சந்திரமுகியும் லாயத்தில் இல்லாத குதிரையும்

ஒரு வலைப்பதிவாளர் ஆர்வக்கோளாறினால் சந்திரமுகி பாடல்களை இணையத்தில் MP3 வடிவில் தரும் இணையதளத்திற்கு சுட்டி கொடுத்து விட்டார். அதை இன்னொரு ரசிகர் கண்டித்ததால் அந்தச் சுட்டிக்குப் பதிலாக ராகா இணைய தள முகவரி கொடுத்துவிட்டார். இதில் பாடல்களைக் கேட்கத்தான் முடியும் MP3 வடிவில் இறக்கிக் கொள்ள முடியாது என்பதால் இந்த இணைப்பினைக் கொடுத்ததாக காரணம் வேறு கூறியிருக்கிறார்.

இணையதளங்களில் உள்ள பாடல்களை MP3, wav வடிவில் மாற்றித்தரும் மென் பொருட்கள் இருக்கின்றன. இவை கையாள்வதற்கு எளிதானவை. பாடல்களை தெரிவு செய்துவிட்டால் அவை ஒடிக் கொண்டிருக்கும் போதே மென்பொருள் வடிவமாற்றத்தினை செய்துவிடும். உதாரணமாக ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஒரே முறை தெரிவு செய்தால் தெரிவு செய்யப் பட்ட வரிசையில் பாடல்கள் வடிவமாற்றப்பட்டு கணினியில் சேமிக்கக் கூடிய நிலையில் இருக்கும். அதை நாம் சேமிக்க வேண்டும், அவ்வளவுதான். இதைக் கற்றுக் கொள்ள அதிக பட்சம் ஐந்து நிமிடம்தான் ஆகும்.
இதுதவிர P2P மூலமும் பாடல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.ஆகவே என்னிடம் MP3, wav வடிவில் மாற்றித்தரும் மென்பொருள் இல்லாதப் போதும் கூட நான் பிறரிடமிருந்து பாடல்களை இலவசமாக MP3 வடிவில் பெறமுடியும்,பகிர்ந்து கொள்ளவும் முடியும்.பாடல்கள் வெளியான 24 மணி நேரத்திற்குள் இணையத்தில் கிடைக்கின்றன.கூகிளில் தேடினால் அந்த இணைய முகவரியைக் கண்டுபிடிப்பதுகடினமேயில்லை.
வேறு வார்த்தைகளில் சொன்னால் குதிரை லாயத்தை விட்டு ஒடி விட்டது.அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பல்கிப் பெருகி ஒடிக் கொண்டிருக்கின்றன குதிரைகள். ஆனாலும் லாயத்தைப் பூட்டினால் குதிரையைப் கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர் சிலர். குதிரை லாயத்தை விட்டு ஒடிப் போன பின் பூட்டு போடச் சொல்லுவது புத்திசாலித்தனமா.
உண்மையில் கேட்க வேண்டிய கேள்வி வேறு - புதிதாக வெளியாகும் திரைப்பட பாடல்களின் ஒலி நாடா, குறுந்தகடு விலைகள் ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளன.இந்தியாவில் ரூபாய் 50க்குவிற்கும் ஒலிநாடாவின் உற்பத்திச் செலவு 15 ரூபாய் கூட இருக்காது, அது போல் ரூபாய் 99க்குவிற்கும் குறுந்தகட்டின் உற்பத்தி செலவு ரூபாய் 20 கூட இருக்காது.
இந்த குறுந்தகடு அமெரிக்காவில் 5 அல்லது 6 டாலருக்கு விற்கிறது. டாலரின் மதிப்பு ரூ 40 என்றால் ஒரு குறுந்தகட்டின் விலை ரூபாய் 200 அல்லது 240.மொத்தம் சுமார் 30 நிமிடங்கள் ஒடும் பாடல்களைக் கொண்ட குறுந்தகட்டின் விலை ரூபாய் 99 என்பது அதிகமாகத் தெரியவில்லையா?
சந்திரமுகி ஆடியோ உரிமை ஒரு கோடிக்கும் மேல் விலை போகிறது என்றால் அதை வாங்கியவர் இந்த விலை வைத்து விற்று குறுகிய காலத்தில் போட்ட முதலையும் எடுத்து, லாபம் வேறு சம்பாதித்துவிடுவார்.
இப்படி ஏன் இந்த விலை விற்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்காதவரை இப்படி அவர்கள் தலையில்மிளகாய் அரைப்பது தொடரும்.தங்கள் தலைகளில் மிளகாய் அரைக்கிறார்கள் என்ற உணர்வேஇங்கு இருப்பதாகத் தெரியவில்லை.இதை விட பரிதாபமானது யாருக்கோ நஷ்டம் வரக்கூடாது
என்பதில் இவர்கள் காட்டும் அக்கறை.

தேவுடா தேவுடா

6 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

:)

2:40 PM  
Blogger Boston Bala மொழிந்தது...

>>>>இப்படி ஏன் இந்த விலை விற்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்காதவரை இப்படி அவர்கள் தலையில்மிளகாய் அரைப்பது தொடரும்.தங்கள் தலைகளில் மிளகாய் அரைக்கிறார்கள் என்ற உணர்வேஇங்கு இருப்பதாகத் தெரியவில்லை.----

தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இதை மேலும் விளக்க இயலுமா?

'கலை (அல்லது) படைப்பு' என்னும் வரையறை வைத்துக் கொண்டால், எம்.எஃப். ஹுஸேன் ஓவியம் போல் எவ்வளவு பெறுமதியோ, அவ்வளவும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். (work of art is worth its artistic value.)

அல்லது 'நுகர்வோர் பொரு'ளாக அதைப் பார்த்தால், தேவை எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு விலையை ஏற்றிக் கொண்டே போகலாம். (Demand vs Supply).

'தலையில்மிளகாய் அரைப்பது' என்றால் இந்த மாதிரி காசு கொடுத்து வாங்கும் ஸ்டீவன் கிங் புத்தகம் முதல் டைம் பத்திரிகை வரை எல்லாவற்றிற்குமே இது பொருந்துமோ?

3:38 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

in a day or two i will put a post that will answer your questions.

3:46 PM  
Blogger -L-L-D-a-s-u மொழிந்தது...

//இதை விட பரிதாபமானது யாருக்கோ நஷ்டம் வரக்கூடாது
என்பதில் இவர்கள் காட்டும் அக்கறை. //

அதுதான் எனக்கும் பிரியலை . ஏதும் வரும்படி இருக்கும் ..

5:38 PM  
Blogger kirukan மொழிந்தது...

A week earlier, Rajni Ramki has threatened/warned of sueing anyone who posts or gives hot links for mp3 download..

Has there been any legal action??

5:49 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Dear Ravi,
//
இப்படி ஏன் இந்த விலை விற்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்காதவரை இப்படி அவர்கள் தலையில்மிளகாய் அரைப்பது தொடரும்.தங்கள் தலைகளில் மிளகாய் அரைக்கிறார்கள் என்ற உணர்வேஇங்கு இருப்பதாகத் தெரியவில்லை.
//

It is simple! As long as there are poor/middle class people willing to spend their hard earned money on these things, this trend will continue. Nowadays, the ticket charges in theatre are really exorbitant. It is OK for people (coming in cars!) who can afford such luxury. Another case of DEMAND vs SUPPLY. That is all!


enRenRum anbudan
BALA

1:40 AM  

Post a Comment

<< முகப்பு