அட சங்கரா !

ஒரு கொலைவழக்கில் சங்கராச்சாரியார் கைதான உடன் பா.ஜ.க சார்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைப் படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது. பொடாவைக் கொண்டு வந்தவர்கள் இப்படியெல்லாம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. எந்தக் காரணமும் காட்ட வேண்டியதில்லை, குற்றப்பத்திரிகையைக் கூட 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டியதில்லை, பெயில் கிடைப்பது மிகக் கடினம் என்பது போன்ற விதிகளைக் கொண்ட சட்டத்தினை அது தவறாகப் பயன்படுத்தக்கூடிய எல்லா வழிகளை வைத்துவிட்டு அன்று தேசப் பாதுக்காப்பு, தீவிரவாதம் என்று சொல்லி அதை நியாயப்படுத்தியவர்கள் ஜெயந்திரர் கைது என்ற உடன் வேறு விதமாக கைது தேவைதானா என்றெல்லாம் பேசுவது ஏன்.
கொஞ்சம் முன் யோசனையுடன் அன்றே மடாதிபதிகள் குற்றங்கள் செய்தால் அவர்களைத் தண்டிக்க தனிச் சட்டம் கொண்டு வந்திருக்கலாம். அதில் அவர்களை போலிஸ் கைது செய்யக் கூடாது, சிறைக்காவல் கூடாது, ஆர்.எஸ்.எஸ் பொறுப்பில் விட வேண்டும், நரேந்திர மோதிதான் நீதிபதி என்றெல்லாம் விதிகளை வகுத்திருக்கலாம். என்ன செய்வது என்றும் ஆளப்போவது நாம் என்ற இறுமாப்பில் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அத்தகைய சட்டம் செல்லுபடியாகுமா என்பது வேறு விஷயம்.

பொடாவில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நக்சலைட்கள் இதுவரை விசாரணையை எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு பெயிலும் கிடைக்கவில்லை. அருண் ஜெய்ட்லி இது குறித்து வாய் திறந்ததுண்டா. அவர்களுக்காக, நக்சலைட்களுக்காக வாதிடும் சந்துரு ஹிந்துவில் இது குறித்து கூறியுள்ளதையும் படியுங்கள். ஜெயந்திரேர் ஒரு மடத்தின் தலைவராக இருக்கலாம். சட்டத்தின் முன் அவரும் ஒரு சாதாரண குடிமகன்தான். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பிறர் போல்தான் அவரையும் நடத்த வேண்டும்.எது எப்படியோ காஞ்சி மடம் குறித்த உண்மை தெரிய இது ஒரு வாய்ப்பு. ஊடகங்கள் மூலம் ஏற்பட்டிருந்த பிரமைகள் இனிக் கலைந்து விடும். அது ஊடகங்கள் மூலமே நடப்பது விதியின் விளையாட்டு என்று சொல்லலாம்.

நாளிதழ்களுக்கு, மற்றும் பிற இதழ்களுக்கு அதிக வேலை.ஏகக் காலத்தில் இரண்டு சாமியார்கள் இப்படி கைதாகி பரபரப்பூட்டினால் இதற்காக தினசரி தனி இணைப்பா கொண்டு வரமுடியும். எனவே இந்த பரபரப்பு அடங்கும் வரை பிற சாமியார்கள் பொறுமை காக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். கொலை, ஆள் கடத்தல் போன்றவற்றை சிறிது காலம் ஒத்திப் போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு சாமியார் என்பது அனைத்து மத மற்றும் மதம் சாரா சாமியார்களுக்கும் பொருந்தும்.

9 மறுமொழிகள்:

Blogger காசி (Kasi) மொழிந்தது...

கொன்னுட்டீங்க! கடைசி பாரா கலக்கலோ கலக்கல்.
:-))

10:47 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

tnx.i have made some changes in settings and templates.are you facing the same problems in
reading this blog as before.if so let me know.

11:01 AM  
Blogger Mookku Sundar மொழிந்தது...

ரவி,

எனக்கென்னமோ கொஞ்சம் சந்தேகமகத்தான் இருக்கிறது. பார்த்துக்கொண்டே இருங்கள் , என்ன நடக்கப்போகிறதென்று.
இது வெறும் stunt ஆக முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

11:04 AM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

<div align="justify">
இது இன்னும் சில இடங்களில் இருக்கு, அதனால் இன்னும் முழுதும் சரியாகவில்லை. இதை தூக்கி வேலூரில் போடுங்க, சரியாயிடும்.

11:37 AM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

மூக்கரே, இதெல்லாம் சும்மாதான் ஷோ நடக்கும்வரை ஜாலியாப் பாத்துக்க வேண்டியதுதான். ரொம்பவும் எதிர்பாக்காதீங்க.

11:39 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

நாளிதழ்களுக்கு, மற்றும் பிற இதழ்களுக்கு அதிக வேலை.ஏகக் காலத்தில் இரண்டு சாமியார்கள் இப்படி கைதாகி பரபரப்பூட்டினால் இதற்காக தினசரி தனி இணைப்பா கொண்டு வரமுடியும். எனவே இந்த பரபரப்பு அடங்கும் வரை பிற சாமியார்கள் பொறுமை காக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். கொலை, ஆள் கடத்தல் போன்றவற்றை சிறிது காலம் ஒத்திப் போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு சாமியார் என்பது அனைத்து மத மற்றும் மதம் சாரா சாமியார்களுக்கும் பொருந்தும்.

:-) :-) :-)

3:34 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

:))

(firefox-view பிரச்சனை இன்னமும் இருக்கிறது. முந்தைய பதிவின் ('அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும்...')பின்னூட்டத்தைக் காணவும்.)

4:29 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ரவி

பாஜாக வின் எப்பொழுதுமான இரட்டை வேடம் இப்பொழுது(ம்) வெளிப்பட்டிருக்கிறது. சரியாகச் சொன்னீர்கள்!

வெங்கட்

5:23 PM  
Blogger துளசி கோபால் மொழிந்தது...

ரவி,
அய்யோடா!!!!! கலக்கிட்டீங்க!
கடைசி பத்தி படிச்சுட்டு ஒரே சிரிப்புதான் போங்க!!!!

என்றும் அன்புடன்,
துளசி

11:10 PM  

Post a Comment

<< முகப்பு