தெரிந்தால் சொல்லுங்கள்


தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள், போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போது இதையெல்லாம் தடை செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு, தினசரிகளில் வாசகர் கடிதங்களிலும் அத்தகைய கருத்துக்களைப் படித்திருக்கிறோம். அது போல் அரசு ஊழியர் போராட்டம், கடையடைப்பு, போக்குவரத்துத் துறை தொழிலாளர் போராட்டம் என்றால் அதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுவதுண்டு. தமிழக அரசு ஊழியர் போராட்டத்தின் போது அரசின் நடவடிக்கைகளை பாராட்டியும், வரவேற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டன. சோ இப்போது கூட அரசு ஊழியர் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உச்ச நீதி மன்றம் பந்த, ஹர்த்தால் குறித்து தீர்ப்பளித்த போது பலர் அதை வரவேற்றனர். இப்போது காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.மார்ச் 7 வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். எதற்காகப் போராட்டம் என்று நமக்கெல்லாம் தெரியும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையா. ஆனால் அன்று போராட்டங்களை தவறு என்றும், அவற்றை நசுக்க வேண்டும் என்று நேரடியாகவும்,மறைமுகமாகவும் சொன்னவர்கள்,இன்று என்ன சொல்கிறார்கள். சோ இன்று இது குறித்து என்ன சொல்கிறார். தினமலர் இது குறித்து எதிர்ப்பினை தெரிவித்த மாதிரியே தெரியவில்லை.ஏன்.

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

4 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

இப்படியெல்லாமா கேட்ப்பார்கள்!

:)

2:59 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

சோ வழக்கறிஞர்களுக்கு எதிராக கூட கருத்து சொல்லக் கூடும். அதனால் எதுவும் நிறுவப்படவில்லை என்பதுதான் என் கருத்து.

3:34 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

'ஒருவேளை' என்று தொடங்கி வாசிக்கவும்!

3:34 AM  
Anonymous பாலாஜி-பாரி மொழிந்தது...

RV,
cho வழக்கறிஞர்களுக்கு எதிராக ஏதேனும் சொல்வார். அதன் மூலம் தனது அபிமான வாசகர்களிடம் புரட்சிக்காரன்/வித்தியாசமானவர்/அறிவு ஜீவி என்ற ஒரு எண்ணத்தை நிலை நிறுத்துவார்.
:):)

9:24 AM  

Post a Comment

<< முகப்பு