கேட்டேன் - ௨

இன்று காலை நான் ஆய்வு செய்யும் ஆய்வுமையத்தில் பேராசிரியர் அட்ரீன் காதரீன் விங் சுமார் இரண்டு மணி நேரம் எங்களுடன் தன் கருத்துக்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சுமார் 70 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இரண்டு நூல்களின் பதிப்பாசிரியர்களில் ஒருவர்.பாலஸ்தீனம், தென் அமெரிக்கா, ருவாண்டா உட்பட பல நாடுகளில் பெண்களின் சட்டங்கள் குறித்த முயற்சிகளுக்கும், அரசியல் சட்ட விவாகாரங்களிலும் ஆலோசகராக செயல்பட்டிருக்கிறார். இனம்,பெண்ணியம், மனித உரிமைகள், critical race theory, gender and law உட்பட பலவற்றை எடுத்துரைத்தார்.

அவர் பேசியதைக் கேட்கும் போது நம் தமிழ்ச்சூழலில் இவையெல்லாம் அறிமுகம் ஆகவில்லை, இத்தகைய கருத்துக்கள், கோட்பாடுகளை இந்தியப் பெண்ணியல்வாதிகள் பயன்படுத்தியிருந்தாலும் அவை தமிழுக்கு இன்னும் வரவில்லை என்பதை நினைக்கும் போது எந்த நூற்றாண்டில் தமிழ் சிந்தனை உலகம் இருக்கிறது என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது.

குடும்பக் கட்டுப்பாடு கூடாது , பெண்ணியமா, அது என்ன ஈயம் என்று கூறுபவருக்கு எங்கள் நாட்டில் ஞானபீடம் வழங்கப்பட்டுள்ளது.பெண்ணிய ஜர்னல்களைப் பற்றி எதுவும் தெரியாமல், புரியாமல் ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொண்டு உளறிக் கொட்டுபவர் எங்கள் தமிழ் நாட்டில் விமர்சகராக சிலரால் மதிக்கப்படுகிறார் என்று நான் கூறினால் கேட்பவர்களில் அறிவுடையோர் சிரிப்பார்கள்.

2 மறுமொழிகள்:

Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

//குடும்பக் கட்டுப்பாடு கூடாது , பெண்ணியமா, அது என்ன ஈயம் என்று கூறுபவருக்கு எங்கள் நாட்டில் ஞானபீடம் வழங்கப்பட்டுள்ளது.பெண்ணிய ஜர்னல்களைப் பற்றி எதுவும் தெரியாமல், புரியாமல் ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொண்டு உளறிக் கொட்டுபவர் எங்கள் தமிழ் நாட்டில் விமர்சகராக சிலரால் மதிக்கப்படுகிறார் என்று நான் கூறினால் கேட்பவர்களில் அறிவுடையோர் சிரிப்பார்கள்.//

Agree Totally :-)

2:52 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

100% உண்மை.

3:13 PM  

Post a Comment

<< முகப்பு