சந்திரமுகி


இன்று காலை இப்படத்தினை ஒரு திரையரங்கில் பார்த்தேன். படத்தில் பிரமாதமாக நடித்திருப்பவர் ஜோதிகா.கங்கா என்ற பாத்திரத்திற்கு ஒரு வேளை சிம்ரன் இன்னும் பொருத்தமாயிருந்திருப்பாரோ. ஒரு மனோதத்துவ நிபுணர் இப்படித்தான் இது போன்ற உளவியல் பிரச்சினைகளை கையாள்வாரா என்ற கேள்வி எழுகிறது.மணிச்சித்திரதாழிலும் தீர்வு இப்படித்தான் உள்ளதா?.வித்யாசாகரை விட இளையராஜா இன்னும் பிரமாதமாக இசை அமைத்திருப்பார், குறிப்பாக பிண்ணனி இசை என்று தோன்றுகிறது. ரஜனியின் இமேஜ் வட்டத்தினை முற்றிலுமாக நிராகரிக்காமல் அதே சமயம் அரசியல் வாடை துளிக்கூட த் தோன்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஒரு சூப்பர் ஸ்டார் இல்லாமல் ஒரு திறமையான நடிகர் சரவணன் பாத்திரத்தில் நடித்திருந்தால் கதைக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.ரஜனியை இளமையாகக் காட்ட முயற்சித்திருப்பதில் தோற்றுவிடவில்லை, ஒப்பனைக் கலைஞர் (சுந்தரமூர்த்தி?) மிகத் திறம்பட தன் பணியினைச் செய்திருக்கிறார்.
கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மிக எளிதாக ஊகித்துவிடும் வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது ஒரு பலவீனமே. இது போன்ற கதைகளில் யார் இதையெல்லாம் செய்வது என்பதை இவராக இருக்குமோ இல்லை இவராக இருக்குமோ என்று நாம் யோசிக்கும் விதத்தில் கொண்டு செல்வது விறுவிறுப்பினைக் கூட்டியிருக்கும். இந்தப் படத்தில் மூளைக்கு வேலை தேவையில்லை, ரசிகர்கள் ரஜனி மூன்றாண்டுகளுக்குப் பின் நடிக்கும் படத்தினை பார்த்த உணர்வினைப் பெற்றால் போதும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
தமிழ்த் திரைப்படங்களில் இன்னொன்று, ரஜனி மூன்றாண்டுகளுக்குப் பின் நடித்தது என்பதைத் தவிர இப்படம் குறித்து குறிப்பிட்டுச் சொல்ல வேறொன்றுமில்லை.

இதில் காட்டபட்டிருக்கும் தொழில் நுட்பசாத்தியப்பாடுகள் புதிதல்ல என்றாலும் அவைதான் திரைக்கதை, இயக்கத்தில் உள்ள குறைகளை ஒரளவிற்கேனும் மறைக்கின்றன.1960களில், 1970களில் திருலோகச்சந்தர், S.பாலச்சந்தர் இயக்கிய திகில்,மர்மப் படங்களுடன் இதை ஒப்பிட்டால் தொழில்நுட்ப வளர்ச்சி இப்படத்தில் தெரிகிறது, கதை சொல்லும் திறனில் முன்னேற்றம் இல்லை. இது வாசு என்ற இயக்குனரின் பிரச்சினை என்று சொல்ல முடியும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இன்று ஒரு அசலான திகில் அல்லது மர்ம திரைப்படம் என்று கூறத்தக்கவகையில் ஒரு படத்தினை தரக்கூடிய எத்தனை இயக்குனர்கள் நம்மிடம் உள்ளார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

3 மறுமொழிகள்:

Blogger ~Nandalala~ மொழிந்தது...

சந்திரமுகி ஒரு தொற்று போல் பரவி வருகிறது! ;)) இன்னும் எழுத எத்துனை பேர் மீதமிருக்கிறார்கள்?

நந்தலாலா

8:49 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

நல்ல விமர்சனம் ரவி. ஆனால் ஸைக்கோ, மூடுபனி போன்ற படங்களுடன் நீங்கள் ஒப்பிடாமல் விமர்சித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. குறைந்த பட்சம் கதையம்சம் குறித்து பேசும்போது பதேர் பாஞ்சாலி பற்றியாவது ஒரு வார்த்தை மெலிதாகவாவது சொல்லியிருக்க வேண்டாமா?

11:09 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

rosa, i am a layperson who knows little about films or culture.
it is likely that my blog post may not meet the high standards you expect from writings on chandramuki.i agree that i will not be able to analyse and appreciate chandramukhi as you have done.so please be patient with blog posts of novices like me.
ravi srinivas

6:12 PM  

Post a Comment

<< முகப்பு