என்ன செய்யலாம் இவர்களை


ஒரு பேரிடர் வந்துவிட்டதே, இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் தேவை, வெட்டி வேதாந்தமும், முட்டாள்தனமான தர்மோபதசமுமல்ல. ஆனால் இங்கு சிலரால் இத்துயர் கூட வேறு விதமாக அர்த்தப்படுத்தப்படுகிறது.

http://www.dinamalar.com/2004dec29/imp46.asp

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த தினமலர் மாத ராசிமலரில் 21ம் பக்கத்தில், குரு பெயர்ச்சியால் பூகம்பம் ஏற்படுமா? என்ற தலைப்பில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குருபெயர்ச்சியினால், இந்தியாவின் பொருளாதாரம் உயர்வு பெற்று தனிநபர் வருமானம் திறன் அதிகரிக்கும், என்ற தொடங்கி கடைசி பத்தியில் இத்தனை நன்மைகள் கிடைத்தாலும், இயற்கை சீற்றத்தை தடுக்க இயலாது. பூகம்பம் அல்லது வெள்ளத்தால் இந்தியா உலுக்கப்படலாம். இதற்கு பெருமாள் வழிபாடு ஒன்றே மாற்று வழியாகும். அவரவர் குலதெய்வத்தையும், பெருமாளையும் வழிபட்டு இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றும் படி வேண்டிக்கொள்ள வேண்டும். தான தர்மங்கள் செய்ய வேண்டும், தர்மத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது என்று எழுதப்பட்டுள்ளது.
அன்று சொன்னது... இன்று மெய்யாகி விட்டது !

http://www.thatstamil.com/specials/cinema/news/rajini-29.html

உலகில் பாவிகள் அதிகரித்தால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளும் ஏழை மக்களும் தான். நம் அறிவுக்கு எட்டாத ஆண்டவனின் குரூர செயல். அப்பாவி மக்களுக்கு நடந்த கோரத்தை நினைத்தால் நெஞ்சு துடிக்கிறது.
பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மீண்டும் இத்தகைய மிருத்யு தாண்டவம் நடக்கக்கூடாது என்றும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

வைரமுத்துவின் கவிதையோ அபத்தக் களஞ்சியம், இந்நிலையிலும் கூட வரலாற்றுப் அறிவை இப்படிவெளிப்படுத்தும் முட்டாள் கவிஞனை மட்டும் கடல் கொண்டு போனால் நல்லது என்றே நினைக்கிறேன். ஒரு கவிதை எழுதி நாமும் நம் இரங்கலைத் தெரிவித்துவிடலாம். ஏனெனில் மரணம் தனியே வந்தால் அழகுதானே.

தினமலர் செய்வதோ விஷமப் பிரச்சாரம், அன்றே சொன்னார்களாம். ஏன் நேரடியாகவே தர்மம் எதனால், எந்த நடவடிக்கைகளால் கெட்டுப்போனது என்று சொல்லிவிடலாமே.

ரஜனி கூறியிருப்பது மடத்தனத்தின் சிகரம். இனியாவது போலி ஆன்மிகப் பிரச்சாரத்தினை தன் படங்கள், அறிக்கைகள் மூலம் நிறுத்துவாரா இந்த நடிகர். பாவிகள் திடீரென அதிகரித்துவிட்டார்களா, யார்அந்தப் பாவிகள், பாவிகள் அதிகரித்தால் அப்பாவிகளும், ஏழை மக்களும் ஏன் பாதிக்கப்பட வேண்டும். என்ன தர்க்கம் இது. திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு அந்தப் பாவிகளை எதிர்த்துப் போராடுவாரா இவர். தான் சொல்வதை நம்புபவர் என்றால் அவர் இதைச் செய்யட்டும், இந்தப் பாவிகள் யார் யார் என்றுவெளிப்படையாகக் கூறிவிட்டு அவர்களை எதிர்ப்பதாகக் கூறட்டும்.

இவர்கள் இவ்வாறு வேதாந்தமும், தத்துவமும் பேசக் காரணம் என்ன, இவர்கள் இதனால் எந்தவிதத்திலும்பாதிக்கப்பட வில்லை என்பதனாலா இல்லை தங்கள் ஆன்மிக அறிவையும், கவிதைத் திறனையும் வெளிக்காட்டவா.

சுனாமிக்கு நன்றி சொல்லியிருக்கிறார் ஒருவர். அவருக்கு வாழ்க்கைக் குறித்த சில உண்மைகள் இப்போது புரிந்துவிட்டனவாம். எதற்கு நன்றி தன்னையும், தன் குடும்பத்தையும் அழிக்கவில்லை என்பதற்கா. அப்படியானால் மரணமடைந்தவர்கள் மற்றும் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்தவர்கள் குறித்து உங்களுக்குச் சொல்ல ஒன்றுமே இல்லையா. இவருக்கு தான் கடற்கரை அருகே வசிக்கும் ஒரு மீனவராகவோ அல்லது கடலில் சென்று ஒன்றும் செய்ய இயலாத மீனவராகவோ அல்லது தன்னைப் போல் கடன் வாங்கியாவது வசிக்க அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க வசதி இல்லாத ஏழையாகவோ தான் இருந்தால் என்ன ஆயிருப்போம் என்று யோசிக்கத் தோன்றவில்லை. உலக இலக்கியங்களில் தேர்ச்சி பெற்று, இலக்கியம் படைத்து இவர் பெற்றது இத்தகைய சிந்தனைகள்தானா.

இவை நோய் கூறு கொண்ட மனநிலைகளின் வெளிப்பாடுகள். என்ன செய்யலாம் இவர்களை.

6 மறுமொழிகள்:

Blogger ROSAVASANTH மொழிந்தது...

நான் எழுத நினைத்த பல விஷயத்தை நீங்கள் எழுதிவிட்டீர்கள்.
தினமலர் அப்படி எழுதுவதோ, வைரமுத்து நாய் குலைப்பதோ, ரஜினி ஒளருவதோ பெரிய விஷயமல்ல. ஒரு எழுத்தாளர் இப்படி எழுதுவதுதான் என்னால் மன்னிக்கமுடியாமல் இருக்கிறது.

9:28 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ரவிக்கும் மற்றவருக்கும். வெங்கடேஷின் பதிவில், சுநாமிக்கு நன்று கூறுவதை விமர்சித்து எழுதிய, குறிந்த பட்சம் மூன்று கருத்துகள் நீக்கபட்டுள்ளன. நான் இரண்டு பின்னூட்டங்கள் இட்டிருந்தேன். எனக்கு முன் ஒருவர். மூன்றுமே மிக நாகரீகமான முறையில், இப்படி பல உயிர்களை கொள்ளைகொண்ட சுனாமிக்கு நன்றி கூறுவதை விமர்சித்திருந்தது. அனைத்தையும் நீக்கிவிட்டார். சொரிந்துவிடும் பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிக்க படுகிறது. சுனாமி அவருக்கு என்ன ஒரு ஞானத்தை கொடுத்திருக்கிறது என்று நினைத்தால் புல்லரிக்கிறது.

9:38 AM  
Blogger சன்னாசி மொழிந்தது...

வைரமுத்து ஒரு பொத்தான் கவிஞர். சோகத்துக்கு ஒரு பொத்தான், சந்தோஷத்துக்கு ஒரு பொத்தான். எந்தப் பொத்தானை அழுத்துகிறாரோ அதற்கேற்றாற்போல ஒரு கவிதை பொளக்கென்று வெளியே வந்து விழும். சோகத்தைக் காட்ட ஏதாவது சொல்லியே, எழுதியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. கொடூரம் என்பது, அஞ்சலி என்ற பெயரில் கேனத்தனமாக ஏதாவது உளறுவது. வெங்கடேஷின் பதிவில், அவரது குடும்பம் தப்பியதற்கு மகிழ்ச்சி என்றாலும், போதிஞானம் பல ஆயிரம் பேர் செத்தால்தான் கிடைக்கவேண்டுமென்பதில்லை என்பதை அவர் உணர்ந்தால் சரி. தினமலர்!! கும்பகோணத்தில் பள்ளியில் சிறுவர்கள் தீயில் கருகியபோது முதல்பக்கத்தில் கரிக்கட்டையான குழந்தைகளின் பிணத்தின் புகைப்படங்களைப் போட்டு "நாங்கள்தான் முதலில் காண்பித்தோம்" என்று கொட்டை எழுத்தில் போட்ட கேப்மாரிகள் அல்லவா?

9:51 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம் வேறுவகையான எதிர்வினைகளை எதிர்பார்ப்பது நமது குற்றம். இதேபோல் கும்பகோணம் தீவிபத்தின்போதும் சில வக்கிரமான, கோமாளித்தனமான எதிர்வினைகள் வெளிப்பட்டன. அப்போதும் இந்த வக்கிரப்போட்டியில் வென்றது ஒரு எழுத்தாளர் தான்.

பா. ராகவன் அப்போது தன் வலைக்குறிப்பில் எழுதியது இது:
"எண்பது குழந்தைகளை மொத்தமாகச் சாப்பிடும் அளவுக்கு எந்த அசைவக் கடவுளுக்கு அப்படியொரு பேய்ப்பசி எடுத்ததோ தெரியவில்லை".

ஒரு வெற்றிகரமான எழுத்தாளரால் இப்படி முட்டாள்தனமாக கற்பனை செய்யமுடிவது ஆச்சரியமாக இருக்கிறது. நெஞ்சை உலுக்கிய சோகத்தை உடனடியாகச் சொல்லவேண்டி வரும்போதுகூட இவ்வளவு கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க முடிவதற்குக் காரணம் சமூக நோயா அல்லது தனிநபரின் மன நோயா என்று தெரியவில்லை. பாராவும், வெங்கடேஷ¤ம் நண்பர்களாயிருப்பதில் ஆச்சரியமில்லை.

சுந்தரமூர்த்தி

12:43 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

இவர்களை ஒன்றும் செய்யமுடியாது, அவற்றைப் படிப்பவர்கள்தான் தலையில் அடித்துக்கொள்ளவேண்டும். கஷ்டகாலம்!!!

3:17 PM  
Blogger Raj Chandra மொழிந்தது...

Dear Ravi,

Vairamuthu is nothing but a crap who writes these kind of blabbers for money(more money, more stupid).

Rajni's comments : No need to comment on these retarded creatures' foul theories.

Jaffar's : I am ashamed that he is born as a Muslim(BTW, I am not a true believer of identifying people by religion, but since he quotes Holy Koran, I am identifying him by his religion). A true Muslim understands his/her religion in a better way.

Venatesh : It is unfortunate that he set the tone of his article in this wrong way, though in my opinion, he didn't intend that.

I am really afraid what are the other absurdities that we are going to read on this disaster.

Regards,
Rajesh

7:39 PM  

Post a Comment

<< முகப்பு