பெண்களும், அறிவியலும்- பகுதி 2

அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை-இரண்டாம் பகுதி உயிர்மை மே 2005 இதழில், இங்கும்

Part II

பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் போது அவர்களின் இருப்பே அங்கீகாரம் பெறாது, அவர்கள் குரல்களும் உரிய கவனம் பெறாது. ஆனால் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இது மாறும் வாய்ப்புண்டு. உதாரணமாக பெண்களின் எண்ணிக்கை 1% அல்லது 3% என்று இருக்கும் போது அவர்கள் மிகச்சிறுபான்மையினராகவே இருப்பர். அதே சமயம் அது 20% அல்லது 30% என்றிருக்கும் போது அவர்களை புறக்கணிக்கப்பது கடினம். அதுவே 40%, அதற்கு மேல் என்றிருக்கும் போது தீர்மானிக்கும் சக்தி அவர்களிடமிருக்கும். எனவே பெண்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு உயராத போது அவர்களை புறக்கணிப்பது எளிது. ஆனால் எண்ணிக்கை மட்டும் போதுமானதல்ல,நிறுவனங்களும் தங்கள் பங்கினையாற்ற வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுள்ளது. சிறு குழந்தைகவனிப்பு வசதி, பிரசவகால விடுப்பு,பெண்களை பணி நிரந்தரம் செய்வதில் சில மாறுதல்கள், பெண் அறிவியலாளர்களை பணிக்கெடுப்பதில் ஊக்குவிப்பு போன்றவற்றை அறிவியல் ஆய்வுக்கூடங்கள், பல்கலைகழகங்கள் கடைப்பிடித்தால் பெண்கள் அறிவியலில் பங்கேற்பது அதிகரிக்கும். இதற்கு உதாரணமாக கிழக்கு ஐரோப்பிட்ய நாடுகளைக் கூறலாம். சோசலிச அரசுகள் சிறு குழந்தை கவனிப்பு வசதியினை அளித்தன. பின்னர் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின்னும் கூட அரசு இவ்வசதியைத் தரும் அல்லது அதற்கான மான்யம் வழங்கும் முந்தையைய கிழக்கு ஜெர்மனியில் பெண்கள் அறிவியலில் பங்கேற்பது அதிகமாக உள்ளது. அவர்கள் உழர்பதவிகளில் அதிகமாக இல்லை என்பது வேறி விஷயம்.
பெண்கள் அதிகமாக அறிவியலில் ஏன் இல்லை, அவர்கள் பங்கேற்ப்பினை ஏன், எப்படி அதிகரிக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் 1960களின் பிற்பகுதியில், 1970களில்தான் பரவலாகத் தொடங்கின. இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டன. இவற்றின் அடிப்படையில் பெண்கள் அறிவியலில் பங்கேற்ப்பினை அதிகரிக்க உதவும் வகையில் சில கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும் அறிவியலில் உயர்கல்வி பெறும் பெண்களில் எத்தனை பேர் அறிவியலினை ஒரு தொழிலாக தேர்வு செய்கிறார்கள், அவர்கள் அதில் எந்த அளவு முன்னேறுகிறார்கள் என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அமெரிக்கவை மட்டும் எடுத்துக் கொண்டால் புள்ளிவிபரங்கள் பெண்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்றே காட்டுகின்றன.
Ph.Ds earned by women in 2002 - U.S. ciitizens at all institutions
% total physical sciences 29% 2997engineering 19% 1890life sciences 50% 5327social sciences 60% 4901humanities 50% 4139education 67% 5265total 51% 25935Total is for men and women, excluding phds in business, management,and other professional fieldsSource - The Chronicle of Higer Education 3rd Dec 2004 ஆனால் பல்கலைகழகங்களில், ஆய்வுக்கூடங்களில் பெண்கள் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக உள்ள விகிதம் குறைவாகவே உள்ளது. ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைகழகங்களில் ஆண் பேராசிரியர்களின் விகிதம் 70%க்கும் அதிகம்.புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உதவிப் பேராசிரியர்களில் 60% ஆண்கள். எனவே முனைவர் பட்டம் பெற்றப் பெண்கள் அதே விகிதத்தில் பல்கலைகழகங்களில் ஆசிரியர் வேலைகளில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.ஹார்வார்ட் தலைவருக்கு கடிதம் எழுதிய மூத்த பெண் ஆசிரியர்கள், கலை மற்றும் அறிவியல் புலங்களில் பணி நிரந்தம் செய்யப்ண்ட்ட 32 பேரில் 4 பேர்தான் பெண்கள் என்று குறிப்பிட்டனர்.கலிபோர்னியா பல்கலைகழத்தில் பெண்கள் பணிக்கு சேர்க்கப்படுவது 1990களில் வெகுவாக குறைந்த போது பெண் பேராசிரியர்கள் குரல் எழுப்பினர், மாநில சட்டசபை இது குறித்து கருத்தறிந்தது.தற்போது பெண்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெறும் ஊதியமும் ஆண் ஆசிரியர்கள், பேராசிரியர்களை விட குறைவாக உள்ளது.ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைகழகங்களில் பெண் துணைப் பேராசிரியர்களை விட ஆண் துணைப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட 23% அதிக வாய்ப்புள்ளது. அது போல் பணி நிரந்தரமான பின் பெண்களை விட ஆண்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பும் அதிகம். பல்வேறு கோணங்களில் இப்பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். ஏனெனில் பாலியல் ரீதியான வெளிப்படையான பாரபட்சம் இல்லாதது போல் தோன்றினாலும் பெண்களுக்கு எதிரான பல காரணிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் போது ஆண், பெண் எப்படி கருதப்படுகிறார்கள் என்பது.மிச்சிகன் பல்கலைகழகத்தில் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் போது எப்படிபட்ட பாரபட்சங்கள், அவை நேரடியாகத் தெரியாவிட்டாலும் மறைமுகமாக உள்ளன என்பது குறித்து பேராசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. இதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து பயிலரங்குகள் நடத்தப்பட்டன. தேர்ந்தெடுக்கும் போது பொதுவான மதிப்பீடிற்குப் பதிலாக குறிப்பிட்ட அளவுகோல்களின் படி , உ-ம் பாடங்கள் கற்பிக்கும் திறன், ஆய்வுத் திறன் மதிப்பீடு செய்யுமாறு கோரப்பட்டது. இதன் விளைவாக பெண்களை தேர்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது. அறிவியல் மற்றும் பொறியியலில் 2001 ல் தேர்ந்தெடுக்கப்படவர்களில் பெண்களின் சதவீதம் 13 ஆக இருந்தது, 2003/2004ல் அது 39% ஆக உயர்ந்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு