எனவே, இனி......

திண்ணையில் ஜெயமோகன் கட்டுரை உட்பட பலவற்றைப் படிக்கும் போது எரிச்சல்தான் வருகிறது.இந்த உளறல்களையும், பிரச்சாரங்ளையும் குறித்து எழுதலாம்.ஆனால் இவற்றிற்கு பதில் கூற தேவைப்படும் நேரத்தையும்,உழைப்பையும் வேறு வகைகளில் உருப்படியாக செலவழிக்கலாமே என்று தோன்றுகிறது.தமிழில் இது போன்றவைகளுக்கு குறைவேயில்லை.இவைதான் உருப்படியான கட்டுரைகள், கருத்துக்களை விட அதிகமாக இருக்கின்றன.தமிழ் சினிமாவின் அபத்தங்களுக்கு இவை எந்த விதத்திலும் குறைந்தவையில்லை.

ஆனால் தமிழ் வெகுஜன சினிமா அறிவு ஜீவித்தனமானது என்று யாராவது கூறுவார்களா. அது அறிவு ஜீவித்தனமாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மதுர போன்ற படங்களை எடுப்பவர்கள் தங்கள் நோக்கம் குறித்து தெளிவாக இருக்கிறார்கள். அங்கு அந்த விதத்தில் ஒரு பாசாங்கு இல்லை. ஜெயமோகன் போன்றவர் இங்கு அறிவுஜீவியாகக் கருத்தப்படுவார் என்றால் ஒரு மூன்றாம் தர சினிமா இயக்குனரை ரே என்று கருதுவது போல்தான் அது.ரசிக மன்றக் கலாச்சாரத்தினை விட மோசமாக உள்ளது இலக்கிய மடங்கள், குழுக் கலாச்சாரம்.
சுனாமி குறித்து இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபுயுன் தினசரி விரிவான செய்திக் கட்டுரைகளை வெளியிடுகிறது.பினால்ஷியல் டைம்ஸில் வெளிநாட்டு உதவி குறித்து ஒரு நீண்ட கட்டுரை கடந்த இரண்டு நாட்களுக்குள் வெளியாகியுள்ளது. நேச்சரில் தலையங்கம் உட்பட சில கட்டுரைகள். இப்படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 அல்லது 15 செய்திக்கட்டுரைகள், விரிவான அலசல்கள் சுனாமி,சுனாமியின் தாக்கம், உதவியும் அதில் உள்ள அரசியல் குறித்தும், என் பார்வைக்கு வருகின்றன. இவையெல்லாம் பல்வேறு தரப்பு வாதங்களை, நியாயங்களை முன்வைக்கின்றன.ஒரு குறைந்த பட்ச புரிதலையாவது பெற உதவுகின்றன.
இது போல்தான் வேறு பல விஷயங்கள் குறித்தும். ஜெயமோகன் கட்டுரையைப் படித்தால் கிடைப்பது அவரது விருப்பு,வெறுப்புகள் குறித்த ஒரு புரிதல்.ஒரு இலக்கியவாதி எப்படி வெளிப்படையாகவும், நுண்ணிய முறையிலும் விஷமப் பிரச்சாரம் செய்வார் என்பதை அறிய முடிகிறது. இதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது. இதை விமர்சித்து எழுத தேவைப்படும் நேரத்தில் இன்னும் இரண்டு கட்டுரைகளையாவது படித்துவிட முடியும் அல்லது வேறு விஷயங்கள் குறித்து எதையாவது படித்துவிட முடியும். அல்லது ஆங்கிலத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். அறிவார்ந்த விவாதம் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுடன் சாத்தியமே இல்லை. மேலும் இங்கு நிலவும் சூழலும் அதற்கு உகந்ததாக இல்லை. ஒருவர் வெட்கப்படாமல் தொடர்ந்து அரை,கால் பொய்களையும், பிறருடைய கருத்துக்களை திரித்தும் எழுதி வருவார். அது குறித்து ஒரிருவர் மட்டும் விமர்சிப்பார்கள். அந்த விமர்சனங்களாலும் அது நின்றுவிடப் போவதில்லை.
இப்படிப்பட்ட சூழல் இங்கு இருக்கும் போது இதில் நான் விவாதங்களில் ஈடுபடுவது கூட வீணோ என்று தோன்றுகிறது. சிறுபத்திரிகை சூழலே கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கிறது. காலச்சுவட்டின் கீழ்த்தரமான இலக்கிய அரசியல், ஜெ.மோ போன்றவர்களின் வக்கிரப் பிரச்சாரங்கள், அரவிந்தன் போன்றவர்களது பல்வகைப் பொய்கள், இன்னும் பல அடிப்படைவாதிகளது பிரச்சாரங்கள், இதுதவிர குழுச்சண்டைகள், தனிப்பட்டவர்களின் ஆளுமைகளுக்கிடையான மோதல்கள் ஏதோ அறிவார்ந்த முரணாகக் காண்பிக்கப்படுவது.
இதில் ஆறுதலாக உள்ளவை வலைப்பதிவுகளில் காணப்படும் அலசல்களும், வேறு சிலவும்தான். இந்தச் சூழலில் நான் என்ன செய்வது. விவாதங்களில் ஈடுபடுவது அலுப்பூட்டுகிறது அவை அறிவார்ந்த விவாதங்களாக இங்கு பெரும்பானமையானவை இல்லை. எத்தனை முறைதான் சிலரது எழுத்துக்களை விமர்சிப்பது. ஒரு பொதுப்புத்திக்கு புரிபவைக் கூட இங்கு அறிவு ஜீவிகளாக கருததப்படுவர்களின் கட்டுரைகளில் இல்லை. இதை எத்தனை முறைதான் விளக்கி எழுதுவது. மேலும் இங்கு எத்தனை பேர் ஆங்கிலத்தில், பிறவற்றில் வெளியாகும் முக்கியமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதனடிப்படையில் எழுதுகிறார்கள். வெகு சிலரே.இவற்றை நானே ஆங்கிலத்தில் படித்திருக்கக் கூடும் அல்லது அவை பெரும்பான்மையாக என் கவனத்திற்கு ஏதோ ஒரு வகையில் வந்திருக்க்வும் வாய்ப்புள்ளது.
எனவே தமிழில் மாதம் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதுவது, உருப்படியான விவாதம் சாத்தியம் என்றால் மட்டுமே மூக்கை நுழைப்பது என்று முடிவெடுத்துள்ளேன்.தமிழில் படிப்பதையும் குறைத்துக் கொள்வது என்றும் தீர்மானித்துள்ளேன். திண்ணையிலோ அல்லது வலைப்பதிவுகளிலோ நான் எழுதுவது, பின்னூட்டம் இடுவது போன்றவை குறைந்து விடும். ஒரு அறிவார்ந்த ரீதியில் வளமையான, செழுமையான உலகில் நான் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது, அறியவும், புரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது என்பதுதான் யதார்த்தம். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு சில நூறுப் பக்கங்களையாவது படிப்பது தேவையாகிறது.
வேறு சிலவற்றை செய்யலாம் என்றால் அதற்கான தொழில் நுட்ப அறிவு என்னிடன் இல்லை.புதிதாகசிலவற்றைக் கற்றுக் கொண்டு இறங்குவதற்கான நேரத்தினையும், உழைப்பினையும் நான் தர இயலாதநிலையில் இருக்கிறேன். மொழிபெயர்ப்பு உட்பட வேறு சில சாத்தியப்படுகளில் நான் ஈடுபடாததிற்குஇதுவே காரணம்.
இவ்வ்லைப்பதிவு உட்பட தமிழ்சூழலில் என் செயல்பாடுகளை பெருமளவு குறைத்துக் கொள்ளப்ப் போகிறேன். ஒரு காலகட்டத்தில் தமிழில் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தேன்.இப்போது அப்படியல்ல. மாதம் ஒரு கட்டுரையாவது எழுத முயல்வேன். நான் படிப்பவை, என் கவனத்து வருபவைகளை பகிர்ந்து கொள்வேன். அதை எப்படி செய்யப் போகிறேன் என்பதை விரைவில் எழுதுகிறேன்.

3 மறுமொழிகள்:

Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

உணமைதான் ரவி. நமது புதிய சிந்தனைகளின் தூரத்துக்கு வர சூழலில் இர்ப்பவர்களுக்கு
மனமும்,அறிவும் இல்லை. நமது புதிய சிந்தனைகளுக்கான ஆரோக்கியமான உற்சாகமூட்டுதலோ,
விவாதங்களோ இல்லை. இந்த நேரத்தில் செய்வதென்பது, இந்த பழைய குப்பைகளை சுத்த்ப்படுத்தலாம், நேரம் இருக்கும் பட்சத்தில்.
பழைய தீர்மானங்களை உடைக்கலாம். பழைய பிர்ச்சாரங்களை, கேள்விக்குள்ளாக்கி வன்முறையாய் பலாத்காரம் செய்யாலாம். இதெல்லாம்
செய்தானபின் தான் புதிய கருத்துக்களை வழங்கவேண்டும். இல்லையெனில் , நல்ல கருத்துக்கள் கூட இந்த சூழலில் தினமும்
குளித்திக்கொண்டிருப்பவர்களிடம் குப்பையாய் தெரிகிறது.

தற்போது ரோசாவின் பதிவில் நடக்கும் ஜெயமோகனின் பதிவின் மீதான விவாதம் ஆரோக்கியமானதாகவே படுகிறது. முகமூடிகளாய் வந்தால் கூட
அவர்களை கருத்துக்களை வாங்கி , ஒட்டைகளை சுட்டிக்காட்டலாம். ஆனால் இதற்கெல்லாம் செலவிடும் நேரத்தில், உபயோகமாய் ஏதாவ்து செய்யலாமா என்றால்
இருக்கிற மன்ச்சலிப்பின் காரணமாக், உருப்படியாய் ஏதாவதுசெய்ய்லாம் என்று தான் சொவேன். ஆனால் அதே சம்யத்தில் இவெயல்லாம் மாற்றத்தின் படிநிலைகளாகத் தான்
பார்க்கவேண்டியுள்ளது. திண்ணையை(எரிச்சலூட்டும் பகுதிகளை) மனதில் இருந்து அகற்றி விட்டு , உங்களுக்கு படுவதை செய்ய வேண்டுகிறேன்.

12:14 PM  
Blogger maalan மொழிந்தது...

அன்புள்ள ரவி,
பொதுவாகவே உலகெங்கும் வம்புகள், அவதூறுகள், வாசக சுவாரஸ்யத்தை மனதில் கொண்டு எழுதப்படும் ஆழமற்ற கட்டுரைகள்/கருத்துரைகள் இவை அதிகமாகவே இருந்து வருகின்றன. தமிழ் விதி விலக்கு அல்ல. தமிழ் எழுத்துலக்ம், அதிலும் குறிப்பாக அறிவுலகம் மிகச் சிறியது (ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது) உலகு தழுவிய பார்வை கொண்டவர்கள் அதிகம் இல்லாத தவளைகளின் கிணறு அது. விரக்தி அடைய வேண்டாம். ஜெயமோகன் போன்றவர்கள் தங்கள் அறிவின் மீதும் சிந்தனையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை விட மற்றவர்களின் அறியாமை மீது நம்பிக்கை கொண்டு இயங்குகிறவர்கள்.தங்கள் சிந்தனை ஊற்றுக்களை அடிப்படைவாதத்திலிருந்து பெற்றவர்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். இயன்றபோது எழுதுங்கள். தமிழில் எழுதுங்கள். அது நம் மொழி. விருப்பமிருந்தால் திசைகளுக்கு அனுப்புங்கள். அது அவற்றை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லும்.
அன்புடன்
மாலன்

8:10 AM  
Blogger V.P.Jaiganesh மொழிந்தது...

Dear Mr Ravi Srinivas,
It comes as no surprise to me that you find Jayamohan and Aravindhan neelakantan's views and articles as nuisance. It is because you are holding on to an ideology and treat them (Jayamohan and Aravindhan) who have clearly revealed where their loyalties lie, with suspicion. Still I would implore you to read the latest posting on tsunami by Jayamohan and read it from a neutral view point. Each and every person writes about what he / she believes in, still reading their views neutrally would give all of us an ample opportunity to intorspect or to explore and find out the real truth.

Thanks

1:59 AM  

Post a Comment

<< முகப்பு