மொழிப் போர்

ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் பெயர்பலகைகள் மீது தார் பூசுவது என்று கூறப்பட்டபின் இரு மொழிகளில், தமிழ்,ஆங்கிலம், இருந்த பலகைகளில் தார் பூசியது தவறு, கண்டிக்கப்பட வேண்டியது. 1980களில்,1990 களில் போடப்பட்ட அரசாணைகளை நிறைவேற்றுவதற்காக 2005ல் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

தமிழ் நாட்டில் தமிழ் இடம் பெறுவது இழிவானது என்று நினைப்பவர்களுக்கு இத்தகைய போராட்டங்கள் அல்லது கோரிக்கைகள் முட்டாள்தனமானதாகத் தெரியல்லாம். மக்கள் மொழி ஆட்சி மொழி ஆக இருப்பது என்பது வெறும் மொழி சார்ந்த ஒன்றல்ல. அதில் ஜனநாயகமும் கலந்திருக்கிறது.

இந்தியாவெங்கும் மத்திய அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகள், நாட்டுமையாக்கப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் இந்தியை எப்படி பயன்படுத்த வேண்டும், எங்கெங்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சட்டம் உண்டு, விதிகள் உண்டு. தென் தமிழ் நாட்டின் ஒரு மூலையில் ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் வந்தாலும், அதில் ஒன்றுதான் நிற்கும் என்றாலும் கூட அங்கு பெயர் பலகையில் இந்தி இருக்கும். ஏன் பல மத்திய அமைச்ககங்கள், நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்கள், கடித உறைகள், போன்றவற்றில் இந்தி இருக்கும், அம்மாநிலத்தில் இந்தி பேச்சு மொழியாக இல்லாவிட்டால் கூட.

இதையெல்லாம் ஏற்றுக்கொள்பவர்கள், தமிழில் பெயர் பலகை, தமிழில் மட்டும்தான் இல்லை, இருக்க வேண்டும் என்றால் ஆயிரத்தெட்டு ஆட்சேபணைகள் தெரிவிப்பார்கள். இது ஏதோ ஆங்கிலத்திற்கு எதிரானது என்று கூக்குரல் எழுப்புவார்கள். தினமலரோ இதை இன்னும் திரித்து எழுதும். இதை யார் கேட்பது என்று பொருத்தமேயில்லாமல் புகைப்படங்களை வெளியிடும்.

தமிழ்நாட்டில் இந்தியில் பெயர்பலகை இருக்க வேண்டும் என்று போராடினால் அப்போது இத்தமிழ் விரோதிகள் ஆதரிப்பார்கள்.தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டாலும் இந்தியில் இருக்க வேண்டும் என்றுமத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், ஏனெனில் இந்தி தேசிய மொழி என்று இவர்கள் வாதாடக் கூடும்.

இவர்களுக்கு மொழிப்பற்றும் இல்லை, மொழி மீது அக்கறையும் இல்லை. ஏதோ ஆங்கில நாட்டில் பிறந்து ஆங்கிலத்திலேயே வாழ்கிற மாதிரி நினைப்பு, தமிழில் நாளேடு நடத்தி லாபம சம்பாதிக்க வேண்டும் , ஆனால் அந்த மொழியை ஒழுங்காக எழுத வேண்டும், கருத்துக்களை தெளிவாகக் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

Public trust என்ற சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் தங்களுக்குத் தெரிந்த ஒரே பொருள் trust = அறக்கட்டளை என்பதால் அதை அப்படியே பொது அறக்கட்டளை என்று மொழிபெயர்த்து வெளியிடும் தினமலர், வேண்டுமென்றே ஆங்கில வார்த்தைகளை கலந்து எழுதும் பத்திரிகைகள் இவர்களையும் எதிர்த்து போராட வேண்டும்.

இன்று ஒரு மொழிப் போர் தேவையாகிறது, அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதுதான் கேள்வி.

10 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

//இன்று ஒரு மொழிப் போர் தேவையாகிறது, அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதுதான் கேள்வி. //

சரியாகச் சொன்னீர்கள் இரவி. எப்படி எடுத்துச் செல்வது என்பதில் தற்பொழுது நடத்துபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் யாருமே எதுவும் செய்யாமல் இருக்கும் பொழுது இதையும் ஒரு பிரச்சினையாக விவாதத்திற்குக் கொண்டு வந்ததே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று கூறியிருந்தார்கள். அவர்களை ஏளனம் செய்வதை விட்டு எப்படி முன்னெடுத்துச் சென்றால் சரியாக இருக்கும் என்பதை முன் வைத்தால் நல்லது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

9:31 AM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

சரியான நேரத்தில் சரியான பதிவு

9:57 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இன்று மொழிப்போர் அவசியமானதொன்று என்பது உண்மைதான். இதை மறுப்பவர்களை ஒரு பொருட்டாக எடுக்காமல் எப்படி முன்னெடுக்கவேண்டும் என்பதை தெளிவாக ஆராயவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கண்மூடித்தனமாக செய்கின் ஒவ்வொன்றும் தமிழ்மொழி மீதே பாதிப்பை உண்டுபண்ணும். மொழிப்போரிற்கு ஆதரவளிப்பவர்கள் தாம் ஒரு முன்மாதிரியாக முதலில் மாறவேண்டும். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயலாற்றவேண்டும். ஒன்றில் சர்வாதிகாரியாக இருந்து செயலாற்றவேண்டும் - அதற்கான அதிகாரம் அவர்களிடம் இருக்கவேண்டும். இல்லை மக்களோடு மக்காளாக வாழும் போராளியாக மாறவேண்டும் - மக்களோடு நெருக்கமானவர்களாய் ஆகவேண்டும். இது இரண்டும் இல்லாமல் கோசமெழுப்பிப் பயனில்லை.

10:20 AM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

இரவி,
//இன்று ஒரு மொழிப் போர் தேவையாகிறது, அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதுதான் கேள்வி. //
என்பது உண்மை.
அவ்வாறே,
//ஏளனம் செய்வதை விட்டு எப்படி முன்னெடுத்துச் சென்றால் சரியாக இருக்கும் என்பதை முன் வைத்தால் நல்லது.//
என்று சங்கரபாண்டி சொல்வதையும் நாம கணக்கிலெடுத்தால் நல்லது.

10:23 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

//இன்று ஒரு மொழிப் போர் தேவையாகிறது, அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதுதான் கேள்வி. //

ஒப்புகொள்கிறேன்.

11:46 PM  
Blogger neo மொழிந்தது...

இன்றைய தேதியில் வலைப்பக்கங்களில், 'மயிரை' கொடுத்து தமிழை வளர்க்கமுடியுமா? என்றெல்லாம் படு கொச்சையாக எழுதுமளவு சில 'நரி'களுக்கு நீளவால் முளைத்து விட்டது.

அதை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டிய பெரியவர்கள் கூட 'அடக்கி' வாசிக்கிறார்கள் :(

2:58 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

neo. பெரியவர்களை துணைக்கழைக்கிறாய். நீ யார் என இப்போது தெளிவாக தெரிகிறது. நீ எதிர்பார்க்கும் கூட்டம் கூடி உனக்காக ஆர்ப்பரிக்கும்வரை சத்தமாக ஊளையிடு...

3:51 PM  
Anonymous Thangamani மொழிந்தது...

அலுவலகத்தில் ஆங்கிலமும் இந்தியும், கோயிலில் சமஸ்கிருதம், கச்சேரிகளில் தெலுங்கு, மழலையர் வகுப்புமுதல் கல்வி இறுதிவரை ஆங்கிலம்.. நம்முடைய எல்லாத் தேவைகளும் முடிந்துவிடுகிறது. கூலிக்காரனிடமும் பாமரனிடம் பேச ஒரு பண்ணி மொழியும் கைவசம் தெரிந்துகொண்டால் கூடுதலாக ரங்கநாதன் தெருவில் சாமான் வாங்க போதும். இதில் எதற்காக மொழிப்போர் வேண்டும் என எனக்குப்புரியவில்லை.

புரியாத மொழியில் செயற்படும் போது மக்களின் மேல் அதிகாரம் செய்யமுடிகிறது, அவர்களது பங்களிப்பை குறைக்க முடிகிறது; ஊழலைச் அச்சமின்றி செய்யமுடிகிறது; மூடநம்பிகையை வளர்க்கமுடிகிறது; பொய்யையும், முட்டாள்த்தனத்தையும் அதிகாரமாகக் காட்டமுடிகிறது என்கிற சூழல் இருக்கிற போது மயிரை வைத்துத் தான் தமிழ் வளர்க்கவேண்டும்.

மக்களுக்கு அதிகாரம் வேண்டுமானால் மக்கள் மொழியில் அரசு, கல்வி, நீதி அமைப்பு, வழிபாடு எல்லாம் இருக்கவேண்டும்; சுரண்டுபவர்களிடம் அதிகாரம் இருக்கவேண்டும் என்கிறபோது எதற்காக மொழிப்போர்? அதை எப்படிச் செய்யவேண்டும் யோசனை எதற்கு?

தேசபக்தியா? அது கார்கிலுக்கும், பாகிஸ்தான்காரனைக் கண்டால் கொடியெடுத்து ஆட்டவும் தான் வேண்டும்.

இந்தியா என்றால் இந்திப்பாடலையும், ஓரமாக தமிழ், தெலுங்கு சினிமாப்பாடலையும் கலைநிகழ்ச்சிகளில் பாடிவிட்டால் இந்தியக் கலை, இசை, நடனம், கவிதை, சினிமா, பாரம்பரியம், பண்பாடு எல்லாம் ஆகிவிட்டது. இதில் மொழிப்போர் எதற்கென்று புரியவில்லை!

நிஜமாகவே புரியவில்லை!

சாமிக்கு சம்ஸ்கிருதம் தான் புரியுமென்று சாதித்தாகிவிட்டது!

சட்டத்துக்கும், அலுவலுக்கும் ஆங்கிலத்தில் தான் முடியும்.

கம்ப்யூட்டருக்கு இங்கிலீஸ் இருப்பதால்தான் கிழிக்கமுடிகிறது.

அறிவியல் என்றாலே ஆங்கிலம்தான் என்பது தெரியவில்லை என்றால் நீ என்ன அறிவாளி?

இரயிலுக்கு, ஆர்மிக்கு, இந்தி-யா இல்லையா?

இந்த இரும்புக்காதுகளில் 4 தெலுங்குக் கீர்த்தனையை வைத்து தேய்த்தால் இசை முடிந்தது.

எனக்குப் போதும்.
மக்களுக்கு வேணாமான்னா? மக்கள் போய் மயிரை வைத்து (அல்லது திருப்பதியில் அதைக்கொடுத்து) பிழைக்கட்டும்.

எவனாவது மக்களைப்பற்றி ஏதாவது, அவன் தப்பாகவே பேசட்டுமே, அவனைப் பார்த்து வாயாலும் மற்றதாலும் சிரிச்சுட்டுப் போவீங்களா, மொழிப்போர், வைக்கப்போர்ன்னுட்டு!

11:30 PM  
Anonymous oruvan மொழிந்தது...

உயிர் இருப்பவன் உயிரைக் கொடுப்பவன் உயிரைக் கொடுப்பான்.மயிர் இருப்பவனுக்கு அதுதானே சிந்தனையில் வரும் விடுங்கள் ஜோ எவனெவனுக்கு எது ஒழுங்காக இருக்கிறதோ அதைப் பற்றித்தானே பேசுவான்

2:13 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இரவி, மொழிகளைக் கலந்து பேசுவதும் கலவாமல் பேசுவதும் அவரவர் சுதந்திரம். அதில் குறுக்கிடுவது மொழிவெறி, பாசிசம்.

நியோ, "மயிர்" என்றெழுதுவதில் என்ன தவறு? ஆசாரம் காப்பாற்றுகிறீரா?

5:07 AM  

Post a Comment

<< முகப்பு