குண்டர் சட்டம் - இரண்டு தீர்ப்புகள்

அப்பு,சுந்தேரச ஐயர், ரகு உட்பட 11 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் இட்டது செல்லாது என்ற உயர் நீதி மன்றத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இப்படி குண்டர் சட்டத்தினை எந்த விதமான முகாந்திரமுமின்றி கைது செய்ததை உயர் நீதி மன்றம் ஏற்கவில்லை.

அதே சமயம் திரைப்படங்களின் அனுமதி பெறாத பிரதிகளை வீடியோ நாடா, குறுந்தகடு, டி.வி.டி வடிவில் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்த அரசின் ஆணை, சட்டத்திருத்தம் செல்லும் என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.இது குறித்து எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. தீர்ப்பின் முழு விபரம் தெரியவில்லை.பத்திரிகை செய்திகளை வைத்து நீதிபதிகள் முன் வைத்த காரணங்கள் குறித்து ஒரளவே அறிய முடிகிறது. எனினும், இங்கும் குண்டர் சட்டத்தினை பிரயோகிப்பது சரியல்ல என்பதே என் கருத்து. அரசு இப்படி குண்டர் சட்டத்தினை பயன்படுத்துவது ஒரு தரப்பாரின் நலனுக்கு சாதகமாக சட்டத்தினை தேவையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகும் என்றே நான் கருதுகிறேன்.

குண்டர் சட்டம் போன்றவை தேவைதானா, இவை எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விவாதிக்க வேண்டும்.

2 மறுமொழிகள்:

Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

"அரசியற் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதூஉம்" நம்புவோம்.

உங்கள் பக்கம் எப்போதுமே என் கண்ணைக் குத்துகிறது, பாதி வெள்ளையிலும், பாதி பச்சையிலுமாகப் படிக்கச் சிரமமாக இருக்கிறது. இது மோசில்லா உலாவி. இதில்தான் பிழையா அல்லது வடிவமைப்பே அப்படித்தானா? நன்றி.

8:33 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

thanks.yes there is green and white but in IE it is readable without colors straining the eyes.
.perhaps it needs to finetuned for mozilla.ravi srinivas

2:55 PM  

Post a Comment

<< முகப்பு