மொழி என்றொரு வைரஸ்

நான் பல ஆண்டுகளாக டாம் டுமாரோவின் கேலி சித்திரங்களை பார்த்து வருகிறேன். அமெரிக்கா வெகுஜன ஊடகங்கள், அரசியல்வாதிகள், வலதுசாரிகளை அவர் சித்தரிக்கும் விதம் எனக்குப் பிடிக்கும்.சமீபத்தில் அமெரிக்காவில் பரிணாம வாதத்தினை பள்ளிகளில் கற்பிப்பது குறித்த சர்ச்சையில் ஒரு தரப்பினர் மாணவர்களுக்கு மாற்றுக் கருத்துக்களும் சொல்லித் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்த, இன்னொரு தரப்பினர் பரிணாம வாதத்தின் குறைகள் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுவதில்லை என்று குறை கூறுகின்றனர். இவர்கள் வாதத்தின் படி 'பாரபட்சமில்லாத' கண்ணோட்டத்தினை மாணவர்கள் முன் வைக்க வேண்டும். எனவே பரிணாம வாதத்தின் குறைகளை பரிணாம வாதத்திற்கு தரப்படும் முக்கியத்துவத்துடன் சொல்லித் தரப்பட வேண்டும்.

டாமின் கேலிச் சித்திரத்தினை இது போன்ற கருத்துக்களின் பிண்ணனியில் குறிப்பாக அறிவார்ந்த உருவாக்கம் (intelligent design) என்ற கருத்தினை முன் வைப்போரின் வாதங்களின் பிண்ணனியில் புரிந்து கொள்ள முடியும்.முட்டாள்த்தனமான கருத்துக்கள் ஊடகங்களில் இடம் பெறும் விதத்தினை அவர் செய்யும் கிண்டலை கவனியுங்கள்.


2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

:{

6:38 PM  
Blogger Voice on Wings மொழிந்தது...

சூப்பரோ சுப்பர் :)

3:00 PM  

Post a Comment

<< முகப்பு