ஒரு ரசிகனின் குறிப்புகள் - P.B. ஸ்ரீநிவாஸ் - 2

இந்த இரண்டாவது குறுந்தகட்டில் முதல் பாடல் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - ஸ்ரீநிவாஸ¤க்கு புகழ் பெற்றுத் தந்த இன்னொரு பாடல்.கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணி கொடுத்துள்ள இன்னொரு சிறந்த பாடல். இன்றும் இதைக் கேட்டால் எளிய வார்த்தைகளில் ஒரு தத்துவப் பாடலை இப்படி எழுத கண்ணதாசனை விட்டால் யாரும் இல்லை என்றே உணர்வே ஏற்படும்.

உடலுக்கு உயிர் காவல் இதுவும் ஸ்ரீநிவாஸின் குரலில் ஒலிக்கும் போது வேறு பரிமாணம் பெறுகிறது.சரோஜாதேவி காதலிப்பது ஒருவரை, ஆனால் திருமணம் செய்வது இன்னொருத்தரை. தம்பியை காதலித்து அண்ணனை திருமணம் செய்கிறார். தம்பிக்கு இது தெரிய வரும் போது இருவர் மனதில் எழும் உணர்வுகள், உணர்ச்சி போராட்டங்களை வைத்து கதை பின்னப்பட்டிருக்கும். அந்தக் குடும்பத்தில்பெண் கேட்கிறார்கள் என்று சொன்னவுடன் அது அவருக்குகாக என்று நினைத்துக் கொண்டு புகைப்படத்தினைக் கூட பார்க்காமல் ஒப்புக் கொள்கிறாள் கதாநயகி. ராமண்ணா இயக்கம் என்று நினைக்கிறேன்.ஜெமின், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.இயல்பான நடிப்பு. இந்தப் பாடலில் குரல் மூலம் ஸ்ரீநிவாஸ் காட்டும் பாவங்கள் குறிப்பிட வேண்டியவை.யார் காவல் என்ற இரு வார்த்தைகளை உச்சரிக்கும் விதங்கள் மூலம் ரசவாதம் நிகழ்த்துவார்.

சுமைதாங்கி ஸ்ரீதர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணி தந்த இன்னொரு சிறப்பான படம். இதில் இரண்டு பாடல்களில் ஸ்ரீநிவாஸ் கலக்கியிருப்பார் - மனிதன் என்பவன், மயக்கமா கலக்கமா.இந்த இரண்டையும் அடுத்தடுத்து கேட்கும் போது நமக்கே தெரிகிறது இக்கூட்டணி எவ்வளவு திறமையானது என்று. மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்பது போன்ற வரிகள் கொண்ட இந்த இரண்டில் எது சிறந்தது என்று கூறுவது கடினம்.

நினைப்பதெல்லம் நடந்துவிட்டால் எளியவார்த்தைகளைக் கொண்டு சிரமமேயின்றி கவிஞர் நிகழ்த்தும் விளையாட்டு. பொருத்தமான இசை. இதுவும்ஒரு தோல்வியுற்ற காதலை அடிப்படையாக கொண்ட படம். படத்தின் இறுதிக் காட்சியில் இப்பாடல்வருகிறது என்று நினைக்கிறேன். ஒரு பாதிரியார் (சாமியார்) ஆவதென்று முடிவு செய்து ஜெமினி ஒரு வரிசையில் நிற்க அவரைத் தேடி பத்மினி வருவார்.

சிவாஜிக்காக ஸ்ரீநிவாஸ் பாடியுள்ள பாடல் சிலவே.அதில் ஒன்று எங்கும் சொந்தமில்லை. இங்கும் குரல் மூலம் அவர் எழுப்பும் உணர்வினை குறிப்பிட்டேயாக வேண்டும்.

யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன வாலியின் வரிகள் ஸ்ரீநிவாஸின் குரலில்.எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் ஒருவன் பாடுவது போல் இருக்கும்.

அடுத்து வருவது எந்த ஊர் என்றவனே - ஊர் பெயரை வைத்து கவிஞர் பின்னி எடுத்திருப்பார். ஸ்ரீநிவாஸ்குரல் அதற்கு எத்தனை பொருத்தம். மகாதேவன் இசை. இதிலும் ஒருவனின் கதையை கவிஞர் ஊர் ஊராகக் சொல்லியிருப்பார்.இது போன்ற பாடல்களை இயற்றுவது கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது போலும்.மீண்டும் மீண்டும் கேட்கலாம். இது போல் ஊர்கள் பெயர்களைக் கொண்டு வைரமுத்துவும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் - தஞ்சாவூர் மண்ணெடுத்து - படம் பொற்காலம்.

உடைத்த கல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில் ஒன்று வாசல் இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றேஇடத்தைப் பொருத்தே எல்லாம் மாறும் - இது சிரிப்பு பாதி அழுகை பாதி என்று தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.இசை மகாதேவன் என்பதை பிண்ணனி இசையை வைத்தே சொல்லிவிடலாம்.

இரவின் மடியில் உலகம் உறங்கும் நிலவின் அழகில் மலரும் மயங்கும் வேதாவின் இசையில் இப்பாடலைக் கேட்கும் போது பாடலை மிகவும் ரசிக்க முடிகிறது. ஸ்ரீநிவாஸ்ஹம்மிங் பிரமாதம்.வேதாவின் திரை இசை வாழ்க்கை கொஞ்ச ஆண்டுகளே. பார்த்திபன் கனவு அவர் இசை அமைத்த முக்கியமான படங்களில் ஒன்று. அது போல் ஒராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் - ஹிந்திப் பாடல் ஒன்றில் மெட்டு என்றாலும் தமிழில் T.M.S குரலில் அது மிக பிரமாதமாகஇருக்கும். இரவின் மடியில் உலகம் - சரசா பி.ஏ என்பது படத்தின் பெயர். பாலாஜி,பானுமதி நடித்ததுஎன்கிறார் ஸ்ரீநிவாஸ். அவர் கூறுவது போல் இதைக் கேட்டுக் கொண்டே உறங்கலாம்.

தமிழ் திரைப்படங்களில் சிறந்த சோகப் பாடல்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் இடம் பெறும்பாடல் - நிலவே என்னிடம் - ராமு படத்தில். இப்படத்தில் அனைத்து பாடல்களும் பிரமாதம் என்றால்அதில் ஒளிரும் வைரமாக இருப்பது இப்படம். மெல்லிசை மன்னரும், ஸ்ரீநிவாஸ¤ம் இதில் நம்முள்அதிர்வுகளை ஏற்படுத்துகிறார்கள். கண்ணதாசனின் வரிகள் காலத்தால் அழியாதவை என்றால் இசையும்,குரலும் அது போன்றவை.

இப்படம் வெளியான போது தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் இது தவறாது இடம்பெற்றது என்கிறார் பாடகர்.ஜெமினி, கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சுப்பையா நடித்த படம்.ராமுவாக நடித்த சிறுவனும் சிறப்பாக நடித்திருப்பான். விஜயாவின் ஒரு தலைக் காதலுக்கு பதில் சொல்லும் பாடல் இது.இப்பாடல் மெல்லிசை மன்னருக்கும் மிகவும் பிரியமான பாடல்.

ஆரம்ப காலங்களில் வாய்ப்புக் கேட்கும் போது இப்பாடலை பாடி வாய்ப்புக் கேட்டுள்ளேன் என்று S.P.Bஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பாடகருக்கு ஒரு சவால்தான் இப்பாடல். ஆனால் பாடலைக் கேட்டால்ஸ்ரீநிவாஸ் சிரமமே இன்றி பாடியிருப்பது போன்ற உணர்வே எழும். ஸ்ரீநிவாஸின் சிறந்த பாடல்களைப்பட்டியிட்டால் இதற்கு அதில் கட்டாயம் இடம் உண்டு.

கிட்டதட்ட இதே போன்ற ஒரு பாடலை ஸ்ரீநிவாஸ் பின்னர் பாடியிருக்கிறார், சிவக்குமாருக்கு. அப்பாடல்அதிகம் பிரபலமாகவில்லை. ஆனால் ஸ்ரீநிவாஸின் குரல் 1966 ல் ஒலித்தது போல் 1979 அல்லது 1980லும் ஒலிப்பதை இப்பாடல் காட்டுகிறது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- ஊடல் உணர்வினை ஸ்ரீநிவாஸ் குரல் மூலம் சித்தரிக்கும் விதம் பிரமாதம்.கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணியின் இசைப்பயணத்தில் இன்னொருமைல்கல். போலிஸ்காரன் மகளில் இடம் பெற்ற பாடல்.இப்படத்தில் உள்ள பிற பாடல்களும் உன்னதம். அதிலும் சீர்காழி ஜானகி குரலில் ஒலிக்கும் கண்ணில் நீர் இதற்கு காலமெல்லாம அழுவதற்கு என்ற சோகப் பாடல் குறிப்பிட வேண்டிய ஒன்று. படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என அறிகிறேன்.

கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள்பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்வாழ்க்கைப் படகில் இன்னொரு நல்ல பாடல்.இதிலும் ஸ்ரீநிவாஸ் அனாசயமாக உணர்ச்சிகளைமிக இயல்பாக காட்டியிருப்பார்.

கர்ணன் படத்தில் நான்கு பாடகர்கள் பாடும் பாடல் என்ன கொடுப்பான் என்று துவங்கும் பாடல் மிகவும் பிரபலம்.இப்படத்தில் அத்தனை பாடல்களும் ஹிட், அது மட்டுமல்ல படத்துடன் மிகவும்பொருந்தி இருக்கும் பாடல்கள்.

அதிலும் கர்ணனை நோக்கி கிருஷ்ணர் பாடுவதாக சீர்காழிகுரலில் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது, வல்லவன் வகுத்ததடா, கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்று துவங்கும் பாடல் கர்ணனின் சிறப்பினை காட்டும் . சீர்காழியின் கணீர் குரலில் அதைகேட்கும் போது இன்று நம்மிடையே இல்லாத சீர்காழி, கவிஞர் குறித்த் நினைவுகள் மனதில் எழும்.எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை, ஊர்ப் பழி ஏற்றடையடா, நானும் உன் பழி கொண்டேனடா, வஞ்சகன் கண்ணனடா என்ற வரிகள்ஒரு மனிதனின் கதையையும், ஒரு அவதாரத்தின் சுய விமர்சனத்தையும் உள்ளடக்கியவை.

நான்கு பாடகர்கள்- T.M.செளந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி, ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலில்ஸ்ரீநிவாஸ் பாடிய பகுதி மட்டுமே குறுந்தகட்டில் உள்ளது.முழுப் பாடலுமே ரசிக்கதகுந்த பாடல். கர்ணனாகசிவாஜி, மற்றும் சாவித்ரி. வேறென்ன சொல்ல வேண்டும்.

T.M.செளந்தரராஜன், சீர்காழி, ஸ்ரீநிவாஸ்சேர்ந்து பாடியுள்ள பாடல்கள் எனக்குத் தெரிந்து இன்னும் இரண்டு. ஒன்று தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே என்று துவங்கும் பாடல். படம் பெயர் நினைவில்லை. இன்னொன்று பழனி படத்தில் ஆரோடும் மண்ணில் தேரோடும் என்று துவங்கும் பாடல். T.M.செளந்தரராஜன், ஏ.எல்.ராகவன் , ஸ்ரீநிவாஸ்சேர்ந்து பாடியுள்ள பாடல் கலாட்டா கல்யாணம் படத்தில் - எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணாம்என்று துவங்கும்.

தோல்வி நிலையென - ஊமை விழிகள் 1980 களில் ஸ்ரீநிவாஸ் தமிழில் பாடிய ஒரே பாடல் இதுவெனநினைக்கிறேன். இங்கும் இசையும், குரலும் பிரமாதம்.ஒரு நம்பிக்கையூட்டும் உணர்வினை எழுப்பும் பாடல்.இதற்கு ஸ்ரீநிவாஸ்தான் பொருத்தம் என்று அவர் குரலை பயன்படுத்திக் கொண்ட ஆபாவாணன், மனோஜ் கியானை பாரட்ட வேண்டும். 1980 களிலும் ஸ்ரீநிவாஸின் குரல் மிக நன்றாகவே இருந்திருக்கிறது. அப்போது கன்னடத்தில் அவர் பாடிக்கொண்டிருந்தாக அறிகிறேன்.

இளமை கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீன் தார்), பூவரையும் பூங்கொடியே இதயத்தில் நீஇந்த இரண்டு பாடல்களுக்குப் பின் இறுதியாக வருகிறது வனிதா மணியே . இது அடுத்த வீட்டுப் பெண்ணில் இடம் பெற்ற பாடல். பாடலின் இறுதியில் வாதாபி கணபதி பதிம் என்று கர்நாடகஇசைப்பாடலாக முடியும், அதை வா வா என்று முடிப்பார் பாடகர். இதுவும் மிகவும் பிரபலமானபாடல்தான்.

தொடரும்
------------------------------------------------------------------------------------

ஒரு பாடகர் குரல் போல் இன்னொரு பாடகர் குரல் சில பாடல்களில் இருப்பதில் ஆச்சரியமில்லை. இசை அமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொனியில் பாட வேண்டும் என்று கேட்கும் போது பாடகர் என்ன செய்யமுடியும். மலேசியா வாசுதேவனின் சில பாடல்கள் T.M.S குரலை நினைவுபடுத்தும். மனோ பாடிய சில பாடல்கள் S.P.B பாடியது போலிருக்கும்.சில பாடல்களைக் கேட்கும் போது பாடியது S.P.B யா இல்லை மலேசியா வாசுதேவனா என்று சந்தேகம் எழும். இது போல் எம்.எல்.ஸ்ரீகாந்த் பாடியுள்ள ஒரு பாடல் S.P.B குரலை நினைவுபடுத்தும் ஆனால் அவர் குரல் வேறு. அவர் திரைப்டங்களில் பாடிய பாடல்கள் குறைவு. வானொலி, தொலைக்காட்சியில் மெல்லிசைப் பாடல்கள் பாடியுள்ளார், இசையமைத்துள்ளார். அவர் வாணி ஜெயராமுடன் பாடிய பாடல் பிரபலமானது.அது நினைவிற்கு இப்போது வரவில்லை. அவர் பாடியதில் நான் ரசித்த இன்னொரு பாடல்
கண்கள் தேடுது ஒளியெங்கே
கலை கூறுது அழகெங்கே
என்று துவங்கும்.

வேறு சில உதாரணங்கள் தரலாம். ஆனால் இவை விதிவிலக்குகள்தான். ஜெயச்சந்திரன் தமிழில் முதலில் பாடிய பாடல் அலைகள் படத்தில்,' பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே' ஒரு புதுக் குரலின் வரவினைத்தான் காட்டியது. இது போல் தீபன் சக்ரவர்த்தி, டி.எல்.மகராஜன் குரல்கள் திருச்சி லோகநாதனை நினைவுபடுத்தவில்லை.

தாராபுரம் சுந்தரராஜன், கோவை செளந்தரராஜன் இவர்கள் குரல் T.M..S குரலை நினைவுபடுத்தும்.தூறல் நின்னுப் போச்சு படத்தில் ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி என்றபாடலைப் பாடியவர் கோவை செளந்தரராஜன். T.M..S போல் பாடுவதால் அவரது இரண்டு மகன்கள், பால்ராஜ்,செல்வக்குமார் திரையுலகில் பிரகாசிக்கமுடியவில்லை. மெல்லிசை கச்சேரிகள்தான் செய்ய முடிந்தது.

16 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

//அதிலும் கர்ணனை நோக்கி கிருஷ்ணர் பாடுவதாக சீர்காழிகுரலில் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது, வல்லவன் வகுத்ததடா, கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்று துவங்கும் பாடல் கர்ணனின் சிறப்பினை காட்டும் . சீர்காழியின் கணீர் குரலில் அதைகேட்கும் போது இன்று நம்மிடையே இல்லாத சீர்காழி, கவிஞர் குறித்த் நினைவுகள் மனதில் எழும்.எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை, ஊர்ப் பழி ஏற்றடையடா, நானும் உன் பழி கொண்டேனடா, வஞ்சகன் கண்ணனடா என்ற வரிகள்ஒரு மனிதனின் கதையையும், ஒரு அவதாரத்தின் சுய விமர்சனத்தையும் உள்ளடக்கியவை//

ஒரு பாடல்களுக்குள்ளேயே அந்தப் பாத்திரத்தின் முழு தன்மையைச் சொல்லும் பாடலும், சீர்காழியின் தமிழும் என்றும் நினைவில் நிற்பவை

7:17 PM  
Blogger ஜெயந்தி சங்கர் மொழிந்தது...

வாவ் !!! எத்தனை விரிவான அலசல் : ) ! என்ன குரல் இல்ல? தான் பாடிய பாடல்களுக்கு மேலும் சில பல்லவிகள் எழுதிப்பாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்றறிகிறேன். அப்படியா? பீ பீ எஸ் கவிதைகள் கூட எழுதுவார் என்ற றிகிறேன். அதைப்பற்றி கூட எழுதப்போகிறீர்களா?

7:23 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

எக்ஸலண்ட் ரவி.. நீங்கள் குறிப்பிட்டு இருந்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு விதமான நினைவலைகளைக் கிளப்பி பேஜார் :-) செய்கிறது. நீங்கள் சொல்லி இருந்ததில் ஒரே ஒரு சின்ன திருத்தம். மூணு முடிச்சாலே பாட்டு இடம் பெற்றது, அம்மன் கோவில் கிழக்காலே. பாடியவர் மலேசியா வாசு. தூறல் நின்னுப் போச்சு படத்தில் இடம் பெற்ற பாட்டு, என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே... அடுத்து பின்னூட்டம் தர வருகிறவர்கள் அனைவரும், பதிவில் இடம் பெற்ற ஏதாவது ஒரு பிபிஎஸ் பாட்டுக்கு இணைப்பைத் தரவும். என் பங்குக்கு, என்னுடைய
all time favourite

7:54 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/தாராபுரம் சுந்தரராஜன்/

செல்வம் படத்திலே, "உனக்காகவா நான் எனக்காகவா?"

7:57 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/ பத்மினி ?/
சுமைதாங்கியிலே பத்மினி இல்லை என்று ஞாபகம்.. ஜெயந்தியோ ராஜஸ்ரீயோ என்று நினைக்கிறேன்

7:59 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/பார்த்திபன் கனவு//
எஸ்.வி. சுப்பையா, ராகினி, எஸ். வி. ரங்கராவ் ஆகியோருக்காகவும் அந்தப் பாடல்களுக்காகவும் நான்கரை மணிநேரம் பார்க்கலாம்.
கண்ணாம்பாஆஆஆ!, ஜெமினி, வைஜந்திமாலா ஐயோ ஆளை விடு.

"இதய வானின் உதயநிலவே" & "பழகும் தமிழே"

"இதயவானின் உதயநிலவே எங்கே போகிறாய்?" உம் தேவதாஸ் இன் "உறவுமில்லை பிரிவுமில்லை ஒன்றுமேயில்லை" உம் கிட்டத்தட்ட ஒரே விதமாக ஒலிப்பதாக உணர்ந்திருக்கின்றேன்.

8:03 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/கண்ணில் நீர் இதற்கு காலமெல்லாம அழுவதற்கு/

கண்ணிலே நீர் எதற்கு?

8:05 PM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி மொழிந்தது...

*தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே என்று துவங்கும் பாடல். படம் பெயர் நினைவில்லை. *
-குழந்தைக்காக

8:52 PM  
Blogger Raj Chandra மொழிந்தது...

ரவி, மிகச் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள். என்னிடம் ஏறத்தாழ அனைத்துப் பாடல்களும் இருக்கின்றன. PBSன் பாடல்கள் மனம் அமைதிக்கும், அதே சமயம் சோகத்தை பகிர்ந்துக் கொள்ளவும் தோதானவை. சில குறிப்புகள் :

1) நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடல் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'(முத்துராமன் பாடுவதாக அமைந்தது), 'சுமைதாங்கி' அல்ல. ஜெமினி பாதிரியாராக இறுதியில் மாறுவது 'சுமைதாங்கி'.
2) 'சுமைதாங்கி' படத்தில் கதாநாயகி, தேவிகா.
3) கர்ணன் படத்தில் வரும் 'என்ன கொடுப்பான்' பாடலின் முன் வரும் வயலின் இசை, மனதை என்னவோ செய்யும். அதற்கு ஏற்றார் போல் அந்த இசையின் முடிவில் சிரீனிவாசின் குரல் அதை ஒத்து எழும். மும் மூர்த்திகளின் திறமையில்(இசை, பாடல் வரிகள், பாடியவர்) உருவான பாடல் என்பதில் சந்தேகமில்லை.

மற்றப் பாடல்களைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். உங்கள் தொடர், பல நினைவுகளைக் கிளப்பிவிட்டன. நன்றி.

கொசுறுச் செய்தி:
சரிகம நிறுவனம் டி.எம். சௌந்திரராஜன் பாடல்களும் Legends தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

9:34 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.ஒரு பிழைதிருத்தம். கோவை செளந்திரராஜன் பாடிய பாடல்
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே என்று துவங்கும்.லெஜென்ட்ஸ் வரிசையில் விஸ்வநாதன் -ராமமூர்த்தியும் உண்டு.தாராபுரம் செளந்திரராஜன் பாடிய பாடல் சுசீலாவுடன், செல்வம் படத்தில்
உனக்காகவா நான் உனக்காகவா
உன்னைக் காணவா உன்னில்
என்னைக் காணவா
வா வா
என்று துவங்கும்

10:59 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது.. பாட்டு கூட ரெண்டு சுந்தரராஜன்லே யாரோ ஒருத்தர்னு நினைவு.. ( ஏதோ ஒரு முத்துராமன் படம்) பிறரை அப்பட்டமாக இமிடேட் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். எஸ்பிபியை அப்படியே காப்பி அடிச்ச, மனோ, ஏதோ ராஜா இருந்தாதால பிழைச்சார்.. கோவை சௌந்தரராஜனுக்கு அந்த சான்சை, எம்.எஸ்.வி தரவேயில்லை.

11:23 PM  
Blogger subbu மொழிந்தது...

Hi Prakash:

"மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது.. பாட்டு கூட ரெண்டு சுந்தரராஜன்லே யாரோ ஒருத்தர்னு நினைவு.. ( ஏதோ ஒரு முத்துராமன் படம்"

It's by Kovai Soundararajan & L.R.Eswari in the movie "Kaasethaan Kadavulada"

3:05 PM  
Anonymous RV மொழிந்தது...

அருமையான பதிவுகள். இவற்றை சுட்டி நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன், முடிந்தால் பாருங்கள்.

http://awardakodukkaranga.wordpress.com/2009/07/15/பி-பி-ஸ்ரீநிவாசை-பற்றி-ரவ/

3:17 AM  
Blogger srinivasan மொழிந்தது...

The song "Unakkaga vaa naan yenakkaaga vaa" from Film "selvam" was sung by Tarapuram sunderrajan and Jamuna raani (and not by p.suseela)

raajoo,dubai

4:01 AM  
Blogger srinivasan மொழிந்தது...

During 1977-79, when I was doing my CA articleship, I had the pleasure of meeting PB Srinivas several times in Drive In Woodlands.

He used to have a table for himself in the dining area.he used to wear a cap-lots of pens of different colors in his possession!

when I had introduced myself and spoke with him, he enquired about me and when I told him that I was a CA Student, he nodded and said"appdiya! Nalla padiyungo!Yen paiyanum CA".

I told him that I had liked his songs"poo varayum Poongkodiye" and "aathoram manal yeduthu" from Idaythil nee(Gemini Ganesan,Devika, Muktha srinivasan) and he smiled and nodded again.

This article has definitely made me walk down the memory lane.

thank you,ravi srinivas.

Raajoo,dubai

4:16 AM  
Blogger srinivasan மொழிந்தது...

Dear Ravi

the song "udalukku uyir kaaval" was on S.A.Asokan,if my memory serves me right.

An excellent compilation.Vazthukkal.

raajoo,dubai

5:42 AM  

Post a Comment

<< முகப்பு