கோயில்களில் மிருகபலித்தடை சட்டமும்,மதச்சார்பின்மையும்

2003ல் தமிழக அரசு கோயில்களில் மிருகங்களை பிரார்த்தனை அல்லது வேண்டுதல் என்ற பெயரில் பலி கொடுப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது, பின்னர் அது கை விடப்பட்டது. இந்த சட்டத்திற்கு எத்தகைய எதிர்வினைகள் இருந்தன, 1950களில் இது போன்ற சட்டம் கொண்டுவரும் போது எழுந்த விவாதங்கள்- இவற்றை உதாரணமாகக் கொண்டு எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மதச்சார்புன்மை,மதரீதியான வன்முறை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை மீது எனக்கு விமர்சனம் உண்டு.

பாண்டியன் முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். தமிழில் இப்பிரச்சினை குறித்து விரிவான கட்டுரைகள் நானறிந்த வகையில் ஒரு சிலவே உள்ளன,திண்ணையில் ஒரு விவாதம் நடந்தது.தமிழில் இக்கட்டுரை வெளியானால் ஒரு விவாதம் நடக்கலாம்.

3 மறுமொழிகள்:

Blogger Badri மொழிந்தது...

கட்டுரை நன்றாக இருந்தது - கடைசிப் பகுதிதான் புரியவில்லை. நிச்சயமாக இது தமிழில் வெளியிடப்படவேண்டும். பரவலாக இதன்மீது விவாதமும் நடைபெறவேண்டும்.

11:16 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

அதற்குக் காரணம் அப்பகுதி பேசும் விஷயங்கள் சற்றே சிக்கலானவை. ஒரு மாநாட்டுக் கட்டுரையின் இன்னொரு வடிவம்தான் இது. இதைப் படிக்கும் பலருக்கு இக்கருத்துக்கள், விவாதங்கள் குறித்து ஒரளவாவது தெரிந்திருக்கும். தமிழில் தருவது கடினம், 1950களில் நடந்த விவாதம் குறித்த பகுதியும், வேறு சில பகுதிகளிலும் தமிழில் வெளியானால் கூட பயன்படும்.

1:07 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

வேறு சில பகுதிகளிலும் தமிழில் வெளியானால் கூட பயன்படும்.

வேறு சில பகுதிகளும்

1:08 PM  

Post a Comment

<< முகப்பு