பிரமீள்-கடிதங்கள்-நினைவுகள்

பிரமீள் (தருமு சிவராமு, தருமு அரூப் சிவராம்,பிரமிள் பானுசந்த்ரன்) சி.சு.செல்லப்பாவிற்கு எழுதிய சில கடிதங்களை இம்மாத தீராநதியில் படித்தேன். அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன், கடிதத் தொடர்பும் இருந்தது . அவரை நான் நேரில் சந்திக்கும் முன் சுமார் 8 மாதங்கள் கடிதம் மூலமே 'பேசிக்கொண்டோம்'. நான் அப்போது இருந்த நகரம் சென்னையிலிருந்து 500 கீ.மீ தூரத்தில். திங்களன்று நான் அவருக்கு கடிதம் எழுதினால் அவருக்கு செவ்வாய் கிடைத்து புதன் காலை அல்லது மதியம் அவர் பதில் என் கையில்.நான் உடனே பதில் எழுதினால் வெள்ளி காலை அல்லது மதியம் அவரிடமிருந்து பதில் வந்துவிடும்.நான் பதில் போட்டால் அது சனியன்று கிடைத்தால் திங்களன்று பதில் எனக்கு கிடைக்கும். தன் பெயரில் பல சோதனைகளை செய்வார் என்பதால் பெயர் மாற்றங்கள் கடிதங்களில் வெளிப்படும். இடையில் முன் கடிதத் தொடர்ச்சி என்று வேறு பதில்கள் வரும்.சமயங்களில் நீண்ட கடிதங்கள் வரும், ஒரு முறை ஈழப்பிரச்சினை உட்பட வேறு சில குறித்து ஒரு 20 பக்க கடிதம் வந்தது. அவருடைய நண்பர்களிடம் இது போல் நிறையக் கடிதங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

அவர் நன்றாக படம் வரைவார்.ஆனால் அத்திறனை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சி எடுத்துக் கொள்ளவோ அல்லது அதில் முயற்சிகளை தொடர்ந்து செய்யவோ அவரிடம் பொருளாதார வசதி இல்லை.சுடுமண் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள் செய்வார். ஒரு முறை அப்பாத்துரை, யோகி ராம்சூரத்குமார் இருவர் உருவத்தையும், தலை முதல் கழுத்து வரை சிற்பமாக செய்து அதை புகைப்படமெடுத்திருந்தார். அச்சிற்பங்களை நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டதால் அவர் என்னிடம் காட்டியது புகைப்படம்தான். ஆங்கிலத்தில் அவரால் எழுத முடியும், சில முயற்சிகள் செய்திருக்கிறார். தமிழ் சிறுபத்திரிகை சூழலை மீறி, இதை நிராகரித்து அவர் வேறு திசைகளில் பயணித்திருக்க வேண்டும். அப்படி பயணித்திருந்தால் அவர் வேறு சில சாதனைகளை செய்திருப்பார்.

7 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

interesting

10:57 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

பிரமிளின் ஒரு சிற்பம், உயிர்நிழல்/எக்ஸில்/காலம் ஏதோவொரு சஞ்சிகையிலே அட்டைப்படமாக வந்தது. பிரமிளின் செவ்வி ஒன்றினை கற்சுறா pdf கோப்பாக வலையேற்றியிருக்கின்றார்.

12:33 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

http://www.arituyil.com/arituyilmag4.pdf

12:50 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி இப்பதிவுக்கு நன்றி. பிரமிள் பற்றி நானுமொரு பதிவு எழுதியிருக்கிறேன்.
http://kumizh.blogspot.com/2005/03/blog-post_12.html

சுந்தரமூர்த்தி

1:34 AM  
Blogger Thangamani மொழிந்தது...

நான் பிரமிளின் கவிதகளை அதிகம் வாசித்ததில்லை. அவரது கதைகளை மட்டுமே தொகுப்பாக வந்தபின் வாசித்தேன். அவரது கதைகள் நன்றாக இருந்தன என்று மட்டும்தான் என்னால் சொல்லமுடிகிறது; அவை என்னை ஆழமாக எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனாலும் அவரைப்பற்றி அறியவேண்டுமென நினைத்திருந்தேன். அந்தவகையில் இந்தப் பதிவுக்கு நன்றி ரவி.

இந்தச் சுட்டிக்காகப் பெயரிலிக்கு நன்றி!

3:11 AM  
Anonymous R.Pathmanaba Iyer மொழிந்தது...

I think it will be very useful if someone can organise to collect all correspondences with whom Piramil had contact and publish either selected or edited versions of such letters.

4:23 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

thanks for the comments.iyer's suggestion is a good idea.i have to locate where those letters are.as i moved places over the years i dont know whether they are
still there with my books etc which are in india.i moved out of india also.if somebody is keen on such a volume i will share all the letters if i can locate them.

7:06 AM  

Post a Comment

<< முகப்பு