எஸ்.வி.ராஜதுரை-அ.மார்க்ஸ்-பெரியார்

எஸ்.வி.ராஜதுரை மே 15 இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பில் கூறியிருப்பதை நான் படிக்கவில்லை.ஆனாéல் மே 29 இதழில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.மே 15 இதழில் என்ன வெளியாகியுள்ளது என்பதை அறியாமல் நான் அது குறித்து என்ன கூற முடியும்.ராஜதுரை இந்திய அமைதிப்படை அனுப்பப்படுவதை எதிர்த்தார், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய,தமிழக அரசுகளின் நிலைப்பாடுகளை விமர்சித்திருக்கிறார். இடதுசாரி இயக்கங்கள் மீதும் விமர்சனம் வைத்துள்ளார். இந்த்துவாவிற்கு எதிராக தொடர்ந்து எழுதிவந்திருக்கிறார்.பெரியார்,அயோத்திதாசர், சுயமரியாதை இயக்கம்,திராவிட இயக்கங்கள் குறித்து தனியாகவு, வ..கீதாவுடன் சேர்ந்தும் மிக விரிவாக எழுதியிருக்கிறார், தமிழிலும், ஆங்கிலத்திலும். தேசியம், தேசிய இனப்பிரச்சினைகள் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றின் பிண்ணணியில் அவர் இந்தியா டுடேக்கு கூறியிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதைச் செய்யும் போது அவர் ஈழப்பிரச்சினையை கொச்சைப்படுத்தியதில்லை, பேரின வாதத்தினை ஆதரித்து எழுதவில்லை, இயக்கங்கள் மீது விமர்சனம் என்ற பெயரில் ஈழத்தமிழர் மீது அவதூறு கூரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மனித உரிமைப் போராளியுமாவார். அரசுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கும் அறிவு ஜீவியல்ல அவர்.நிலைமை இப்படி இருக்க யானையைப் 'பார்த்த' குருடர் போல் ராஜதுரை புலிகளை விமர்சித்துவிட்டார் என்று குதூகலிப்பது சிரிப்பினையே வரவழைக்கிறது.

அ.மார்க்ஸ் தேசியம் குறித்து பல ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருபவர். நிறப்பிரிகையில் தேசியம், தேசியவாதம் குறித்து கட்டுரைகள் வர வேண்டும் என்பதில் அக்கறை காட்டியவர். இன்று அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையினை வைத்துக் கொண்டு வானாத்திற்கும் பூமிக்கும் குதிப்பதற்கு முன் அவர் இந்த்துவாவினை விமர்சிப்பவர் என்பதுடன், பெரியாரை முன்னிறுத்துபவர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு சில தமிழ் தேசிய இயக்கங்கள் அல்லது வாதிகள் மீது விமர்சனம வைப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஏனெனில் பெருங்கதையாடலுக்கு மாற்று என்றுஎதை முன்னிறுத்துகிறோம் என்பதில் அவருக்கு தெளிவு உண்டு. கண் மூடித்ததனமாக இந்திய தேசிய வாததினை விமர்சனமின்றி ஏற்பது அவருக்கு எப்படி ஏற்கக் கூடியதாக இருக்கும்.

தமிழ்த் தேசியவாதிகள் கூட்டாட்சி தத்துவம் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள பிரச்சினைகளையும் பேசுகிறார்கள். காவிரிப் பிரச்சினை இல்லவே இல்லை என்று கண்ணை மூடிக் கொள்ளவேண்டுமா. இல்லை இந்தியாவில் எந்தப்பிரச்சினையும் இல்லை, இந்திய தேசியவாதிகள் எல்லாவற்றையும் தீர்வு கண்டு இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டுமா.

குறுகிய தமிழ் தேசியம் ஆபத்தானது எனறால் இவர்கள் மறைமுகமாக ஆதரிக்கும் இந்த்துவம், ஜெயகாந்தன் தூக்கி பிடிக்கும் காஞ்சி மடம் இவையெல்லாம் மிகவும் நல்லவையா. இவற்றில் சம்த்துவக் கண்ணொட்டமாக நிலவுகிறது.மார்க்ஸ் கட்டுரையின் சில பகுதிகளை சிறுபத்திரிகை, தலித் அரசியல் பிண்ணனியில் பார்க்க வேண்டும்.

எஸ்.வி.ராஜதுரையும், அ.மார்க்ஸும் ஒரே கண்ணோட்டத்தினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. இருவருக்கும் புலிகள், குறுகிய தமிழ்த் தேசியம் மீது 100% விமர்சனம் உண்டென்றால், ஈழப்பிரச்சினையில் மத்திய,மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் மீது 300% விமர்சனமிருக்கும்.

இதை உணராது மார்க்ஸே இப்படிச் சொல்லிவிட்டார், எஸ்,வி,ராஜதுரையே அப்படிச் சொல்லிவிட்டார், அப்படிச் சொல்லாதவர்கள் அப்பிடியாக்கும், இப்பிடியாக்கும் என்று எழுதுவது மடத்தனம். ஏனெனில்மாறுப்ட்ட கருத்துக்கள் கொண்டவர்கள் ஒரு இயக்கத்தின் மீது வெவ்வேறு கோணங்களில் விமர்சனம் வைக்க அனைத்து சாத்தியக் கூறுகளும் உண்டு. அதை அவர்களின் கருத்துக்களின் பிண்ணனியில்தான் புரிந்து கொள்ள முடியும்.

அவர்கள் உடன்படும் புள்ளிகள் எவை, விலகும் அல்லது மாறுபடும் புள்ளிகள் எவை என்பதையும் புரிந்து கொள்ள முயல வேண்டும். ஆனால் இப்படி எதையுமே செய்யாமல் அவர் இதை எதிர்க்கிறார், இவர் அதை எதிர்க்கிறார் என்று வியந்து பாராட்டி எழுதுவது வீண் வேலை.

கடந்த 15 ஆண்டுகளில் பெரியார், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கங்கள் குறித்து தமிழிலும், ஆன்fகிலத்தும் பல கட்டுரைகள், நூல்கள் வெளியாகியுள்ளன முனைவர் பட்டய ஆய்வேடுகளும் மாற்றம் பெற்று நூல் வடிவில் வந்துள்ளன்.

ராஜதுரை, கீதா, ச்ரிலதா, பாண்டியன்,வெங்கடாசலபதி, பாலா ரைச்மேன் , அ.மார்க்ஸ் உட்பட பலர் எழுதியுள்ளனர்.பாண்டியன் பெரியார் தேசியம் குறித்து சொன்ன கருத்துகளின் அடிப்படையில் தேசியம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பெரியாரின் கருத்துக்கள்,பணிகள் குறித்து தலித் அறிவுஜீவிகளும் எழுதியிருக்கிறார்கள்.

பெரியாரை விமர்சிகின்ற கும்பல (உ-ம்.ஜெயகாந்தன், ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பி.கே.சிவகுமார், விஸ்வாமிதரா) இவற்றையெல்லாம் படித்து விமர்சிக்கிறதா. இதையெல்லாம் படித்து ஒரு அறிவு பூர்வமான விவாதத்தில் ஈடுபட இவர்கள் தயாரா. இந்தக் கேள்விக்குப் பதில் வராது ஆனால் வசைதான் எதிர்வினையாக வருவதற்கு அதிகபட்ச சாத்தியக் கூறு இருக்கிறது.

இந்த கும்பலுக்கு ஒன்று கூறுகிறேன்: திண்ணையிலும், மேடைகளிலும் நீங்கள் 'குத்தாட்டம்' போடலாம். ஆனால் இன்று பெரியார் சர்வதேச கவனிப்பினையும், அங்கீகாரத்தினையும் பெற்றவர். இந்தியாவின் நவீனத்துவம், சமூக மாற்றம், பெண்ணியம் குறித்துப் பேசும் போது பெரியார் என்று ஒருவர் அத்துடன் ஏதோ ஒரு விததில் தொடர்புடையவராகிறார்.ஜோதிபா புலே,அயோத்திதாசர், அம்பேத்கர் போன்றவர்களுக்கு தரப்படுகிற கவனம் பெரியாருக்கும் தரப்படுகிறது.

உங்களால் முடியுமானால் இதை அறிவுபூர்வமாக எதிர்கொண்டு அவர் அதற்கு தகுதியற்றவர் என்று நிரூபித்துக்காட்டுங்கள்.

11 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

ரவி ஸ்ரீனிவாஸ்,
அ. மார்க்ஸ் & எஸ். வி. ராஜதுரை இவர்கள் இருவரினதும் கட்டுரைகளை நான் வாசிக்கவில்லை. ஆனால், இருவருடைய கருத்துகளையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தொடர்ந்து வாசித்தும் அவதானித்தும் வருகின்றவன் என்ற அளவிலே, இவர்கள் ஈழ/தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் இல்லையென்று எனக்கு உறுதியாகத் தோன்றுகிறது. அ. மார்க்ஸின் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நண்பர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டினைப் பொதுவாகக் கொண்டவர்களென்பதையும் நீங்கள் அவதானித்திருக்கலாம். எஸ். வி. ராஜதுரையின் கட்டமைப்புவாதம் நூல் வந்த வேளையிலே அதனை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பரும் அவரைச் சார்ந்தவர்களும் (கோவை ஞானி போன்றோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே) பின்னாலே விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மாற்றான 'மக்கள் விடுதலை இயக்கங்களிலே' இருந்தவர்கள்/(தன் இயக்கத்துக்குள்ளேயான உட்கட்சிப்பிரச்சனைகளிலே அந்த நண்பர் கொல்லப்பட்டார் என்று பின்னால் கேள்வியுற்றேன்). அதனால், எஸ். வி. ராஜதுரைக்குப் புலிகளின் வலதுசாரிப்போக்கினைப் பிடிக்காமலிருக்கவும் நியாயமிருந்திருக்கிறது. (சுவராசியமான விடயமென்னவென்றால், இடதுசாரிகளைக் கிண்டல் செய்கிறவர்களும் இந்துத்துவாவாதிகளும் அவ்வப்போது எஸ். வி. ராஜதுரையினையும் அ. மார்க்ஸினையும் தங்கள் தேவைக்கேற்பச் சட்டையாக வெட்டிப் போட்டு அழகு பார்ப்பது :-()

நான் புரிந்துகொண்ட அளவிலே தியாகு, கோவை ஞானி போன்றோர் தீவிர இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து தமிழ்த்தேசியமும் கலந்த இடதுசாரி நிலைப்பாட்டுக்கு வர, எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ் போன்றோர், இடதுசாரித்துவமும் பெரியாரியமும் கலந்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றார்கள். எனது புரிதல் தவறாக இருக்கலாம். ஆனால், அவ்வாறு நான் புரிந்துகொண்டதின்படி பார்க்கும்போது, அ. மார்க்ஸ், எஸ். வி. ராஜதுரை ஆகியோர் புலிகளுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னால் ஆச்சரியப்படமாட்டேன். ஆனால், ஈழத்தேசியநிலைப்பாடுக்கெதிராகவோ, அல்லது பொதுவிலே தமிழ்த்தேசியத்துக்கெதிராகவோ சொல்லியிருந்தால் ஆச்சரியப்படுவேன்.

திரிப்பதும் தமக்குத் தேவையானவற்றினை வெட்டித் துண்டாக்கி, உருப்பெருக்குவதும் சிலரை நம்ப வைக்க உதவும். வேண்டுமானால், திண்ணை ஆசிரியர்களின் 70 & 80 ஆம் ஆண்டுகளின் கருத்துகளை எடுத்து வைத்துக்கொண்டு, தென் துருவந்தான் வடதுருவமென்று காட்ட முடியாதா என்ன? ;-)

(பொதுவிலேயே, மூக்கனின் வலைப்பதிவிலே சென்ற ஆண்டு நிகழ்ந்த குதர்க்கவாதத்தின் பின்னால், வலைப்பதிவின் குறிப்பிட்ட சிலர் விதை போட்டு மயிர் பிளந்து விருட்சமாக்கும் விடயங்களிலே பேச விரும்புவதில்லை. இரவிலே நித்திரையைக் குழப்பவும் வீட்டிலே விசரைக் கிளப்பவுமே விளைவாகின்றதாலே. ஆனால், தொடர்ந்து ஈழம் குறித்த தமது மேலாதிக்கத்தினை நிறுவ முயலும் இந்து ராம், சோ, ராமசாமி, சுப்பிரமணியசுவாமி, ஜெயகாந்தன் போன்ற சிலரைத் தூக்கிப்பிடித்து வரும் பதிவுகளுக்குப் பதிலாக எழுதாமல் விடுவதும் பெரும்பிழையோ என்றுதான் படுகிறது. ஏனெனில், இப்படியான கொலாஜ் ஒட்டுக்கந்தைப்பதிவுகளை good write up என ஆதாரமாக வைத்து எதிர்காலத்திலே மேற்கோள் காட்டவும் கூட்டமிருக்கின்றது. இன்று எழுதிய பதிவு நாளை மறைந்துபோகும் இணையத்திலே, இப்படியான பதிவுகளின் நேர்மையின்மையைச் சுட்டிச்சொல்லாதுவிட்டோமானால், இந்த ஒட்டுக்கந்தையே உண்மை என்று எதிர்காலத்தில் நிறுவிவிடப்படவும் அநியாயமான சாத்தியமுண்டு.

3:49 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ரவி,
எனக்கு அ.மார்க்ஸ் , எஸ்.வி.ஆர் போன்றரை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட (கடந்த 6 மாதம் முன் வரை) 2 வருடங்களாக பி.கே சிவக்குமாரை வாசித்துள்ளேன் என்பதால். அவரது தர்க்கங்களும், அவரது உள் நோக்கங்களும் நன்றாகத் தெரியும். வீட்டில் குழாயில் தண்ணி வரவில்லை யென்றால்கூட பெரியாரை ஏசி ஒரு பதிவு போட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. [ஜெயகாந்தன் பேச்சை தடலாடியாக பெரியாரியவாதி பதிவு=>பெரியார்=> + எனக்கு கடவுள் முக்கியம் => இந்தியம்_இந்து + உட்டாலக்கடி என்று குழம்பு வெச்சாரே சமீபத்தில் ]

நீங்கள் பொறுமையாய் , அளவாய் பதில் சொல்வது வியப்பளிக்கிறது.உங்கள் பதிவுக்கு நன்றி.

4:12 PM  
Blogger Thangamani மொழிந்தது...

ரவி, பதிவுக்கும் விளக்கத்தும் நன்றிகள். நான் வாசித்த எஸ்.வி. ராஜதுரையின் இந்து, இந்தி, இந்தியா மற்றும் சில கட்டுரைகளின் வழி அவர் பெரியாரியம் கலந்த இடதுசாரி என்று அறிகிறேன். மற்றும் அவர் பெருந்தேசியங்களை பற்றிய சரியான விமர்சனங்களை நேர்மையாக வைக்கக்கூடியவர் என்றும் உணர்கிறேன்.

ஆனால் சிலருக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வீச கற்கள்தான். அது எங்கிருந்து கிடைத்தால் என்ன?

4:32 PM  
Blogger கறுப்பி மொழிந்தது...

நல்ல பதிவு ரவிசிறீனிவாஸ்

4:35 PM  
Blogger சுதர்சன் மொழிந்தது...

//இந்த ஒட்டுக்கந்தையே உண்மை என்று எதிர்காலத்தில் நிறுவிவிடப்படவும் அநியாயமான சாத்தியமுண்டு.//
கண்டிப்பாக. இப்படிப்பட்ட ஒட்டுக்கந்தை 'உண்மை'கள் இதற்கு முன்னர் நிறுவப்பட்ட ஒட்டுக்கந்தைகளை தழுவிதான் இருக்கும். காலப்போக்கில் இவையே அந்த காலகட்டத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வாக, பின்னர் வரலாறாகவும் திரிக்கப்படும் பேரபாயம் இருக்கிறது. எனவே எதிர்ப்புகளும் பதிவு செய்யப்படவேண்டியது கட்டாயமாகிறது.

-சுதர்சன்

4:50 PM  
Blogger Choochu மொழிந்தது...

ரவி, பதிவுக்கும் விளக்கத்தும் நன்றிகள். எனக்கு அ.மார்க்ஸ் , எஸ்.வி.ஆர் போன்றரை பற்றி அதிகம் தெரியாது. அ. மார்க்ஸ் & எஸ். வி. ராஜதுரை இவர்கள் இருவரினதும் கட்டுரைகளை நான் வாசிக்கவில்லை.

சொல்லப்போனால் அவர்கள் யாரென்றே எனக்குத் தெரியாது.
ஜெயகாந்தன் பேச்சையும் கேட்கவில்லை. சிவக்குமார் எழுதியதையும் படிக்கவில்லை. நீங்கள் எழுதியதைக் கூட படிக்கவில்லை. ஆகையால், என்னையும் உங்கள் ஆமாஞ்சாமி பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். விசிதா, ராதா ராமசாமி போன்ற மாய மக்களுக்கு இடையே முகத்தைக் காட்டக்கூடிய ஜால்ராவான கார்த்திக் போன்ற ஆ(மாஞ்)சாமிகளோடு என்னையும் தயது செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். தங்கமணி மாதிரி "உங்கள் பதிவுக்கு நன்றி" என்று இனி உங்களது கட்டுரை எல்லாவற்றிலும் நானும் போட்டு விடுகிறேன். பெயரிலி மாதிரி திண்ணைக்கு ஒரு திட்டும் தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் போட்டு விடுகிறேன்.
திண்ணையில் குத்தாட்டம் போடுபவர்கள் (உங்களைத் தவிர மற்றவர்கள்) ஒழிக. சிவக்குமாருக்கு எப்போது புத்தி வரப்போகிறதோ?

நமக்குத்தான் எதுக்கும் பதில் சொல்லணும்னு ஒரு கட்டாயமே கிடையாதே. "உளர்ரான்" என்று சொல்வதுதானே நமக்கு இருக்கும் ஒரே பதில்.. பட்டையக் கிளப்புவோம்....

5:32 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ஏங்க, இந்த பதிவுகளையெல்லாம் CST 9:00 PM க்கு பிறகு போடக்கூடாதா :-)

தேவைப்பட்டால் அ.மா., எஸ்.வி.ஆர்., பெரியார் எல்லோரையுமே ஊறுகாய் ஆக்கித் தொட்டுக்கொள்வார் பி.கே.எஸ். ஆனால் முழுச்சாப்பாடுக்கு என்னமோ ஜெயகாந்தன் தான். அது இடதுசாரி, இந்திரா காங்கிரஸ், இந்துத்துவா மூன்றையும் சம அளவில் பிசைந்து உருட்டி அடித்த கொத்து பரோட்டா. ஒவ்வொரு முறை பிய்க்கும்போதும் ஒவ்வொரு வகையாக வரும் எல்லா துண்டங்களையும் வாயில் போட்டுத் திணித்து விழுங்கி தேசிய நீரோட்டத்திலிருந்து ஒருகை அள்ளிக் குடித்து ஏப்பம் விட்டால் அறிவொலி திக்கெட்டும் கேட்கும். தொடர்ந்து மௌனப் பெரும்பான்மையின் கரவொலியும் மௌனமாக விண்ணைப் பிளக்கும்.

இவரையும், விஸ்வாமித்ராவையும் ஒரே குழுவில் சேர்க்கவேண்டாம். விஸ்வாமித்ராவுக்கு ம. வெங்கடேசன் என்பவர் எழுதிய நூல் ஏதோ ஒன்று கிடைத்திருக்கிறது. அதைத் தவணை முறையில் பிய்த்து எறிந்துக்கொண்டிருக்கிறார். மற்றபடி அவர் எழுதுவதற்கு எல்லாமே ஒரே அடிப்படை பெரியார் மீதான வெறுப்பு மட்டுமே. பி.கே.எஸ். அறிவுஜீவி பீடத்தில் நின்று உரக்க முழங்குவர். பெயரிலி சொன்னது போல உடனுக்குடன் எதிர்க்காவிட்டால் அவர் உதிர்க்கும் முத்துக்களைப் பொறுக்கி நாளை விஸ்வாமித்ரா, வரதன் வகையறாக்கள் மாலை கோர்த்து நம் கழுத்திலே மாட்டிவிடுவார்கள். அவரை எதிர்த்து எழுதுபவர்களுக்கு ஒரே வேண்டுகோள். அவருடைய பதிவிலே பின்னூட்டமாக எழுதவேண்டாம். அதையே அங்கீகாரமாக எடுத்துகொள்ளக்கூடிய ஆபத்து இருக்கிறது. ரவி செய்ததுபோல பொறுமையாக தனிப்பதிவுகளாக எழுதுங்கள்.

எண்பதுகளில் பிற்பகுதியிலேயே உதயன், விஜயன் எழுதிய "இந்துமாக்கடலும் இலங்கை இனப்பிரச்சினையும்" என்ற புவிசார் அரசியல் நூலுக்கு எஸ்.வி.ஆர் முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் "தூணேறிய சிங்கங்களும், வாளேந்திய சிங்கமும்" கூட்டாக நடத்தும் பெரும்பான்மை தேசிய இன வெறிகளைக் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

5:34 PM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

நல்ல பதிவு ரவி.
...
அ.மார்க்ஸின் உயிர்மைக் கட்டுரையை 'அந்த' ஆள் உருவிப்போட்டதை தமிழ்மணத்தின் முகப்புடன் பார்த்தவுடன், அ.மார்க்ஸ் இந்த ஆசாமிகளின் ஆளாகி எப்போது சோரம்போனார் என்று யோசித்தபடி வாசிக்கத்தொடங்கியிருந்தேன். ஆனால் 'ஆசாமி' தான் விருப்பப்பட்டபடி திரிக்கவும், உருமாற்றவும் மட்டுந்தான் பதிவிலிட்டிருக்கின்றார் என்று புரிய, அப்பாடா அ.மார்க்ஸ் தப்பிவிட்டார் என்று நினைத்தேன். இவரைப்போன்றவர்களுக்கு பெரியாரைத் திட்ட சந்தர்ப்பம் வருகின்றதென்றால், 'பெரியார்?' என்ற அ.மார்க்ஸின் கட்டுரைத் தொகுதியையும் சிபார்சு செய்கின்றேன். இந்த ஆசாமிகள், திரித்து, உருப்பெருக்கிப் போட அதில கனவிசயங்கள் இருக்கின்றது. உண்மையில் ஆகக்குறைந்து, அ.மார்க்ஸோ, எஸ்.வி.ஆரோ எந்த நிலைப்பாட்டிலிருந்து தங்கள் கருத்துக்களைச் சொல்கின்றார்கள் என்ற அக்கறை கிஞ்சித்தும் இல்லாமல் தமக்குப் பிடித்தமானவற்றை உருவிப்போடுபவர்களைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கின்றது. எஸ்.வி.ஆர் போல (பெயரிலி சுட்டிக்காடியதுபோல), பெளதீகம் கற்பித்துக்கொண்டிருந்த அ.மார்க்ஸ¤ம் இலக்கிய உலகிற்கு வந்ததற்கு ஒரு ஈழப்போராளிதான் காரணம் என்று நெருக்கமான ஒரு நண்பரிடமிருந்து அறிந்திருக்கின்றேன். அ.மார்க்ஸ் இப்போதல்ல, நாலைந்து வருடங்களுக்கு முன்புகூட (நான் வாசித்தளவில்) கோவை ஞானி முன்வைத்த தமிழ்த்தேசியத்தைக் கடுமையாக விமர்சித்தே வந்திருக்கின்றார். (எனக்கு கோவை ஞானி முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தின் சில புள்ளிகளுடன் உடன்பாடுண்டு). அ.மார்க்ஸ்தான் முதன்முதலில் புதுமைப்பித்தனின் படைப்புக்களில் உள்ளுறைந்து கிடந்த சாதியப்படிமங்களை வெளிப்படுத்தி, (பு.பித்தனின் எல்லாக் கதைகளும் சிறந்தவையல்ல என்று) நல்ல விமர்சனத்தையும் வைத்திருந்தார் (அது கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி தமிழினி-2000யில் வேறுதிசையில் பயணித்திருந்தாலும்). குருபீடத்தில் அமர்ந்துகொண்டு, ஆசி வழங்கிக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருக்கும் ஞானபீடங்களைப் போல அல்லாது, கோவைக் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும், தலித்துக்கள் மீதான வன்முறைச் சம்பவங்களிலும் அ.மார்க்ஸ் உண்மை அறியும் குழுக்களுடன் களத்திற்கு நேராகச் சென்று உண்மை நிலவரங்களை அறிந்து அறிக்கைகளாக வெளியிட்டுமிருக்கின்றார். இன்னுமொன்று எஸ்.வி.ஆரின் 'பதி, பசு, பாகிஸ்தான்' வாசிக்கும்படி தயவுசெய்து நமது 'anyindians'ற்கு யாராவது சிபார்சு செய்யுங்கள் :-).

7:21 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

ரவி எஸ்.வி ராஜதுரையின் சில கட்டுரைகளை வாசித்ததைக் கொண்டு முழுமையாக இதில் சரி பிழை சொல்லத் தெரியவில்லை.ஆனால் ஈழப்பிரச்சனையில் இந்திய மத்திய மாநில அரசுகளை விமர்சித்து எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்திருக்கிறேன்.அவரின் கட்டுரைகள் முழுமையான தொகுதியாக வந்திருக்கின்றன படிக்கவேண்டும்.

தமிழ்த்தேசிய நிலையெடுத்த பெரியாரியவாதிகளும் தீவிர இடதுசாரிகளாக் அறியப்பட்டவர்களும் கூட வட இலங்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.வன்னியில் மார்க்சியத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்று அண்மையில் நடந்ததாக அறிந்தேன்.

கூடவே ட்ராஸ்கி மருது,புகழேந்தி போன்றவர்களின் வருகை கருத்தளவிலும் சிந்தனையளவிலும் அங்கே சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடுமென்று நம்புகிறேன்

பெரியாரின் தோழரான ஆனைமுத்து அவர்களை ஈழத்துக்குச் செல்வதன் முன் சந்தித்துப் பேசினேன்.அதுபற்றி எனது பதிவில் விரிவாக எழுதுகிறேன்

1:20 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

முக்கியமான பதிவு. மிக தெளிவான உள்நோக்கத்துடன் ஒரு பதிவு போட்டு, அதே நேரம் "இந்திய தேசியத்துடன் ஒப்பிட்டால், ஒருவேளை தமிழ் தேசியத்தை அ.மார்க்ஸ் ஆதரிக்க கூடும்' என்று ஜல்லியடித்து, "நான் எழுதியதையே படிக்காமல் எழுதுகிறார்கள்' என்று அங்கலாய்த்தால், அடுத்தாத்து அம்பி 'gr8 write up, mind boggling arguments' என்று ஏதேனும் உளரகூடுமே தவிர மற்றவர்களுக்கு அதன் உள்நோக்கம் தெளிவாய் தெரியும். வலைப்பதிவில் பிண்ணணி அரசியல் தெரியாதவர்களுக்கு இத்தகைய பதிவுகள் மிகவும் தேவையானது.

5:14 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பின்னூட்டமிற்றவர்களுக்கு நன்றிகள். ராஜதுரையின் கடிதத்தினை இன்றோ அல்லது நாளையோ வலையேற்றுகிறேன்.மே15 இதழ் எனக்கு கிடைக்கவில்லை.நான் இ.டூ வை தொடர்ந்து படிப்பதில்லை. தற்செயலாக இந்த இதழ் வாங்கிய போதுதான் அதில் கடிதம் வெளியாகியிருப்பது தெரிந்தது.யாரவது அந்தக் கட்டுரையை வலையேற்றினால் நல்லது,

9:26 AM  

Post a Comment

<< முகப்பு