பிரபஞ்சன் கேள்வி பதில்கள் - சில கருத்துக்கள்


எழுத்தாளர் பிரபஞ்சன் மரத்தடியில் வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். இது குறித்து என்னுடைய கருத்துக்கள், சுருக்கமாக :

1, காஷ்மீரை முழுதாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ பாகிஸ்தானுக்குக் கொடுப்பது என்பதுதலையை கொள்ளிக்கடையால் செஈறிந்து கொள்வது போன்றது.பாகிஸ்தான் எல்லைகடந்த தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை அதன் வார்த்தைகளை நம்ப வேண்டியதில்லை.காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும், காஷ்மீரை விட்டுக்கொடுத்தல்ல.பாக் வசம் காஷ்மீரின் ஒரு பகுதி உள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமித்த பகுதி அது. ஒரு புறம் சீனா, இன்னொருபுறம் பாகிஸ்தான் என இரு ஆபத்தான நாடுகள் இருக்கும் போது இந்தியா காஷ்மீரை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று கூறுவது முட்டாள்த்தனம்.
மேலும் இந்த இரு நாடுகளும் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்குமென்றோ அல்லது காஷ்மீர் மக்களின் உரிமைகளை மதிக்கும்மென்றோ எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். திபெத்தின் கதி என்ன ? பிரபஞ்சன் இப்படி உளறுவதை நிறுத்திக் கொள்வது அவருக்கு நல்லது. இந்தியாவின் ராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒருவர் யோசனைக் கூறினால் அவருக்கு புத்தி குழம்பிவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றும். தெற்காசியாவில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக இருக்க வேண்டும் அதுதான் இந்தியாவிற்கு நல்லது. பாகிஸ்தானில் உள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலத்திற்க்காக காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க விரும்ப மாட்டார்கள். இந்நிலையில் இந்தியா மட்டும் தன் நலன்களையும், இறையாண்மையையும், பிரதேச ஒருமையையும் விட்டுக் கொடுக்க வேண்டுமா என்ன?.
2, மொழிப் பிரச்சினையில் அவர் பதில்கள் உணர்ச்சி பூர்வமாகவே பெரும்பாலும் உள்ளன. தமிழ் நாட்டில்மத்திய அரசுப் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.சி பாணியை பின்பற்றும் பள்ளிகளில் படிப்பவர்கள் பிளஸ் 2 படிக்கமாநில பாணி, குறிப்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் +2 வில் அதிகமார்க் எடுத்தால்தான் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் இடம் கிடைக்கும் என்பதால். இவர்களில் சிலர் +2 விற்கு முன்பு ஆங்கிலம் தவிர வேறு மொழிகளை மொழிப்பாடமாக படித்திருப்பார்கள்.இவர்கள் தெரிவு செய்ய +2ல் ஹிந்தி, பிரெஞ்ச் போன்றவை மொழிப்பாடங்களாக உள்ளன. இது போல்பட்டப் படிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஏனெனில் பிற மாநிலங்களில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, தமிழ் படிக்காமல் , கல்லூரியில் படிப்பினை தொடர வகை செய்யாவிடில் அவர்கள்பாதிப்புக்குள்ளாவர். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சன் பதில் கூறியிருக்கிறார்.
3,கல்வி என்பது மொழி மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல.இந்தப் புரிதல் பிரபஞ்சனுக்கு இல்லை.தாய் மொழியையோ அல்லது வேறு எந்த மொழியையோ கட்டாயமாக்குவது என்பதை ஒற்றைத்தீர்வாக வைக்கமுடியாது. மகாரஷ்டிரத்தில் மராட்டியை கட்டாயமாக்குவது சரிதான் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து எனக்கு விமர்சனம் உண்டு, அதை பதிவு செய்திருக்கிறேன். தமிழ் நாட்டில்தமிழ் படித்தால் மட்டும் வேலை உத்தரவாதம் உண்டா, அப்படியே படித்தாலும் இங்குள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை முற்பட்ட ஜாதியினர் என்று அரசால் நிர்ணயக்கப்பட்டோருக்கு எதிராக உள்ளதே,என்பது போல் பல நியாயமான கேள்விகள் உள்ளன. இவற்றை எதிர்கொள்ளாமல் ஒரு தீர்வினைமுன் வைக்கமுடியாது.
4, கல்வி என்பதை ஒரு பரந்த பொருளில் காண வேண்டும். கல்வி குறித்த தத்துவங்கள், காந்தி, தாகூர்போன்றோர் முன்வைத்த கல்வி குறித்த கோட்பாடுகள், கோத்தாரி கமிஷன் அறிக்கை, மற்றும் கல்வியில்அரசின் பங்கு, பொறுப்பு என்ன என்பன போன்றவற்றை விவாதிக்காமல் கல்வியை மொழிப்பிரச்சினையாகப்பார்க்கும் போக்கு முட்டாள்தனமானது. மேலும் education as public good, higher education as meritgood, education as a fundamental right இது குறித்த விவாதங்கள், ஆய்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும். பிரபஞ்சனுக்கு இவையெல்லாம் முக்கியமற்றவை என்று தோன்றலாம். ஆனால் இவை மிகவும்முக்கியமானவை.
5,இந்திய ஆட்சி/நிர்வாகப் பணி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. தமிழ் தெரியாதஅதிகாரிகள் தமிழைக் கற்பது கட்டாயம். அது போல் இந்தியாவின் பல மாநிலங்களில் தமிழினைத்தாய்மொழியாகக் கொண்டவர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர், பணியாற்றுகிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அதிகாரிகளால்தான் தமிழுக்குக் கேடு வருகிறது என்பது கற்பனை. பிரபஞ்சனின்குறுகிய கண்ணோட்டத்தினையே அவரது பதில் காட்டுகிறது.

மற்றப்படி பதில்கள் சிறப்பானவை என்று சொல்ல முடியாது. பிரபஞ்சனின் புனைவற்ற எழுத்துக்கள் பலவற்றைபடித்திருக்கிறேன். அவை மிகை உணர்ச்சி கொண்டவை, எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரங்களை, கோஷங்களை முன் வைப்பவை. இந்தப் பதில்களிலும் அதே போக்குதான் உள்ளது. பொதுவாகக் சொன்னால்இலக்கியம் தவிர்த்து பிற குறித்து அவர் கூறியுள்ள பதில்களில் இக்குறைபாடுகள் மிக அதிகம். பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியம் தவிர்த்த பிற துறைகள் குறித்து எழுதும் போது அவர்கள் எழுதுவது மிகச் சாதரணமாக இருக்கும் அல்லது மிக அபத்தமாக இருக்கும் (உ-ம்: ஜெயமோகன்). இதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும்.பிரபஞ்சனும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதையே இப்பதில்கள்காட்டுகின்றன.

9 மறுமொழிகள்:

Blogger PKS மொழிந்தது...

Ravi, its a good post. I pretty much agree with your message in the post. Can I say, finally we found some common ground :-). Sure it will lead us to better dialogues and understanding. Keep Writing. Thanks and regards, PK Sivakumar

8:45 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

you should send this to maraththadi and prabanjan.

12:19 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:23 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:55 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:56 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks PKS.Whether we agree or not on issues and views, we can always have a dialog, even after agreeing to disagree. regards ravi

2:20 PM  
Blogger rajkumar மொழிந்தது...

srinivas,

it is interesting to read your opinion on Kashmir. As a reader of your writing, i request you to write your opinion on North east problem.

I am sure u will have a lot to share.

Regards

Rajkumar

1:02 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

உங்களுக்குப் பிடிக்காத கருத்துகளைச் சொல்பவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்றால் உலகத்தில் நீங்கள் மட்டுமே அறிவாளியாக இருக்க இயலும்.

இந்தியர்களைக் கசக்கிப் பிழிந்து இந்தியாவைக் காலனியாக வைத்திருந்தது இங்கிலாந்தின் நலனுக்கு ஏற்றது, பாலஸ்தீனர்களைக் கொன்று அவர்களது நிலத்ததை அபகரித்துக்கொண்டது இஸ்ரேலின் நலனுக்கு ஏற்றது, ஈராக்கியர்களைக் கொன்று அந்நாட்டை ஆக்கிரமிப்பது அமெரிக்க நலனுக்கு ஏற்றது…. இவையெல்லாம் சரி என்றால் இந்தியா காஷ்மீரிகளைக் கொன்று அந்த இடத்தைக் கைப்பற்றியிருப்பதும் சரிதான்.

2:55 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

மரத்தடியில் தேடிபார்த்து காஷ்மீர் பற்றி பிரபஞ்சன் சொன்னது கிடைக்கவில்லை. அங்கே நீக்கபட்டுவிட்டதா? அல்லது என்னிடம்தான் பிரச்சனையா? பிரபஞ்சன் சொன்னதை இங்கே மேற்கோள்காட்ட முடியுமா?

எப்படியோ ரவி பண்டிட்டிடம் பாராட்டு வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. "அப்படியே படித்தாலும் இங்குள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை முற்பட்ட ஜாதியினர் என்று அரசால் நிர்ணயக்கப்பட்டோருக்கு எதிராக உள்ளதே,என்பது போல் பல நியாயமான கேள்விகள் உள்ளன." இப்படி சொன்னால் பாராட்டு கிதைக்காமல் எப்படி இருக்கும். வாழ்க, வளர்க!

3:35 AM  

Post a Comment

<< முகப்பு