இது எப்படி இருக்கு.....

அமெரிக்காவில் மனித உரிமைகள் குறித்து சீனா என்ன கூறுகிறது. சீனாவில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா புகார் செய்தால் சீனா இப்படித்தான் பதில் சொல்லும். இந்த இரண்டு நாடுகளிலும் மனித உரிமைகள் பற்றி நிலை பற்றி மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள், வெளியீடுகள் விரிவாகவே பேசுகின்றன. ஆனால் ஒன்றை மட்டும் கூற முடியும், மோடிக்கு விசா தர மறுத்ததை எதிர்த்து கூக்குரல் எழுப்பும் சங்க பரிவாரங்களால்இது போன்ற ஒரு அறிக்கையை, அதாவது சீனா வெளியிட்டுள்ளது போல், பகிரங்கமாக வெளியிட முடியாது. அதற்கான தைரியமும் கிடையாது, மனித உரிமைகள் குறித்து அக்கறையும் கிடையாது. மோடியின் உரையில் கூட அமெரிக்கா மீது கடுமையான கண்டனம் இல்லை என்பதை கவனிக்கவும்.

2 மறுமொழிகள்:

Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

இன்னக்கி இல்லன்னவன் நாளைக்கும் இல்லன்னுடக் கூடாது பாருங்க, அந்தத் தொலைநோக்கு:)

7:12 AM  
Blogger aathirai மொழிந்தது...

சமீபத்தில் க்யூபாவிலும் இது போன்று ஒரு விவகாரம் நடந்தது. அங்கு விசாரணையின்றி
சிறையில் இருக்கும் 75 கைதிகளைக் குறிக்கும் வண்ணம் அமெரிக்க தூதரகம் கிறிஸ்துமஸ்
அலங்காரத்தில் 75 என்ற எண்ணை வண்ண விளக்குகள் போட்டு வைத்தது. பதிலுக்கு,
க்யூபன் அரசாங்கம் அபூ கரீப் படங்களை தமிழ் சினிமா போஸ்டர் மாதிரி ப்ளோ அப் செய்து
தூதரக வாசலில் கொண்டு வைத்த்து. வானர பரிவாரமோ பெப்சி இயந்திரங்களை போட்டு உடைக்கிறது.

9:04 AM  

Post a Comment

<< முகப்பு