ஒரு நாள் ?


கைது செய்யப்படுவோர் உரிமைகள், மனித உரிமைகள் குறித்து 'கவலைப்படுவோர்' எண்ணிக்கை திடீரெனஅதிகரித்துள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத், மனித உரிமை அமைப்புகள் போல் உண்மைக் கண்டறியும் குழு அமைத்து ஜெயேந்திரர் கைது குறித்து ஒரு அறிக்கை வெளியுட்டள்ளது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இக்கைதில் மனித உரிமை மீறல் இருப்பதாகக் கூறியுள்ளார். தமிழக அரசு ஊழியர் போராட்டத்தின் போது இவர்எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார். இந்த முன்னாள் தொழிற்சங்க வாதிக்கு அவர்களெல்லாம்நண்பர்கள் இல்லை போலும், முப்பதாண்டு கால நண்பரை இப்படி கைது செய்தால் கோபம் வராதா என்ன?.

கொஞ்ச காலம் பொறுங்கள், இவர்களே மரண தண்டனைக்கு எதிராகவும், ஆயுள் தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வாய்ப்பு கிடைக்கலாம். இவையெல்லாம் இந்து தர்மத்திற்கும் சாஸ்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் விரோதம் என்று. அன்று ஒரே மேடையில் நாம் சுப்பிரமண்யம் சுவாமி, ஜார்ஜ், தொகாடியா, அத்வானி,ராம கோபாலன்,சோ உட்பட பலர் குரல் கொடுப்பதை கேட்க நேரிடலாம். ஆனால் அதற்குள் பொடா வழக்கில் கைதானவர்களுக்கு நீதி கிடைக்குமா, சதாசிவா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நீதி கிடைக்குமா என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம்.
ஒரு சிலர் எப்போதுமே வெகு பலரை விட அதி சமம் என்பதை நினைவில் கொள்க. இதுதான் அவர்களது 'அத்வைதம்' அன்றும் இன்றும் ....

4 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

//இவர்களே மரண தண்டனைக்கு எதிராகவும், ஆயுள் தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வாய்ப்பு கிடைக்கலாம். இவையெல்லாம் இந்து தர்மத்திற்கும் சாஸ்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் விரோதம் என்று. அன்று ஒரே மேடையில் நாம் சுப்பிரமண்யம் சுவாமி, ஜார்ஜ், தொகாடியா, அத்வானி,ராம கோபாலன்,சோ உட்பட பலர் குரல் கொடுப்பதை கேட்க நேரிடலாம்//

இன்னும் மவுண்ட் ரோடு மார்க்ஸிஸ்ட்டின் பணி வேறு இருக்கிறது!

10:26 PM  
Blogger Thangamani மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

10:26 PM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

//மனித உரிமை//
அவர்கள் எப்போதுமே மனித உரிமை வாதிகள்தான். ஆனால் யார் மனிதர்கள் என்பதில்தான் அவர்களது வரையறை மாறுபடும் என நினைக்கிறேன்.

6:17 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஜார்ஜ் பெர்ணாண்டஸை ஒரு விஷயத்திற்காக பாராட்டியே ஆகவேண்டும்--அவதாரப் புருஷரை மனிதர் என்று நினைவுபடுத்தியதற்கு. இவரிடமிருந்து சோஷலிசம் இன்னும் முழுமையாக விடைபெற்றுக்கொள்ளவில்லை என்று ஆறுதலடையலாம்.

இனியாவது பலரின் ஆதர்ஷப் புருஷர்களாக இருக்கும் ஜெயகாந்தன், அப்துல் கலாம் போன்றவர்கள் அவதாரப் புருஷர் மனிதராக மாறிய விந்தையை தம் அறிவுக்கண்களை கசக்கிப் பார்ப்பார்கள் என்று நம்புவோம்.

மு. சுந்தரமூர்த்தி

8:12 PM  

Post a Comment

<< முகப்பு