நான்கு கட்டுரைகள், இந்தி, மொழி


இந்த நான்கு கட்டுரைகளும் ஏனோ தானோவென்று உள்ளன,மாலன் கட்டுரையில் மது கிஷ்வர் குறிப்பிட்டது தொடர்பற்று இருக்கிறது, மரத்வாடாவிலும்,விதர்பாவிலும் உள்ள சராசரி விவசாயிக்கு மராட்டி மொழி பயன்படுமளவிற்கு இந்தி பயன்படுமா என்று தெரியவில்லை.அது போல் குஜராத்தில் உள்ளவருக்கு குஜராத்தி இந்தியை விட அதிக பயன்மிக்கதாக இருக்கலாம். பள்ளிக்குப் போகாதவர்களெல்லாம் இந்தி தெரிந்து வைத்திருப்பார்கள் என்பது ஒரு அனுமானம்தான், இந்தி பேசுவோரில் எத்தனை பேருக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரியும்.அப்படி யிருக்கும் போது கிஷ்வர் கூறுவது அபத்தம்.
இதில் வேடிக்கை என்னவெனில் இந்தியில் மனுஷி நடத்த முடியவில்லை என்பதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் இந்தியில் பொருத்தமான, போதுமான கட்டுரைகள் போன்றவை கிடைக்கவில்லை, பெரும்பாலும் ஆங்கில இதழில் வெளியானதையே மொழி பெயர்த்து வெளியிட்டோம் என்பது. அப்படியானால் இந்தி எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று தெரிகிறது.
மாலனுக்கு அடிப்படை விஷயங்களில் தெளிவில்லை.ஒரு மொழி என்பதினை பாமரர் மொழி பண்டிதர் மொழி என்று பிரிக்க முடியாது. பண்டிதர்கள் உருவாக்கும் சொற்களும் பாமரர்களிடம் செல்லும். அது போல் பாமரரும் மொழியின் வளர்ச்சிக்கு உதவியிருப்பார்கள். மேலும் மொழி என்பது தொடர்ந்து மாறுதல்களுக்கு உள்ளாவதுண்டு. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் எப்படி வந்தது.தினத்தந்தியின் தமிழ் யாருடைய தமிழ், கானா பாடல்களில் உள்ள தமிழ் யாருடைய தமிழ்.பேச்சு மொழி இந்தியும், அரசின் அதிகாரப் பூர்வ கிந்துஸ்தானியும் ஒன்றாகவா உள்ளன. அதிகார பூர்வ இந்துஸ்தானி அரசின் ஊடகங்களில், அலுவலகங்களில் வாழ்கிறது. பேச்சு மொழியில் ஆங்கிலம்,உருது சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

பாண்டியன் கட்டுரையில் உள்ள பல கருத்துக்களை நான் ஏற்க இயலாது.தி.மு.கவும் ஒரு காலத்தில் திராவிட நாடு கோரியது.மேலும் பாண்டியன் தமிழ் மிக நன்றாகவே உள்ளது, பிரச்சினை ஏதுமில்லை என்ற ரீதியில் எழுதியிருக்கிறார்.தமிழ் இங்கு ஆட்சி மொழியாக முழுமையாக இல்லை என்பதை மறைக்கிறார். மேலும் தமிழ் வழி கல்வி மட்டுமல்ல பிரச்சினை, கல்வியில் தமிழின் இடம் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பதை குறிப்பிடுவதில்லை.அவர் குறிப்பிடும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்று இன்று தமிழ் தேவையில்லை என்று கருதுவோர் மனநிலையே அவர் கட்டுரையில் வெளிப்படுகிறது.பாமாவின் நாவல் ஆங்கிலத்தில் கிடைக்கலாம், பாண்டியன் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகழகங்களில் ஆய்வு செய்யலாம்.அது நமக்கு பிரச்சினை இல்லை.

இங்கு பிரச்சினை தமிழ் வழியே கல்வி பயின்ற ஒரு தலித் பெண் ஏன் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பதே.இது போன்ற பிரச்சினைகளே இல்லாதது போன்ற ஒரு தொனியினை அவர் கட்டுரை தருகிறது. என் கருத்துக்களை விரிவாக பின்னர் எழுதுகிறேன்

3 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

//இங்கு பிரச்சினை தமிழ் வழியே கல்வி பயின்ற ஒரு தலித் பெண் ஏன் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பதே.இது போன்ற பிரச்சினைகளே இல்லாதது போன்ற ஒரு தொனியினை அவர் கட்டுரை தருகிறது.//

I accept this!

3:51 PM  
Blogger maalan மொழிந்தது...

மொழியியலை முற்றுங் கற்றுணர்ந்த அறிஞர் பெருந்தகை இரவி சீனிவாசு அவர்கட்கு,

>>மொழி என்பதினை பாமரர் மொழி பண்டிதர் மொழி என்று பிரிக்க முடியாது<<
தமிழில் நெடுங்காலமாக பண்டித பாமர வழக்குகள் இருந்து வருகின்றன. ஏராளமான உதாரணங்கள் தந்து இதை நிறுவ முடியும்.

>>தினத்தந்தியின் தமிழ் யாருடைய தமிழ், கானா பாடல்களில் உள்ள தமிழ் யாருடைய தமிழ்.<<
இந்தத் தமிழுக்கு பண்டித உலகம் தந்த அங்கீகாரம் என்ன? இப்போது கிடைத்துள்ள அங்கீகாரமும் எப்போது எப்படிக் கிடைத்தது என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

பண்டிதத்தமிழுக்கும் பாமரத்தமிழுக்கும் இடையே நெடுங்காலமாக ஓர் அரசியல் இருந்து வந்திருக்கிறது.பாரதியார் காலத்திற்கு முன்பிருந்தே, பரிமாற்கலைஞர் காலத்திலிருந்து ஆரம்பித்து இது குறித்து விரிவாகவே பேசலாம்.நேரம் கிடைக்கும் போது என் பதிவில் எழுதுகிறேன். இப்போது திரைப்படப் பெயர்களில் ஆங்கிலப் பெயர் கூடாது என்று நிர்பந்திப்பதை நான் இதன் தொடர்ச்சியாகத்தான் காண்கிறேன்.

என்னுடைய கேள்வி இதுதான்: அதிகாரம் பெற வேண்டியது எது? பண்டிதர்களுடைய தமிழா? பாமரனுடைய தமிழா?

'அடிப்படை விஷயங்களில் தெளிவில்லாத' மாலன்

2:19 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Maalan
thanks for your views.i will respond to them soon.

9:41 AM  

Post a Comment

<< முகப்பு