எஸ்.வி.ராஜதுரையின் கடிதம், சில குறிப்புகள்

மே 25,2003 இந்தியா டுடே இதழ் பக்கம் 3- 4

எனது கருத்துக்கள்

மே 11,2005 இதழ் 'விடுதலை கேட்கும் எழுத்து' கட்டுரையில் எனது கருத்துக்கள் என பீர் முகமது எழுதியுள்ளமை தொடர்பாக சில வார்த்தைகள்:அவற்றில் விவரப் பிழைகள் ஏதும் இல்லை என்னும் போதிலும் இயக்கங்களின் வன்முறை செயல்பாடுகளை, அரசியலை இராணுவத்திற்கு கீழ்ப்பட்டதாகச் செய்யும் ஒரு பொதுவான போக்கின் பிண்ணணியிலேயே பார்க்க வேண்டும் என்பதையே எனது கருத்தாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை தொலைபேசி 'நேர்காணலின்' போது வலியுறுத்தினேன். மேலும் புலிகள் எத்தகைய தவறுகளையும், குற்றங்களையும் செய்த போதிலும் சிறிலங்கா அரசும் சிங்கள அரசியல் கட்சிகளும் பேரினவாதத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கும் வரை தமிழ் மக்களிற் பெரும்பான்மையினர் விடுதலைப்புலிகளைத்தான் தமது பாதுகாப்பு கவசமாக கருதுவர் என்பதை 'தமிழர் பகுதிகளுக்கு' நான் மேற்கொண்ட பயணத்தின்போது பலதரப்பட்டவரிடமிருந்து கேட்டறிந்ததையும் குறிப்பிட்டேன். மாற்றுக் கருத்தினரை ஒடுக்குவது புலிகளுக்கு மட்டுமே உரிய முற்றுரிமை அல்ல என நான் கூறியதற்கு மற்றொரு சான்றாக இருப்பது, பிரபல பத்திரிகையாளர் டி.சிவராம் (தராக்கி) சிங்கள இனவெறியரால் படுகொலை செய்யப்பட்டதாகும்.(இவரது எழுத்துக்களின் தாக்குதல்களுக்கு நான் இருமுறை ஆளாகியிருக்கிறேன் என்பது வேறு விஷயம்). கட்டுரையாளரின் நோக்கம் சிறிலங்கா மக்களின் அவலதுக்கான காரணங்களை அலசுவதல்ல என்பது புரிகிறது.

எஸ்.வி.ராஜதுரை கோத்தகிரி
-----------------------------------------------------------------------------------
1, மே 11 இதழில் வெளியான கட்டுரையை யாராவது வலையேற்றினால் அதில் என்ன வெளியாகியிருக்கிறத்ழ் என்பது தெரியும்.

2, ஜே.வி.பி என்ற சிங்களப் பேரினவாதக் கட்சியை தோழமை இடதுசாரிக் கட்சியென்று கருதும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி அதாவது சி.பி.ஐ, சிங்கள பேரினவாதம் எப்படி இடதுசாரி அல்லது மார்க்ஸியகோட்பாடாக இருக்க முடியும் என்பதை விளக்கினால் நல்லது. நாங்கள் ஈழ்த்தமிழரின் நலனிலும் அக்கறை கொண்டவர்கள், ஜே.வி.பி யையும் இடதுசாரி என்று ஏற்போம் என்பது யாரை ஏமாற்ற.

3, மார்க்ஸ் காலத்திலிருந்து விவாதிக்கப்படும் தேசிய இனம், தேசிய இனப்பிரச்சினை குறித்து இடதுசாரிகளும், பிறரும் ஏராளமாக எழுதியுள்ளனர். இது குறித்து ஒரு கட்டுரை தொகுப்பினைக்கொண்டு வர அ,மார்க்ஸ் முயன்றார். அது வெற்றியடையவில்லை. அத்தொகுப்பில் பெண்ணிய நோக்கில் தேசியம், குடியுரிமை போன்றவற்றை விமர்சிக்கும் கட்டுரைகளும் இடம் பெற வேண்டும் என்பதற்காக சில கட்டுரைகளை நான் பரிந்துரைத்தேன். பின் நவீனத்துவக் கண்ணோட்டமும், மார்க்ஸிய கண்ணோட்டமும் வேறுபடும் புள்ளிகளை மட்டுமல்லாது, இதில் பல் வேறு நிலைப்பாடுகளை, கோட்பாடு, நடைமுறை, செயல்திட்ட வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற முயற்சிகளை இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிகளும் எடுப்பதில்லை. ஏனென்றால் இதைச் செய்தால் அவர்களது வறட்டு சித்தாந்தக் கண்ணோட்டம் அப்போது எவ்வளவு பிற்போக்கானது என்பது தெரிந்துவிடும்.

சிலர் அரசனை விட அரச விசுவாசம் அதிகம் உடையவர்கள். இப்போது கட்சியில் இல்லை என்ற போது ஜெயகாந்தன் அப்படிப்பட்டவர்தான்.

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

OOPS it should be may 25,2005
மே 25,2003 -> மே 25,2005
ravi srinivas

9:58 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Ravi,
I requested a friend to email this article and will post as soon as it is received.

Sundaramoorthy

10:22 AM  

Post a Comment

<< முகப்பு