இரண்டு குறிப்புகள்

1,FUTURES என்கிற ஜர்னலில் வெளிவர இருக்கும் ஒரு இதழுக்காக பேரா.இமிதாஸ் அகமது எழுதிய அறிமுகக் கட்டுரையைப் சமீபத்தில் படித்தேன்.தேசியவாதத்திற்கு அப்பாற்ப்பட்ட எதிர்காலங்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.இந்த இதழில் பார்த்தா சாட்டர்ஜி உட்பட இன்னும் சிலர் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.இன்று உலகமயமாதல், தேசியம், நவீனத்துவம் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறுகின்றன.இதில் .0001%ம் கூட தமிழில் அறிமுகமாகவில்லை.அது மட்டுமல்ல இரட்டைக் குடியுரிமை, ஐரோப்பிய (பொது) அரசியல்சட்டம் போன்றவற்றுடன் குடியுரிமை, மக்கள் இடம் பெயர்தல், குடியேற்றக் கொள்கைகள் இவை குறித்து செய்திகள் கூட தமிழில் அதிகம் வருவதில்லை.வலைப்பதிவாளர்களாவது இவை குறித்து எழுத வேண்டும்.

2, ஜுன் மாத தென் செய்தியில் ஈரோட்டில் நடந்த ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஒரு செய்திக் குறிப்பிருக்கிறது.தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழக இளைஞர் முண்ணனி சார்பில் நடத்தப்பட்ட மாநாடு அது. அந்தத் தீர்மானங்கள் குறித்து எனக்கு விமர்சனமுண்டு.அதில் இரண்டு தீர்மானங்கள், வெளிமாநிலத்தவர் என்ற பெயரில் பிறரது உரிமைகளைப் பறறிரிப்பவை.இந்த்துவம் போன்றே குறுகிய தேசியவாதமும் ஆபத்தானது. பிற இரண்டு தீர்மானங்கள் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு சர்ச்சைக்குரியவை.இவை குறித்தும் எனக்கு விமர்சனம் உண்டு, ஆனால் முதல் இரண்டு தீர்மானங்களும் சாத்தியமற்றவை, தமிழர் நலனுக்கு எதிரானவை.

2 மறுமொழிகள்:

Blogger Anathai மொழிந்தது...

ரவி,

தனியார் துறையில் இடஒதுக்கீடு கேட்பது எப்படி பிரச்சனைக்குரியது என விளக்க முடியுமா? அப்படி விளக்கும் போது, அந்தத் தனியார் துறைகளுக்கு "வெளிநாட்டு போட்டி" என்னும் பாதிப்பு வராமல் காக்கும் இந்தியச் சட்டங்களையும் வரையறைக்கு உட்படுத்தி விளக்கினால் புரிதலுக்கு இன்னமும் வசதியாக இருக்கும். அரசாங்கத்தின் பாற் இருக்கும் துறைகள் தனியார்மயமாக்கலினில் விரைவிற்கும்/சமூக விகிதாச்சார பிரநிதித்துவத்தின் பின் தங்கலுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வை சரியமைக்க வேண்டியது எப்படி சாத்தியாமாகும் என்பதையும் சொன்னால் நல்லது. நேரமில்லையென்றால் இது பற்றின கட்டுரைகளை சுட்ட முடியுமா?

நன்றி,
அனாதை

7:37 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

இது குறித்து விரிவாக எழுத எனக்கு நேரமில்லை.மேலும் வலைப்பதிவு இதற்கு உகந்த இடமும் அல்ல.தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்து பல கட்டுரைகள் உள்ளன, கீழ்க்கண்ட இணையதளங்களைப் பார்க்கவும்

www.epw.org.in
www.india-seminar.com
www.ambedkar.org

7:56 AM  

Post a Comment

<< முகப்பு