புத்தகம் - வாசிப்பு

முன் குறிப்பு 1: இதைப் படிக்கும் முன் சூடாக காபி அல்லது டீ யுடன் தலைவலி போக்கும் மாத்திரை ஒன்றினையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தங்கமணிக்கு நன்றி. அவர் போல் நான் எழுதப்போவதில்லை. நான் புத்தகங்களை வாசகன்,மதிப்புரையாளன், ஆய்வாளன் என பல கோணங்களிலிருந்து படிப்பவன். தேர்ந்தெடுத்து படிப்பதையே பல வருடங்களாக செய்து வருகிறேன்.அதாவது என் ஆர்வத்தினை அல்லது நான் அக்கறை காட்டும் விஷயங்கள் தொடர்புடைய நூல்களை தெரிவு செய்து படிக்கிறேன். இதற்காக இந்த வரையரையில் வராத பிற புத்தகங்களைப் படிக்க மாட்டேன் என்பதில்லை. ஒரு காலத்தில் புனைவு இலக்கியம் என்று சொல்லப்படுவதில் பெரும் ஆர்வம் இருந்தது.இப்போது இல்லை, அது குறைந்து விட்டது.

புனைவு இலக்கியத்தினைப் படித்துக்கொண்டிருந்த போதும் நான் புனைவு அற்றவை என்று சொல்லப்படுபவற்றையும் அதிகமாகவே படித்துக் கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன், பிரமீள், வண்ண நிலவன் என்று படித்துக் கொண்டிருக்கும் போதே ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ரமணர், உபநிடதங்கள், பிராம், ஷுமாக்கர்,இலிச், லெய்ங் என்று படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு காலகட்டத்திற்குப் பின் நான் படிப்பவை அறிவியல், சமூக அறிவியல், ஊடகம், திரைப்படம்,ஒவியம், நாடகம் என்றாகி இலக்கியம் படிப்பது மிகவும் குறைந்துவிட்டது.

பின்னர் புத்தகங்களுடன், ஜர்னல் கட்டுரைகள், அறிக்கைகள், ஆய்வு அறிக்கைகளையும் அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன், அது இன்று வரை தொடர்கிறது. என் வாசிப்பில் புத்தகங்களுக்கு நிகரான முக்கியத்துவம் புத்தக வடிவில் இல்லாத இவற்றிற்கும் உண்டு. இதில் முனைவர் பட்டய ஆய்வேடுகள்,தீர்ப்புகள், ஆய்வு அறிக்கைகளின் முதல் வடிவ நகல்களும் அடங்கும்.

ஜர்னல்களில்வெளியாகும் கட்டுரைகள், சட்ட ஜர்னல்கள், ரிவ்யுகளில் வெளியாகும் கட்டுரைகள் போன்றவற்றை தேடி தெரிவு செய்து படிக்கிறேன். பல சம்யங்களில் பின்னர் படிக்கலாம் என்று கணினியில் சேமித்து வைத்து விடுவேன், அல்லது அச்சு பிரதி எடுத்து வைத்துவிடுவேன். இது போல் புத்தகங்கள், மாநாட்டு அல்லது கருத்தர்ங்கு கட்டுரைகளையும் சேமித்து வைத்துவிடுவேன். எனவே என்னைப் பொருத்த வரை புத்தகம் என்ற வடிவத்தினை விட உள்ளடக்கமே முக்கியம்.

பல முக்கியமான கட்டுரைகள் நூல் வடிவம் பெறும் முன் ஜர்னல்களில் வெளியாகும். மேலும் ஆய்வறிக்கைகள் பின்னர் புத்தக வடிவில் வெளியாகும் தொகுப்புகளில் இடம் பெறும். எனக்கு அவற்றை சுடச் சுடப் படிப்பதில் அல்லது அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். எனவே நேச்சர், சயன்ஸ் என்று ஆரம்பித்து பல ஜரன்ல்களில் வெளியாகிற கட்டுரைகளை அவ்வப்போது பார்த்து விடுவேன்.இப்ப்டி எத்தனையோ கட்டுரைகள் சேர்ந்து விட்டன. பலவற்றை நண்பர்களுக்கும் பரிந்துரைப்பேன், பகிர்ந்து கொள்வேன். இப்போது பணியாற்றும் இடத்தில் சக ஊழியர்களிடம் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் இந்தியாவில் இருந்த போது பல பேராசிரியர்கள், அமைப்புகளிடம் தொடர்பில் இருந்த்ததால் புத்தகங்கள், அறிக்கைகள் சுடச் சுட எனக்கு வந்துவிடும். பல தபாலில் தவறியிருக்கின்றன. இந்தியாவில் புத்தக கடைகள், நூலகங்களுக்கு அவை கிடைக்கும் முன் எனக்கு வந்து விடும். இப்படி பல நூல்கள், அறிக்கைகள் சேர்ந்துவிட்டன. இதுதவிர ஆய்வறிக்கைகள், ஜர்னல் கட்டுரைகள்,வெளியிடப்படாத முனைவர் பட்டய ஆய்வேடுகள் என்று எண்ணிக்கை பெருகி விட்டது.

ஒரு கட்டத்தில் இடப்பிரச்சினை காரணமாக பல நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்தோ அல்லது வேறு வழிகளில் கழித்துக்கட்டியோ தற்காலிக தீர்வு கண்டேன். இதனால் எளிதில் கிடைக்ககூடிய அல்லது நூலகங்களில் உள்ள பல புத்தகங்களை குறிப்பாக தமிழ் நூல்களை நான் வைத்துக் கொள்ளவில்லை. மாறாக பல்கலை நூலகங்களில் கூட இல்லாத நூல்கள், ஜர்னல் கட்டுரைகள், ஆய்வறிக்கைகளை மட்டும் எனக்குத்தேவை என்பதால் வைத்துக் கொண்டேன்.

என்னுடை நூல் தொகுப்பில் உள்ள எல்லா நூற்களும் இப்போது என்னுடன் இல்லை. என் தொகுப்பில் 90% ஆங்கில நூல்கள்தான், அதே சமயம் ஜர்னல் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் ஏராளம்.

ஜர்னல்களுக்கு புத்தக மதிப்புரை, மதிப்புரை கட்டுரைகள் எழுதுவதால் ஏராளமான நூல்கள் கிடைத்தன, இன்னும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. எனக்குத் தேவையான பல நூல்கள் இப்படித்தான் கிடைத்தன.மதிப்புரைகள், மதிப்புரைக் கட்டுரைகள் எழுதுவதை இப்போது குறைத்துக் கொண்டுவிட்டேன்.இருந்தாலும் இப்ப்டியும் புத்தகங்கள் படித்து எழுதுவது எனக்கு உவப்பான ஒன்று.

நான் எழுதிய மதிப்புரை கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு பேராசிரியர் ஒரு சர்வதேச கலைகளஞ்சியத்தில் அவர் தொகுத்த பிரிவில் ஒரு கட்டுரை எழுத வாய்ப்பளித்தார்.. நான் யார் என்று தெரியாத போதும் என்னால் எழுத முடியும் என்று அவர் நம்பினார். அக்கட்டுரையும் வெளியானது.

புத்தகங்களை மதிப்புரைக்காக படித்து மதிப்புரை எழுதும் போது 600 வார்த்தைகளில் அல்லது 1000- 1200 வார்த்தைகளில் புத்தகத்தினை மதிப்பிட்டு அதன் நிறை, குறைகளையும் எழுத வேண்டும். நூலை எழுதியவர் மதிப்புரை சரியில்லை என்று புகார் செய்ய முடியாத வகையில் எழுத வேண்டும்.

மதிப்புரை கட்டுரைகள் சில் ஆயிரம் வார்த்தைகளில் எழுதப்படுபவை, அடிக்குறிப்புகள் தர முடியும், ஒரு பொருளைக் குறித்து விவாதிக்கவும் முடியும். மதிப்புரைக்காக நூற்களைப் படிப்பதுடன், அந்த நூல் விவாதிக்கும் பொருள் குறித்தும் ஒரளவேனும் படித்து விடுவேன் என்பதால் மதிப்புரை எழுதுவது எனக்கு மேலும் படிக்க கிடைக்கும் ஒரு வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

நூலில் சுட்டப்படும் கட்டுரைகள், நூற்கள் குறித்தும் கவனம் கொள்வேன். பல நல்ல நூற்களையும், கட்டுரைகளையும் நான் பிற நூற்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன். மேலும் நூலாசிரியரின் பிற படைப்புகளையும் அறிய இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.

நான் இந்த் நூலினை மதிப்புரை செய்து தருகிறேன்,மதிப்புரைக்காக பிரதி கோரி எனக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டு மதிப்புரை செய்வதுமுண்டு. அப்படி கோரிய ஒரு நூலின் பிரதி விரைவில் எனக்கு கிடைக்கும். அந்த நூல் கடந்த மாதம்தான் வெளியானது.

ஒரு ஆய்வாளன் என்ற முறையிலும் நான் ஆய்வு தொடர்புடைய நூல்களை அதிகம் படிக்கிறேன். மேலும் வெளியாகும், வெளியாகயுள்ள நூல்கள் குறித்தும் அறிய முயற்சிகள் எடுத்துக் கொள்கிறேன். நூற்கள், கட்டுரைகள், அறிக்கைகள் இலவசமாக கிடைப்பதுமுண்டு. எனவே படிக்க வேண்டியவை ஏராளம்.

ஒரு நாளைக்கு சில நூறு பக்கங்கள் படித்தால் ஒரளவிற்கேனும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் அது வாசிக்கப்படும் நூற்கள், கட்டுரைகள் எதைப்பற்றி என்பதை பொருத்தும் இருக்கிறது. நான் வாசிக்கும் பல நூல்கள், கட்டுரைகளை பொறுமையாகப் படிக்க வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள வேறு பலவற்றையும் வாசிக்க வேண்டும். உதாரணமாக ஒரு சட்டத்துறை ஜர்னலில் வெளியாகும் கட்டுரையில் சட்டப்பிரிவுகள், வழக்குகள் குறித்து அடிக்குறிப்புகள் இருக்கும். அதைப் புரிந்துகொள்ள அடிக்குறிப்புகளில் உள்ளவற்றையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே என்னைப் பொறுத்த வரை புத்தகங்கள் வாசிப்பின் ஒரு பகுதிதான். புத்தகங்களுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது. அது தரும் வாசிப்பனுபவமும் முக்கியமானது என்று கருதுகிறேன். உதாரணமாக இதை எழுதும் இன்று மட்டும் கிட்டதட்ட 700 பக்க அளவிற்கு ஒருஜர்னலின் இதழ், ஒரு மாநாட்டுக் கட்டுரைகளை சேமித்திருக்கிறேன். இதில் தெரிவு செய்துதான் படிக்க முடியும். என்று படிப்பேன் என்பது தெரியாது.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறது நான் எழுதியது, யார் இதையெல்லாம் கேட்டது எங்கே புத்தகப் பட்டியல் என்று கேட்பவர்களுக்கு பதில் கீழே.

கடந்த ஆறு மாதங்களில் வாங்கியவை . இதில் சிலவற்றைப் படித்துவிட்டேன், சிலவற்றைப் படித்துகொண்டிருக்கிறேன்.

Weaving the Web: The Original Design and Ultimate Destiny of the World Wide Web
Networks of Innovation: Change and Meaning in the Age of the Internet...
The Anarchist in the Library
Free Culture: How Big Media Uses Technology and the Law to Lock Down Culture
Human Cloning and Human Dignity
Shamans Through Time: 500 Years On The Path Of Knowledge
Enough: Staying Human in an Engineered Age
The Abu Ghraib Investigations
Earthly Politics : Local and Global in Environmental Governance
Torture and Truth : America, Abu Ghraib, and the War on Terror
Interpreter of Maladies
Regarding the Pain of Others
Guantanamo: What the World Should Know
Masterpieces: The Best Science Fiction of the Century
Nebula Awards Showcase 2004
Human-Built World : How to Think about Technology and Culture
The Haraway Reader
The Best American Essays 2004
Collapse: How Societies Choose to Fail or Succeed
Living with the Genie

இந்த நூல்கள் மதிப்புரைக்காக வந்தவை அல்லது இலவசமாக அல்லது அன்பளிப்பாக கிடைத்தவை

Trading the Genome
A Patent system for 21st Century
Patents and Knowledge Economy
Principles of International Environmental Law
Just Sustainabilities
Year Book of International Co-operation on Environment and Development 2003-04
The Commons in the New Millennium
Cultural Logics and Global Economies:Maya Identity in Thought & Practice

அண்மையில் மதிப்புரை செய்த சில நூற்கள் அல்லது மதிப்புரை வெளியான நூற்கள்

New Media Reader
Hacking the Cyberspace
Transboundary Risk Management

மேற்கூறிய பட்டியல் முழுமையானதல்ல.

தமிழில் அண்மையில் படித்த நூல் :
பூமித்தின்னிகள்- காஞ்சனா தாமோதரன் - உயிர்மை பதிப்பகம்
கடைசியாக படித்த நாவல் புலிநகக் கொன்றை

பின் குறிப்பு :நான் எழுதியது பிடித்திருந்தால் வாழ்த்துக்களை இங்கு பின்னூட்டமிடவும், பிடிக்கவில்லை யெனில்வசவுகளை தங்கமணியின் பதிவில் பின்னூட்டமிடவும், ஏனெனில் என்னை எழுதச் சொன்ன பாவம் அவரையே சேர்வதாக, படித்த பாவம் உங்களுக்கே :)

11 மறுமொழிகள்:

Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

வாழ்த்துக்களை இங்கு பின்னூட்டமிடவும்.

3:37 PM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

கதைப் புத்தகங்களைப் பற்றி எழுதுவீர்கள் என்று நினைத்தால் இப்படிப் பாடப் புத்தகங்களையெல்லாம் காட்டுவது அழுகுணி ஆட்டமில்லையா? :))

4:13 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Guantanamo: What the World Should Know
Torture and Truth : America, Abu Ghraib, and the War on Terror
The Abu Ghraib Investigations

இதையெல்லாம் பாடபுத்தகமாக வைத்தால் என்ன ஆவது. கதைப்புத்தகம்தான் எல்லோரும் எழுதி வருவதால் இப்படி ஒரு ஆட்டம்.அப்புறம் அதைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன்.

5:13 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

karthikramas சொன்னதாவது:
||வாழ்த்துக்களை இங்கு பின்னூட்டமிடவும்.||

அனோனிமாசு சொல்வதாவது:
|வாத்துக்களை?
ஊட்டிப் பின் தொடரலாமா?|


இரவி சீனிவாசன் சொன்னதாவது:
||நான் எழுதியது பிடித்திருந்தால்...பின்னூட்டமிடவும்||

அனோனிமாசு சொல்வதாவது:
|இரவி சீனிவாசன் இனி இப்படியாகப் பயமுறுத்தக்கூடாது என்று கேட்கிறேன்|

5:19 PM  
Blogger Thangamani மொழிந்தது...

நான் உங்களையும் அனாதை ஆனந்தனையும் அழைத்ததே எல்லோரும் குறிப்பிடும் வகையான புத்தகங்கள், எழுத்துக்களில் இருந்து மாறுபாடான விசயங்கள் கிடைக்கும் என்பதற்காகத் தான். எனவே நீங்கள் குறிப்பிட்ட புத்தகங்களுக்காக நன்றிகள்.

சிறுபத்திரிக்கை அரசியல் குறித்து முடிந்தால் பிறகொருநாள் எழுதுங்கள்.

நன்றிகள்.

7:16 PM  
Blogger Moorthi மொழிந்தது...

மற்றவர்களின் பதிவில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது உங்கள் பதிவு. பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள் ரவி ஸ்ரீனிவாஸ்.

10:06 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

இரவி சீனிவாசன் இனி இப்படியாகப் பயமுறுத்தக்கூடாது என்று கேட்கிறேன்

:)

12:15 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

சிறுபத்திரிக்கை அரசியல் குறித்து முடிந்தால் பிறகொருநாள் எழுதுங்கள்.

that is beyond my comprehension, you can understand global politics but not this :)

12:16 PM  
Blogger Narain மொழிந்தது...

//சிறுபத்திரிக்கை அரசியல் குறித்து முடிந்தால் பிறகொருநாள் எழுதுங்கள்.

that is beyond my comprehension, you can understand global politics but not this :)//

:-))))))))))

12:41 PM  
Blogger Sarah மொழிந்தது...

//எனவே என்னைப் பொறுத்த வரை புத்தகங்கள் வாசிப்பின் ஒரு பகுதிதான். புத்தகங்களுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது. அது தரும் வாசிப்பனுபவமும் முக்கியமானது என்று கருதுகிறேன். //


ஆமாம். வாழ்க்கையை, புரிதலை சொல்லில் அடக்கிவிட முடிவது கடின்மே.

நன்றி ரவி

புத்தகப் பெயர்களைப் பார்க்கவே பயமாயிருக்கு!!!!!!!!!!!

சாரா

2:55 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

புத்தகப் பெயர்களைப் பார்க்கவே பயமாயிருக்கு!!!!!!!!!!!

நன்றி. என்னை நேரில் பார்த்தே பயப்பாடாதா நீங்கள் புத்தகப் பெயர்களைப் பார்த்து பயப்படுவதா, நம்பும்படியாக இல்லை. :).

1:04 PM  

Post a Comment

<< முகப்பு