செய்திகளின் பிண்ணனியில்

அவரவர் கவலை அவரவருக்கு - இலங்கை அரசு கவிழக்கூடாது என்ற கவலை ஹிந்துவிற்கு, மத்தியில் அரசு நீடிக்கிறதே என்ற கவலை தினமலருக்கு. அதற்குத் தகுந்தாற்ப் போல் செய்திகள்வெளியாகின்றன. ஹிந்து அரசு கவிழாது, ஆபத்தில்லை என்ற தொனியில் செய்தி தருகிறது.திமுக அமைச்சர்கள் பதவி விலகல் என்கிறது தினமலர்.பாவம் தினமலர் புயல் ஒரு தேனீர்க் கோப்பைக்குள் எழுந்த புயலாக அடங்கிவிட்டது.ராஜினாமா என்ற ஆயுதத்தினை திமுக எடுக்கக்கூடும் என்று பிற ஏடுகள், இணையதளங்கள் கூறுகின்றன.தினமலரோ ராஜினாமா என்றே செய்தி வெளியிடுகிறது.

செய்திகளை ஊன்றி கவனிப்பவர்களுக்கு ஹிந்து,தினமலரின் விருப்பங்கள் அல்லது கனவுகளே இப்படி செய்திகளாக வெளியாகின்றன என்பது எளிதில் புலனாகும்.தினமலரின் விருப்பம் திமுக விலகுவது மட்டுமல்ல, அரசு கவிழவேண்டும் என்பதே.எனவே அடிக்கடி அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்ற தொனியில் செய்திகள் வெளியாகின்றன. இடதுசாரிகள் எதையாவது அரசுக்கு எதிராக கூறினால் உடனே தினமலர் அதற்கு தரும் முக்கியத்துவம் அலாதியானது. செப்டம்பரில் அரசு கவிழும் என்று ஒருவர் ஆருடம் கூறினார். பிப்ரவரியிலிருந்து ஏப்ரலுக்குள் கவிழ்ந்துவிடும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

தினமலரைப் பொறுத்த வரை சிக்கல்,எதிர்ப்பு என்று கொட்டை எழுத்தில் போட்டு வதந்திகளை செய்திகளாக மாற்றுவது கைவந்த கலை. படிக்கும் வாசகருக்கு எது செய்தி என்பதே தெரியாத அளவிற்கு வதந்திகளையும் செய்திகளையும் கலந்து எழுதுவதால் இதை தினமலரின் மாந்தீரிக யதார்த்தவகை எழுத்தாக கொள்ளலாம். எழுத்தே மாந்தீரிகமாக மாறுவதை நாம் பாராட்டத்தானே வேண்டும். இந்த செய்தி பிரதிகளை வாசிக்க தனிக் கையேடு தேவையில்லை. என்ன செய்வது எந்த மாந்தீரிகம் செய்தாலும் காரியம் கைக்கூடாத நிலைதான் இருக்கிறது. அப்போது மனதின் ஆசைகளை,விருப்பங்களை,அச்சங்களை இப்படி இலக்கியம் படைத்துதானே வெளிப்படுத்த முடியும். இந்த செய்தி இலக்கியத்தினை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்வோம்.


உச்ச நீதிமன்றம் வழக்குகளில் தகவல்களைக் கோருவதும், தேவையான ஆவணங்களைத் தர வேண்டும் என உத்தரவிடுவதும் வழக்கமான ஒன்று. தினமலருக்கோ இதுவே அதிரடி நடவடிக்கை. இது தமிழ்ப் படங்களில் பேசப்படும் பண்ச் டையலாக்குகளை நினைவுபடுத்தினால் ஆச்சரியமில்லை.தினமலரின் செய்தியாளர், செய்தி ஆசிரியர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுவதையும் அப்படி எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி உச்சநீதி மன்றமோ அல்லது தேர்தல் ஆணையமோ வழக்கமாக செய்வதைக் கூட அதிரடி நடவடிக்கை என்று சித்தரிப்பவர்கள் ஒரு வழக்கு குறித்த செய்திகளை எப்படி வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

மதுரையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது.இதில் ஜெயேந்திரர் சம்பந்தப்பட்டுள்ளார். கடந்த மாதம் விசாரணை நடைபெற்ற போது அடுத்த விசாரணை பிப்ரவரி 24ம் தேதி என்று நீதிமதி கூறினார். தினமலரிலும் விசாரணை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது என்று செய்தி வெளியானது. அன்று நடந்த விசாரணை குறித்து முழு விபரங்கள் இல்லை. ஆனால் தினகரனில் முழுமையான செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. திருக்கோஷ்டியூர் மாதவனும் அன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் என்பதும் அதில் கூறப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் மார்ச் 10ம் தேதிக்கு விசாரணை த்திவைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.தினமலரில் இது குறித்து செய்தி வெளியானதாகத் தெரியவில்லை. தினகரன் தளத்தினை பார்ப்பது சிரமமாக உள்ளது. ஹிந்துவிலும் செய்தி வெளியானதாகத் தெரியவில்லை, முன்பும் வெளியாகவில்லை என்றே தோன்றுகிறது. இந்த வழக்குக் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் அல்லது முழுமையான செய்தியை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தினமலர் முடிவு செய்துள்ளதாகத் தோன்றுகிறது. நான் எழுதியதில் தகவல் பிழை இருந்தால் தெரிவிக்கவும்.

ஒரு செய்தியை முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் நியுஇண்ட்பிரஸ் வெளியிடுகிறது.தலைப்பு Lawyers protest seer’s presence என்கிறது. தரப்பட்டுள்ள தகவல்களும் தவறு. ஏனெனில் அவர் அங்கு இருப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.மாறாக பிறர் செயல்படுவதற்கு இடையூறாக இருந்ததைத் தான் கண்டித்து இங்கு அவர் ஒரு குற்றம்சாட்டப்பட்டவர் என்று அந்த வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.இது எதுவும் இந்தச் செய்தியில் இல்லை. ஜுனியர் விகடன் இதே செய்தியை வேறு சில தகவல்களுடன் வெளியிட்டுள்ளது. நியு இண்ட் பிரஸ் வெளியிட்டுள்ளதையும், ஹிந்து, ஜூ.வி தந்துள்ள செய்திகளைப் படித்தால் நியு இண்ட் பிரஸ் செய்துள்ள விஷமம் புரியும்.

இப்படித்தான் ஊடகங்கள் செயல்படுகின்றன. ஒரே செய்தித்தாளினை மட்டும் வாசித்தால் உண்மையான செய்திகள் கிடைக்கும் என்ற நிலை இன்று இல்லை. ஊடகங்கள் சங்கராச்சாரியார் வழக்கில் விசாரணை செய்து தீர்ப்பு கூறுகின்றன, செய்திகளை திரித்து வெளியிடுகின்றன என்ற புகார் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு ஆதரவாக உள்ள தினமலரும்,நியுஇண்ட்பிர்ஸ¤ம் எப்படி செய்திகளைத் தருகின்றன என்பதற்கான உதாரணங்களை மேலே தந்துள்ளேன்.

இந்த அரசியலைப் புரிந்து கொண்டால்தான் இந்த ஊடகங்களை எந்த அளவிற்கு நம்ப வேண்டும், எப்படி செய்திகளை ஒரே ஊடகம் அல்லது செய்தித்தாள் மூலம் அறிந்து கொள்வது பல சமயங்களில் போதாதது என்பதும் புரியும்.

7 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/எப்படி செய்திகளை ஒரே ஊடகம் அல்லது செய்தித்தாள் மூலம் அறிந்து கொள்வது பல சமயங்களில் போதாதது என்பதும் புரியும்./மெய்யே. ஆனால், ஊடகங்களின் இந்த தம்-அரசியல்சார் நிலைப்பாடுகளை எத்தனை வாசகர்கள் அறிந்திருக்கின்றார்கள்/அறியமுடியும் என்பது ஒரு கேள்வி. அடுத்ததாக, அறிந்திருந்தாலுங்கூட, தாம் விரும்புகின்ற வகையிலே நாட்டிருப்பிருப்பும் நடப்பும் என்ற திருப்தியைத் தரும் ஊடகங்களை நாடும் வாசகர்களும் கணிசமான அளவிலே உள்ளார்கள்.

4:24 PM  
Blogger aathirai மொழிந்தது...

raajinaamavirku pakkaththil oru aacharya kuri irunthirukkume.
intha aacharya kurikku irukkum power alathiyanadhu.

4:57 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//இதை தினமலரின் மாந்தீரிக யதார்த்தவகை எழுத்தாக கொள்ளலாம். எழுத்தே மாந்தீரிகமாக மாறுவதை நாம் பாராட்டத்தானே வேண்டும். இந்த செய்தி பிரதிகளை வாசிக்க தனிக் கையேடு தேவையில்லை. என்ன செய்வது எந்த மாந்தீரிகம் செய்தாலும் காரியம் கைக்கூடாத நிலைதான் இருக்கிறது. அப்போது மனதின் ஆசைகளை,விருப்பங்களை,அச்சங்களை இப்படி இலக்கியம் படைத்துதானே வெளிப்படுத்த முடியும். இந்த செய்தி இலக்கியத்தினை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்வோம்.//

ரவி, நல்ல பதிவு. நான் இதை முகவும் ரசித்தேன். ஆனாலும் திரும்ப திரும்பச் சொல்லப்படும் பொய், ஆசை, வசை இவையெல்லாம் உண்மையாகிவுடும், மற்ற குரல்கள் எல்லாம் அழுத்தியோ, அடக்கியோ வைக்கப்பட்டிருக்கும் போது. அப்படித்தான் ரொம்பகாலமாக நடந்துவந்தது. என்னசெய்வது இப்ப எல்லாரும் எழுதக்கிளம்பிட்டார்கள். அதனால் தினமலர்/ஹிந்து ஆசைகள் எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப எழுதப்பட்டாலும் நிறைவேறுவதில் சிரமமே இருக்கிறது. என்ன செய்ய?

நன்றி!

6:35 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ரவி, நல்ல பதிவு.

6:57 PM  
Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

Appadiyae 'Sun T.V. & 'Kungumam' seythiyoda tharam paththiyum solli unga 'nadunilaimai'yai kattiyirukkalaam ravi!!

7:30 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

i dont watch sun tv , i have no access to any of the tamil channels from india nor do i read kungumam.
in anycase i have not written that they are neutral anywhere, nor have i been endorsing all views or actions of dmk.if you have read my blog postings and writings in thinnai you would have noticed that.i criticised dmk and congress for their views and actions regarding appointment of governors.

1:48 AM  
Blogger Shankar மொழிந்தது...

"seythi ilakkiyam"! - suvaarasiyamaana pathivu.

3:20 AM  

Post a Comment

<< முகப்பு