பிரதிவாதி பயங்கரம்.......

பிரதிவாதி பயங்கரம் என்றால் பலருக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் பெயர்தான் நினைவிற்கு வரும்.பன் மொழி வித்தகர், ஆயிரக்கணக்கான பக்கங்கள் உரைகள் எழுதியவர், ஸ்ரீராமனுஜன் என்ற இதழின் ஆசிரியராக பலகாலம் இருந்தவர். ஆழ்ந்த புலமை கொண்டவர், அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

அவர் எழுதியவற்றுள் சிலவற்றை வாசித்திருக்கிறேன்.பிரமிப்பூட்டும் புலமை அவருடையது. இப்படிக் கூட வியாக்கியானம் செய்ய முடியுமா என்று நம்மை வியக்க வைக்கும் எழுத்து அவருடையது.

தன் பெயரில் பிரதிவாதி பயங்கரம் என்பதை கொண்டிருக்கும் இன்னொருவரும் மிகவும் பிரபலமானவர்.தன் குரலால் தலைமுறை தலைமுறையாய் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருப்பவர். இன்றும் கவிதைகள் எழுதிக் கொண்டும், கஜல் பாடல்கள் இயற்றிக் கொண்டும் முதுமை என்பது தனக்கு இல்லை என்று காண்பிப்பவர். அவர்தான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivos) . இந்த வாரம் அவரைப் பற்றிய பதிவுகள் இடம் பெறும். அந்தக் குரல் பிரதிவாதி பயங்கரம் என்ற பெயருடன் பொருந்துகிறதா.பிரதிவாதியை மயக்கும் குரல் அல்லவா அது. வாதமில்லை பிரதிவாதமில்லை என்று சொல்லக்கூடிய இனியக் குரல் அது.முழுப் பெயரையும் சொன்னால் அபஸ்வரமாகத் தெரியும் என்றுதான் ஒரு வேளை P.B.ஸ்ரீநிவோஸ் என்ற பெயரில் அவர் எழுதுகிறாரோ என்னவோ.

லெஜெண்ட்ஸ் என்ற தலைப்பில் தமிழில் அவர் பாடிய திரைப்பட பாடல்கள் ஐந்து குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. அதன் அடிப்படையில் எழுதுகிறேன்.அவ்வாறு எழுதுவதில் சில வசதிகள் உள்ளன.உங்களுக்கும் பாடல்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். என்றாலும் அவற்றில் இடம் பெறாத பாடல்கள், எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் உட்பட வேறு பலவற்றை குறித்தும், சில அபூர்வமான பாடல்கள் குறித்தும் எழுதவிருக்கிறேன்.

இதை ஒரு ரசிகனின் பதிவு என்று எடுத்துக் கொள்ளுங்கள்

9 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

அப்படிப்போடு போடு போடு; அடுத்தும் போடு அவரைப் பற்றி

2:54 PM  
Blogger Thangamani மொழிந்தது...

பயங்கரமா எழுதுங்க!

4:12 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

அந்த பிரதிவாதி பயங்கரம்-னா என்னான்னு சொல்லவே இல்லையே?

PB ஸ்ரிநிவாஸ் எங்கள் குடுமபத்தில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் பிடித்த ஒரு பாடகர்.
அப்பா முதற்கொண்டு , அக்காக்கள், நான் என எல்லோரும். எனக்கு அவரது பாடல்களில்
மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் தவிர மற்றது தெரியாது. அக்காக்கள், உங்கள் போல்தான்
யாருக்கும் அறிந்திராத, சரியா ஓடாத படத்தின் பாடல்கள், ஆனால் தரம் மிக்கது, காதல் மிக்கது
என்று பலதையும் பாடுவார்கள்.

அவரை சில முறை மவுண்ட் ரோடு அருகில் இருக்கும் ஒரு ட்ரைவின் உணவகத்தில் பார்த்திருக்கிறேன்.
தோளிலே துணிப்பை, ஒரு சாய்ந்த குல்லா, கண்ணாடி,கயில் நிறைய பேனாக்கள் சகிதமாய் உட்கார்ந்திருப்பார். ஏதோ பேசவேண்டும் என்று நிறைய முறை நினைத்ததுண்டு. ஆனால் என்ன பேசுவது என்று தெரியாமல்,இது வரை பேசியது கிடையாது. அவருக்கு என்னைத் தெரியாது என்ற காரணமும் இருக்கலாம். ஆனாலும் அவருடன் ஒரு உள்ளத்தொடர்பு உணவகத்தில் இருக்கும் வரை இருக்கும். கிளம்பி வருபோது லேசான வருத்தமும் வரும். அவரது தோற்றம் இன்றைய நிலைமை என்பதாக இருக்கலாம். மேற்கொண்டு யோசித்ததில்லை.

அவரது பாடல்கள் யாருக்கும் இனிமையைத்தரும் என்பதில் சந்தேகமில்லை. எழுதுங்கள்.
காத்திருக்கிறேன். மறந்தவற்றை அசைபோடவைக்கும். :)

4:39 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

இப்படி 'சஸ்பென்ஸ்' வைக்கறீங்களே! சீக்கிரமா எழுதித் தள்ளுங்க.
பார்த்தேன், சிரித்தேன், ..தேன் தேன்... காதில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது :)

4:43 PM  
Anonymous பாலாஜி-பாரி மொழிந்தது...

அது...அது....கலக்குங்க...

காற்று வெளி இடைக் கண்ணம்மா...
எந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்....

இந்தப் பாட்டை ஒரு சமயம் மாஞ்சு மாஞ்சு கேட்டேன். எப்போதும் பிடித்தது....

6:31 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

7:42 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

7:43 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

பிரதிவாதி பயங்கரம் என்பது குடும்பப் பெயர். அக்குடும்பத்து மூதாதையர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது என்றுக் கூறுவார்கள். பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்களைப் பார்த்திருக்கிறேன், 1966 பிரம்மோத்ஸவத்தின் போது.
இருந்தாலும் நீங்கள் முதலில் க்ளூ கொடுத்த போது P.B. ஸிரீநிவாசாகத்தான் இருக்கும் என்று யூகித்தேன். சரியாகத்தான் யூகித்தேன் போலிருக்கிறது. அல்லது ஒரு வேளை இருவரைப் பற்றியும் எழுதப் போகிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

7:44 PM  
Blogger Jsri மொழிந்தது...

வாவ்! நிச்சயம் நான் எதிர்ப்பார்க்கவில்லை. P.B என்பதற்கு பிரதிவாதி பயங்கரம் என்பதே எனக்கு செய்தி. மற்றபடி 'வித்தியாசமான' என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததால் 'அண்ணனை'த்தான் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன்.

இது அதைவிட மகிழ்ச்சியான செய்தி- என் கணவருக்கு. இன்னும் பல பத்து வருடங்களாக தொடர்ந்து P.B ஸ்ரீநிவாசின் ரசிகனாக இருக்கும் அவரைப்போல் ஒருவரை நான் பார்த்ததில்லை. உதயம் தியேட்டர் வாசல் எதிரில் குத்தவைத்து உட்கார்ந்து அவரது திரைப்பாடல் புத்தகங்களை வாங்குவார். டிரைவ் இன்னில் ஒரு 5,6 பேனாக்களை சட்டைப் பயில் செருகிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பவரைப் பார்க்கவென்றே அங்கே அடிக்கடி அங்கே போவார். இவர் குரலாலேயே 'சாம்பார்' கணேசனையும் பிடிப்பதாகச் சொல்வார்.

குறுந்தகடு கிடைக்கும் இடத்தையும் குறிப்பிட்டே எழுதவும்.

8:49 PM  

Post a Comment

<< முகப்பு