கேட்டேன் -1

கேட்டே விட்டேன் ஜெயகாந்தன் உரையை.இதனை இணையத்தில் இட்ட அன்பர்களுக்கு, குறிப்பாக பி.கே.சிவகுமாருக்கு என் நன்றி.அவர் அந்த அவைக்குரிய உரையைத் தந்திருக்கிறார்.தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிலர் ஒயாமல் அர்த்தமின்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

அது போல்தான் இந்த உரையும். பொய் சொல்வதும், பிறர் கருத்தை திரிப்பதும் கருத்துரிமையின் பகுதிகள்தானே. அதானல் மிகவும் உரிமை எடுத்துக் கொண்டு பாரதி சொன்னதை அப்படிச் சொல்லியிருக்கிறார். இந்திய அரசியலமைப்பு குறித்த அவரது விளக்கம் சட்டம் அறிந்தோரை வியக்கச் செய்யும். அவர் சொல்வதே சட்டம் என்று நினைப்போருக்கு மகிழ்ச்சி தரலாம். என்ன இப்படி பேசுபவருக்குப் போயா ஞான பீடம் கொடுத்தீர்கள் என்று யாரேனும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது கொடுத்தவர்கள் பொறுப்பு.மற்றபடி இன்னும் இவரை மதிக்கும் கம்யுனிஸ்ட்களுக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும். இப்படியெல்லாம் பேசுபவர் ஒரு நாள் ஆதி சங்கரரின் அவதாரம் மார்க்ஸ் என்றும், மார்க்ஸ் கூட ஜாதிய முறையை ஆதரித்தார் என்றும் சொல்வார். அதையும் கேட்டு கைதட்டும் கூட்டம் இங்கு இருக்கிறதே.

துணுக்கு தோரணங்கள், புத்திசாலித்தனாமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சொல்லப்படும் உளறல்கள், பொருத்தமேயில்லாத கருத்துக்கள், திரித்தல்கள், பிதற்றல்கள் - இவற்றின் தொகுப்புதான் அவர் பேச்சு. இவையெல்லாம் பதிவாவது நல்லது. அவர் பேச்சுகள் எல்லாம் இணையத்தில்இடப்பட்டால் இன்னும் பலர் அவரது கருத்துக்களை புரிந்து கொள்ள உதவும். காஞ்சி ஜெயேந்திரர் பேசாமல் தன் வாரிசாக இந்த ஞான பீடாதிபதியை நியமித்து விடலாம். அது எல்லோருக்கும் நல்லது.

இதைக் கேட்டபின் சுந்தரமூர்த்தியின் கருத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. தமிழ் எழுத்தாளர்கள் ஜெயகாந்தனை விமர்சிக்கமாட்டார்கள். விமர்சித்து சில வரிகள் எழுதிய மனுஷ்ய புத்திரன் எழுதியது கூட அசோகமித்திரன், இரா.முருகன் போன்ற எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் உரைக்கோ, அவுட்லுக்கில் அ.மி பேட்டியில் சொன்னதற்கோ எதிர்ப்பு தெரிவிக்கமாட்ட்டர்கள் என்றே தோன்றுகிறது.

ஜெயகாந்தன் ஞான பீடாதிபதி என்றால் பத்திரிகைகளுக்கு பேட்டியில் தத்துவம் உதிர்க்கும் அசீனும், த்ரிஷாவும் ஜகத் குருக்கள் என்று அழைக்க தகுதியானவர்கள்.

8 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஜெயகாந்தன் ஞான பீடாதிபதி என்றால் பத்திரிகைகளுக்கு பேட்டியில் தத்துவம் உதிர்க்கும் அசீனும், த்ரிஷாவும் ஜகத் குருக்கள் என்று அழைக்க தகுதியானவர்கள்

:)

1:54 PM  
Blogger Sarah மொழிந்தது...

ரவி


நல்லா சிரிச்சேன்

//கேட்டேன் கேட்டே விட்டேன் ஜெயகாந்தன் உரையை//

//தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிலர் ஒயாமல் அர்த்தமின்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.//

நல்லா இருக்கீங்களா

:)

சாரா

2:30 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//அசோகமித்திரன், இரா.முருகன் போன்ற எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை.//

அ.மிக்கு எப்படிப் பிடிக்கும்?

5:53 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

sarah
where are u now,still in france
ravi srinivas

6:51 PM  
Blogger Sarah மொழிந்தது...

yes, in the same place Ravi

2:02 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

thanks sarah.email me your contact details.

3:17 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://kanchifilms.blogspot.com/2005/05/blog-post_29.html

4:59 PM  
Blogger Moorthi மொழிந்தது...

ரவியண்ணா,

என்னா பன்றது? எல்லார் மனசுக்குள்ளயும் ஒவ்வொரு வகைல வேதனை. ஜெயகாந்தனை பாராட்டுனாலும் திட்றாய்ங்கெ. எதிர்த்தாலும் திட்றாய்ங்கெ. என்னமோ ஜல்லி.. கில்லின்னெல்லாம் பேசுறாய்ங்கெ. நீங்க எழுதுங்க சாரே.. பக்க பலமா நாங்க இருக்கோம்.

8:46 PM  

Post a Comment

<< முகப்பு