வேதம் ஒதும் சாத்தான்கள்

காஞ்சி மடாதிபதி தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் காவல் துறை குழுவின் தலைவராக உள்ள பிரேம் குமார் மீது நீதிமன்றங்கள் சில வழக்குகளில் கூறியுள்ளவை, மற்றும் அவர் மீதான வழக்குகள் குறித்து விரிவான ஒரு செய்தியினை எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
அசோக் சிங்கால் பத்திரிகையாளர்களிடம் சிலவற்றைக் கூறினார்.இது வேறு சில தகவல்களைத் தருகிறது. வழக்கம் போல் இதை வைத்துக் கொண்டு விஷமப் பிரச்சாரத்தில் ஹிந்த்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்தத் தகவல்களை அவர் காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போதோ அல்லது மாறுதலாகி கடலூர் போன போதோ எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளதா. இப்படிப்பட்டவர் சில வழக்குகளை விசாரிக்கும் போது இதை வெளியிடுவதன் மூலம் ஜெயேந்திரர் மீதான வழக்கு வலுவிழந்துவிடாது. இந்த விசாரணைக் குழவில் வேறு பல அதிகாரிகளும் உள்ளனர். பிரேம் குமார் குறித்த இது போன்ற விபரங்கள் தமிழ் இதழ்களில் முன்பே வெளியாகியுள்ளன. கடலூரில் இவருக்கும், பா.ம.க வினருக்கும் ஏற்பட்ட தகராறு குறித்தும் அவை எழுதியுள்ளன. அது போல் மனித உரிமைக் குழுக்கள் ஒழுங்கு செய்த கூட்டம் குறித்த பிரச்சினையில் இவர் பங்கு குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இதில் பெரிதாக புதிது ஒன்றும் இல்லை.

இப்படிப்பட்டவர் ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்கலாமா என்றால் சட்ட ரீதியாக அதில் தடை இல்லாத போது ஏன் விசாரிக்கக் கூடாது. பிற வழக்குகளை அவர் விசாரிப்பது போன்றது போல்தான் இதுவும். இப்படிப்பட்டவர்கள் காவல் துறையில் இருக்கக் கூடாது என்ற வாதத்தினை எக்ஸ்பிரஸ் முன் வைக்கவில்லை. இவர் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதுதான் இங்கு பிரச்சினை. அவர் சங்காரச்சாரியார் மீதான வழக்குகளை விசாரிப்பதை விட அந்த வழக்குகளே இவர்களுக்கு பிரச்சினை. இக்குழுவில் வேறு அதிகாரிகளும் உள்ளதால் அக்குழுவினை குறை சொல்ல முடியாத நிலையில் வழக்கினைப் பற்றி இப்படித்தான் எக்ஸ்பிரஸால் எழுத முடிகிறது.பிரேம் குமார் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மை என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் அது ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வலுவற்றதாக்கி விடாது.
இப்படிப்பட்ட ஒருவர் நிராபராதி என்று நீருபிக்கப்படும் வரை அவருக்கு காவல்துறையில் பொறுப்புகள் தரக்கூடாது என்று வாதிடலாம். அப்படி வாதிட்டால் என் நிலைப்பாடு இதுதான் : சட்ட ரீதியாக இது சரி என்றால் நீதிமன்றங்களையோ அல்லது அரசையோ அணுகலாமே. வேறு வழக்குகளை இவர் விசாரிக்கும் போது எழாத இக்கேள்விகள் இப்பொழுது ஏன் எழுகின்றன.
பிரேம் குமாருக்கு பதிலாக இன்னொருவர் இதே பொறுப்பில் இருந்தாலும் வழக்குகள் நிலையில் மாற்றம் வராது. ஏனெனில் தனி நபர்கள் இருவருக்கிடையே உள்ள வழக்கல்ல இது. பிரேம் குமார் மீது சட்டரீதியான, துறைரீதியான நடவடிக்கைகளுக்கும் இந்த வழக்கிற்கும் என்னதொடர்பு - ஒன்றுமில்லை. இந்த வழக்கில் அவர் மீது சித்திரவதை, மனித உரிமை மீறல் புகார்கள் இல்லை. எனவேஇந்த வழக்கில் அவர் தொடர்ந்து செயல்படுவதற்கு எதிராக காரணங்கள் ஏதுமில்லை.
இந்தப் புகாரை எழுப்பிய சிங்கால் மோதி பதவி விலக வேண்டுமென்று கோரியதுண்டா. இன்றும் சங்க பரிவாரங்கள்குஜராத் இனபடுகொலையினை மேற்பார்வையிட்ட மோதியை புகழத்தானே செய்கின்றன. அந்த வன்முறைகளைஏதோ ஒருவிதத்தில் நியாயப்ப்டுத்துகின்றனவே. மேலும் மனித உரிமைகள் குறித்து பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் எந்த அளவுஅக்கறை காட்டின என்பது எல்லோருக்கும் தெரியும். ஹிந்துயுனிட்டி போன்ற தளங்கள் கோட்ஸேயின் படத்தினைதளத்தில் வைத்துள்ளதுடன், வன்முறைக்கு ஆதரவாகவே உள்ளன. இப்படிப்பட்ட இவர்கள் பிரேம் குமார் குறித்து பேசுவது கபட நாடகம்.
இப்படி சாத்தான்கள் வேதம் ஓதினாலும், கூக்குரலிட்டாலும் ஒரு பயனுமில்லை. ஏனெனில் வெகுஜன ஆதரவு அவர்களுக்கு இல்லை. மேலும் அவர்கள் எதிர்பார்த்தது போல் இதை ஒரு பெரிய விஷயமாக்க முடியவில்லை. ஏற்கனவே நான் எழுதியது போல், ஒரு நாள் இவர்கள் தூக்குதண்டனைக்கு எதிராகவும், ஆயுள் தண்டனைக்கு எதிராகவும் பேசும் நாள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்

9 மறுமொழிகள்:

Blogger icarus prakash மொழிந்தது...

தமிழ்மணத்துக்குள் நுழைந்து, நாலைந்து ஜன்னல்களைத் திறந்து, பச்சை நிறத்தில் இருக்கிற தளத்துக்குள் நுழைந்து, சரி, பிகே.எஸ் என்னதான் சொல்லுகிறார் என்று பார்த்தால்,. வழக்கத்துக்கு மாறாக, ரொம்ப சின்ன பதிவு. இது வழக்கமில்லயே என்று சந்தேகத்துடன், மேலே ஒரு தரம் பார்த்தால், இது உங்கள் பதிவு. வலைப்பதிவு அமைத்ததில் அவர் உங்களுக்கு சீனியர் என்பதால், அவரைக் கேட்கமுடியாது என்பதால் உங்களைக் கேட்கிறேன், தயவு செஞ்சு, கலரை மாற்றுங்கள்.

இனி பிரேம்குமார் கேஸ். இந்த விஷயத்திலே, இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் தான் , இது போல டேமேஜிங் ஆக, எழுதி வருகிறது. பிரேம்குமார் மீது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், அதை இந்த வழக்குடன் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடாது. சில வழக்கறிஞர் நண்பர்கள் மூலமாக, அரசு வக்கீல் துரைசாமி, நீதிபதி உத்தமராஜ் மீதும் சில வதந்திகள் பரப்பி வருவதாகக் கேள்விப்பட்டேன். ஜூனியர் விகடன், ரிப்போட்டர் பத்திரிக்கைகளின் கவரேஜில், ஐம்பது விழுக்காடாவது உண்மை இருக்குமானால், தமிழகக் காவல்துறை பற்றி பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அதை விடுத்து புலனாய்வு அதிகாரிகளின் நம்பகத் தன்மையை இந்த சமயத்திலே கேள்வி கேட்பது, குற்றம் செய்தவர்களுக்குத்தான் சாதகமாக அமையும்.

2:12 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10207 :-)

2:18 PM  
Blogger kirukan மொழிந்தது...

இது பதிவிற்கான பின்னுாட்டம் அல்ல. திரு இகாரஸ் அவர்களுக்கு சிறிய தகவல். இந்த பச்சை நிறம் பிளாக்கரில் உள்ள ஒரு டெம்ப்ளேட்.

இதே நிறத்தை நானும் மற்றும் பலரும் உபயோகப்படுத்தியுள்ளோம்.

5:15 PM  
Blogger kirukan மொழிந்தது...

ஆதலால் தலைப்பை பார்த்துவிட்டு பதிவைப் படிப்பது நல்லது என நினைக்கிறேன்.

5:17 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஜயேந்திரருக்கோ சிங்காலுக்கோ ஆதரவாக இதை எழுத வரவில்லை. தாங்கள் எழுதியிருப்பதற்கு சில மறுப்புகளை கூற விழைகிறேன்.

"இப்படிப்பட்டவர் ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்கலாமா என்றால் சட்ட ரீதியாக அதில் தடை இல்லாத போது ஏன் விசாரிக்கக் கூடாது. பிற வழக்குகளை அவர் விசாரிப்பது போன்றது போல்தான் இதுவும்."

பலதரப்பட்ட மக்களும் கூர்ந்து கவனித்து வரும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி அப்பழுக்கற்றவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. குறிப்பாக, இவ்வழக்கைப் பொறுத்தவரை, எதை ஊடகங்களில் பிரசுரிக்கலாம் / பிரசுரிக்கக்கூடாது என்ற வரைமுறையெல்லாம் ஆரம்பத்திலேயே மீறப்பட்டு விட்டது.

ஜயேந்திரருக்கு 6 பெண்களுடன் தொடர்பு உள்ளது என்ற இந்த கொலை வழக்குக்கு சம்பந்தமில்லாத செய்தி பத்திரிகைகளிலும், டிவியிலும் வந்தபோது அதை ரசித்துப் படித்தவர்கள், இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் கிறித்தவ சகோதிரிகளின் மானபங்கத்திற்கு
(http://www.expressindia.com/fullstory.php?newsid=39174 முழுதும் படித்து விட்டு, மேலே படியுங்கள்)
காரணமானவர் என்று எழுதினால், தார்மீகம் பற்றியும், வழக்கு திசை திருப்பப்படுவது பற்றியும் பேசுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது.

"இந்தத் தகவல்களை அவர் காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போதோ அல்லது மாறுதலாகி கடலூர் போன போதோ எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளதா."

நல்ல கேள்வி? உங்கள் பாணியிலேயே கேட்கிறேன். இதே ஊடகங்கள், 2 வருடங்களுக்கு முன் ராதாகிருஷ்ணன், மாதவன் தாக்கப்பட்டபோது தூங்கிக் கொண்டிருந்தார்களா? அப்போது ஊறப்போட்ட விஷயத்தை இப்போது கிளறுகிறார்களே. இங்கே அவரவர் ஆதாயம் தான் அவரவருக்கு முக்கியமே அன்றி, நியாயம்/நேர்மை எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

"பிரேம் குமார் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மை என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் அது ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வலுவற்றதாக்கி விடாது."

அனைத்தும் உண்மையில்லாமல் இருக்கலாம். இதில் வாதம் செய்யவே எதுவும் இல்லை என்பதே என் வாதம்! நீங்கள் சுட்டிக்காட்டிய எக்ஸ்பிரஸ் செய்தியில் சொல்லப்பட்ட
"The petitioner has no regard for law or truth. The role played by the police officers in this case would make this court think that these officers have behaved like barbarians without giving any respect to human dignity, that too with the ladies. It would be shameful to find that a person like the petitioner has been allowed to work in the police department.’’
ஒரு நீதிபதி நீதிமன்றத்தில் கூறியவை. நீதியை மதிக்கும் எவரும், இந்த குற்றச்சாட்டை நம்பத் தான் செய்வார்கள். நீங்கள் நம்பவில்லை போலும்.

8:29 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

அன்புள்ள அனானிமஸ் :),
ரவியின் போஸ்ட் சொல்லும் வாதத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது என் எண்ணம்.
பிரேம் குமார் ஒரு வழக்கை விசாரிப்பவர். அவருக்கு இந்த வழக்கையும் தடையில்லாமல் விசாரிக்க உரிமையுள்ளது எனப்துதானே வாதம். அவர் நேர்மையாய் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டுமானால் சரியாகும். நேர்மையாய் இருந்திருக்க வேண்டும் என்பது அர்த்தமற்றது.
ஜெயேந்திரர் நேர்மையாய் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடதான் மக்களிடம் இருந்தது. அது வீணாகிப்போச்சே அதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்? :) பிரேம் குமார் ஒன்னும் பிரேமேந்திரர இல்லையே?

12:49 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ரவி இந்த அவதானிப்பு மிக அவசியமானது? நன்றி

12:52 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

even if Premkumar abused christian nuns? I thought you (rosa, anathai etc) loved christians, muslims and naxalites more than you hated Hindus. I see you hate hindus more than anything else.. ;-)
-AA (Anonymous Anonymous;-)

1:11 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

thanks for comments.i will try to clarify some points and comment on developments in an article by wednesday.

5:54 PM  

Post a Comment

<< முகப்பு