ஒரு 'செய்தி'யும் அதன் பின் உள்ள அரசியலும்

சுனாமி தாக்குதலில் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்பட்ட செய்தியை இலங்கை வானெலி நிலையம்திரும்பப் பெற்றுள்ளது.இச் செய்தி பிரபாகரன் மரணமடைந்திருக்ககூடும் என்று வெளியான செய்தி போல் அதே முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுமா என்று பார்க்க வேண்டும். முதலில் இந்தச் செய்தி வெளியான போதே அதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்பதை ஊகிக்க பெரும் அறிவு தேவையில்லை.

சுப்பிரமணிய சாமி, ஹிந்து போன்றவை தொடர்ந்து செய்து வரும் புலிகள் எதிர்ப்பு பிரச்சாரத்தின்ஒரு பகுதிதான் இது. ஆனால் இதை இலங்கையில் ஒரு இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள துயர் துடைக்க தமிழர் புனர்வாழ்வு அமைப்பும், வேறு பல தொண்டு நிறுவனங்களும் முழுமூச்சுடன் ஈடு பட்டிருக்கையில் ஏன் வெளியிட வேண்டும். உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களைக்குழப்பவா இல்லை உலக நாடுகளுக்கு இனி புலிகள் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறி என்றுசொல்லாமல் சொல்வதற்கா. ஊர்ஜிதமாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடும், ஆனால் அதில்கூட வதந்திக்கும், ஊர்ஜிதமாக செய்திக்குமிடையே வேறுபாடு உண்டு. வதந்திகளை செய்திகள்போல் தந்தால் பின்னர் உங்கள் செய்திகளே வதந்திகள் என்று படிப்பவர் முடிவு செய்துவிடுவார்.

சுனாமி பேரழிவின் போதும் கூட ஹிந்துவாலும்,சுப்பிரமணிய சுவாமியாலும்,இலங்கை அரசுமற்றும் வானெலியாலும் புலிகள் எதிர்ப்பு அரசியலை மீறி செயல்படமுடியவில்லை.இதுதான்இவர்களது மனிதாபினத்தின் எல்லை. உலகே அழியும் போது கூட புலிகள் எதிர்ப்பு அரசியலை நடத்துவோம் என்றுதான் இவர்கள் செயல்படுவார்கள், செய்தி வெளியிடுவார்கள் போலும்.

6 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

புலிகள் எதிர்ப்பு அரசியலா அல்லது தமிழர் எதிர்ப்பு அரசியலா? இந்நிலையில் தமிழர்களின் ஒரே, ஆறுதல், துணை, பயம், அதிகார அமைப்பு என்று புலிகள் ஆகிப்போன நிலையில் புலிகளைக்குறித்து எந்த நிலைக்கும் சென்று அரசியல் செய்யும் இந்து, சு.சாமி, இ.அரசுயின் நோக்கம் நிச்சயம் தமிழர் எதிர்ப்பு அரசியலே! அதனால்தான் தமிழர் எதிர்ப்பு உணர்வே புலி எதிர்ப்பு அரசியலாக தோற்றம் பெறுகிறது. இல்லாவிட்டால் இப்பசி ஒரு கூட்டு வேறெந்தத்தளத்தில் அமையமுடியும்?

நன்றி!

3:59 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

சு.சுவாமி எந்த அளவிற்கு முக்கியமானவர்? அவர் சொல்வதாகப் பத்திரிக்கைகளில் வருவனவற்றில் பெரும்பாலானவை நகைப்பிற்குரியனவாகவே இருக்கின்றன. சொந்தமாக உளவு அமைப்பு ஏதேனும் வைத்து நடத்துகிறாரோ?!!
சிலர் என்றும் திருந்துவதில்லை.

5:44 PM  
Blogger maalan மொழிந்தது...

"சுனாமி தாக்குதலில் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்பட்ட செய்தியை இலங்கை வானெலி நிலையம்திரும்பப் பெற்றுள்ளது.இச் செய்தி பிரபாகரன் மரணமடைந்திருக்ககூடும் என்று வெளியான செய்தி போல் அதே முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுமா என்று பார்க்க வேண்டும்" என்று எழுதியிருந்தீர்கள். இன்று (9.1.05) அதே முதல் பக்கத்தில் அதே இரண்டு பத்தி அளவிற்கு இந்து செய்தி வெளியிட்டுள்ளது. (http://www.hindu.com/2005/01/10/stories/2005011005890100.htm)

நேற்று செய்தி வெளியிட்டபோதே dead or alive என்றுதான் இந்து தலைப்பிட்டிருந்தது.அதில் செய்தியின் ஆதரமாக் SLBC மற்றும் ஐலண்ட் ஆகியவற்றையும் குறிப்பிட்டிருந்து. அத்துடன் விடுதலைப் புலிகளின் மறுப்பையும் அது குறிப்பிட்டிருந்தது.

இததனைக்கும் பிற்கு இந்துவைத் தாக்குவது நியாயமற்றது.

விமர்சனங்கள் இருக்கட்டும். பிரபாகரன் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டதாகவோ, அல்லது துயருற்றவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிதததாகவோ செய்திகளோ படங்களோ இலங்கை இதழ்களிலோ. இணையத்திலோ பிரசுரமாகி இருக்கிறதா? (சந்தேகத்தின் பேரில் கேட்கவில்லை. அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்)
மாலன்

2:22 AM  
Blogger ஜெயந்தி சங்கர் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

4:49 AM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

9:28 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

"விமர்சனங்கள் இருக்கட்டும். பிரபாகரன் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டதாகவோ, அல்லது துயருற்றவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிதததாகவோ செய்திகளோ படங்களோ இலங்கை இதழ்களிலோ. இணையத்திலோ பிரசுரமாகி இருக்கிறதா? (சந்தேகத்தின் பேரில் கேட்கவில்லை. அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்)
மாலன்"

இந்திய அரசியல்வாதி மக்கள் சேவை என்று நாடகம் நடிக்க வேண்டிய அவசியம் பிரபாகரனுக்கு இல்லை. அவரின் பாதுகாப்பு என்பது பல கோடி தமிழற்களின் எதிர்காளத்துக்கு பாதுகாப்பு.

அன்புடன்,
e_roy
(இவன் பிறப்பாள் இந்திய தமிழன்.)

11:21 AM  

Post a Comment

<< முகப்பு