ஏப்ரல் 3ம் தேதி இடப்படுகிறது. பத்ரி அசோகமித்திரனுடன் தான் மே 20ல் நடந்த எழுத்துப்பயிற்சி முகாமில் இது குறித்து பேசியதாகக் கூறுகிறார்."அடுத்து, நாங்கள் நடத்திய எழுத்துப் பயிற்சி முகாமில் அவரைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினேன். .... இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார்.நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார்."

இதையும் வெங்கடேஷ் எழுதியுள்ளதையும் ஒப்பிடுங்கள்
"அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்.அவரது மகன் ராமகிருஷ்ணன் என் நண்பர். அவரிடம் பேசும்போதும், இதைப் பற்றி வலியுறுத்தினேன். அவர்அப்பாவுக்கு மேல் அமைதியானவர். ஆமாம்... செய்யணும்... என்று சொல்லிக்கொண்டிருந்தார்.பரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ என்னவோ?"
இதிலிருந்து மே 20க்கு முன்னரே அமியிடம் வெங்கடேஷ் கண்டனங்கள் வருகின்றன என்று குறிப்பிட்டிருப்பார் என்று ஊகிக்கலாம், ஏனெனில் "உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன" ,"பரபரப்பான காலகட்டத்தில்" போன்றவை இப்படிப் புரிந்து கொள்ள இடமளிக்கின்றன.

மே மாத தீராநதியில் சாருவின் கட்டுரை வெளியானது. அருளின் வலைப்பதிவு ஏப்ரல் துவக்கத்தில் ஏப்ரல் மூன்றாம் தேதி இடப்பட்டது.
ஆனால் இணையத்தில் பேட்டி வெளியாகி கிட்டதட்ட 7 வாரங்கள் கழித்துத்தான் தனக்குத் தெரியும் என்கிறார் அ.மி. ஆனால் வெங்கடேஷ் அ.மியுடனும், அ.மி யின் மகனுடனும் இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன் என்று எழுதுகிறார். அ.மிக் கு வேண்டுமானால் இணையத்தில் பேட்டி குறித்து தெரியாமலிருக்கலாம். ஆனால் வெங்கடேஷ¤க்கும், அ.மி யின் மகனுக்குமா தெரியாது, இல்லை தெரிந்தும் அவர்கள் கூறவில்லையா.

அ.மி யின் கடிதம் நம் சந்தேகங்களுக்கு விடையளிக்கவில்லை. இன்னும் சில கேள்விகளைத்தான் எழுப்புகிறது.பத்ரிக்கு அவர் என்ன விளக்கத்தினை எழுதித் தருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

6 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Ungallukku ellaam vera velai vetti vazhkaiyil kidaiyaathaa enna? Uruppadiyaa ethaayaavathu seiyyalaam illa, ippadi mayiru pizhakkum aaraaichiyai ellaam vittu vitu? Vetkakkedu.

One thing is very clear, You seem to have some very serious problem. Better resolve it.

7:29 PM  
Blogger Thangamani மொழிந்தது...

பதிவுக்கு நன்றிகள் ரவி.

பேட்டி வெளியாகி 7 வாரங்கள் வரை ஒருவர் அமைதியாக இருப்பாராம், அதுவும் ஒரு கொலைகாரரைப் போல பலரை பார்க்கவைத்த கருத்துகளைத் தாங்கிய பேட்டி என்று அறிந்துகொண்டபின்னும். அந்த மெளனத்தை முதிர்ச்சி என்று மொழிபெயர்க்கிறார் வெங்கடேஷ். நல்லது. அவரது உளக்கிடங்கை அ.மி வெளிப்படுத்தியிருக்கிறார். அல்லது அறிவிஜீயும் எழுத்தாளனுமாகிய நானே இவ்வவறு துணிந்து எனது கருத்தை, ஜெயேந்திரர் கைதுக்கு பின்னான எனது கொதிப்பான மனநிலையை இப்படிச் சொல்லிவிட்டேன்; இனி ஒவ்வொருவரும் அவரவர் தகுத்திக்கு ஏற்ப குற்ற உணர்வோ வெட்கமோ இன்றி செயல்படுங்கள் என்ற கோடிகாட்டலாகவும் அது இருக்கலாம். இப்போது அதை அலட்சியப்படுத்துவதும், அமைதி காப்பதன் மூலம் அலையடங்கக் காத்திருப்பதும் செய்யக்கூடிய வழிகள்தான். ஆனால் வெங்கடேஷ் அவரது பேச்சை (கருத்தை) மட்டுமல்ல, அவரது மெளனத்தையும் இப்படித்தான் புரிந்துக்கொள்ள வேண்டுமென்கிறார்.அ.மியின் கருத்தை மட்டுமல்ல மெளனத்தைக் கூட தீண்டக்கூடாதென்கிறார்.


அந்தப்பேட்டியில் ஓரிரு வரிகள் தவறாயிருக்கலாம். ஆனால் அதன் தொனியும், மற்ற கருத்துக்களும் முற்றிலும் தவறானவையாக இருப்பின் அ.மி அப்படியொரு கற்பனையை புனைந்தமைக்காக அந்தப்பத்திரிக்கையை கண்டித்து எழுத இவ்வளவு தயங்குவதேன்?

9:26 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

கிழடு ஏதோ வயசான காலத்திலே புலம்பிடுச்சுன்னு விடுவியா, அதை விட்டுட்டு கிழடு ஏன் அத சொல்லல்ல, இத சொல்லல்லன்னு கேள்வி கேட்கிறயே, இது என்னாப்பா நியாயம்

11:25 AM  
Blogger wichita மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:07 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

பதிவுக்கு நன்றிகள் ரவி.

9:52 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy) மொழிந்தது...

Good post Ravi Srinivas.

Asokamithran didnt deny his comparision to Jewish People. Am curious about what he would write to Badri. But, i doubt if he will address issues in a straight forward manner.

-Mathy

10:24 AM  

Post a Comment

<< முகப்பு