அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும், பின்னரும்


புஷ் வெற்றி பெற்றது குறித்து கடந்த நான்கு அல்லது ஐந்து தினங்களக இணையத்திலும், நாளிதழ்களிலும்தொடர்ந்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பல தொடர்ந்து செயல்பட வேண்டியதன் தேவை¨யும்,இத்தேர்தல் மூலம் திரட்டிய ஆதரவை தக்க வைத்துக் கொண்டு ஆதரவினை விரிவுபடுத்துவது குறித்தும் குறிப்பிடுகின்றன. சில ஜனநாயகக் கட்சி தன் கொள்கைகளை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றும் தேர்தலின் போது அவை எதிர்பார்த்த ஆதரவு பெருமளவிற்கு கிட்டிய போதும் அவை முழுவதும் ஆதரவான ஒட்டுகளக மாறவில்லை என்பதற்கான காரணங்களை ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்துக்கின்றன. இத்தேர்தல் ஐரோப்பா-அமெரிக்க உறவில் எத்தகைய மாற்றத்தினைக் கொண்டு வரும் என்பது குறித்து ஐரோப்பாவிலிருந்து வெளியாகும் நாளிதழ்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளைப் பார்க்கிறேன். மேலும் இத்தேர்தலில் ஐயோவாவில் புஷ் ஏன் வெற்றிப் பெற்றார், கிறிஸ்துவ மதஅடிப்படைவாதிகள் எப்படி தங்கள் பலத்தினை ஒட்டின் மூலம் காட்ட முயற்சி செய்தனர் என்பது குறித்தும், இத்தேர்தல் அமெரிக்க சமூகம் இரண்டாக பிளவுபட்டுள்ளதைக் காட்டுகிறாதா என்பது குறித்த விவாதங்களையும் கட்டுரைகள் முன் வைக்கின்றன.
தேர்தலில் கிட்டதட்ட 40 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களில் 51 அல்லது 52 சத்ம் பேரே,after rounding off, புஷ்ஷிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வேறுவார்த்தைகளில் சொன்னால் புஷ்ஷிற்கு ஆதரவாக ஒட்டளித்தவர்கள் 33 சதவீதத்திற்கும் குறைவானோரே. 40 சதவீத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை. அவர்களது அலட்சியத்திற்கு என்ன காரணம். இது போல் கேள்விகள் எழுகின்றன.

இக்கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை தொகுத்து வகைப்படுத்தி எழுதினால் சில விஷயங்கள் குறித்து தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன். இதைச் செய்ய எனக்கு நேரமில்லை. யாராவது கட்டுரைகள், இணையதளங்கள் குறித்து விப்ரங்கள் கேட்டால் தர இயலும். அப்படி ஒரு கட்டுரையை உடனே எழுத வேண்டும்என்பதில்லை, இன்னும் ஒரிரு மாதங்கள் கழித்துக் கூட எழுதலாம். அதற்குள் புஷ் செல்லும் பாதை என்ன என்பது குறித்து ஒரளவெனும் முடிவிற்கு வர முடியும்.

4 மறுமொழிகள்:

Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

Firefox-ல் எழுத்துகள் உடைபட்டு நிற்கின்றன, கவனித்தீர்களா?

4:51 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

thanks.i dont have firefox browser, neither at home nor at office.if u tell me how to fix this i will go by suggestion.

5:10 PM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

Ravi,

For weeks a list of 'defects' in each blog has been posted in thamizmanam.com, and yours had its rightful place:-)

In fact I even stopped insisting on these things after seeing very poor response from fellow bloggers. More than 80% blogs have this problem.

Please see:
http://www.thamizmanam.com/tamilblogs/checksheet_oct05.htm

8:17 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

மன்னிக்கவும், இந்தப் பக்கமாக வரமுடியவில்லை. காசி அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் உங்களது template-ல் align tag-ஐ மாற்றிப்பாருங்கள், சரியாகத் தெரியக்கூடும். (என்ன காரணமோ பா.ஜ.க-வின் தீபாவளி பதிப்பு Firefox-ல் உடையாமல் நன்றாகத் தெரிகிறது, அதேபோல இஸ்ரேல்-கவிதை, நாடு... என்ற பதிவும்).

பிறகு, இயங்கு எழுத்துருக்கள் பற்றிய விவரத்தைக் காண http://kvraja.blogspot.com/2003/10/blog-post.html.

3:52 PM  

Post a Comment

<< முகப்பு